Wednesday, 30 December 2015

மணிமொழி § 11 அடிக்குறிப்பு-2 ,case of kali-br ,chenopodium



Fri, 31 Jul 2015, 4:52 AM - Murali Castro: தினம் ஒரு ஆர்கனான் மணிமொழி § 11
அடிக்குறிப்பு-2
பாரா-3

In a similar way, the effect of medicines upon living man
is to be judged. Substances, which are used as
medicines, are medicines only in so far as they possess
each its own specific energy to alter the well-being of
man through dynamic, conceptual influence, by means
of the living sensory fibre, upon the conceptual
controlling principle of life. The medicinal property of
those material substances which we call medicines
proper, relates only to their energy to call out
alterations in the well-being of animal life. Only upon
this conceptual principle of life, depends their medicinal
health-altering, conceptual (dynamic) influence. Just as
the nearness of a magnetic pole can communicate only
magnetic energy to the steel (namely, by a kind of
infection) but cannot communicate other properties (for
instance, more hardness or ductility, etc.). And thus
every special medicinal substance alters through a kind
of infection, that well-being of man in a peculiar manner
exclusively its own and not in a manner peculiar to
another medicine, as certainly as the nearness of the
child ill with small-pox will communicate to a healthy
child only small-pox and not measles. These medicines
act upon our well-being wholly without communication
of material parts of the medicinal substances, thus
dynamically, as if through infection. Far more healing
energy is expressed in a case in point by the smallest
dose of the best dynamized medicines, in which there
can be, according to calculation, only so little of
material substance that its minuteness cannot be
thought and conceived by the best arithmetical mind,
than by large doses of the same medicine in substance.
That smallest dose can therefore contain almost entirely
only the pure, freely-developed, conceptual medicinal
energy, and bring about only dynamically such great
effects as can never be reached by the crude medicinal
substances itself taken in large doses.

இத்தகைய ஒத்த முறையில் தான், உயிர் வாழும்
மனிதர்களின் மீது மருந்துகள் ஏற்படுத்தும்
விளைவுகளையும் தீர்மானிக்கவேண்டும். மருந்தாகப்
பயன்படும் மூலப்பொருள்கள் ,
ஒவ்வொன்றும் அதன் இயல்பிற்கு
ஏற்றவாறும் , தனிச் சிறப்பான ஆற்றலுடனும் ,
இயக்க நிலைப்பட்டும் , அடிப்படைக் கோட்பாடுடனும் உயிர்
வாழ்வதற்குத் தேவையான உணர்வு நரம்புகளின்
வழியாக, ஆரோக்கியமாக மனிதர்களின்
உயிராற்றலில் உண்டாக்கக்கூடிய
கருத்தளவான மாற்றத்தின் தன்மையைப்
பொறுத்தே மருந்துகளாகின்றன. சரியான
மருந்துகள் என்று நம்மால் அழைக்கப்படும்
அப்பருப்பொருள்களின் மருத்துவப்பண்புகள்
நலமான வாழ்க்கை நிலையில் மாற்றங்களை
ஏற்படுத்தக்கூடிய அவற்றின் ஆற்றலோடு ஒத்திருக்க
வேண்டும். உயிர் வாழ்க்கையின் இக்கருத்தளவான
நெறிமுறையைச் சார்ந்ததாகவே , ஆரோக்கியமான
நிலையில் அம்மருந்துகளால் உண்டாக்கும்
மாற்றங்களும் கருத்தளவான (இயக்கம்
சார்ந்த ) பாதிப்புகளாக அமைகின்றன. இது
எப்படி என்றால் அருகில் இருக்கும் இரும்புத்
துண்டின் மீது காந்தத்தின் துருவம் அதனுடைய
காந்தஆற்றலை மட்டுமே செலுத்தக்
கூடியதாகவும் ( தொற்றுநோய் பரவுவது போல
என்று எடுத்துக் கொள்ளலாம்) வேறு
வகையான பண்புகளை ( உதாரணத்திற்கு அதன்
கடினத்தன்மை அல்லது உடையாமல் கம்பிகளாக
இழுக்கப்படும் ஆற்றல் போன்றவை ) செலுத்த
முடியாததாகவும் இருப்பதைப் போன்றதாகும்.
இவ்வாறு தான் ஒவ்வொரு சிறப்பான
மருந்துப் பொருளும் ஒருவகையான
தொற்றுநிலையின் மூலம் அந்த மருந்துப்
பொருளுக்கே உரியதான தனியியல்பான
முறையில் , அதாவது வேறொரு மருந்துப்
பொருளுக்குரிய தனியியல்பான முறையில்
இல்லாமல் மனிதனின் நலமான நிலையில்
தனியியல்பான மாற்றங்களை ஏற்ப்படுத்துகிறது.
இது, பெரியம்மை நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு
குழந்தை, அதனருகில் நலமாக உள்ள
வேறொரு குழந்தைக்கு பெரியம்மை நோயைத்
தான் பரப்பக்கூடியதாகவும் , மணல் வாரி
அம்மை நோயைச் செலுத்த முடியாததாவும்
இருப்பதைப் போன்றதாகும். இந்த மருந்துகள்
அவற்றின் பருப்பொருள் இயல்புகளைப்
மனிதனின் ஆரோக்கிய நிலையில் செலுத்தாமல்,
இயக்க நிலையில் (தொற்று நோயைப் பரப்புவது
போல் செயலாற்றுகின்றன. அம்மருந்துகள் மிக
மிகக் குறைந்த அளவிலும் , இயக்க முறையிலும்
தயாரிக்கப்பட்டதால் (=வீரியப்படுத்துதல்) அதன்
நலமாக்கும் சக்தி (ஆற்றல்) சிறப்பாக
வெளிப்படுகிறது. மிகச் சிறந்த கணக்கு அறிவு
உள்ளவராலும் , அம்மருந்தின்
பருப்பொருள் அளவை சிறதளவு கூட
உணரமுடியாத அளவிற்கு அதன் குணப்படுத்தும்
ஆற்றல் மிகப் பெரிய அளவில்
வெளிப்படுகிறது. ஆனால் அதே மருந்தை
பருப்பொருளில் பெரிய அளவில்
கொடுத்தாலும் அத்தகைய நன்மையைப்
பெற முடியாது. ஆகவே மிகக் குறைந்த
(நுண்ணிய) அளவில் தயாரிக்கப்படும் மருந்து
மிகவும் முழுமையான அளவில் தூயதாகவும் ,
சுலபமாக தயாரிக்கப்பட்டதும் ,
கருத்தளவானதாகவும் உள்ள மருந்தாற்றலைக்
கொண்டதாக இருக்கிறது. அது
இயற்கைமேனியான மருந்தின் மூலக்கூறுகளை
அதிகமான அளவில் எடுக்கும்போது எட்டமுடியாத
அளவிற்கு (குறைந்த மருந்தளவு ) மாபெரும்
பாதிப்பை தருவதாக இருக்கிறது.
(அடிக்குறிப்பு தொடரும்)
Dr.Karuppaiah.
Fri, 31 Jul 2015, 7:05 AM - Sivakumuran Dr: 👍

Fri, 31 Jul 2015, 2:39 PM - Murali Castro: காலி ப்ரோமேட்டம்- ஒரு
துயரர் சரிதை

நண்பனின் தந்தை, வயது 82. 3
வருடஙளுக்கு முன்
அவருக்கு இருதய நோய்க்காக
ஆஞ்சியோப்ளாஸ்டி சிகிச்சை
அளிக்கப்பட்டது; ஸ்டெண்ட்டும்
பொருத்தப்பட்டது. தற்சமயம் அவரது
ப்ரச்சினை தன்னைக் கைது செய்ய
போலீஸ் வந்திருப்பதாகக்
கூறுகிறார்.தான் பணியிலிருந்து
ஓய்வு பெறுவதற்கு 15 ஆண்டுகளுக்கு
முன் வருமான வரி அறிக்கை தாக்கல்
செய்ததில் தவறு நேர்ந்து விட்டது;
அதனால் தான் கைது செய்ய போலீஸ்
வருகிரது என்று வருந்தவும்
செய்கிறார். தனது மருமகள் தான்
போலீஸுக்கு தகவல் தந்திருப்பதாக
சந்தேகிக்கிறார். சாப்பிட மறுக்கிறார்.
நண்பனிடம் காலி புரோமேட்டம் 30
5 டோஸஸ்- 3 நாட்கள் இடைவெளியில் 1
டோஸ் காலையில் கொடுக்க
அறிவுறுத்தினேன்.
ஒரே மாதத்தில் அவரது மனத்துயர்
முற்றிலுமாய் நீங்கியது.
Dr.Ravichandaran.

Fri, 31 Jul 2015, 4:40 PM - Murali Castro: தலை சுற்றலின்
வித்தியாசமானக்
குறிமொழி

    ஐந்து வருடங்களுக்கு முன், ஒவ்வொரு
மாதமும் இரண்டாம் சனிக்கிழமை
கரூரிலோ அல்லது திருச்சியிலோ
நண்பரின் வீட்டில் தங்கி துயரர் சரிதைகள்
கேட்டு ம்ருத்துவ ஆலோசனை
வழங்குவது ஏற்பாடாகியிருந்தது.
சனிக்கிழமை இரவு ரயிலில்
திரும்பிவிடுவேன்.
ஒரு சமயம் எனது உயர் அதிகாரி-
நண்பரின் உறவினர் திருச்சியில்
சிகிச்சைக்காக வந்தார்
வயது 29 சட்ட ஆலோசகர். ஒருமுறை
வாதாடிக் கொண்டிருக்கும்போது
தலை சுற்றி இடர்பாடு ஏற்பட்டதாம்.
அடிக்கடி தலை சுற்றல் வரவும் வக்கீல்
தொழிலைத் தொடரும் அளவிற்கு
நம்பிக்கையில்லை. சீ டீ ஸ்கான் உள்
அவயவங்கள் நன்றாய் இருப்பதாகக்
கூறியது. அலோபதி மருந்துகள்
வெர்ட்டின் க்ரவால் எதுவும்
பயனளிக்கவில்லை. திருமணம்
இதனாலேயே தள்ளிப் போட்டுக்
கொண்டிருந்தார்.
மெலிந்த தேகம். பயந்த சுபாவம்
.
அடிக்கடி சளித் தொந்தரவு. குளிர்ச்சி
ஒத்துக்கொள்வதில்லை. வாயில்
எப்போதும் உப்பு ருசி. குதிகாலில்
வலி. திடீர் திடீரென்று தலை சுற்றல்.
வீடே சுற்றும்.
கொஞ்சம் எளிதாகச் சரிதை
தோன்றியது. ஸைக்ளாமென் 30  கொடுத்தேன்
15 நாட்கள் கழித்து பேசினார். ஒன்றும்
மாற்றமில்லை இந்த இருவார காலத்தில்
ஐந்து முறை தலை சுற்றல்
வந்துவிட்டது.
சென்னை வரச் சொன்னேன் மீண்டும்
துயரர் சரிதை கேட்டேன். காதைப்
பரிசோதித்தேன் ஒரு குறையும்
தென்படவில்லை.
தலை சுற்றலுக்கு நரம்பியல் ரீதியாக
எவ்விதக் காரணமும் புலப்படவில்லை.
கொஞ்சம் ஆழமாக துயரர் சரிதை பதிவு
செய்தேன். ஐந்து வருடங்களுக்கு முன்
மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே
விழுந்திருக்கிறார். ஆனால் தலையில்
அடிபடவில்லை. வெறும் தோல்
சிராய்ப்புக்களோடு தப்பியிருக்கிறார்.
மீள் கேட்டலில் ஒரே ஒரு துப்பு
கிடைத்தது. அவரது இடது
தோள்பட்டைக்குக் கீழே ஸ்காபுலாவின்
அடியில் சில சமயங்களில் வலி அதிகம்
தெரிகிறது. ஆனால் அதற்காக அவர்
மருதுவ உதவியை இதுவரை
நாடியதில்லை. வெறும் வலி நிவாரணி
தெளிப்பான்கள் தேவைப்படும்போது
போட்டுக்கொள்வது வழக்கம். வலியும்
குறைந்து விடும்.
இதை சென்ற முறை என்னிடம்
குறிப்பிடாதது ஏன் எனக் கேட்டேன். அது
அந்த அளவிற்கு முக்கியமாகப்
படவில்லை என்று பதில் சொன்னார்
.
ஹோமியோபதி அறிவியல், முக்கிய
நலக் குறைக்கு எவ்வித காரண காரியத்
தொடர்புமின்றி, பிறிதொரு அவயத்தில்
தென்படும் நலக்குறைக்கு அதிக
முக்கியத்துவம் கொடுக்கிறது. நலக்
குறைவை பூரணத்துவமாகப்
புரிந்துகொள்ள முயற்சிக்கிறது. இந்த
உடன் நிகழ் குறிகள் கன்காமிட்டண்ட் என
அழைக்கப்படும் இவை மருந்தை தெரிவு
செய்ய மிகவும் உதவி செய்யும்
இரு நோய்களையும் ஒரு சேரப்
பார்த்ததில் செனப்போடியம் ஒரே
மருந்தாக வந்தது. 30 ஆவது வீரியத்தில்  சாப்பிடச்
சொன்னேன்.
தலை சுற்றல் போன இடம்
தெரியவில்லை. எல்லாம் மாயம் போல்.
இன்று மூன்று வருடங்களுக்கு மேல்
ஆகிவிட்டது. அவருக்கு தலை சுற்றலும்
இல்லை. இடது ஸ்காப்புலா வலியும்
இல்லை
ஹோமியோ ஆசான் கார்ல் வான்
போயனிங்காசன் உடன் நிகழ்
குறிகளுக்கு அதிக முக்கியத்துவம்
தருபவர். எனக்குப் பட்டறிவாக இந்த துயரர்
சரிதை அமைந்தது.
dr.Ravichandaran.

Fri, 31 Jul 2015, 4:52 PM - RAGHAVAN Rare Remedy: 👍
Fri, 31 Jul 2015, 6:47 PM - Sivakumuran Dr: 👍💐
Fri, 31 Jul 2015, 8:53 PM - dr.veeraragava: Dr. Ravi 👏👏👏
Fri, 31 Jul 2015, 9:16 PM - Karuppaiah Dr: I have repertorise both cases of Dr. Ravichandran & found the following Rubrics:

Case KALI.BR:

Mind; delusions, imaginations; arrested, caught; about to be: ars,kali-br
Mind; delusions, imaginations; conspiracies against; him, there are: ars kali-br,
Mind; delusions, imaginations; crime; committed, he had: ars , kali-br,
Generalities; food and drinks; food in general; aversion to: ARS ,  KALI-BR
Mind; delusions, imaginations; pursued, of being; police, by:  ars KALI-BR

Case CHEN-A:

Back; pain; dorsal region; scapulae; below; vertigo, with: CHEN-A (Single remedy)
Fri, 31 Jul 2015, 9:43 PM - Ravichandaran: We used to teach repertorisation taking a case and repertorising in 5 different leading repartories arriving at the same remedy following Helmet Sidow.  His book gives good training material for repertorisation as a tool to select a remedy
Fri, 31 Jul 2015, 9:48 PM - Ravichandaran: Thank u Dr karuppaiah.  But actually i selected the remedy in both the cases only with mm familiarity.without resirting to repertory.
Thank u anyway
Fri, 31 Jul 2015, 10:05 PM - Karuppaiah Dr: Some intelligent homeopaths
can select the remedy directly from MM.

Some can from rubrics.

Its all depend upon their MM knowledge.

Both are very nice cases. I  go through rubrics. Thank you Dr.ravichandran.

Further, i feel sorry that I am unaware about Helmet Widow. Please explain something  about him.

Fri, 31 Jul 2015, 10:07 PM - Karuppaiah Dr: Correction: Helmet Sidow.
Fri, 31 Jul 2015, 10:26 PM - Karuppaiah Dr: OK. I got it.
" Learning classical homeopathy & How to use repertories"
By Helmut Sydow.
- B.Jain publications, 2003.

Fri, 31 Jul 2015, 10:37 PM - Ravichandaran: a good training material indeed
hahnemanns two cases repertorised in 5 repertories arriving at the same remedy
 Totally 25 cases
A good work

thank u

No comments:

Post a Comment