Tuesday, 5 January 2016

JACQUES BENVENISTE ஹோமியோபதி வெறும் நம்பிக்கை வைத்தியமா...? இரவிச்சந்திரன்

 ஜாக்யூஸ்
பென்வெனிஸ்டே மற்றும்
லெக் மாண்டெக்னர்
SALEM WITCHHUNTS OR MC CARTHY LIKE
PROSECUTIONS WILL KILL SCIENCE””
JACQUES
BENVENISTE 1998.

ஃப்ரென்ச் இம்யூனாலாஜிஸ்ட் ஜாக்யூஸ்
பென்வெனிஸ்டே,” உயர்ந்த நீர்க்கச்
செய்யப்பட்ட திரவங்களின் மூலக்கூறுகள்
உயிரியல் செயல்திறன்
கொண்டிருக்கிறது என்று கூறினார்.
”இம்முனோக்ளாபுலின் ஈ” மற்றும்
ஹிஸ்டமின்,பேஸோஃபில்ஸ்க்கும் உள்ள
தொடர்பை ஆராய்ச்சி செய்த
பென்வெனிஸ்டே தவிர்க்க இயலாமல் THE
MOLECULES OF VERY HIGH DILUTIONS HAVE
BIOLOGICAL ACTIVITY “ எனச் சொல்லவேண்டி
வந்தது. .ஒரு பத்திரிகையாளர் “ நீரின்
நினைவுத் திறன்” எனக் குறிப்பிட்டார்.
உயர் நீர்க்கச் செய்யப்பட்ட திரவங்களில்
ஆரம்ப வேதிப்பொருட்களின்
மூலக்கூறுகள் சாத்தியமில்லை
என்பது ஜேம்ஸ் ராண்டி போன்ற
சந்தேகவாதிகள் நிலைபாடு.
பென்வெனிஸ்டேயின் கண்டுபிடிப்பு
ஹோமியோபதித் தத்துவத்தை உறுதிப்
படுத்துவதாய் அமைந்திருக்கிறது. 200
ஆண்டுகளுக்கும் மேலாக
ஹோமியோபதி , மிக உயர்ந்த
நீர்க்கச்செய்யப்பட்ட திரவங்களையே
வீரியப்பத்தும் கொள்கையாகக்
கடைபிடித்து வருகிறது. எல்லோரும்
கேள்விக் கணைகள் தொடுக்க, மீள்
பரிசோதனைகள் என சந்தேகவாதிகளின்
வம்பளப்பு தொடர, பென்வெனிஸ்டே தன்
நிலைபாட்டில் உறுதியாயிருந்தார்.
அப்போதுதான், அவர் எரிச்சலோடு
சொன்னார். “SALEM WITCHHUNTS OR MC CARTHY
LIKE PROSECUTIONS WILL KILL SCIENCE.”
ஹோமியோபதியும் இதற்கெல்லாம்
சளைக்காமல், அங்கீகரிக்கப்பட்ட
மருத்துவமாக பல்கலைக்கழகப்
பாடத்திட்டங்களாக மக்களுக்கு உகந்த
விஞ்ஞானமாக வலம் வந்து
கொண்டிருக்கிறது. இன்னும்
சொல்லப்போனால், விலை மலிவாக
இருப்பதால் மூன்றாம் உலக நாடுகளின்
அடித்தட்டு மக்களுக்கு ஹோமியோபதி
மருத்துவத்தால் பயன்பாடு மிக அதிகம்.
””ஹோமியோபதி வெறும் நம்பிக்கை
மருத்துவம்; வெற்றுருண்டைகளின்
ப்ளாஸிபோ விளைவு தான்.””. என
சந்தேக வாதிகள் வாதிடுகின்றனர்.
இவர்கள் இரு வகைப் படுவர். முதலாமவர்-
விஞ்ஞான சந்தேகவாதிகள்-
பரிசோதனைக் கூடத்தில் மெய்ப்பிக்கச்
சொல்லுபவர்கள். இரண்டாமவர் போலிச்
சந்தேகவாதிகள்- வெற்றி-தோல்வி
சங்கிலித் தொடரில், விஞ்ஞான
உண்மைகளை- சூதாட்டக் களமாக
மாற்றிவிடும் சாமர்த்தியம்
கொண்டவர்கள். நிரூபித்தால் ஒரு கோடி
டாலர் பரிசு அறிவிக்கும் சூதாடிகள்.
யார் பணம்? எந்த ஆங்கில மருந்துக்
கம்பெனியின் ஏஜெண்ட் இவர்? என்ற
கேள்விகளெல்லாம் உங்கள் மனதில்
தோன்றினால் நீங்கள் விஞ்ஞான எதிர்
மனிதர்களாக ஆகிவிடுவீர்கள்.
பணபலமும், அதிகாரமும் கூடிவிட்டால்,
கலிலியோ என்ன, கொபர்னிகஸ் என்ன,
செர்வீட்டஸ் என்ன அல்லது ஹானெமன்
தான் என்ன ? இவர்களுக்கு எல்லோரும்
துச்சம்.
பரினாமவியல் விஞ்ஞானி , சார்லஸ்
டார்வின் , ட்ரொஸீரா
ரோடண்டிஃபோலியாவின்
பற்றுக்கம்பிகள் நீரில் அல்லது மண்னில்
கரைந்திருக்கும் அம்மோனியம்
க்ளோரைடு 2,00,000த்தில் ஒரு பங்கு
இருந்தபோதிலும் உறிஞ்சி
எடுத்துவிடும் ,பண்பும் திறனும்
கொண்டது எனக் குறிப்பிடுகிறார். ஆக
அவருக்கு, உயர் நீர்க்கப்பட்ட திரவங்கள்
பற்றிய உண்மைகள் தெரிந்திருந்தது.
ஆனால் அவரது அடுத்த தலைமுறை
விஞ்ஞானி திரு ரிச்சர்ட் டாக்கின்ஸ்
இது சாத்தியமல்ல என்கிறார். உயர்
நீர்க்கபட்ட திரவங்களை அடிப்படைக்
கொள்கையாகக் கொண்டுள்ள
ஹோமியோபதி வெறும் நம்பிக்கை
வைத்தியம் என்கிறார்; எனவே அது
விஞ்ஞானமாகாது என்கிறார்.
விஞ்ஞானமென்றால் என்ன என்று
திட்டவட்டமான விளக்கங்கள் தந்த வல்லுநர்
கார்ல் பாப்பர் ஆரம்பத்தில் டார்வினின்
பரினாமவியலையே விஞ்ஞானம் என
ஏற்றுக்கொள்ள மறுத்ததை நாம் திரு
ரிச்சர்ட் டாக்கின்ஸுக்கு
நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது.
பல ஆண்டுகள் கழித்துத் தான் கார்ல்
பாப்பர் பரினாமவியலை விஞ்ஞானமாக
ஒப்புக் கொண்டார். இது வரலாறு.
கண்ணாடி மாளிகையில்
இருந்துகொண்டு கல்லெறிபவர்களே
அதிகம்.
இப்பொழுது, லெக் மாண்டெக்னர் தனது
நோபல் பரிசு வெற்றிக்குப் பின் ஒரு
புதிய அறிவிப்பைச் சொல்லி எல்லா
விஞ்ஞானிகளையும் வியப்பில்
ஆழ்த்தியிருக்கிறார். வீழ்த்தப்பட்ட
பென்வெனிஸ்டேயின் அடுத்த படி
நிலைக் கூற்றாக அது
அமைந்திருக்கிறது. உயர்ந்த அளவில்
நீர்க்கச் செய்யப்பட்ட திரவங்களின்
(பாக்டீரியா அல்லது வைரஸ்களின்
டீ.என்.ஏ திரவங்கள்) ஒருவித ரேடியோ
அலைகளை வெளிவிடுகின்றன. அவை,
தங்களைச் சூழ்ந்துள்ள
மூலக்கூறுகளை வினைபுரிந்து,
அம்மூலக்கூறுகள் உயிரியல்
செயல்புரியக் கூடிய அலைகளை
வெளியிடுகின்றன. சுருங்கக்
கூறினால், உயர் நிலை நீர்க்கப்பட்ட
திரவங்கள் நினைவாற்றல் இருக்கிறது
அவற்றால் அந்த நிலையிலும், கிரியை
ஆற்ற முடியும். ஹோமியோபதி மற்றும்
பென்வெனிஸ்டே யின் கொள்கைகள்
மீண்டும் உறுதிப்படுத்தப்படுகிறது.
சந்தேக வாதிகள் என்ன சொல்லி
தப்பிப்பார்கள் என பொறுத்திருந்து
பார்க்கலாம்.
ஹோமியோபதியர், ஜார்ஜ் வித்தல்காஸ்
இந்த சந்தேக வாதிகளின் குணங்களின்
அடிப்படையில் அவர்களது சந்தேக
நோய்க்கு, அலுமினா மருந்தை
பரிந்துரைப்பது உங்களுக்கான தகவல்.
Dr.Ravichandaran.

No comments:

Post a Comment