Fri, 17 Jul 2015, 9:33 PM - veeraragavan: யார் உண்மையான ஹோமியோபதி மருத்துவர்?
யார் உண்மையான ஹோமியோபதி மருத்துவர்?
ஹோமியோபதி
மருத்துவக்கல்லூரிகளில்
படித்து பட்டம் பெற்றவர்களா? பட்டம் பெறாமல் ஹோமியோபதி மருந்துகளை அனுபவத்தில்
தெரிந்து
கொண்டு அம்மருந்துகளை துயரருக்கு அளிப்பவர்களா?
ஒருவர்
BHMS, DHMS அல்லது
M.D (Homeo) என்ற
பட்டங்களை
பெற்றதினாலோ RHMP போன்ற அரசுப் பதிவு பெற்று விட்டதாலோ அவர் ஹோமியோபதி மருத்துவராகி விட
முடியுமா?
ஆசிரியர்
பட்டயம் பெற்றவர்கள் ஆசிசியராகப் பணியாற்ற தகுதி பெற்றவராகப் கருதப்படுகிறது. ஆணால் அத்தகுதி பெற்றவர்களில் மிகச் சிலராலேயே சிறந்த ஆசிரியராக ( கவனிக்கவும்
‘நல்லாசிரியர்’ களாக
அல்ல) பரிணமிக்கமுடிகிறது.
அவ்விதமாக
தற்போது உலகெங்கிலும் உள்ள ஹோமியோபதி மருத்துவர்களில் ( அல்லது அப்படி சொல்லிக்
கொள்பவர்களில்)
மிகக் குறைந்த விழுக்காட்டினரே உண்மையான ஹோமியோபதியராக உள்ளனர்.
எனது
நண்பர் ஒருவர், தனது குழந்தையின் டான்ஸில் பிரச்சனைக்கு ஹோமியோபதி மருத்துவம் பார்த்து வருவதாச் சொன்ன்னர் “........”என்ற ஒரு கம்பனி
கூட்டு
மருந்து பெயரைச் சொல்லி “அதுதானே சார் டான்ஸிலுக்கு ஹோமியோபதி மருந்து? என்று கேட்டார். அம்மாதிரி பல
கூட்டு
மருந்துகளின் பெயர்களையும் அவர் சொன்னார். அதன் மூலம் தனக்கும் ஹோமியோபதி தெரிகிறது என்ற பெருமை
அவர்
வார்த்தைகளில் கொப்பளித்தது.
மற்றொரு
நபர் ஒரு பத்திரிக்கையில் வெளிவந்த ஹோமியோபதி மருத்துவக்குறிப்பைப் பார்த்து அவருடைய மூலநோய்க்கு
மருந்து
சாப்பிட்டதாகவும், ஆனால் குணம் ஏதும் தெரியவில்லை என்றும் அதனால் ஹோமியோபதி மருந்துகள் சரியாக வேலை செயாது என்றும் தனது
கருத்துக்களைத்
தெரிவித்தார்.
ஒரு
வயதான மருத்துவர் ( RHMP மற்றும் RAMP ஆகிய இரு பதிவுகளை வைத்திருப்பவர்)
ஹோமியோபதியுடன்
ஆயுர்வேதா, சித்தா மருந்துகளியும் சேர்த்துக் கொடுப்பதால் மட்டுமே ஓரளவு பலன் கிடைக்கிறது என்றும், அத்துடன்
அல்லோபதியையும்
சேர்த்துக் கொடுப்பதினால் சிறந்த பலன் கிடைக்கிறது” என்றும்
தனது அனுபவங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டார்.
மற்றொரு
மருத்துவர், “ஹோமியோபதி மருந்துகளி தினமும் 6 வேளை உட்கொள்ளவேண்டும் என்றும் அதுவும்
உயர்
வீர்யங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் எனக்கு அறிவுரை கூறினார்.
”நான்
எப்போது பயன்படுத்துவது ..........கூந்தல் தைலம்தான்....அது ஹோமியோபதி மருத்துவ முறையில்
தயாரிக்கப்பட்டதுதானே?
என்று வினவும் அப்பாவிகளும் உண்டு.
“சித்த
ஆயுர்வேத மருந்துகளுக்கும் அல்லோபதி மருந்துகளுக்கு இடைப்பட்ட வடிவ வேற்றுமை பல
ஆண்டுகளுக்கு
முன்பே ஒழிக்கப்பட்டு விட்டது. அம்மருந்துகள் யாவும், அல்லோபதி மருந்துகள் போலவே மாத்திரைகள், கேப்சூல்கள்,
டாணிக்குகள்,
சிரப்புகள், லோஷன்கள் ,ஆயின்மெண்ட்டுகள்் மற்றும் மூச்சிழுப்பான்கள் (
inhalers) வடிவங்களில்
கிடைக்கின்றன. தற்போது எந்த ஒரு சித்த மருத்துவரும்
தனது
சிந்தூரஙகள், பற்பங்கள் மற்றும் சூரணங்களை சிறிய மெழுகுத்தாட்களில் மடித்துத் தருவதில்லை! எல்லாம் கேப்சூல் வடிவமாகவும் மாத்திரைகள் வடிவிலும் கவர்ச்சிகரமான பாட்டில்களில் அடைத்து
விற்பனை
செய்யப்படுகின்றன.
ஆனால்
ஹோமியோபதி மருத்துவர்கள் மட்டும் தற்போதுகூட சிறிய கடுகு வடிவ மாத்தைரைகளைப் பயன்படுத்திவருவது அவர்களுக்குள்
ஏதோ
ஒரு தாழ்வுமன்ப்பான்மையை ஏற்படுத்தி விடுவதாகக் கொள்ளலாம். அதற்காகக் கூட வர்கள் கடுகு வடி மருந்துகள் கூடவே கூட்டு
மருந்துகளையும்
பயோ கெமிக்கல் (உயிர்வேதி) மருந்துகளையும் பயன்படுத்தை வருவதாகத் தெரிகிறது.
மேற்குறிப்பிட்ட
எந்த முறையும் உண்மை ஹோமியோபதி ஆகாது.
பின்பு
எதுதான் உண்மையான ஹோமியோபதி மருத்துவம்?
இதற்கான
விடைதன் விவாதத்திற்கு உரியதாகிவிடுகிறது.
THE SCOPE OF HOMOEOPATHY
BEGINS WHERE THE SCOPE OF OTHER
SCIENCES ENDS
_ Dr. Prafull Vijayakar
மாமேதை
ஹானிமன் ஆர்கனான்
மணிமொழி
1 ல் “ நம்மிடம் சிகிச்சை பெற வருகிறவர்களின் நோய்களை வேறுடன் களைந்து, மீண்டும் வராதபடி நோயற வாழ செய்வது ஒண்றே
வைத்தியரின்
உயர்ந்த கடமையாகும்..” என்கிறார்.
மணிமோழி
2 ல் “ நோயற்ற நிலை விரைவில் ஏற்பட வேண்டும், நோயாளிக்கு எவ்வகையான துன்பமும் நேரக் கூடாது. நோய் மீண்டும்
திரும்பி
வராமல் வேருடன் வீழ்த்திட வேண்டும். முற்றிலும் நம்பத் தகுந்த எள் அளவுத் தீங்கையும் உண்டாக்காத, எளிதிலே புரிந்து கொள்ளக் கூடிய வழி
முறைகளுக்கு
உட்பட்டதாக இருக்க வேண்டும்...” என்கிறார்.
உண்மையான
ஹோமியோபதியர்கள் யாரும், ஹோமியோபதி கூட்டு மருந்துகளையோ, ஹோமியோபதி ஆயிண்ட்மெண்ட்களையோ
(!) , அவசரத்திற்கு
அலோபதி மருந்துகளையோ, பயோ கூட்டு மருந்துகளையோ, சித்த, ஆயுர்வேத
மருந்துகளையோ
தாம் கொடுக்கும் ஹோமியோபதி மருந்துகளுடன் பரிந்துரை செய மாட்டர். அவர்களுக்கு ஹானிமானின் மேற்சொன்ன இரண்டு
மணிமொழிகளும்
வேதம். அதனை மீறி அவர்களால் எண்ணவும் முடியாது. அவர்கள், “ ஒரே மருந்து, குறைந்த
அளவு
மருந்து என்பதில் மிகுந்த நம்பிக்கை உடையவர்கள். அதன் மூலமே மிகச் சரியான குணமாக்களை நிகழ்த்திவிடுவர்.
சில
உதாரணங்கள்:
எனது
ஹோமியோபதி மருத்துவ நண்பரின் உறவினர் தலைப் பிரசவத்திற்காக ஒரு மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டார். பிரசவ நாளாகியும் குழந்தை
திரும்பவில்லை,
கொடி சுற்றியுள்ளது என மருத்துவர்கள் சிசேரியனுக்கு
ஏற்பாடு செய்கிறார்கள். அப்பெண்ணின் தாயாரிடம், நமது நண்பர், இதுபோன்ற நிலைகளில்
பெண்ணுக்குக்
கொடுக்கச் சொல்லி பல்சடிலா - 200 ல் இரண்டு பொட்டலங்களை
கைவசம் கொடுத்தனுபியிருந்தார். ஆனாலும் அந்த
அம்மாவிற்கு
பெண்னை அம் மருத்துவ மனையின் மேல் தளத்த்தில் உள்ள ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்துச்
செல்லும்
வரை ஹோமியோபதி நினைப்பு வரவில்லை. அவர் தன்னிடம் இருந்த மருந்தின் நினைப்பு இல்லாமல் நண்பருக்கு போன் செய்து
நிலைமையை
விவரித்துள்ளார். நண்பர் தான் கொடுத்தனுப்பிய மருந்துகளை கொடுத்தீர்களா என வினவ, அப்போதுதான்
அந்த அம்மாவிற்கு தன்னிடம்
உள்ள
ஹோமியொபதி மருந்து நினைவிற்க்கு வந்துள்ளது. உடணே எப்படியாவது அதனை பிரசவ அறையில் உள்ளே
இருக்கும்
தனது மகளிடம் கொடுத்துவிடுவதாக செல்லி, டாக்டரிடம், தனது குலதெய்வ சாமியின் திருநீறு நெற்றியில் தரிப்பதற்கு, ஆபரேஷன் தியேட்டர் உள்ளே செல்ல
அனுமதி
பெற்றுள்ளார்.
அதற்குள்,
மயக்க மருந்து நிபுனர் பெண்ணிற்கு மயக்க மருந்து செலுத்தி, அவர் மயக்கமடைந்துள்ளார்.
அறுவை
சிகிச்சை நிபுனர் கீழ்தளத்திலிருந்து சிசேரியன் செய்வதற்கு கிளம்பிவிட்டார். இவ்விடைப்பட்ட நேரத்தில் பல்சடில்லா 200
அப்பெண்ணுக்கு
அளிக்கப்பட்டது.
அறுவை
சிகிச்சை நிபுனர் ஆபரேஷன் அறைக்குள் நுழைகிறார். அப்போதுதான்
அவ்வதிசயம்
நிகழ்கிறது. குழந்தை சரியான நிலையில் வெளியே வருகிறது. சுகப்பிரசவம் !!!
அங்கிருந்த
மருத்துவர்கள் ஆச்சரியம் அடைகின்றனர்.
“இவ்வாறு
நிகழ சாத்தியமே இல்லையே..!!!என்று ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்கின்றனர்.
சில
நிமிடங்களில் ஹோமியோபதி அதன் ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளது. ஹோமியோபதி த்விர வேறு எந்த மருத்துவத்திலும் நிகழாத
அற்புதம்
இது.
மற்றொரு
உதாரணமாக அதே நண்பர், வேறு ஒரு பெண்ணிற்கு பிரசவ நாள் கடந்தும், ”வலியே இல்லை...” என்று
கூறியவருக்கு
ஓப்பியம் 30 ஒரே வேளை தந்து சுகப்பிரசவம் ஆன அனுபத்தையும் எம்முடன்
பகிர்ந்து கொண்டுள்ளார்.
எனவே
சரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஹோமியோபதி மருந்து அதன் குணமாக்கலை நிகழ்த்தாமல் விடுவதில்லை.
உண்மையான
ஹோமியொபதியர் ஒற்றை மருந்தைத் தவிர வேரேதும் கொடுப்பதிலை.
உண்மை
ஹோமியோபதியை நம்புவோம்....வெற்றி நமதே!!!!
.
##################
Fri, 17 Jul 2015, 10:44 PM - Murali Castro: ARVEE அய்யா,ஆசிரியப்பணி(அரசு) பள்ளி) யில் இருந்து கொண்டே நல்லாசிரியர் வாங்கியவர்களையும் அந்த விருதை கொடுப்பவர்களையும் மீது கடுங்கோபம் அடைந்து எழுதியிருக்கிறார்.ஆக அவரது தனி
மனித கோபம் வெளிப்பட்டதை நன்றாக காணமுடிகிறது.
நீங்கள்
ஒரு' இந்தியன் தாத்தா ' வாகத்தான் தெரிகிறீர்கள்.
-முரளி
காஸ்ட்ரோ
Sat, 18 Jul 2015, 6:00 AM - Murali Castro: காலை வணக்கம்
Sat, 18 Jul 2015, 6:00 AM - Murali Castro: இந்த குழுமத்தின் நோக்கம் ஒப்பற்ற ஓமியோபதி மருத்துவத்தைப்பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், ஆர்கனான், மெட்டீரியா மெடிக்கா, ரெப்பர்ட்டரி அறிவை பெருக்குவதும், மருந்து தேர்ந்து செய்வதும், மற்ற வழிமுறைகளில்
மருந்து தேர்வு செய்து நலமாக்கலின் துயரர்சரிதையும், ஆவணத்தையும் பகிர்வதும்,
அது பற்றி விவாதிப்பதும்., ஹோமியோபதியில் புதிதாக வந்துள்ள(Books,seminars,methods,
remedies, ) தகவல்களை
பரிமாறுவதும் நோக்கமாக
இருக்க வாழ்த்துக்கள். நன்றி.
-முரளி
காஸ்ட்ரோ
Sat, 18 Jul 2015, 6:24 AM - Murali Castro:
தினம் ஒரு மணிமொழி
ஆர்கனான்
மணிமொழி-2
The highest ideal of cure is rapid, gentle and permanent
restoration of the health, or removal and annihilation of
the disease in its whole extent, in the shortest, most
reliable, and most harmless way, on easily
comprehensible principles.
நோயற்ற
நிலை விரைவில் ஏற்பட வேண்டும். நோயாளிக்கு
எவ்வகையான
துன்பமும் நேரக்கூடாது. நோய் மீண்டும்
திரும்ப
வராமல் வேருடன் வீழ்த்தபடவேண்டும் .
முற்றிலும்
நம்பத்தகுந்த எள்ளளவுத் தீங்கையும்
உண்டாக்காத
எளிதிலே புரிந்து
கொள்ளக்கூடிய
வழிமுறைகளுக்கு
உட்பட்டதாக
இருக்க வேண்டும்.
Dr.Karuppaiah.
Sat, 18 Jul 2015, 10:57 AM - Murali Castro: சீர் செய்ய வேண்டியது உடலா?
உயிராற்றலா?
இந்த
உடலின் உட்புறத்தே இயங்கிக்
கொண்டிருக்கும்
இயக்காற்றல்தான்
வெளிப்புறமாகத்
தெரிகிற
உடம்பை
வாழச் செய்து
கொண்டிருக்கிறது.
இதே போல் இந்த
பிரபஞ்சத்தில்
உடலுக்கு எதிராக நோயை
உண்டாக்குகிற
ஆற்றலானதும்
இயக்காற்றலாகவே
இருக்கிறது.
இந்த
பிரபஞ்ச இயக்காற்றலானது
மனிதனின்
உட்புறத்தே உள்ள
இயக்காற்றலைத்
தாக்கி நோய் பாதிக்கும்
தன்மையை
ஏற்படுத்தி பின்னர்
தொந்தரவுகளை
உருவாக்குகிறது.
இந்த
தொந்தரவுகள்
காரணமாக
திசுக்களில் மாற்றம்
ஏற்பட்டு
பின்னர் குறிகளாகப்
பிரதிபலிக்கிறது.
இந்தக் குறிகள் இரண்டு
வகைப்படும்.
அவைகள் அக உணர்வுக் குறி
நிலை,
புற
உணர்வுக் குறி நிலை.
புற
உணர்வுக்குறி நிலையானது மருத்துவப்
பரிசோதனைகள்
மூலமாக அறியப்படும்.
ஆனால்,
அக உணர்வுக் குறி நிலையானது
துயரர்
மாத்திரமே சொல்லக்
கூடியதாக
இருக்கும். அக உணர்வுக் குறி
நிலையானது
எவ்விதமான மருத்துவ
ஆய்வின்
மூலமாகவும் கண்டறியப்பட
இயலாது.
மிருகங்களிடத்தில்
மருந்தை அல்லது மருந்துப்
பொருளை
பரிசோதனைக்காகக்
கொடுக்கப்படும்
போது,
மிருகங்களிடத்தில்
தோன்றும் உடல் மாற்றத்தை
அதாவது,
புற நிலையை மட்டுமே கண்டறிய
முடியும்.
அக உணர்வுக் குறி நிலையை
மிருகங்களால்
சொல்ல
இயலாது
என்பதை விட, மிருகங்கள்
சொன்னாலும்
மனிதர்களால்
புரிந்து
கொள்ள இயலாது என்பதே
உண்மையாகும்.
ஆனால் நலமான
மனிதர்களிடத்தில்
மருந்தை அல்லது மருந்துப்
பொருளை
மெய்ப்பித்தலுக்காகக்
கொடுக்கப்படும்
போது,
மெய்ப்பிப்பாளர்களிடத்தில்
தோன்றும்
புறநிலை
மாற்றத்தையும், அக நிலை
மாற்றத்தையும்
காணவும், அறியவும்
முடியும்.
ஆகவே
அக உணர்வுக் குறி நிலை மற்றும் புற
உணர்வுக்
குறி நிலை ஆகியவைகளைக்
கண்டறியும்
மருத்துவ மெய்ப்பித்தல்
முறையினால்
மட்டுமே நலத்தை ஏற்படுத்த
முடியும்.
மாறாக புற நிலைக் குறிகளை மட்டுமே
கண்டறியும்
மிருக மெய்ப்பித்தல்
முறையினால்
மனிதர்களிடத்தில் நலத்தைக்
கொண்டு
வர இயலாது.
ஹோமியோபதியைப்
பொருத்தவரை
நலமான
மனிதர்களிடத்தில்
மெய்ப்பித்தல்
நடப்பதால், அக
உணர்வுக்
குறிகளும், புற உணர்வுக்
குறிகளும்
மெய்ப்பித்தல் மூலமாகத்
தெரியவருவதால்,
அவ்வாறு
மருந்துகள்
ஏற்படுத்திய செயற்கை
நோய்க்குறிகள்
முழுமை யைக் கணக்கில்
கொண்டு,
அதே போன்ற இயற்கை நோய்க்
குறிகளின்
முழுமைக்குமாக மருந்து தேர்வு
செய்யப்பட்டு
கொடுக்கப்படுவதால்
முழுமையான
நலம் ஏற்படுகிறது.
மருத்துவர்கள்
நோயுற்ற மனிதர்களுக்கு
மருத்துவம்
பார்க்கிறார்கள். மனிதர்கள்
எல்லோரும்
ஒரே மாதிரியான தோற்றத்தையே
கொண்டிருக்கிறார்கள்.
ஒரே
மாதிரியான
தோற்றத்தையே
கொண்டிருந்தாலும்,
ஒவ்வொரு
நபரும் வேறு வேறு
விதமான
பாரம்பரியத்தில்,
வளர்ப்புகளில்,
வழிகாட்டுதலில்,
வசதிகளில்,
வாய்ப்புக்களில்,
உணவுகளில்,
பழக்க வழக்கங்களில்,
கோபங்களில்,
தாபங்களில்,
பொறுமைகளில்,
பிடித்ததில்,
பிடிக்காததில்,
வாழும் சூழலில்,
பொருளாதாரத்தில்
வேறுபட்டிருக்கிறார்கள்.
புரிந்து
கொள்ளும் திறனில், சிந்தனை
செய்யும்
ஆற்றலில், நேரத்துக்குத்
தக்கவாறும்,
சூழ்நிலைக்கேற்றவாறும்,
மாறிக்
கொள்ளும் தன்மையைக்
கொண்டவனாகவே
மனிதன்
இருக்கிறான்.
மனிதனை இயக்குவதற்கு
அவனுள்ளே
ஒரு ஆற்றல் இருக்கிறது. சக்தி
என்றும்,
சூட்சும சக்தி என்றும், உயிர் ஆற்றல்
என்றும்
கூடச் சொல்லலாம்.
அந்த
உயிர் ஆற்றலைத் தொட
முடியாது.
பார்க்க முடியாது.
இந்த
உயிராற்றலானது நம்மைவிட்டு
நீங்கிவிடுமானால்
உடல்
உணர்வற்று,
அசைவற்றுப் போய் விடுகிறது.
இவ்வாறு
நிகழ்வதை மரணம் என்று
அறிவிக்கிறோம்.
இந்த நிலையில் உடலை சவம்
அல்லது
பிணம் என்று சொல்கிறோம்.
உடல்
இருக்கிறது, பார்வைக்குத்
தெரிகிறது.
உள்ளே இருக்கும்
உறுப்புகளும்
அங்கேயே இருக்கிறது,
வெளியேறவில்லை.
இந்நிலையில் பிணம்
என்று
செய்ய வேண்டியதைச் செய்து
விடுகிறோம்.
இந்த உயிராற்றல்தான்
உயிரணு,
சதை மற்றும் உறுப்பு
ஆகியவைகளுக்கு
உயிரூட்டி உடலை இயங்கச்
செய்கிறது.
ஆகவே துயரரை நல நிலைக்குக்
கொண்டுவர
வேண்டுமென்றால்,
துயரரின் அக
உணர்வு
நிலை மற்றும் புற உணர்வு நிலை
ஆகிய
இரண்டு நிலைகளையும், அதன்
பாதிப்பு
களையும் சீர் தூக்கி ஆராய்ந்து
மருந்தளிக்க
வேண்டும்.
இவ்வாறு
மருந்தளிக்கும் போது தான் உயிர்
ஆற்றல்
தூண்டப்பட்டு, அதன் பின்பு அதுவே
நலத்தை
விரைந்து கொண்டுவருகிறது.
இதைத்தான்
மாமேதை ஹானெமன்
அவர்கள்
கீழ்க்கண்டவாறு
சொல்கிறார்கள்.
உடலினுள்ளே
குடியிருந்து உயிரூட்டும்
சூட்சுமமான
உயிர்ப்புச் சக்தியை
பீடித்துள்ள
நோயும், அச்சக்தியினால்
உடலின்
வெளிப் புறத்திலே
புலப்படும்படியாகத்
தோற்றுவிக்கப்படும்
நோய்க்குறிகளும்
ஒன்றே. வெவ்வேறானவை
அல்ல.
உடல் உயிருக்கு உருவத்தை
அளிக்கிறது.
உயிர்ப்புச் சக்தி உடலுக்கு உயிரை
அளிக்கிறது.
ஆகவே இந்த இரண்டும்
தனித்தனியே
பிரிக்க முடியாத ஒரே
பொருளாகும்.
குழப்பம்
இல்லாமல்
எளிதில் புரிந்து
கொள்வதற்காகவே
இவ்வாறு
இரண்டாகப்
பிரித்துச்
சொல்லப்படுகிறது.
(மணி
மொழி-
15)
நம்
உயிர்ப்புச்சக்தி ஒரு சூட்சுமமான
பொருள்;
ஆதலால் உயிருக்குத்
தீங்கு
செய்யும் நோய்ப்
பொருள்கள்
சூட்சுமமான வழியில்
தான்
அதைத் தாக்கவோ, பீடிக்கவோ
முடியும்,
இதைப் போலவே நோய்க்கு ஏற்றதான
மருந்துகளிலுள்ள
சூட்சுமமான
சக்தியினால்
தான் நோய்ப்
பொருள்களை
நீக்கவும் முடியும்.
நோயாளியின்
நல நிலைமையில் ஏற்பட்டுள்ள
மாறுதல்களைக்
கவனமாக ஆராய்ந்து,
அதற்கேற்ப
கொடுக்கப்படும்
மருந்துகளிலுள்ள
சூட்சும சக்தியை,
உடலெங்கும்
பரவி இருக்கும் உணர்ச்சி
மிக்க
நரம்புகளின் மூலம் உயிர்ப்புச் சக்தி
கிரகித்துக்
கொள்கிறது. இவ்வாறு
கிரகிக்கப்படும்
மருந்துச் சக்தியினாலேயே நல
நிலைமை
திரும்ப ஏற்படக்கூடும்; ஏற்படுகிறது.
(மணி
மொழி- 16).
ஐம்புலன்களாலும்
அறியப் பட்ட எல்லா
நோய்க்குறிகளும்
நீங்கிக் குணம்
ஏற்படும்போது,
அக்குறிகள் தோன்றுவதற்குக்
காரணமாயிருந்த
உயிர்ப்புச் சக்தியின்
நோயும்
நீக்கப்படுகிறது. உள்ளே உள்ள
நோயைப்
(உயிர்ப்பு சக்தியின் நோயை) போக்க,
உடலின்
வெளிப்புறத்தே தென்படும்
நோய்க்
குறிகளை நீக்கினால் போதும் என்பது
இப்போது
விளங்கும். தன்னுடைய உண்மையான
உயர்ந்த
கடமை நோய் உள்ளவர்களை நல
நிலைக்குத்
திரும்பக் கொண்டு
வருவதேயன்றி,
எல்லாம் தெரிந்தவர்
போல்
நடித்துப் பிதற்றுவதல்ல என்பதை
மருத்துவர்
அறிய வேண்டும். (மணி
மொழி;17).
ஆக,
ஹோமியோபதியைப் பொருத்தவரை
சீர்
செய்ய வேண்டியது
உயிராற்றலே
தவிர உடல் அல்ல.
உயிராற்றல்
சீர்
செய்யப்பட்டுவிட்டால்
அதுவே உடலை
சீர்
செய்து விடும்.
-அ.அப்துல் அஜீஸ்
Sat, 18 Jul 2015, 12:26 PM - Balasubramanian: மெய்ப்பொருள் காண்பது அறிவு
மிர்தாத்
சொல்கிறார்(The book
of Mirdad
by Mikhail Naimy )
“பிரபஞ்சத்தில்
அஃறிணை என அறியப்படும்
கல்லுக்கும்
மனம் உண்டு அந்த மனத்திற்கும்
விருப்பம்
உண்டு,கல்லைப்போல மற்ற
எல்லாப்பொருட்களுக்கும்
மனம் உண்டு
என்
நான் உங்களுக்கு
சொல்கிறேன்.இந்தபொருட்களின்
மனதின்
பிரக்ஞை மனிதனுக்கு போலன்றி அளவில்
மாறுபாட்டிருந்தாலும்
சாராம்சத்தில்
மாற்றம்
இல்லை”
வள்ளுவர்
இதைப்பற்றி அறி வதைத்தான் அறிவு
என்கிறார்.
“எப்பொருள்
எத்தன்மைத்தாயினும்
அப்பொருள்
மெய்ப்பொருள்
காண்பது அறிவு”
இதை
சர் ஜகதீஸ் சந்திர போஸ் ஓரளவுக்கு அறிய
முயற்சி
செய்தார்(1.Response
in the living and
non-living 2.The nervous mechanism of plants)
“தாவரங்களுக்கு
மனிதர்களைப்போல விலங்குகளைப்போல
உணர்வு
உண்டு”
இதை
சாமுவேல் ஹானிமன் முழுமையாக
நிரூபித்தார்(organon
of medicine 6th edition).தன்
ஹோமியோபதி
மருத்துவ தத்துவத்தின் நிரூபண விதிகளின்
மூலம்
“பிரபஞ்சத்தில்
உள்ள
அனைத்துப்பொருட்களும்
ஆரோக்யமான
மனிதனுக்கு
கொடுக்கப்படும்போது
அதற்கேயுண்டான
தனித்துவப்பண்புகளை
அவனிடத்தில்
வெளிப்படுத்துகின்றன.இதன்மூலம்
ஆரோக்யமான
மனிதனுக்கு நோயை உண்டாக்கவும்
நோயுள்ள
மனிதனை குணமாக்கவும் தன்னிடத்தில்
ஆற்றல்
உள்ளது என இந்த உலகுக்கு
உணர்த்துகிறது".
No comments:
Post a Comment