சல்பர்
பிரபுல் விஜயகர்
சல்பர் உங்களுக்கு மிகவும் நட்பான பக்கத்துவீட்டு கார் ஓட்டுநராகவோ அல்லது பால்காரராகவோ அல்லது வெத்தலைபாக்கு கடைக்காரராகவோ இருப்பார். அவர் உங்கள் முன்னாடி மிக எளிய மனிதராக இந்திய பாரம்பரிய உடை அணிந்தவராக காட்சி தருவார், உதாரணத்திற்கு பருத்தி ஆடை(cotton) போன்றவை.
அவரின் தோள்பட்டையில் ஜோல்னா பை அல்லது உறுதியான துணிப்பை இருக்கும் ,அது உங்களுக்கு சொல்வது என்னவென்றால் நான் பிளாஸ்டிக் மற்றும் செயற்கைப்பொருட்களை விட்டு நீங்கி விட்டவன், மற்றும் நான் சுற்றுச்சூழலுக்கு நட்பானவன்,இயற்கையை நேசிப்பவன் என்று. இவர் போன்ற எளிய மனிதர்களை இந்தியாவில் மட்டுமல்ல
அயல்நாட்டிலும் காணலாம்.
அவருடன் எப்போதும் இருக்கும் அந்தப்பையில் அவர் நேசிக்கிற பொருட்கள், ஊசி,நூல்.கத்திரிக்கோல்,புத்தகம் ,சில கந்தைத்துணிகள் மற்றும் எதையெல்லாம் முக்கியம் என்று கருதுகிறாரோ அது எல்லாம் அவற்றுள் அடக்கம்.
இவர் முகம் சிவந்து இருக்கும்,மார்பும் சிவந்து அவரின் தொளதொள அரைக்கை சட்டை வழியாக தெரியும் அளவு சிவந்து இருக்கும்,.அவரின் உள்ளங்கைகளும் உள்ளங்கால்களும் சிவந்து சூடாக இருக்கும்.
சல்பரின் பேச்சு பெரும்பாலும் இன்றைய படுமோசமான இளைஞர்கள்
நிலை பற்றியதாக இருக்கும்.
‘எப்படி இந்தக்காலத்து இளைஞர்கள் அக்கறையில்லாமல் இருக்கிறார்கள்’
‘எப்படி இந்த காலத்து
இளைஞர்கள் வயசானவங்க
மேல அக்கறை காட்டாம இருக்காங்க’
‘நாட்டப்பத்தியும்
,சமூகத்தைப் பத்தியும் அக்கறை இல்லாமல் தன்னைப்பத்தி, தன்னோட உடல்நலம்,ஒழுக்கம்,மதநெறிகள்
பற்றியும் துளிகூட அக்கறையில்லாமல் எப்படி இந்தக்கால இளைஞர்களால் இருக்க முடியுது?’
‘இந்த மக்கள் சட்டதிட்டங்களை
தன்னோட சொந்த சுயநலத்துக்காக தலைகீழா புரட்டி போட்டு பாழடிக்கிறாங்க, எப்படி முடியுது இவங்களால?’
இவரால் இந்த பூமியில் உள்ள எந்த
விஷயத்தைப் பத்தி வேணும்னாலும் பேசமுடியும். சட்டம்,ஒழுங்கு, அரசியல் முதல்
புவி வெப்பமயமாதல்,ஓஷோன் ஓட்டை.ஐஸ்லாந்தில்
ஐஸ் உருகுவது, மரங்கள் குறைவது காகிதம் உற்பத்தி ,மழை பெய்யாததற்கு காரணம் வரை எந்த விஷயத்தையும் பேசமுடியும்.
கடவுளைப் பற்றி பேசுவார், இவரின் உறுதியான நம்பிக்கை கடவுள் ஒருவரே என்பதாகும். அதனால் இவர் கோவிலுக்கும்,மசூதிக்கும்,சர்ச்க்கும் மற்றும் குருத்வாராவுக்கும் அதே நம்பிக்கையுடன் செல்வார்.
இந்த மதங்களுக்கு அப்பாற்பட்டவர் சல்பர், கடவுள் என்பது இயற்கைக்கு அப்பாற்பட்ட
சக்தி அதுவே பூமியை ஆள்கிறது என திடமாக நம்புவார். இவர் கடவுளையும்
அறிவியலையும் ஒப்பிட்டு காட்டுவார்.
இவரின் அனுபவ அறிவு என்பது கடன்வாங்கப்பட்டதாகும், இவரின் அனுபவ அறிவு பல்வேறு விவாதங்கள்,புத்தகப்படிப்பு இவற்றிலிருந்து
சேகரிக்கப்பட்டதாகும். இவர் எப்பவும் நீங்கள் விரும்பினாலும்
விரும்பாவிட்டாலும் அட்வைஸ் பண்ணாம விடமாட்டார். தான் யாரு தெரியுமா,எனக்கு யார்யாரை தெரியும் தெரியுமா என அவருக்கு முக்கிய விஐபிகளை தெரியும்
என்பதை நமக்கு தெரிவிக்க விரும்புவார்.
இன்னொரு பக்கம் தான் பெரிய விஞ்ஞானி என்று நம்மிடம் சொல்வார்,
நாம் அதை உறுதிப்படுத்த விரும்பினால அதில் உண்மையில்லை என்பது நமக்கு
தெளிவாகும்.
பெரியவர்கள்,சிறியவர்கள் பாகுபாடு இல்லாமல் அனைவரிடமும் கலந்துவிடும் பொருத்தமற்ற
குணம் உடையவர். அனைவரிடமும் மதிப்பை எதிர்பார்ப்பார்.
அடிக்கடி பொருட்களை இடம் மாற்றி மாற்றி வைப்பார், சோபா செட்,சேர்,டேபிள்,
அலங்காரப் பொருட்கள் இவற்றையெல்லாம் இங்கே வைத்தால் அழகாக இருக்குமா
,அங்கே வைத்தால் அழகாக இருக்குமா என மாற்றி வைத்துக்கொண்டே இருப்பார்.
நிறைய வேலைகளை இழுத்துப்போட்டுகிட்டு ஆர்வத்துடன் செய்வார்,
ஆனால் எல்லாத்தையும் பாதியிலே செய்யாம அப்படியே போட்டுவிடுவார்.
உதாரணத்திற்கு ஓவியம் வரைதல்,சால்வை நெய்தல்,
அல்லது கம்பளி பின்னுதல் அல்லது புத்தகம் எழுதுதல் போன்றவற்றை.
லொடலொடன்னு பேசக்கூடிய, ஆஊன்னா அட்வைஸ் கொடுக்கக்கூடிய நபர்களை நாம் கண்டுபிடித்தால் அவர்
சல்பர் தானா என கண்டறிய ஓர் எளிய வழி ,அவரின் உள்ளங்கை உடம்பை
விட சூடாக இருக்கா என காண்பது,அப்போது அவரிடம் கேளுங்கள்,
“உங்கள் நண்பர்கள்
உங்களிடம் கைகுலுக்கும்போது உங்களின் கை ஐஸ் போல ஜில்லுனு இருக்குனு சொல்லியிருக்காங்களா?”
சல்பராக இருந்தால் பதில் பெரும்பாலும்
இவ்வாறு இருக்கும்
“இல்லை, என்ன உங்களுக்கு காய்ச்சல் அடிக்குதா எனத்தான் நிறைய பேரு சொல்லியிருக்காங்க,என் மனைவி உள்பட”
சல்பரை நோக்கிய கேள்வி:இருவருள் எவர் உங்களுக்கு நண்பராக இருப்பர் ,சின்ன குழந்தைகளா? அல்லது பெரியவர்களா?
சல்பர்: “நான் இரண்டு பேர்கிட்டயும் கலந்து பேசி ஒட்டிக்குவேன்,
வயசானவங்க ,குழந்தைங்க ரெண்டு பேருமே எனக்கு நண்பர்கள்தான்”
சல்பரை நோக்கிய கேள்வி: பொருட்களை ஒரே இடத்தில் வைக்க பிடிக்குமா?இல்லை மாத்துவீங்களா?
சல்பர்: “என் மனசு எப்பவும் யோசிச்சுகிட்டே இருக்கும் பொருட்கள் இங்க இருந்தா
நல்லா இருக்குமா இல்லை அங்க இருந்தா நல்லா இருக்குமா சோபாவை அந்த மூலையில் வைக்கலாமா?
பூந்தொட்டியை எங்க வச்சா அழகாக இருக்கும் என மனசுல ஓடிகிட்டு இருக்கும்,
எப்பவும் மாற்றத்தை விரும்புற ஆள் நான்.”
சல்பரை நோக்கிய கேள்வி:நீங்கள் ஒரே ஒரு கோவிலுக்கு தான் போவீங்களா ,ஒரே மதத்தை
தான் நம்புவீர்களா?
சல்பர்: இல்லை..இல்லை.. நான்
எல்லா கோவிலுக்கும் போவேன் ,எனக்கு எம்மதமும் சம்மதம்.நான் மதத்தை எல்லாம் பொருட்படுத்த மாட்டேன்.”
பின் குறிப்பு: துயரர் ஆய்வின் முடிவில் அவரிடம் நீங்கள் கைகுலுக்க விரும்பினால்
அவர் சில விரல்களை மட்டும் தருவார்,நீங்கள் விரும்பினால் அவற்றை
பற்றி குலுக்கலாம்.அவர் கைகளை குலுக்காமல் தளர்ந்து இருப்பார்
(loose handshake)
இந்த தளர்ந்த கைகுலுக்கல் கல்கேரியா
சல்ப்,மெக்னீசியம் சல்ப் மற்றும் சல்பூரிக்
ஆசிட் மருந்துகளிலும் உள்ளது.
நாம் இவர் சல்பர் தனிமம் என முடிவு
செய்துவிட்டால் துயரர் குளிர் தாங்காதவராக (CHILLY
PATIENT)இருந்தால் சல்பூரிக் ஆசிட்,
சூடு,வெயில் தாங்காதவராக(HOT PATIENT) இருந்தால்
கல்கேரியா சல்ப்,சல்பர் அயோடைடு என முடிவு செய்யலாம்.
Source : FREQUENT ENCOUNTERS
translator:sangam balasubramanian
No comments:
Post a Comment