Tuesday, 5 January 2016

ஆணி வேர்களைத் தேடி: 2


ஆணி வேர்களைத் தேடி: 2

நோயாளியின் பெயர்: Mr.X
வயது: 15
நோயாளரின் நிலை:
நோயாளர் ஹோமியோவில் ஆழ்ந்த நம்பிக்கை உள்ளவர்.
கூடுமானவரை ஹோமியோபதி மருந்தை மட்டும்தான்
உட்கொள்பவர். இதனால் அவரை அவரது நண்பர்கள்
ஹோமியோ பேபி என்றும் செல்லமாக அழைப்பதுண்டு. எனது
நண்பர் ஒருவர் மூலம் இவரை நான் தற்செயலாக சந்திக்க
நேர்ந்தது. “சார் இவருக்கு கடந்த ஒன்னரை வருடமாக ஒரு
பிரச்சனை, ஹோமியோவில் கிட்டத்தட்ட ஒன்னரை
வருடங்களாக முயற்சித்தும் இவருடைய நோய்
குணமாகமாட்டேன் என்கிறது. தற்போது நண்பர் அலோபதி
(ஆங்கில) மருத்துவரிடம் சென்று காண்பித்து வருகிறார்.
இன்னும் நோய் குறையாமல் மிக அவதிப்படுகிறார். நீங்கள்
இவருக்கு ஏதாவது உதவி செய்ய இயலுமா?” என்று
கேட்டார். நோயாளரை நேரில் வரச்சொல்லி ஆய்வு செய்தேன்.
நோயாளர் மிக உயர்ந்த பிரபலமான விடுதியில் சிறுவயது
தங்கி படித்து வருபவர்.
நோயாளி: சார் எனக்கு மிகச் சரியாக 1½ வருடமாக எக்ஸிமா
(Weeping Eczema) என்னும் கரப்பான் படை உள்ளது.
ஆண்குறி, தொடை இடுக்கு மற்றும் விதைப்பை, உட்காருமிடம்
(Buttocks), பொதுவாக மறைவிடப் பகுதி பூராவும் எக்ஸிமா
உள்ளது. ஏகப்பட்ட அரிப்பு, ஏராளமான நீர் மற்றும்
இரத்தக் கசிவு, கடுமையான துர்நாற்றம், நிறைய ஹோமியோ
மருந்துகள் உட்கொண்டும் சிறிது கூட குணம்
கிடைக்கவில்லை. தற்போது நான் ஆங்கில தோல் சிறப்பு
மருத்துவரிடம் காண்பித்தும் நோய் இன்னும்
கட்டுப்பாட்டிற்கு வரவில்லை. ஒரு பக்கம் வருத்தம்,
இன்னொரு பக்கம் ஹோமியோவில் குணப்படுத்த
இயலவில்லையே என்ற ஆதங்கம் எல்லாம் உள்ளது சார்.
சரி உங்களையும்தான் பார்ப்போமே என்று வந்தேன்.
கேள்வி: அது சரி, அது என்ன மிகச் சரியாக 1½ வருடம்
என்று கூறுகிறீர்களே, அது என்ன மிகச் சரியாக 1½
வருடம்?
பதில்: அது ஒன்றுமில்லை சார், என்னை விடுதியில் இருந்து
வீட்டிற்கு திரும்ப, நானும் எனது நண்பர்கள் சிலரும்
என் அப்பாவுடன் காரில் வந்து கொண்டிருந்தபோது வரும்
வழியில் கார் கட்டுப்பாடு இழந்து
விபத்துக்குள்ளாகிவிட்டது. கடவுள் புண்ணியத்தில்
எங்களுக்கு ஏதும் நடக்கவில்லை. என் அப்பாவுக்கு
மட்டும்தான் சிறிது அடி. அது நடந்து சரியாக 1½
வருடமாகிறது. அதுதான் சார் சரியாக 1½ வருடம் என்று
சொன்னேன்.
கேள்வி: இந்த விபத்தினால் ஏதாவது அதிர்ச்சி அல்லது
பயந்து போய் விட்டீர்களா? இதுபோல நோய் ஏற்கனவே
எப்போதாவது வந்ததுண்டா?
பதில்: அப்படி ஒன்றுமில்லை சார். கொஞ்சம் அதிர்ச்சியாக
இருந்தது. பின் ஏதுமில்லை. இதுபோல ஒரு நோய் எனக்கு
இதற்குமுன் வந்ததே இல்லைங்க சார்.
கேள்வி: வகுப்பில் நண்பர்கள் மத்தியில், வீட்டில் வேறு
ஏதாவது மனம் வருத்தப்படும் வகையில் பிரச்சனைகள்
ஏற்பட்டதுண்டா?
பதில்: அப்படி ஒன்னுமில்லைங்க சார்.
ஆய்வு: நோயாளி பல வருடங்களாக அந்த விடுதியில்
தங்கிப் படித்து வருபவர். இதற்குமுன் இவருக்கு
இதுபோல ஏதும் நோய் ஏற்படவில்லை. நோயாளர் அந்த
விபத்தினை ஒரு பொருட்டாக பேசவில்லை என்றாலும், அந்த
விபத்திற்கு முன்பு வரை ஆரோக்கியமாக இருந்த அவர்
அதன் பின்னர்தான் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற
முடிவுக்கு வந்து Synthesis மருந்துகாண் ஏடு கொண்டு
அவருக்கு பின் வரும் மனக்குறி, நோய்க்கான ஆணிவேர்
தேர்வு செய்யப்பட்டது. Ailments from fright – from sight
of an accident என்ற மனக்குறி மட்டும் தேர்வு
செய்யப்பட்டு அவருக்கு Opium – 200 தரப்பட்டது. ஹோமியோ பேபி 2
நாட்களுக்குள் அடைந்த மகிழ்ச்சி என்னையும் வியப்பில்
ஆழ்த்தியது. ஒரு வாரத்திற்குள்ளாகவே அவர்
மகிழ்ச்சியுடன் விடுதிக்கு திரும்பச் சென்றார். 10
நாட்களுக்குள்ளாகவே அவருடைய அனைத்து தோல் நோய்களும்
இருந்த சுவடு தெரியாமல் மறைந்துவிட்டது.
Dr.Mokankumar.

No comments:

Post a Comment