Tuesday, 5 January 2016

ஹிப்போகிரட்டீஸ்

 இப்போக்கிரட்டீசு அல்லது ஹிப்போகிரட்டீஸ் (கிரேக்கம்: Ἱπποκράτης ; ஆங்கிலம்:Hippocrates) கிரேக்க நாட்டைச் சேர்ந்த மருத்துவ அறிஞர். கி. மு. 460 முதல் கி. மு. 377 வரை வாழ்ந்த இவர் மருத்துவத்துறையின் தந்தை என்று மேற்குலகிலும் பொதுவாகவும் போற்றப்படுகிறார்.

ஹிப்போகிரட்டீஸ் என்பவர் ஆகியன கடலில் காஸ் என்னும் ஒரு தீவில் கி.மு 406 இல் பிறந்தார். மருத்துவக் கலை பயின்று மருத்துவராகத் தொழில் நடத்த முனைவோர் ஹிப்போகிரட்டீசின் சத்தியப் பிரமாணங்களை உறுதி மொழியாகச் சொல்கிறார்கள். நல்லறிவு, இரக்கம், அன்பு, நேர்மை ஆகிய பண்பு நலன்கள் கொண்டவர்களாக மருத்துவர்கள் சேவை புரிய வேண்டும் என்று அந்தக் காலத்திலேயே உந்துணர்வையும் வழிகாட்டுதலையும் கூறியவர்.
Wed, 19 Aug 2015, 4:36 PM - Murali Castro: ஹிப்போகிரட்டீசுக்கு முன்னால் கிரேக்க மருத்துவம் மந்திரங்களையும் குருட்டு நம்பிக்கைகளையும் அடிப்படையாகக் கொண்டு இருந்தது. மனிதர்கள் மீது சினம் கொண்டு கடவுள் வழங்கும் தண்டனையே நோய்கள் ஏற்படக் காரணம். ஹிப்போக்கிரட்டீஸ் இவற்றைக் கடுமையாக மறுத்தார். மனிதனுக்கு ஏற்படும் நோய்கள் இயற்கையாக வருபவை என்று கூறினார்.
Wed, 19 Aug 2015, 4:36 PM - Murali Castro: தொன்மைக் கால கிரேக்கத்தில் மூலை முடுக்கெல்லாம் சென்று நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்துக் குணப்படுத்தினார். நோய்களின் மூலக் காரணங்களை அறிய முற்பட்ட முதல் மருத்துவர் இவரே. எளிமையான மிகச் சில மருந்துகளையே தமது சிகிச்சைகளுக்குப் பயன்படுத்தினார். உணவு, தூய காற்று உடல் பயிற்சி ஆகியனவே போதுமானது, இதுவே இயற்கை மருத்துவம் என்று கூறினார். ஹிப்போக்கிரட்டீஸ் வெறும் மருத்துவர் மட்டும் அல்லாமல் அறுவை சிகிச்சையிலும் தேர்ந்தவராக இருந்தார். எலும்பு முறிவு மூட்டு நழுவல் போன்றவற்றிற்கு அறுவை மருத்துவம் செய்தார். அறுவை சிகிச்சை செய்யும்போது அதைச் செய்பவருடைய கை விரல்களின் நகங்கள் மிக நீளமாகவும் இருக்கக் கூடாது. மிகவும் குட்டையாகவும் இருத்தல் கூடாது. திருத்தமாகவும் நேர்த்தியாகவும் விரைவாகவும் தூய்மையாகவும் சிகிச்சையை முடிக்கவேண்டும். இத்தகைய அறிவுரைகள் ஹிப்போக்கி ரட்டீசின் கட்டளைகள் என்று மருத்துவ உலகில் வழங்கப் படுகிறது.

எகிப்தில் உள்ள அலேக்சாந்திரியாவில் மருத்துவக் கலையின் செய்திகள் முறைகள் தொகுக்கப்பட்டு இருந்தன. அவற்றில் சில ஹிப்போக்கிரட்டீசின் தொகுப்பு உள்ளது. அத்தொகுப்பு நூலகளில் புனித நோய்கள் என்னும் ஒரு நூல் பெயர் பெற்ற ஒன்று ஆகும் அந்நூலில் காக்காய் வலிப்பு என்னும் நோய் பற்றிய குறிப்புகள் உள்ளன.காக்காய் வலிப்பு என்பது சினம் கொண்ட கடவுளால் மனிதனுக்கு விதிக்கப்பட்ட தண்டனை என அந்தக் காலத்தில் நம்பப்பட்டது. எனவே அது புனித நோய் என்று கருதப்பட்டது. பிளேக் நோய் ஊரில் பரவியபோது மக்கள் உடுத்தும் ஆடைகளை எரித்து விடவேண்டும் என்றும் கொதிக்க வைத்த நீரை அருந்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கிரேக்க நாட்டின் முக்கிய பகுதிகளுக்குப் பயணம் செய்து மருத்துவத்தின் மகத்துவத்தைச் சொன்னார். இறுதியாக லாரிசா என்னும் ஊரில் காலமானார் என்று கருதப்படுகிறது.

No comments:

Post a Comment