Tuesday, 5 January 2016

ஆணி வேர்களைத் தேடி: 1

ஆணி வேர்களைத் தேடி: 1

நோயாளியின் பெயர்: Mrs.X
வயது: 25
துயரரின் நிலை:
3 மாத கர்ப்பிணி, மிக மிக கடுமையான வாந்தி,
பல ஆங்கில மருத்துவரிடமும் காண்பித்தும் வாந்தி
நிற்கவில்லை. ஆங்கில மருத்துவரின் ஆலோசனையின்
பேரில் கருவைக் கலைக்க M.T.P. (Medical Termination of
Pregnancy) செய்ய முடிவு.
இதற்கு இடையில் வேறு சில ஹோமியோ மருத்துவர்களின்
ஆலோசனையின் பேரில் ஹோமியோ மருந்துகளான Ipecac 6,
Chelidonium Syrub, Sympho-Raci 200 தினம் ஒருவேளை,
Colchicum 30, தினம் இரண்டு வேளை, Phospho 30, 200,
Verat-Alb 30, 300, Medorrinum 200 ஆகிய பல
மருந்துகளும் தக்க இடைவேளியில்
கொடுக்கப்பட்டும் வாந்தி நிற்கவே இல்லை.
கரு கலைப்பிற்கு M.T.P. (Medical Termination of
Pregnancy) செல்லும் முன் என் ஆலோசனை
கோரப்பட்டது. நோயாளியை நேரில்
அழைத்துவரச்சொல்லி, அவர்களின்
உறவினர்களை வெளியில் அமரச்செய்து
அவருடைய மனநிலை பற்றி அறிய முற்பட்டேன்.
கேள்வி: என்னம்மா எப்படி இருக்கிறீங்க?
பதில்: என்னாங்க சார் சொல்றது. 4
வருடம் சென்று இப்பொழுதுதான் கரு
நின்றது. அதற்கும் சோதனையாக இந்த வாந்தி,
ஏகப்பட்ட குளுக்கோஸ், ஊசி எல்லாம் போட்டும் வாந்தி
நிற்கவே மாட்டேன் என்கிறது. டாக்டர்கள் எல்லாம்
அபார்ஷன் செய்துக்க
சொல்கிறார்கள். அப்போதுதான் என்னை
காப்பாற்ற இயலும் என்றும்
சொல்கிறார்கள். ஏற்கனவே இதற்காக
சித்த, ஆயுர்வேத மருந்துகளை
உட்கொண்டுள்ளேன் எதற்கும் குணம்
ஆகமாட்டேன் என்கிறது. வேற என்னத்த
செய்யறதுன்னே தெரியலை.
கேள்வி: இந்த 3 மாத காலத்தில் ஒரு நாள் கூட
வாந்தி எடுக்காமல் இருந்ததுண்டா?
பதில்: ஒரு நாள் கூட வாந்தி வராமல் இருந்ததே
இல்லை, ஒரு நாளைக்கு 15 தடவைக்கு மேல் வாந்தி,
எதைத் தின்றாலும், குடித்தாலும் உடனே ஏகப்பட்ட
வாந்தி.
கேள்வி: வாந்தி எடுத்த பின் எப்படியம்மா
இருப்பாய்? வேற ஏதாச்சும் யோசனை
செய்துகொண்டு இருப்பாயா?
பதில்: ஒரே களைப்பு, படுக்கையில் படுத்தே இருப்பேன். எப்ப
பார்த்தாலும் சார் மனதில் ஒரு எதிர்பார்ப்பு.
என்னை யாராவது
கண்காணித்துக்கொண்டே இருந்தால்
மட்டும் போதும். ஒரு சின்ன குழந்தைகூட இருந்தால் சரி,
என்னைப் பார்த்துக்கொண்டே இருந்தால்
எனக்கு மனதில் ஒரு திருப்தி, பரவாயில்லை நம்பளை
பார்த்துக்கொள்ள ஒரு ஆள் இருக்காங்க
என்று கொஞ்சம் தெம்பாக
இருப்பேன்.
கேள்வி: அது என்னம்மா கண்காணிக்கிறது. ஏன்
அப்படி கண்காணிக்கணுன்னு நினைக்கிறீங்க?
தனியாக இருக்க ஏதாச்சும் பயமா?
பதில்: அது அப்படித்தான் சார். என்
கண்பார்வையில் யாராவது என்னைப் பார்த்துக்
கொண்டிருந்தால் போதும் எல்லா வேலையும்
இப்பக்கூட வேகமா முடிச்சிடுவேன். ஆனா தனியா
இருந்தால் எனக்கு ஒரு பயம் கூட கிடையாது.
வாந்தி கூட பாருங்க யாராவது பார்த்துக்
கொண்டே இருந்தால் பூராவும்
வெளியில் வருவது கிடையாது.
கேள்வி: அது சரியம்மா, நம்பளை யாராவது
பார்க்கறாங்க அப்படிங்கற கூச்சம்
ஏதுமில்லையாம்மா?
பதில்: அப்படி கூச்சம் ஏதுமில்லை சார். எனக்கு அது
ரொம்ப பிடிக்கும். யாராவது என்னைப்
பார்க்கறாங்க அப்படின்னா உள்ளுக்குள்ளே
நான் சந்தோஷப்படுவேன்.
ஆய்வு: இவருக்கு இவருடைய மனநிலையில் உள்ள
வேர்கள் (குறிகளுக்கான ஆணி வேரை) தேடினேன்.
தன்னை யாராவது தொடர்ந்து
கண்காணித்துக் கொண்டு இருக்க
வேண்டும் என்று விரும்புகிறார் என்று புரிந்தது.
சிந்தஸிஸ் (Synthesis) மருந்துகாண் ஏடு
கொண்டு அவருக்கு பின்வரும் மனக்குறி
தேர்வு செய்யப்பட்டது.
Desired to be Watched (பக்கம் எண். 227) என்ற உள்
உணர்வுகளைக் கொண்டு அவருக்கு Gallicum
acid 200 ல் ஒரு வேளையும் 10 நிமிடம் கழித்து ஒரு
வேளையும் சாப்பிடச் சொல்லிக்
கொடுத்தேன்.
என்ன ஆச்சரியம் அந்த வாந்தி அன்றே போன இடம்
தெரியவில்லை. எல்லோருக்கும் ஆச்சரியம். நோயாளி
மிகவும் ஆரோக்கியத்துடன் அழகான குழந்தையை
பெற்றுக் கொண்டார். ஆங்கில
மருத்துவருக்கும் ஆச்சரியம்.
Dr. Mohankumar.

No comments:

Post a Comment