Tuesday, 5 January 2016

மாற்று மருத்துவம் குறித்த அக்கறையோடு , மகேந்திரலால் சர்க்கார் வழியில்.

மாற்று மருத்துவம் குறித்த
அக்கறையோடு ,
மகேந்திரலால் சர்க்கார்
வழியில்.............

மாற்று மருத்துவம் குறித்துப்
பரவசத்துடன் பேசுவோரும் சரி,
எதிர்வினை புரிவோரும் சரி மிகவும்
பொறுப்பான தளத்தில் பேச
வேண்டியிருக்கிறது; செயல் பட
வேண்டியிருக்கிறது

. டாக்டர் மஹேந்திர லால் சர்க்கார் M.D
(1833-1904) ஒரு முன் மாதிரியான
வாழ்வை நமக்குக் காட்டியிருக்கிறார்.
ஆங்கில மருத்துவத்தில் முதுகலைப்
பட்டம் பெற்றவர்; கல்கத்தாவில் மிகவும்
கொடிகட்டிப் பறந்தவர்; ஆனால் அவரது
மனசாட்சியின் உறுத்தலுக்கு ஆளாகி,
வில்லியம் மார்கன் எழுதிய"
ஹோமியோபதியின் தத்துவம்"' நூலைப்
படித்து, தன்னளவிலதன் சிறப்பை
உணர்ந்து, பின் மருத்துவர் ராஜன்
தத்தாவிடம் ஹோமியோபதி சிகிச்சை
கற்றுக் கொண்டார்.வெகு விரைவில்
ஹோமியோபதி சிகிச்சையில் புகழ்
பெற்றார். பன்னாட்டு ஹோமியோ
சஞ்சிகைகளில் ஹோமியோ ஆராய்ச்சிக்
கட்டுரைகள் எழுதினார். தானே
ஹோமியோ இதழ்களை ஆரம்பித்து
முழுப் பொறுப்போடு நடத்தி வந்தார்.
பொறுக்க முடியாத அல்லோபதி
மருத்துவர்கள் அவரைப் புறக்கணித்தனர்
எள்ளளவும் அதுகண்டு மனம் சோராமல்,
மேலும் மேலும் ஹோமியோபதி
மருத்துவ அறிவியல் குறித்து
பரப்புரை செய்தார். பல ஆங்கில
மருத்துவர்கள் அவரைப் பின்பற்றி
ஹோமியோ சிகிச்சை அளித்தனர். திரு
ராமகிருஷ்ண பரமஹம்ஸர் இலையுதிர்
காலம் தொடங்கி, நீண்டகால
பிராங்கைட்டிஸால் துயருரும்போது,
அவரே உடனிருந்து நலமாக்கியவர். திரு
பங்கிம் சந்திர சட்டர்ஜியும் இவரிடம்
ஹோமியோ சிகிச்சை பெற்றவரே.
ஹோமியோ துறையில் சிகரம் தொட்ட
பின் அவரது செயல்பாடு கூடிற்று.
அறிவியல் மேம்பாட்டுக்காக , தேசிய
அளவில் ஒரு சங்கம் தேவை என உணர்ந்து,
INDIAN ASSOCIATION FOR CULTIVATION OF SCIENCE
ஐ நிறுவினார். இயற்பியல், வேதியல்,
உடலியல் தாவரையல், விலங்கியல் என
அறியலின் அனைத்துப் பிரிவுகளிலும்
புதிய துறைகளை உருவாக்கினார்.
அறிஞர்
சர்.சீ.வி. இராமன் கூட இவரோடு
இணைந்து இச்சங்கதில் செயல்பட்டார்
என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
தன் மனசாட்சிக்கு மதிப்பு தந்து தான்
தெரிவு செய்த ஹோமியோ
அறிவியலை தொடர்ந்து பரப்புரை
செய்து, விழுமியங்களை சாதித்து ,
அறிஞர் பெருமக்களின் நம்பிக்கையைப்
பெற்று, அதோடு நில்லாமல்
விஞ்ஞானத்தின் அனைத்துப்
பிரிவுகளையும் வளர்த்தெடுக்க
அரும்பாடுபட்டவர் மருத்துவர்
மஹேந்திரலால் சர்க்கார். அவர்
ஹோமியோபதியின் பால் கொண்ட
ஈடுபாடு அவரது அறிவியல்
நோக்கத்தை உறுதி செய்கிறது. மாற்று
மருத்துவத்தில் செயல் படுவோர்
கடைபிடிக்க வேண்டிய
கடப்பாடுகளுக்கு ஒரு
முன்னுதாரணமாய் வாழ்ந்து
காட்டியிருக்கிறார். அவரது வாழ்வே
நமக்கு செய்தியாகும்.
Dr.Ravichandaran.

No comments:

Post a Comment