Sat, 25 Jul 2015, 9:17 PM - Balasubramanian: 10 வயது சிறுவன் அவனுக்கு 4 வருடமாக மூச்சிரைப்பு , சளி ,
இருமல்
தொந்தரவு இருக்கு சரியாகவும் சாப்பிடறதில்லை
அதில்லாம
வயித்துவலியும் இருக்கு அவனுடைய தாயாரிடம்
விசாரித்ததில்
"வீட்டில எப்பவும் தலைகீழாக (சிரசாசன நிலையில்)
நிற்கிறான்.ஸ்கூலில் இருந்து வந்தவுடன் ரண்டு
தலகாணியப்போட்டு
அதுல தலய வச்சு தலகீழா நிக்குறான்,
அப்படி
நின்னுகிட்டே டிவி பாக்குறான் , மணிக்கணக்கா
நின்னாலும்
அவனுக்கு ஒன்னும் செய்யறதில்ல. அதில்லாம
அப்படி
நின்னா தான் நல்லாருக்குங்கிறான். இல்லாட்டி சாப்பிட
மாட்டேங்குறான்,
தூங்க மாட்டேங்குறான், தலைகீழா நிக்கலன்னா
அவனால
இயல்பா இருக்க முடியல. நமக்கு தான் பயமாருக்கு
எதாவது
ஆயிடுமோன்னு. மிரட்டினா மட்டும் தான் நேரா நிக்குறான்.
இல்லைனா
தலைகீழாதான். எவ்வளவு சொல்லியும்
கேக்கமாட்டேங்குறான்.
ஆனா தலைகீழா நிக்க விடலைன்னா
பித்துப்புடிச்சதுபோல
ஆயிடறான்.ஏற்கெனவே சீக்காளியா
இருக்கான்
இதுல தலைகீழா நின்னு இன்னும் ஏதாவது வந்துட்டா
நம்மால
செலவு பண்ணமுடியாதுங்க" என்று அவனது தாய்
மிகவும்
வருந்தினார்.
சிறுவனை
உற்றுநோக்கியதில் துறுதுறுன்னு இருக்கான், படிப்பில்
கவனம்
செலுத்தமுடியலங்கறான்
சத்தம் கேட்டா தாங்கமுடியாம
பயந்துக்கறான்,
எல்லாத்தையும் கிண்டல் செய்யறான், துயரருக்கு மருந்து
தேர்வு செய்து
ஒரு
வேளை மட்டும் கொடுக்கப்பட்டது.
அதனுடன்
15 நாட்களுக்கான தொடர் மருந்துகளும்
கொடுக்கப்பட்டது.
15 நாள்
கழித்து வந்த சிறுவனிடம் நல்ல மாற்றம்.
விசாரித்ததில்
அவனுடைய மூச்சிரைப்பு , சளி , இருமல் மற்றும்
வயிற்றுவலி
அனைத்தும் குறைந்துள்ளது.
அவன்
தாயார் " சார் இப்பல்லாம் நல்லா
சாப்பிடறான்
, தூங்கறான், தலைகீழாகவும் நிற்கறதில்லை , நல்லா
இருக்கான்
சார்.
மீண்டும்
தொடர் மருந்துகள் தந்து ஒரு மாதம் கழித்து
வரச்சொன்னேன்.
ஒரு
மாதம் கழித்து வந்தபொழுது எந்த தொந்தரவும் சிறுவனிடம்
இல்லை. ஒரு
வருடமாக கண்காணிப்பில் துயர்
முழுதும் நீங்கி நலமாக உள்ளான்.
Sun, 26 Jul 2015, 7:48 AM - Murali Castro: தினம் ஒரு
ஆர்கனான்
மணிமொழி-10
§ 10
The material organism, without the vital force, is
capable of no sensation, no function, no self-
preservation*, it derives all sensation and performs all
the functions of life solely by means of the immaterial
being (the vital principle) which animates the material
organism in health and in disease.
* It is dead, and only subject to the power of the
external physical world; it decays, and is again resolved
into its chemical constituents.
உயிராற்றல்
இல்லையென்றால்
பருப்பொருளான
உயிரிக்கு எதையும்
உணரவோ
, இயங்கவோ தன்னை பாதுகாத்துக்
கொள்ளவோ
முடியாது*. கண்ணுக்குப்
புலப்படாத
இந்தப் பருப்பொருளற்ற
ஆற்றலே
எல்லா உணர்வுகளையும், வாழ்வின்
அனைத்து
செயல்பாடுகளையும் நிகழ்த்துகிறது.
அதுவே
,ஆரோக்கிய நிலையிலும், நோயுற்ற நிலையிலும்
பருப்பொருளற்ற
இந்தப் உயிரியை
இயக்குகிறது.
*இந்த
உயிராற்றல் அழிந்தவுடன் , உடலானது
பௌதிக
உலகத்தின் வெளிப்புற ஆற்றலுக்கு
உட்பட்டு
விடுகிறது ; அழுகி சிதைந்து மீண்டும்
வேதியலுக்குரிய
மூலக்கூறுகளாக மாறிவிடுகின்றது.
Dr.Karuppaiah.
No comments:
Post a Comment