Tuesday, 5 January 2016

PLACEBO EFFECT

 ப்ளாசிபோ என்றால் என்ன?

ஹோமியோபதி மருத்துவ அறிவியலை வெற்றுப் பிளாஸிபோ
எஃப்ஃபெக்ட் (PLACEBO EFFECT)என்று பேசுபவர்களும்
உண்டு.அவர்களை விட்டுவிடுவோம்.
அப்படிஎன்றால் என்ன.?எப்படி அந்த பெயர் வந்தது?
ஏன் placebo effect என அழைக்கிறோம்? placebo யார்?
இந்தக்கேள்விக்கான விடை ரொம்பவும் சுவாரஸ்யமானது.
Geoffrey Chaucerன் canterury tales ல் merchant talesம்
அடங்கும். அதில் வரும் கதாபாத்திரம் placebo .
நாம் இன்று பயன்படுத்துகிற நாள்காட்டியின் முதல்
மாதமான ஜனவரி அக்கதையில் 60 வயதைஎட்டிய
ஆண்மகன். ஐந்தாவது மாதமான மே 20 வயது நிரம்பிய
பெண்.
ஜனவரியிடம் வேலை செய்யும் வீரனான டேமியன், மேயைப்
பார்த்த மாத்திரத்தில் காதலில் விழுகிறான். அவர்கள்
இருவரும் கடிதம் பரிமாறிக்கொள்கிறார்கள்;மேயும் ,
டேமியனையே திருமணம் செய்துகொள்ளவே
விரும்புகிறாள்.ஆனால், முக்கோணக் காதல் வில்லனாக,
முதலாளி ஜனவரி , மேயை மணக்க முடிவு செய்கிறான்.
வயதானவனுக்கு இளம் பெண்ணா? அவள் காதல்
என்னாவது?
இந்தத்திருமணம் சரியா, தவறா என்று நீயா நானா
விவாதம் நடக்கிறது.
ஜனவரியின் முடிவை ஆதரித்து, அவனது சகோதரனான
placebo வும், அதை எதிர்த்து,இன்னொரு சகோதரனான
ஜஸ்டீனியஸும் சம்வாதம் செய்கிறார்கள். placebo
வாதத்தில் வெல்ல கதை தொடர்கிறது.
சரி இனி விஷயத்திற்கு வருவோம்.!
இறந்தவர் வீடுகளுக்குப்போய், இங்கிதத்தோடு, இதமாகப்
பேசி, பாதிப்பிற்குள்ளான குடும்பத்தின், துக்கத்தையும்,
சோகத்தையும் குறையச் செய்பவனே placebo. இதிலிருந்துதான்
placebo effect கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
ஹோமியோபதியில் , காதல் வேட்கையை அதிகரிக்கச் செய்யும்
மருந்தொன்றின் பெயர் DAMIANA ஒரு கூடுதல் தகவல்.
Dr.Ravichandaran.



No comments:

Post a Comment