Wednesday 30 December 2015

Murali Castro: இந்த குழுமத்தின் நோக்கம்




Thu, 16 Jul 2015, 8:50 PM - Murali Castro: ஏற்கனவே நிரூபனம் செய்யப்பட்ட மருந்துகள் பல்வேறு காலகட்டங்களில் பல வெளிநாட்டவர்களால் நிரூபணம் செய்யப்பட்டவை. ஆனால் சமூகத்தில் பல மாற்றங்கள், தொழில்துறை வளர்சச்சி, உணவு முறை மாற்றம், இவையனைத்தும் மனித தேகவாகையும், மனநிலையையும் பலவாறாக மாற்றிக் கொண்டிருக்கின்றன. இந்தச் சூழலில் ஏற்கனவே நிரூபணம் செய்யப்பட்ட பல மருந்துகள் மறுபடியும் நிரூபணம் செய்யப்படும் பட்சத்தில் புதிய குறிகளைக்கூ வெளிப்படுத்த வாய்ப்புள்ளது
மரு. பழ.வெள்ளைச்சாமி.(ஓமியோபதி தத்துவம்
ஆர்கனானன் வழியில் விளக்கம்.)
நன்றி.


 கர்ப்பப்பை இரத்தப் போக்கு

எழுத்தாளர்:
.அப்துல் அஜிஸ்

பெரும்பாலான பெண்கள் கர்பப்பை இரத்த
ஒழுக்குத் தொந்தரவுகளுக்கு உள்ளாகி
இருக்கின்றனர். சாதாரண மருத்துவர்களும்,
பெண் பாலுறுப்புச் சிறப்பு வல்லுனர்களும்
இந்த இரத்த போக்கை நிறுத்துவதற்கு பல்வேறு
வகையான மருந்துகளைப் பயன்படுத்துகின்றனர்.
ஒழுக்கு நின்று விட்ட பின்னரும் மருந்தை விட்டு
விடாமல் தொடர்ந்து உட்கொள்ளச் சொல்லுகின்றனர்.
இந்த மருந்துகளைக் கொடுத்தும் நிறுத்த
இயலாமல் போகும்போது, பிறப்புறுப்பின் உள்ளே
உட்காயம் இருப்பதாகக் கூறி அதற்காக, நோய்
எதிர்ப்புக்காக என்று பாலுறுப்புக்கு உள்ளே
செருகக்கூடிய மருந்தையும் கொடுத்து சிகிச்சை
செய்கின்றனர்.
ஆனால் இதுவும் பயனளிக்காமல் போய்
விடும்போது ஒரு ஊடுகதிர்ச் சிகிச்சை செய்வதற்கு
சிபாரிசு செய்து அதன்படி செய்யவும் படுகிறது.
இதுவும் பலனளிக்காமல் போய் விடும்போது
முடிவாக அறுவை சிகிச்சை செய்து கர்பப்பையை
நீக்கிவிட்டு, இனித் தொந்தரவு இருக்காது என்று
மகிழ்வுடன் சிரித்துக் கொண்டு சொல்வார்கள்
அறுவை மருத்துவர்கள். இதன் மூலம் பெண்
தன் பாலுறுப்பை இழந்து விடுகிறாள். இது போன்ற
அறுத்து நீக்கும் ஆயுத சிகிச்சையை
அனுபவப்பட்ட ஹோமியோபதி மருத்துவர்கள்
கடும் கண்டனம் செய்கிறார்கள்.இந்த இரத்த
போக்கை நிறுத்துவதற்கு முறையான சிகிச்சையும்,
சிறந்த தீர்வும் ஹோமியோபதியில் இருக்கின்றன.
பெரும்பாலும் அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பப் பையை
நீக்காமலேயே நலம் செய்விக்க முடியும்.
வீர்யப்படுத்தப்பட்ட, செயலாற்றல் மிக்க
ஹோமியோபதி மருந்துகள் கொடுக்கப்படும்போது,
அம்மருந்து மிக எளிதாகவும், மிகவிரைவாகவும்
தன்னுடைய கடமையயை நிச்சயமாகச் செய்யும்.
சிறந்த சில ஹோமியோபதி மருந்துகள்:
இபிகாக்;
கர்பப்பையிலிருந்து தொடர்ந்து ஒழுக்கு இருக்கும்,
ஆனால் கொஞ்ச நேரத்திற்கு ஒரு முறை அதிகமாகப்
பாய்ந்து வரும், அப்படி வரும்போது பிரகாசமான
சிவப்பு இரத்தம் வெளி வரும். துயரர் தனக்கு
உணர்விழப்பு ஏற்படுமோ என்று நினைப்பார்,
அல்லது மூச்சுத் திணறல் இருந்தால் மற்றும்
இரத்தப் போக்கின் அளவு நெடுங்கிடையாக
இருப்பதற்குத் தேவையான அளவு
இல்லாதிருந்தால் குமட்டல் உணர்ச்சி, இரத்த
அழுத்தக் குறைவினால் வரும் உணர்விழப்பு,
வெளிறிய தோற்றம் இவற்றிற்கு சிறந்தது இபிகாக்
மருந்து ஆகும்.
அகோனைட்;
பிரகாசமான சிவப்புஇரத்தம் பாய்ந்து வெளியேறி
இதன் கூடவே மரண பயமும் இருந்தால் நல்ல
பயன்தரும்.
பாஸ்பரஸ்;
கிட்டத் தட்ட எப்போதும் இரத்த போக்கிற்கு
உதவும் மருந்தாகும் இது. வாடி வதங்கி
இருக்கும் பெண் துயரர், மெலிந்து ஒல்லியாகி
எப்போதும் வெப்பம் காரணமாக துன்பப் பட்டுக்
கொண்டிருந்தால், போர்வையைப் போர்த்தாமல் எப்போதும்
குளிர்ச்சியாக இருக்க விரும்பினால், கர்பப்
பையிலிருந்து அடிக்கடி இரத்தப்போக்கு இருந்தால்
சிறந்த முறையில் பயனளிக்கும் மருந்து
பாஸ்பரஸ் ஆகும்.
இரத்தம் உறைந்து இருந்தால் அல்லது இரத்தப்
போக்கு கறுப்பாக நீராக இருந்தால் சீகேல்
கார்னூட்டம் நலமளிக்கும்.
நோயின் பெயருக்கு மருந்து என்கிற
இயந்திரத்தனம் இல்லா மல், துயரரின்
தொந்தரவுக்கான காரணம் என்ன என்றும்,
துயரரின் உடல்வாகு பற்றியும், மனப்பாங்கு
பற்றியும், இரத்த ஒழுக்கானது என்ன
நிறத்தையும், என்ன தன்மையையும். என்ன
வகையையும் கொண்டுள்ளது என்றும் அத்துடன்
கூடவே மாறுமைக் குறிகளையும் கணக்கில் கொண்டு
அதே போன்ற முழுமைக் குறிகளை செயற்கையாகத்
தோற்றுவித்த மருந்துப் பொருள் எது என்று தேடுகிறார்
ஹோமியோபதி மருத்துவர்.
அவருக்கு நோயின் பெயர் பற்றி கவலை ஏதுமில்லை.
அதற்கு அவசியமுமில்லை. வீர்யப்படுத்தப்
பட்ட மருந்தை துயரரின் இயங்கும், தாங்கும்
திறனுக்கேற்ப வழங்கும் போது கர்பப்பை இரத்த
ஒழுக்கு நிறுத்தப்பட்டு நலமாக்கல் நிகழ்கிறது
என்கிறார் மரு. ஜே.டி.கெண்ட்.
இது எப்படி செயல்படுகிறது என்பதை விட இந்த
நுண்ணிய ஹோமியோ மருந்து உயிர் ஆற்றலில்
வேலை செய்கிறது என்பது மட்டும் உண்மை!
- .அப்துல் அஜிஸ்

Fri, 17 Jul 2015, 2:04 PM - Murali Castro: இந்த குழுமத்தின் நோக்கம் ஒப்பற்ற ஓமியோபதி மருத்துவத்தைப்பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், ஆர்கனான், மெட்டீரியா மெடிக்கா, ரெப்பர்ட்டரி அறிவை பெருக்குவதும், மருந்து தேர்ந்து செய்வதும், மற்ற  வழிமுறைகளில் மருந்து தேர்வு செய்து நலமாக்கலின் துயரர்சரிதையும், ஆவணத்தையும்  பகிர்வதும், அது பற்றி விவாதிப்பதும்., ஹோமியோபதியில் புதிதாக வந்துள்ள(Books,seminars,methods, remedies, ) தகவல்களை பரிமாறுவதும்  நோக்கமாக இருக்க வாழ்த்துக்கள். நன்றி.
-முரளி காஸ்ட்ரோ

Fri, 17 Jul 2015, 2:12 PM - Murali Castro:

  தினம் ஒரு மணிமொழி
-Dr.Karuppaiah

ஆர்கனான்
மணிமொழி-1(அடிக்குறிப்புடன்)
மரு. . ஹானிமன் எழுதிய ஆர்கனான் என்ற
தத்துவ நூலில்294 மணிமொழிகள்
உள்ளன. (ஆறாவது பதிப்பு ) அதன்
ஆங்கில மூலத்தையும், தமிழ்
வடிவத்தையும் இப்பொழுது
பார்க்கலாம்.
The physician's high and only mission is to restore the
sick to health, to cure, as it is termed*.
*His mission is not, however, to construct so-called
systems, by interweaving empty speculations and
hypotheses concerning the internal essential nature of
the vital processes and the mode in which diseases
originate in the interior of the organism, (whereon so
many physicians have hitherto ambitiously wasted their
talents and their time); nor is it to attempt to give
countless explanations regarding the phenomena in
diseases and their proximate cause (which must ever
remain concealed), wrapped in unintelligible words and
an inflated abstract mode of expression, which should
sound very learned in order to astonish the ignorant -
whilst sick humanity sighs in vain for aid. Of such
learned reveries (to which the name of theoretic
medicine is given, and for which special professorships
are instituted) we have had quite enough, and it is now
high time that all who call themselves physicians should
at length cease to deceive suffering mankind with mere
talk, and begin now, instead, for once to act, that is,
really to help and to cure.

தன்னிடம் சிகிச்சை பெற
வருகிறவர்களின் நோய்களை வேருடன்
களைந்து , மீண்டும் அவர்கள் நோயற்ற
வாழ்வு வாழ வழி செய்வது ஒன்றே
மருத்துவரின் உயர்ந்த பணி ;
கடமையுமாகும்.
*ஒரு மருத்துவரின் மேற்கொண்ட பணி
(Mission) எவ்வாறு இருக்க
வேண்டுமென்றால் ஓர் உயிரியின்
கண்ணுக்கு புலப்படாத உள்ளார்ந்த
உயிர் இயக்கத்தில் நோய் எவ்வாறு
தோண்டுகிறது, உயிர் இயக்கம் பற்றிய
சாராம்சமான இயற்கைதன்மை என்ன
எனபது பற்றிய வெற்றுக்
கருத்துகளையும் ஊகங்களையும்
புனைந்து பழையமாதுரியான
மருத்துவமுறைகளை கட்டி
அமைப்பதாக இருக்ககூடாது .
( அவ்வாறான ஊகங்களின் மேல் நிறைய
மருத்துவர்கள் தங்களது திறமையையும்
நேரத்தையும் ஆர்வமுடன்
வீனடிதுள்ளர்கள்). நோய், அதற்கான
உத்தேசமான காரணம் (காரணம் என்பது
எப்போதும் மூடுமந்திரமாகவே
உள்ளது) மற்றும் நிலைமைகள் பற்றி
ஏராளமான விளக்கங்களைச் சொல்லவும் ,
ஆறிவுக் கூர்மையற்ற சொற்களால்
பொதிந்து விஸ்தாரமான அனால்
புரியாத பூடகமான வழிமுறையில்
வெளிபடுத்தவும் முயற்சிப்பதுதானா
ஒரு மருத்துவரின் இயக்கம்?.
உதவிக்காக வெறுமனே பெருமூச்சு
விட்டு ஏங்கிக் கொண்டிருக்கும் உடல்
நலிந்த அப்பாவி மனிதகுலத்தை
வியப்படையச் செய்ய மேதாவித்தனமாக
முயற்சி செய்வதாகும்.அப்படிப்பட்ட
பகல்கனவுக்காரர்களின் (அவர்களுக்காக
புத்தகத்திலுள்ள மருத்துவ பெயர்களும்
தனிச்சிறப்பான பேராசிரியர்
பட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன )
நம்மிடையே நிறைந்துள்ளனர். அவர்கள்
தங்களை மருத்துவர்கள் என்று சொல்லிக்
கொண்டு அல்லலுறும் மனித குலத்தை
வெறும் பேச்சால் மட்டும் ஏய்க்கும்
போக்கை உடனடியாக நிறுத்திக்கொள்ள
இது நல்ல சிறந்த தருணமாகும்.
உண்மையாகவே உதவி செய்யவும்
நலபடுத்தவும் இப்பொழுதே
தொடங்கவேண்டும் ; நலமாக்குவதுபோல்
நடிப்பதை விட்டுவிட வேண்டும்.
Dr.Karuppaiah.
manithanalam.blogspot.in

Fri, 17 Jul 2015, 2:46 PM - Murali Castro: Discuss about selection of remedy and pqrs symptoms. Of course failure cases to be reviewed a/w rubrics. So we can learn many things. Encourage to present brief success case and eliminating symptoms for selection of remedy. I will participate based on my available time. All the best.
-மரு.கருப்பையா
Fri, 17 Jul 2015, 2:50 PM - Murali Castro: இக்குழுமத்தினர் சார்பாக நன்றி அய்யா.
-முரளி காஸ்ட்ரோ

Fri, 17 Jul 2015, 7:52 PM - Balasubramanian: 

மருத்துவரின் பணி  -Plvellaichamy.

ஒரு மருத்துவருடைய தலையாய பணி(MISSION)
நோயுற்ற மனிதரை மறுபடியும் நோயற்ற
நிலைக்குக் கொண்டு வருவதுதான்.
அதாவது அவரை பூரண நலமுள்ளவராக
மாற்றுவது இது தவிர்த்து அவருடைய
கற்பனைகள் புனைவுகள் மூலம் புதிய
மருத்துவமுறையைக் கண்டுபிடிப்பதாக
மக்களைப் பிரமிக்க வைப்பது அல்ல.
மனிதனுக்குள்ளே என்ன
நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்பதை அலங்கார
வார்த்தைகளால் பிறர்க்குப் புரியாதபடி கூறி
துயரர்களை மிரள வை ப்பது அல்ல.
மருத்துவம் தொடர்பான புரியாத
வார்த்தைகளைக்கூறித் தான் படித்த மேதாவி
என்று காட்டிக்கொள்வதல்ல.
துயரர்கள் ஒரு மருத்துவரிடம் தங்கள்
துயரங்களிலிருந்து நிவாரணம்
பெறுவதற்காகவே வருகிறார்கள் அந்த
நிவாரணத்தை அளிப்பதே தலையாய கடமை.அந்த
தலையான பணியைச்செய்யப்போகும் மருத்துவர்
என்னவெல்லாம் தெரிந்திருக்கவேண்டும்
என்பதைப் பார்ப்போம்.
1.ஒவ்வொரு நோயிலும்
குணப்படுத்தப்படவேண்டியது என்ன என்பதை
அறிந்திருக்க வேண்டும்.
2.அதேபோல் ஒவ்வொரு மருந்திலும்
குணப்படுத்துவது எது என்பதை
அறிந்திருக்கவேண்டும்.
3.இவ்வாறு நோயில்
குணப்படுத்தப்படவேண்டியதையும் மற்றும்
மருந்தில் குணப்படுத்துவதையும் எப்படிப்
பொருத்தவேண்டும் என்பதைத் தெரிந்திருக்க
வேண்டும்.
4.தன்னிடம் வந்துள்ள துயரருக்கு உரிய
மருந்தைத் தேர்வு செய்யத் தெரிந்திருக்க
வேண்டும்
5.அந்த மருந்தை எப்படித் தயாரிக்கவேண்டும்
என்பதைத் தெரிந்திருக்க வேண்டும்.
6.அந்த மருந்தை எந்த வீரியத்தில் எந்த அளவு
கொடுக்க வேண்டும் என்பதைத்தெரிந்திருக்க
வேண்டும்.
7.அந்த மருந்து துயரரிடம் வேலை செய்து
என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது
என்பதை அறிய வேண்டும்.
8.அந்த மருந்தின் செயலாற்றும் திறம்
முடிந்துவிட்டதா? அப்படியாயின்
அடுத்தவேளை மருந்தை எப்போது கொடுக்க
வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டும்.
9.ஒவ்வொரு முறையும் துயரரை
முதன்முறையாக ஆய்வுசெய்வதுபோல் ஆய்வு
செய்து அவரின் குறிகளின் தன்மையை அறிந்து
ஏற்கெனவே கொடுத்த மருந்துதான்
மறுபடியும் தேவைப்படுகிறதா?
அப்படியாயின் அந்த மருந்தின் வீரியத்தை
மாற்றவேண்டுமா? அல்லது அளவை மாற்ற
வேண்டுமா? என்பதை எல்லாம் நன்கு அறிந்து
தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
10.இவ்வாறு தன்னிடம் வரும் துயரருக்கு உரிய
மருந்தை தேவைக்கு ஏற்பக் கொடுத்து
படிப்படியாக குணப்படுத்தும்போது, அவரைக்
குணப்படுத்தவிடாமல் தடுக்கும் தடைகள் என்ன
என்பதை அறிந்திருக்கவேண்டும்.
11.தடைகளை அறிந்து அதை
நீக்கத்தெரிந்திருக்க வேண்டும்.
12.இவ்வாறு தடைகளை நீக்கி துயரரை
பூரணநலமுள்ளவராக
ஆக்கவேண்டும்.அப்போதுதான் அவர்
பகுத்தறிவுபூர்வமாக மருத்துவம் செய்வதாக
கருதப்படுவார்.
இவ்வாறு ஒரு துயரரை நோயுற்ற
நிலையிலிருந்து மீட்டி நோயற்ற நிலைக்கு
கொண்டு வருவதோடு மட்டும் ஒரு
மருத்துவருடைய பணி
முடிந்துவிடுவதில்லை.
அதற்கும் மேலாக ஆரோக்கியமான மனிதர்களிடம்
நோயை ஏற்படுத்தும் காரணிகள் என்ன என்பதை
அறிந்திருக்க வேண்டும்.அதை எவ்வாறு
நீக்குவது என்பதையும் தெரிந்திருக்க
வேண்டும்.அப்போது அவர் நோயிலிருந்து
துயரரை மீட்டுவது மட்டுமின்றி
ஆரோக்கியமான மனிதர்களின் நலத்தைப்
பேணுபவராகவும் செயல்படுகிறார்.
இங்கே ஹோமியோபதி மருத்துவர் மருந்து
கொடுத்து நோயைக் குணப்படுத்துபவராக
மட்டும் இல்லாமல் நோயை ஏற்படுத்தும்
காரணிகள் என்ன என்பதை அறிந்து அவற்றை நீக்க
வேண்டும் என்றபோது அவர் ஒரு மருத்துவராக
மட்டும் இருந்தால் போதாது.
ஏனெனில் நோய்க்கான காரணிகள்
வறுமை,வேலை இல்லாத்திண்டாட்டம்,
சுகாதாரமற்ற
வாழ்வு,சாதிமதக்கொடுமைகள்,சமூக
ஏற்றத்தாழ்வு மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக
அறியாமை இவைகள் தாம்.
ஒரு நல்ல ஹோமியோபதி மருத்துவர் என்பவர்
டாக்டர் ஹானிமன் அவர்களுடைய கூற்றுப்படி
மேற்கூறிய காரணிகளை நீக்கும் பணியில்
ஈடுபடவேண்டும். டாக்டர் ஹானிமன் அலோபதி
மருத்துவம் பார்த்தபோது அவர்தான் சுகாதாரம்
தொடர்பாக முதல் குரலை எழுப்பிய
மருத்துவராக இருந்தார்.அவர் மனிதனின்
உணவு,வாழும் முறை மற்றும் இருப்பிடம் இவை
எல்லாம் எப்படி இருக்கவேண்டும் என்பதைப் பற்றி
மருத்துவ வரலாற்றில் அவர் காலத்தில் முதலில்
எழுதிய மருத்துவராவார்.
இன்று சமூகம் மிகவும் மோசமான நிலையில்
இருக்கிறது.மனித இனம் வறுமையாலும்
அறியாமையாலும் படுதுயர் எய்தி
நோய்வாய்ப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கான
காரணம் என்ன என்பதை அறிந்து நீக்க முயற்சிக்க
வேண்டும்.
அப்போது ஹோமியோ மருத்துவர் மருந்து
கொடுப்பவராக மட்டுமில்லாமல் ஒரு
சமூகப்போராளியாக மாற வேண்டும்
இல்லையேல் மேற்கூறிய காரணிகளை
நீக்கமுடியாது.
-Plvellaichamy.

No comments:

Post a Comment