Tuesday, 5 January 2016

ரவிச்சந்திரன் கட்டுரைகள்


Sun, 9 Aug 2015, 12:23 PM - Ravichandaran: எனக்கு ரோஜர் மார்ரீசனின் எழுத்த்க்கள் மீது அலாதி பிரியம் உண்டு. வகுப்பறை விவாதங்களுக்காகவும் மருந்து தேர்வு செய்யும் முறைமைமகளுக்காகவும் அவரது நூல்களை எங்கள் குழுவினர் உடனே வரவழைத்துப் படித்துக் குறிப்புக்கள் எடுத்துவிடுவோம
இன்று் மதியம் பென்சாயிக் அமிலம் குறித்து  விவாதம்
மாசிமோவின் அமிலத்தொகுப்பாய்வையும் ரோஜர் மார்ரிசனின் கார்பன் _ஆர்கானிக்_ஹைட்ரோ கார்பானிக் மருந்துகள் தொகுப்பாய்வின் உதவியொஒடு  பென்சாயிக் அமிலத்தைக் ககூட்டு வாசிப்பு செய்கிரோம்.
ஏன் எம் சௌத்ரி. கென்ட் மெட்டிரியா மெடிக்கவும் கூடவே.
சைத்ரியின் 2துயரர் சரிதையும், வித்தியாசமான ஆழமான தொகுப்பாய்வுக்கு மிகவும் பொருத்தான மாசிம்மோவின் துயரர் சரிதையையும் கற்றலுக்கு துணைக்கு வர இருக்கிறது

Sun, 9 Aug 2015, 12:28 PM - Murali Castro: வாழ்த்துக்கள் அய்யா.
கலந்துரையாடலை எங்களோடு நாளை பகிரவும்
நன்றி அய்யா.
Sun, 9 Aug 2015, 12:36 PM - Ravichandaran: The major themes of the organic compunds.

Confusion
identity
value
mental weakness
sensation of sinking
Isolation
fire and explosion
passivity and motivation
the past


The minor themes

Ghosts
suffocation and constriction
aggression
hurry
euphoria
shock
floating
penetrating
jumping
sexuality
childishness

Rojars words given below verbatim

I should note that these themes are not concocted on the basis of repertory and materia medica.. rather, the themes were observed in clinical practice and later found to be verified by the provings and rubriks from the repertory

Sun, 9 Aug 2015, 12:38 PM - Prema Dgl Dr: So many new information 😄
Sun, 9 Aug 2015, 12:38 PM - Prema Dgl Dr: Ty all

Sun, 9 Aug 2015, 2:51 PM - Murali Castro: கோல்ச்சிக்கம் ஆடம்னேல் குறித்த ஒரு
விவாதம்

இந்தியப் பொது வெளியில் இரு முக்கிய தளங்களில்
பாதுகாப்பின்மை நிலவி வருகிறது. 1. மதம். 2.உணவு
மதம் என்றாலே இணைந்துகொள்ளுதல் தான். சேர்ந்து
வாழ்தல். இதன் எதிர் நிலை மதத்தை விட்டு வெளியேறுதல்
அல்லது வெளியேற்றப் படுதல். விருப்பத்தின்
அடிப்படையில் வேறொரு மதத்தில் இணைதல், மதமாற்றத்தை
எதிர்த்தல்-- ஆக மதம் இங்கு ஒரு நிலையான
நிறுவனம். இந்திய அரசியல் வெளியில் செயல்பட்ட
பெரும் அறிவுஜீவிகள் எல்லோருமே மதத்தோடு இணக்கம்
கண்டவர்கள்.தான்.(திரு ஈவேரா பெரியாரும் மற்றும் சில
கம்யீனிஸ்டுகளும் வ...ிதிவிலக்கு)
மதம் சார்ந்த செயல்பாடுகளில் பிறரது ஒழுங்கின்மை
இங்கு கவனக்குவிப்புக்கு உள்ளாகும் விஷயமாக
இருக்கிறது.
மதம் என்பதும் மதத்தின் சடங்காச்சாரங்களோடு
இணைந்து வாழ்தலும், மதப் பிரஷ்டப் பயமும்
ஒழுங்கீனங்களை அனுமதிக்க முடியாத நிலைமைகளும்
லில்லியேசியே தாவரக் குடும்பத்தின் பிரதான
கருப்பொருளாகும்
கோல்ச்சிக்கம் ஆட்டம்னேல் ஆசியாமைனர், கருங்கடல்
பிரதேச தாவரம். பழைய மருத்துவத்தில் கௌட் நோய்க்கு
மிகவும் பரிந்துரைக்கப்பட்ட மருந்து
மாஸ்டர் ஹானெமனால் 1805ல் மெய்ப்பிக்கப்பட்ட மருந்து.
இதன் முக்கிய கருப்பொருள் உணவு . எல்லோருக்கும்
தேவையான உணவு இங்கு எதிர் நிலையில் பேசப்படுகிறது.
உணவைக் கண்டாலோ அல்லது சமையற்கட்டிலில் உணவு
தயாரிக்கும் மணம் வீசினாலோ அடி வயிற்றிலிருந்து ஒரு
குமட்டல்-வாந்தி. குறிப்பாக அதிகம் அவசியம் என்று
சொல்லப்படுகிற மீன், முட்டை, இறைச்சி, கொழுப்பு உணவு
தாங்கிக்கொள்ளமுடியாத ஒரு ப்ரச்சினையாகிவிடுகிறது.
உணவு ஏற்பின்மை உணவு பாதுகாப்பின்மையாக
கோல்ச்சிக்கத்தில் வெளிப்படுகிறது.
லில்லியேசி குடும்பத்தின் ப்ரதான கருப்பொருளான
மதவுணர்வும்- விலகல்கள் ஒழுங்கினங்களின்
சகிப்பின்மையும், உணவு-குமட்டல் -வாந்தி போன்ற
கருப்பொருளையும் ஒருங்கே கொண்டிருப்பதால் கோல்ச்சிக்கம்
இந்திய வெளியில் முக்கியம் தேவைப்படுகிற,
புரிந்துகொள்ளப்படவேண்டிய மருந்தாகும்,
வெப்ப நாடுகளின் நோயான வயிற்றோட்டம், ரத்த சீதபேதி,
குமட்டல் வாந்தி, காலரா, வயிற்றுப்புண், எரிச்சல் வலி,
உப்புசம் எல்லம் கோல்ச்சிக்கத்தில் உண்டு.
முக்கியமாக, யூரிக் ஆசிட் ரத்தஓட்டத்தில் அதிகமாகி,
மூட்டுக்களின் மெல்லிய சவ்வுகளில் சோடியம் மோனோயூரேட்
படிவதால், கௌட் நோய் அதிகம் கானப்படுவதும்,
ருமாட்டிஸமும், அதன் பின்விளைவுகலான, தசை மூட்டுச்
செயலிழப்பும் இருதய வால்வுகளின் கோளாறுகளும்
கோல்ச்சிக்கத்தில் கவனம் பெறுகிறது.
வயிறு, மூட்டுக்கள் இருதயம் ஆகியன அதிகம்
நோயேற்கும் இந்தியப் பெருவெளியில் கோல்ச்சிக்கம்
முக்கியத்துவம் பெறும் ஒரு ஹோமியோபதி மருந்தாகும்.
Dr.Ravichandaran.

Are we sane?

நவீன வாழ்வு நம் எல்லோரையுமே
துயரராக்கியிருக்கிறது. உடல் சார்ந்த
குறிகளோ அல்லது மனம் சார்ந்த
குறிகளோ எல்லோரையும்
வதைக்கிறது. சந்தையும் விளம்பரங்கள்
கட்டமைக்கும் நுகர்வுகளும்
ஒவ்வொருவரையும்
உபாதைக்குள்ளாக்குகிறது.
ஹோமியோபதி உடல் மனம் எனப்
பிரித்துப் பார்க்க இயலாத
தொடர்மமாகவேக் கருதுகிறது.
ஒருவரது நலம் தோராயமான ஒன்றாகவே
இருந்து வருகிறது. இதுவரை
விளக்கப்பட்ட” சந்தோஷம்” கருத்தாக்கத்தின்
போதாமை நன்கு புரிகிறது.
நவீன ஹோமியோபதி
உளவியலிலிருந்து பெற்றுக்கொண்ட
அறிவுக்கூர்மை அதிகம்.
Are we sane? எனும் கேள்வியை நம்முள்
ஆழ்ந்து எழுப்பிய உளவியலாளர் திரு
எரிக் ஃப்ராம் மீண்டும் மீண்டும்
வாசிக்கப்பட வேண்டியவர். Art of loving
எனும் நூலின் மூலம் அவர் தொடங்கி
வைத்திருக்கிற விவாதங்கள் நேசம்
குறித்த ஒரு தனிமனிதப் புரிதலையோ
அல்லது சமூகம் கட்டமைத்துள்ள
அர்த்தத்தையோ அறிவார்ந்த தளத்தில்
மடை மாற்றும் தன்மை கொண்டவை.
மார்க்ஸ் மனிதனை தன் இனத்துக்காக
வாழ்பவன் எனும் பொருளில் விளக்க
முற்படுவார். எரிக் ஃப்ராமின் நேசம்
குறித்த விளக்கம் மார்க்ஸின்
விளக்கத்தோடு இயைந்து
செல்லக்கூடியதாகவே இருக்கிறது.
மனிதன் தன் இனத்தையே நேசிப்பவன்
அதற்காகவே வாழ்பவன் அவனது
உழைப்பும் படைப்பும் சமூக
முழுமைக்குமானது. நேசம் என்பது,
Respect, Regard,Attention, Care towards all
என்பதாகவே சாராம்சத்தில் பொருள்
கொள்ளும். ஏனைய விளக்கங்கள் எல்லாம்
குறைபாடுடையன; குறுக்கல் வாதத்
தன்மை கொண்டவை.
ஹோமியோபதி அறிவியலைக்
கற்றவர்கள்/ கற்பவர்கள் எரிக் ஃப்ராமின்
நூல்களைக் கற்பது மிகவும் அவசியம்.
ஏவுகணைத் தாக்குதல்களும்
இனப்படுகொலைகளும் சர்வ சாதானண
நிகழ்வுகளாகிவிட்ட இன்றைய சூழலில்
Are we sane ? எனும் விவாதம் எல்லாத்
தளங்களிலும் தொடங்கப் படவேண்டியதே!
Dr.Ravichandaran.


No comments:

Post a Comment