கருப்பையின்
உட்சுவர் சவ்வு
அழற்சி!
எழுத்தாளர்:
உ.அறவாழி
கருப்பையின்
உட்சுவர் சவ்வு, சில
சமயங்களில்
கருப்பைக்கு
வெளியேயும்
வளர ஆரம்பிக்கும்.
இப்பிரச்சனையைத்தான்
நாம்
கருப்பை
உட்சுவர் சவ்வு அழற்சி
(Endometriosis) என்கிறோம்.
கருத்தரித்தலை
வெகு
நாட்களுக்கு
செயற்கையாகத்
தள்ளிப்
போடும் பெண்கள், நீண்ட
நாட்களுக்குப்
பிறகு கருவுறும்
போது
இப்பிரச்சனை
ஏற்படுகிறது.
அதனால் தான்
இந்நோயை
பணிக்குச் செல்லும்
பெண்களின்
நோய் (Career Woman’s
Diseases) என்று
அழைக்கிறார்கள்.
கருப்பை
உட்சுவர் சவ்வு
ஒவ்வொரு
மாதவிடாய்ச்
சுழற்சியின்
போதும் சுரக்கும்
ஈஸ்ட்ரோஜன்
மற்றும்
புரொஜஸ்டிரான்
ஆகிய இயக்கு
நீர்களின்
அளவைப் பொருத்தே
கருப்பைக்குள்
வளருகிறது.
இவ்வியக்கு
நீர்கள் அதிகமாக
சுரக்கும்
போது, இவை நன்கு
வளர்ந்துப்
பருத்துப் படருகின்றன.
இயக்கு
நீ.ர்களின் சுரப்பு
குறையும்
பொழுது, இவை
கட்டிக்
கட்டியாகக் கழன்று
மாதவிடாயுடன்
சேர்ந்து
வெளியேறு
கின்றன.
ஆனால்,
கருப்பைக்கு வெளியே
வளர்ந்த
கருப்பை உட்சுவர்த்
திசுக்கள்
சரியானபடி
வெளியேறப்
பாதை இல்லாததால்
அவை
வயிற்றுக்குள்ளேயே
தங்கி,
ஒன்றன் மீது ஒன்றாகக்
கெட்டி
யாக ஒட்டி வளரு கின்றன.
இதைத்
தான் நாம் கருப்பை
உட்சுவர்
சவ்வு அழற்சி
என்கிறோம்.
கருப்பைக்கு
வெளியே வளர்ந்த
உட்சுவர்த்
திசுக்கள் சில
சமயங்களில்
சினைப்பைகளை
பாதித்து,
கருப்பை உட்சுவர்
சவ்வுக்கட்டிகளாக
(உய்க்ர்ம்ங்ற்ழ்ண்ர்ம்ஹள்)
மாறிவிடக்கூடும்.
காலப்போக்கில்
இவை கறுத்துச்
சிவந்த
பழுப்பு நிறமாக
மாறக்கூடும்.
இவ்வாறு மாறிய
இந்தக்
கட்டிகளை சாக்லெட்
கட்டிகள்
(இட்ர்ஸ்ரீர்ப்ஹற்ங் இஹ்ள்ற்ள்)
என்று
அழைக்கிறோம். இவை
பட்டாணியைப்
போன்று
சிறிதாகவோ
அல்லது திராட்சைப்
பழத்தைப்
போல பெரிதாகவோ
இருக்கலாம்.
கருப்பை
உட்சுவர் சவ்வு
அழற்சியின்
காரணமாக,
மாதவிடாயின்
போது வலியும்,
வேதனையும்
அதிகமாக ஏற்படும்.
இதற்குக்
காரணம் கருப்பை
உட்சுவர்
திசுக்களிலிருந்து
வெளியாகும்
புரோஸ்டோகிளாண்டின்ஸ்
என்ற
இயக்கு
நீராகும். இந்த இயக்கு நீர்
கருப்பையின்
தசைகளை
இறுக்குவதே
வலி ஏற்பட
காரணமாகிறது.
கருப்பை
உட்சுவர்
சவ்வு அழற்சி எந்த
அளவுக்கு
பரவியுள்ளது
என்பதைப்
பொருத்து இந்த
வலியும்,
வேதனையும்
அதிகரிக்கிறது.
சிலருக்கு
மாதவிடாய்
ஏற்படுவதற்கு
முன்பும்
கூட வலி உண்டாகலாம்.
மேலும்
உடலுறவின் போதும்
கூட
சிலருக்கு வலி ஏற்படும்.
இதை
புணர்வலி
என்பார்கள்.
சினைப்பைகளையும்,
பிறப்புப்
பாதையின்
மேல் புறத்தையும்,
சுற்றி
வளைத்துள்ள கருப்பை
உட்சுவர்
திசுக்களின்
முடிச்சுக்கள்
ஆணுறுப்பு
உள்ளே
செலுத்தப்படும் பொழுது
ஏற்படும்
அசைவினால்
பாதிக்கப்பட்டு
வலி ஏற்படுகிறது.
இந்நோயால்
பாதிக்கப்பட்ட
பெண்களில்
பலருக்கு
மாதவிடாய்ச்
சுழற்சியில் எந்த
பாதிப்பும்
ஏற்படுவதில்லை. ஒரு
சிலருக்கு
சீரான இடைவெளி
இல்லாமல்
பிறப்புப் பாதை
வழியே
இரத்தம் கசியும். மேலும்,
சிலருக்கு
மாதவிடாய்
ஆரம்பிக்கும்
முன்னர் இரத்தம்
சொட்டுச்
சொட்டாக
வெளியேறும்.
இந்நோயால்
பாதிக்கப்பட்ட
பெண்களில்
சிலருக்கு,
கருத்தரிக்க
இயலாமைக்கு வேறு
காரணங்களும்
இருக்கக்கூடும்.
அதில்
ஒன்று, விந்தணுவின் தரம்
மோச
மடைந்து இருப்பதாகும்.
சிலருக்கு
கரு முட்டை
வெளிப்படுவதில்
பிரச்சனைகள்
ஏற்படலாம்.
கருமுட்டை
வெளிப்பட்டாலும்,
கருக்குழாயின்
நார்
மருவிகளால்
கருமுட்டையைத்
தனக்குள்
கவர்ந்திழுக்கும்
ஆற்றல்
குறைந்திருக்கலாம்
அல்லது
கருக்குழாயில்
அடைப்பு
ஏற்பட்டிருக்கலாம்.
சினைப்பையில்
சாக்லெட் கட்டிகள்
இருந்தாலும்
கருமுட்டை
வெளிப்படுவதில்
தடை ஏற்படும்.
நோய்
அறிதல் (Dignosis):-
கருத்தரிக்க
இயலாத பெண்கள்
தமக்கு
மாதவிடாய் ஏற்படும்
பொழுது,
அதிக வலியால்
வேதனைப்படுவதாகக்
கூறும்
பொழுது
அல்லது உடலுறவின்
போது
அதிக வலி ஏற்படுகிறது
என்று
கூறும் பொழுது,
அவர்களுக்கு
கருப்பை உட்சுவர்
சவ்வு
அழற்சி ஏற்பட்டுள்ளது என
சந்தேகிக்கலாம்.
ஆனாலும்,
லாபரோஸ்கோப்பி
பரிசோதனை
மூலம்
மட்டுமே நோயை உறுதி
செய்ய
முடியும்.
இந்நோயைக்
குணப்படுத்தக்கூடிய
சில
ஹோமியோ
மருந்துகள்;-
அகோனைட்,
ஆண்டிமோனியம்
அயோடேடம்,
அபிஸ் மெல்லிபிகா,
ஆர்னிகா,
ஆர்சனிகம் ஆல்பம்,
பெல்லடோனா,
பிரையோனியா,
காந்தாரிஸ்,
சாமோமில்லா,
சிமிசிபியூகா,
சைனா,
கோனியம், ஜெல்ஸிமியம்,
ஹெப்பார்
சல்பர், ஹயோசியாமஸ்,
அயோடியம்,
காலி கார்பானிகம்,
காலி
அயோடேடம், லாச்சசிஸ்,
லில்லியம்
டிகிரினம்,
மெடோரினம்,
மெர்கூரியஸ்
கரோசிவஸ்,
நக்ஸ் வாமிகா,
ஓபியம்,
பாஸ்பாரிக் ஆசிட்,
பிளாட்டினா,
பல்சட்டில்லா,
ரஸ்டாக்ஸ்,
சபீனா, சீகேல்
கார்னேட்டம்,
செபியா, சைலீசியா,
ஸ்ட்ரெமோனியம்,
சல்பர்,
டெரிபிந்தினா
மற்றும் வெராட்ரம்
விரைட்.
-உ.அறவாழி
Thu, 16 Jul 2015, 8:43 PM - எத்தனையோ what's app குருப்புகளை பார்த்திருக்கிறேன்
பலவிதமான
மெசேஜ் பரிவர்த்தனை களை பார்த்திருக்கிறேன் ,சினிமா அரசியல்,பொழுதுபோக்கு ஆகியவைகளே அவற்றில் ஆக்கிறமிப்பு செய்து இருக்கும்!
ஆனால்
முதல் முதலில் மருத்துவத்துக்கான முதல் what's app குரூப் இதுவென நினைக்கிறேன் அதுவும் தூய ஹோமியோபதி க்கு என்ன என்னும் போது மிக்க மகிழ்ச்சி .
இந்த
முயற்ச்சிக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகள் வாழ்க வளமுடன் .
-பைஸ்தீன் இலங்கை
No comments:
Post a Comment