Tuesday, 5 January 2016

c.c.r.h கையேடு.


செஞ்சீனத்தில் வெறுங்கால்
வைத்தியர்கள் என்றொரு திட்டம்
செயல்பட்டது.
 சில முக்கியமான
நோய்களுக்கு மட்டும் சிகிச்சைப்
பயிற்சி அளித்து , மக்களுக்கு சிகிச்சை
அளிக்க அநுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்திய நடுவணரசின், நிறுவனம், central
council of homeopathic research ,
கிராமப்புரங்களில், மருத்துவர் வருகை
கேள்விக்குறியாக இருக்கும்
இடங்களில், சுகாதாரப் பணியாளர்கள்
ஹோமியோபதி சிகிச்சையளிக்க ஒரு
கையேடு வெளியிட்டிருக்கிறது. நம்
வாழ்விடங்களில் நிரந்தர ஜீவிதம்
கொண்டுள்ள, டான்ஸிலட்டிஸ்,
வயிற்றுப்போக்கு, சீதபேதி, சுரம்,
தலைவலி, வாந்தி என நோய்கள் வரிசைப்
படுத்தப்பட்டு, அவற்றுக்குப்
பொருத்தமான ஓரிரண்டு மருந்துகளும்
பொருத்தமான வீரியங்களும்
கொடுக்கப்பட்டிருக்கின்றன. எல்லோரும்
படித்துப் பார்க்க வேண்டும். 80களில்
க்ரியா பதிப்பகம் வெளியிட்ட," டாக்டர்
இல்லாத இடத்தில்" என்ற புகழ் பெற்ற
நூலுக்கு இணையானது இந்த c.c.r.h
கையேடு.
Dr.Ravichandaran.

Wed, 19 Aug 2015, 5:49 PM - Murali Castro: ஓர் செவிவழிச்சசெய்தி:

ஓரிரண்டு வருடத்திற்கு முன்பு திருச்சி திருவெறும்பபூருக்கு அருகே பட்டதாரி மருத்துவர்கள் குழுக்களாக சென்று கிராமம்தோரும் சிகிச்சையளித்திருக்கிறார்கள்.

மேலும் மாதம்தோரும் நான்கு சக்கர வண்டியில் மருந்து சகிதமாக இலவச மருத்துவம் பார்க்க காலை சென்று மாலை ஊர் திரும்புகிறார்கள் 👍🙏
Wed, 19 Aug 2015, 5:56 PM - Murali Castro: மேலும் ஓர் தகவல்:

இதே போன்று கடந்த ஆறு மாதமாக மயிலாடுதுறை மற்றும் பாபநாசம் அருகில் பட்டுக்குடி என்ற கிராமத்தில் மாதந்தோரும இலவச மருத்துவமணை நடத்தப்படுகிறது.

நன்றி 👍🙏

No comments:

Post a Comment