Tuesday, 5 January 2016

KIRAN DESAI'S CLAIRVOYANT CHARACTER SAMPATH CHAWLA



KIRAN DESAI'S CLAIRVOYANT CHARACTER SAMPATH
CHAWLA

Clairvoyance எனும் தலைப்பில்
தியோஸாஃபிகல் சொசைடி ,
மேன்மைமிகு அன்னி பெசண்ட் அவர்கள்
எழுதி நூல் வெளிட்டிருப்பதாக
நினைவு. ஹோமியோபதியில்
Clairvoyance  என்பது மிக
முக்கியமான ஒரு குறிமொழி.
பின்னால் நடக்கப்போகும் ஒரு நிகழ்வை
முன்கூட்டியே தனது ஆன்மீக பலத்தால்
அறிந்து கூறுதல் என விளக்கம்
சொல்கிறார்கள். சுருங்கச் சொன்னால்
ஒரு துயரர் , தான் சொன்னால் அது
பலிக்கும் என நம்புகிறான்.
ஹோமியோபதி அறிவியல் இத்தகைய
துயரரின் நம்பிக்கையை அவருக்கு
மருந்தைத் தெரிவு செய்ய
பயன்படுத்துகிறது. இது ஆன்மீக பலமா,
சாத்தியப்பாடு உள்ளதா எனும்
கேள்விகளுக்கெல்லாம் அது பதில்
தருவதில்லை.
சிந்தெடிக் ரெபெர்டரியில் இக்
குறிமொழியைப் புரட்டினால்
Clairvoyance Anhalonium, crotalus cascavella, lyssinum,
nux moschata, phosphorous, veratram album எனும்
முக்கிய மருந்துகள்
கொடுக்கப்பட்டுள்ளன.
பாஸ்பரஸ் அடிக்கடி இச்சிந்தனை உள்ள
துயரர்களுக்கு, என்ன நோயாக
இருந்தாலும், பயன்படுவதை
அனுபவத்தில் காணலாம்.
ஒரு 70 வயது கடந்த ஓய்வு பெற்ற
ஆசிரியை. நீரிழிவு நோயினால்
தினமும் இரு வேளை இன்சுலின் ஊசி
போட்டுக்கொள்பவர். இளம் வயதிலேயே
விதவையானவர். தன் பிள்ளைகளை
நன்றாக வளர்த்து ஆளாக்கி,
வேலைக்கனுப்பி, திருமணம்
செய்வித்து பார்த்து மகிழ்ந்தவர். திடீர்
திடீரென வயிற்றோட்டம், உடலெங்கும்
தோலில் சிவப்பு சிவப்பாகக்
குருனைகள், ஒரே அரிப்பு, சர்க்கரைக்
கட்டுப்பாட்டில் தான் உள்ளது அவரிடம்
சரிதை கேட்கும்போது அவர் சொன்னார்;
தன்னைக் கண்டால் உறவினர்கள்
எல்லோரும் பயப்படுவார்கள்; தான்
சொன்னால் அப்படியே நடந்துவிடும்.
Clairvoyance  குறிமொழியை
விட்டுவிட்டு அவருக்கு மருந்து எடுக்க
முடியவில்லை.
நான் வாசித்தவரை இப்படிப் பேசும்,
Clairvoyance  கொண்ட கதாபாத்திரம்
தமிழில் எனக்கு நினைவிலில்லை.
கிரன் தேசாய் எழுதிய முதல் ஆங்கில
நாவலில்(Hallabaloo in the guava orchard) சம்பத்
சௌலாவுக்கு இத்தகைய திடீர் பலம்
வந்துவிடுகிறது. தபால் அலுவலகத்தில்
தான் பார்த்த வேலையை விட்டுவிட்டு,
தனது கிராமத்திலேயே ஒரு கொய்யா
மரத்தில் ஏறி அங்கேயே வசிக்கிறார். பலர்
வந்து அவரிடம் தங்கள் வாழ்க்கை
இன்னல்களைச் சொல்லி பலன் கேட்க அவர்
சொல்வது பலிப்பதாக நம்புகிறார்கள்.
கூட்டம் நாளுக்கு நாள் கூடுகிறது.
சம்பத்தின் தந்தை இதை வணிக
நோக்கோடு பயன் படுத்திக்கொள்கிறார்.
இப்படிப் போகிறது கதை.
 Clairvoyant பலம் கொண்ட ஒரு
பாத்திரம் மக்களிடையே தொடர்ந்து
உரையாடுகிறது ஒரு நாவலில்.
ஹோமியோ மனக் குறிக்கு சம்பத்
சௌலா ஒரு சிறந்த முன்னுதாரணம்.
இதே நாவலில் வரும் சம்பத் சௌலாவின்
தாயார் எப்போதும் பெரும் பசி
கொண்டவள். வறுமையும், வறட்சியும்
நிரம்பி வழியும் ஷாகோட் கிராமத்தில்
இவளின் பசி தீர்க்கவே முடியாதது.
விளைவு கிரண் தேசாய் நன்றாகச்
செய்திருக்கிறார். ஏன், அவளின் கனவில்
கூட உணவு தான் வருகிறது.
பெரும் பசி எப்போதும் சாப்பிட்டுக்
கொண்டே இருத்தல்
வெப்பம் மிகுதல்
கனவிலும் உணவே
இம்மூன்று குறிகளும் ஹோமியோ
மருந்து அயோடியத்தைக் குறிப்பன.
Dr.Ravichandaran.


No comments:

Post a Comment