Mon, 20 Jul 2015, 6:02 AM - Murali Castro: தினம் ஒரு ஆர்கனான் மணிமொழி-4
§ 4
He is likewise a preserver of health if he knows the
things that derange health and cause disease, and how
to remove them from persons in health.
ஆரோக்கியத்தை
சீர்குலைத்து
நோயை
உண்டாக்கும்
காரணங்களையும்,
அக்காரணங்களை
நீக்குவது
எவ்வாறு என்பதையும்
அறிந்திருந்தால்
, முன்னர்
குறிப்பிட்டவாறு
அவர் நலத்தைப்
பேணுகின்ற
ஒரு மருத்துவர் ஆவார்.
dr.Karuppaiah.
Mon, 20 Jul 2015, 6:14 AM - Murali Castro: கம்யூட்டர் யுகத்தில் மட்டுமல்ல.!.என்றென்றும் ஹோமியோபதி
சோதனை மேல் சோதனை
போதுமடா
சாமி! என்று
சோதனைகள்
வந்தால்
மனிதர்கள்
சலிப்புற்று
சோர்ந்து
போய்
அல்லலுறுவதும்,
அதனால்
நோய்களால்
பீடிக்கப்படுவதும்
உண்டு.
இவ்வாறு
அல்லலுறும்
மனிதர்களை
காப்பாற்ற
தங்களை
சோதனைக்கு
உட்படுத்திக்கொண்டு
பெரும்
தியாகங்
களை செய்தவர்களும்
உண்டு.
அவர்கள்தான்
ஹோமியோபதி
மருந்து களை
உட்கொண்டு
மருந்துகளின்
பிரத்யேக
குணப்படுத்தும்
தன்மைகளை
கண்டறிந்தவர்கள்.
எந்த
ஒரு பொருளுக்கு
உயிர்களிடத்தில்
நோயை
உண்டாக்கக்
கூடிய சக்தி
உள்ளதோ,
அந்த பொருளுக்கு
அதே
நோயை போக்கும்
சக்தியும்
உள்ளது என்னும்
இயற்கையின்
தத்துவத்தை
அடிப்படையாகக்
கொண்டதுதான்
ஹோமியோபதி
மருத்துவம்.
ஹோமியோபதி
மருத்துவத்தில்
மருந்துகளை
பரிசோதிக்கும்
முறைகளைத்
தெரிந்துகொள்ளும்போது,
நோய்களை
பக்க விளைவுகள்
இல்லாமல்
முற்றிலும்
குணப்படுத்தக்கூடிய
சிறப்புக்களை
புரிந்துகொள்ளலாம்.
நடைமுறையில்
பல்வேறு
மருத்துவமுறைகள்,
பலவகை
யான
நோயாளர்களுக்கு புதிய
மருந்துகளைக்
கொடுத்து
பரிசோதிப்பதும்,
விலங்கினங்களிடம்
கொடுத்து
பரிசோதனை
செய்வதுமே
வழக்கமாக
உள்ளது. ஆங்கில
மருத்துவத்தில்
நிபுணரான
ஹானெமன்,
ஹோமியோ பதி
மருத்துவத்தில்,
புதிய
மருந்துகளின்
செயல்
பாடுகளை
எவ்வித சந்தேகமு
மின்றி
முழுமையாக அறிந்து,
உணர்ந்து,
புரிந்து
கொள்ளும்
வகையில்
மனிதர்களிடத்தில்
கொடுத்து
ஆய்வுகளை
மேற்கொண்டார்.
இவ்வாறான
மருந்து
நிரூபணம்
(Drug proving) என்பது,
ஹோமியோபதியின்
தனிச்சிறப்புக்களில்
ஒன்றாகும்.
200 ஆண்டுகளுக்கு
முன்பு
நிரூபணம்
செய்யப்பட்ட
ஹோமியோபதி
மருந்துகளின்
செயல்பாட்டின்
பண்புகள் -
குணப்படுத்தும்
ஆற்றல்களின்
எல்லைகள்,
இதுநாள்
வரையில் மாறாமல்
தீங்கிழைக்கக்
கூடியதாகவோ,
பயனற்ற
தாகவோ இல்லாமல்,
மனித
குலத்திற்கு நன்மை
செய்து
வருவது
குறிப்பிடத்தக்கது.
ஒரு
பொருள், நோயை
உண்டாக்கும்
என்று
சொன்னால்,
எந்தெந்த
பொருள்
எத்தகைய நோய்களை
உண்டாக்கும்
என்பதை எப்படி
அறிந்து
கொள்வது? அதனை
அறிந்து
கொள்வதற்காகத்தான்
பரிசோதனைகள்
மேற்கொள்ள
வேண்டியுள்ளது.
இப்பரிசோதனையை
நோயுள்ளவர்களிடமே
செய்யலாமா?
கூடவே கூடாது.
ஏனென்றால்,
நோய்
உள்ளவர்களிடம்
பரிசோதிக்கும்போது,
ஒரு
மருந்துப்பொருளின்
மருத்துவ
குணங்களை
முழுவதையும்
அறிந்து
கொள்ள
முடியாதல்லவா?
மேலும்
வியாதியின்
காரணமாக
கூருணர்வு
அதிகமாகவோ,
குறைவாகவே
உள்ளவர்
களாக இருந்தாலும்
மருந்தின்
முழு பரிமாணத்தை
அறிய
முடியாதே!
ஏற்கனவே
இருந்த நோய்களின்
தன்மையால்
மாறி வந்த
குறிகளா?
அல்லது மருந்தின்
உண்மையான
குணம்தானா?
என்பதை
அறிவதில் குழப்பம்
நேரிடுமல்லவா?
ஒரு வேளை
ஏற்கனவே
இருந்த நோய், இந்த
பரிசோதிக்கும்
மருந்தின்
காரணமாக
மேலும்
சிக்கலாகிவிட்டால்,
நோயாளிக்கு
ஆபத்துகூட
நேரிடலாம்
அல்லவா?
அதனால்தான்
கூடாது.
அப்படியானால்
எப்படிப்
பட்டவரிடம்
சோதித்தால் ஒரு
மருந்தின்
பிரத்யேக நோய்
உண்டாக்கும்
தன்மைகளை
தெரிந்துகொள்ள
முடியும்?
தன்னம்பிக்கை
உடையவர்கள்,
உண்மை
யாக இருப்பவர்கள்,
நேர்மையானவர்கள்,
உணர்வுகளைத்
துல்லியமாக
புரிந்து
கொள்ளக்
கூடியவர்கள்
என்று
மொத்தத்தில்
மனம் மற்றும்
உடல்
ரீதியாக நல்ல
ஆரோக்கியத்துடன்
இருப்பவர்களின்
மூலமாகத்தான்
தெரிந்து
கொள்ளமுடியும்.
நல்ல
ஆரோக்கியத்துடன் இருந்
தால்
மட்டும் போதாது. தியாக
மனப்பான்மையுடையவர்களாகவும்
இருக்க
வேண்டும்.
ஏனென்றால்,
மருந்து
நிரூபணத்தின்போது
அவர்களுக்கு
பல வகைகளில்
பாதிப்புக்கள்
ஏற்படுவதற்கும்
வாய்ப்புள்ளது.
200
ஆண்டுகளுக்கு
பின்பும்
தடை
செய்யப்படாத மருந்துகள்
உண்டென்றால்
அது
ஹோமியோபதியில்
மட்டுமே!
ஹானெமன்,
ஹோமியோ
பதியில்
மருந்து நிரூபணம்
செய்பவர்கள்
எப்படிப்பட்டவர்களாக
இருக்கவேண்டு
மென்று,
தனது
ஆர்கனானில்,
கீழ்க்கண்டவாறு
குறிப்பிடுகிறார்:
(ஆர்கனான்
மணிமொழி -126) :
பரிசோதனைக்கு
உட்பட்ட
காலங்கள்
முழுவதும்
அதிகப்படியான
மூளை
உழைப்போ,
மிக அதிக உடல்
உழைப்போ
இல்லாது
இருக்கவேண்டும்.
துயரம்,
கோபம்,
வெறி, காமம் போன்ற
பல
உணர்ச்சிகளுக்கு
இடங்கொடுக்கும்
அல்லது
எண்ணங்களை
சிதறடிக்கும்,
தடங்கல்
தரும் சூழ்நிலை
இருக்கக்
கூடாது.
(மணிமொழி-125):
மேலும்
மசாலா
உணவுகளைத்
தவிர்த்து
விடவேண்டும்.
எளிய
சத்துள்ள காய்கறி
உணவுகளையே
உண்ண
வேண்டும்.
மருத்துவ குணம்
கொண்ட
பொருட்களை
உணவிலிருந்து
தவிர்க்க
வேண்டும்.
ஒயின் போன்ற
மதுபானங்களை
குடிப்பதை
தவிர்க்க
வேண்டும். மற்றும்
அவரது
கவனத்தை திசை
திருப்பும்படியாக
எந்தவிதமான
அவசர
பணிகளையும்
மேற்க்கொள்ளக்
கூடாது.
மருந்து
எடுத்துக்கொண்ட
பின்
தனக்குள் நிகழும்
மாற்றங்களை
உன்னிப்பாக
கவனிப்பதில்
தன்னை
அர்ப்பணித்துக்
கொள்ள
வேண்டும்.
(மணிமொழி-127):
ஆண்களிடத்தில்
என்னென்ன
மாற்றங்கள்
விளைவிக்கிறது.
பெண்களி
டத்தில்
எத்தகைய உபாதைகளை
விளைவிக்
கிறது என்பதை
அறிவதற்காக
ஆண்கள்,
பெண்கள்
என இருபாலரி டமும்
மருந்து
நிரூபணம்
செய்யப்படு
கிறது.
(மணிமொழி-135):
வெவ்வேறு
விதமான
உடல் அமைப்பும்,
வெவ்வேறு
விதமான
மனப்பாங்கும்
உடைய பல
நபர்களிடமும்
நிரூபிக்கப்
படுகிறது.
இதனால் எப்படிப்
பட்டவரிடமும்
மருந்தினால்
வரும்
அதற்கே உரிய குறிகள்
ஒரே
மாதிரி இருப்பதை உறுதி
செய்துகொள்ள
முடியும்.
(மணிமொழி-134):
ஒவ்வொரு
வரிடமும்
அதன்
தனிக்குணங்களை
வெளிப்படுத்தினாலும்,
எல்லா
உபாதை களும் ஒரே
நேரத்தில்
எல்லோரிடமும்
தெளிவாக
வெளிப்பட
வாய்ப்பில்லை
என்பதால்
பலபேரிடம்
சோதித்தறியப்
படுகிறது.
(மணிமொழி-133):
மருந்துகள்
உண்டாக்கும்
குறிப்பிடத்தக்க
உணர்வு
மாற்றங்கள்,
அசையும்போது,
நடக்கும்
போது
அறைக் குள்ளே
இருக்கும்போது,
வெளிக்காற்றில்
உலாவும்போது,
உட்காரும்போது
அல்லது
படுக்கும்போது
உபாதைகள்
கூடுகிறதா?
குறைகிறதா?
உபாதை
இல்லாமல் உள்ளதா?
என்றும்
ஏதேனும்
சாப்பிடும்போதோ,
குடிக்கும்
போதோ மாறுதல்
தெரிகிறதா?
பேசும்போது,
இருமும்போது,
தும்மும்
போது
ஏற்படும் மாற்றங்கள்
என்னென்ன?
இரவில், பகலில்
உண்டாகும்
மாற்றங்கள்,
என்று
பல விதங்களிலும்
உடலிலும்
மனதிலும்
தோற்றுவிக்கின்ற
மாற்றங்கள்
துல்லியமாக
அதாவது
கூட்டிச்
சொல்லுதல்,
இட்டுக் கட்டுதல்,
குறைத்துச்
சொல்லுதல்
போன்றவை
இன்றி உண்மை
யாக
உள்ளவை மட்டுமே
குறித்துவைக்கப்
படுகின்றன.
உலகமக்களின்
நலத்திற்காக
தன்னை
அர்ப்பணித்துக்
கொண்டு
Dr.ஹானெமன்
இத்தகைய
நேர்மையான
வழியில்
பல
இன்னல்களுக்கிடையேயும்,
மருந்துகளை
தற்சோதனை
செய்தும்,
மேலும்
தொண்டுள்ளம்
கொண்ட
அவரைப்
போன்றவர்கள்
துணையுடனும்
மருந்துகளை
நிரூபணம்
செய்து உண்மை
தோற்பதில்லை
என்பதை
நிரூபித்துள்ளார்.
ஏனெனில்
200 ஆண்டுகளுக்கு
பின்பும்
தடை
செய்யப்படாத மருந்துகள்
உண்டென்றால்
அது
ஹோமியோபதியில்
மட்டுமே.
தீயில்
புடம் போட்ட தங்கம்
போன்று,
இத்தகைய மருந்து
நிரூபணத்தின்
பரிசோதனையின்
காரணமாக
இன்றைய
கம்புயூட்டர்
யுகத்தில்
மட்டுமல்ல, இனி
வரப்போகும்
யுகங்களிலும்
காலத்தை
வென்று நிற்பவை
ஹோமியோபதி
மருந்துகள்
ஆகும்.
ஆர்கனான்
ஆப் மெடிசின்
உருவாகி
(1810-2010) 200-வது
ஆண்டை
எட்டியிருக்கும்
இவ்வேளையில்,
ஹோமி
யோபதி
மருத்துவத்தைப் பற்றி
நாம்
பெருமை கொள்வதற்கு
ஏராளமான
காரணங்கள் உள்ளன.
எவ்வித
வசதி களும் இல்லாத
காலத்தில்
ஹோமியோபதி
மருத்துவம்
அவரால்
உருவாக்கப்பட்டு
அன்றும்,
இன்றும்,
என்றும் நிலைத்து
நிற்கும்
சிறப்பு பெற்றதாக
உள்ளது.
எனவே அட்டைப்
படத்தில்
டாக்டர்.ஹானெமன்
மடிக்கணிணி
(Laptop) யுடன்
இருப்பது
சாலப் பொருந்தும்.
இதுவே
ஹோமியோபதியின்
உண்மைக்கு
சான்றாக
இருக்கிறது.
முழு நலத்திற்கு
ஆதாரமாகவும்,
விஞ்ஞான
பூர்வமாக
நம்பிக்கை
கொள்ளத்தக்க
வகையிலும்,
இந்த
மருந்து நிரூபணம்
அமைந்துள்ளது.
எனவேதான்
மனதை
-உடலை
துன்பப்படுத்தாமலும்,
எளிமை
யாக,
வேகமாக, மென்மையாக,
நிரந்தர
மாகக்
குணப்படுத்தக்கூடிய
ஹோமியோ
பதி மருந்துகளை,
ஹோமியோபதி
மருத்துவரின்
ஆலோசனைப்படி
எடுத்துக்
கொண்டு,
உங்களை சோதனை
செய்யும்
நோய்களிலிருந்து
முற்றிலும்
விடுதலை
அடைவதுடன்,
கவலையின்றி
சுகமான
வாழ்வைப்
பெறுங்கள்!
-Dr.ஆர்.லோகநாயகி
No comments:
Post a Comment