Monday, 4 January 2016

Sulphur ஒரு துயரர் சரிதை Ravichandran

.
 Sulphur
ஒரு துயரர் சரிதை

 நண்பர் தனது மூத்த
மகனை அழைத்து வந்தார். காலை நேரம். எங்கள்
இருப்பு இரண்டாவது மாடியில். லிஃப்ட்
கிடையாது; பார்த்தால் தெரிகிறது, அவரின் மகன்
மிகவும் சிரமப்பட்டு ஏறி வருகிறான். இடது
முட்டி வீங்கிக் காணப் படுகிறது. அவனது
வலியை உணர முடிகிறது. முதன் முதல்
பார்ப்பதால், அவனோடு கொஞ்சம்
சம்பாஷிக்கிறேன். பேச்சு,  எனக்கு
நன்கு அறிமுகப்படுத்துகிறது. முதலில்
அமைதியோடு சிற்றுரையாடல்தான்; நண்பர்
சொல்கிறார்; நண்பரின் மகனுக்கு இயற்பியலில்
பெரும் நாட்டமாம். எட்டாம் வகுப்பு படிக்கும்
மாணவன்’ ஆனால், வாயைத் திறந்தால்
குவாண்டம் இயற்பியலும், மாலிக்யுலர்
ஆர்பிட்டால் தியரியும், -சரஸ்வதி
விளையாடுகிறாள். ரோஜெர் பென்ரோஸும்,
ஸ்டீஃபன் ஹாக்கிங்கும் விவாதத்திற்கு
துணைக்கழைக்கிறான். உண்மையைச்
சொன்னால் என்னால் அவனோடு தாக்குப் பிடிக்க
இயலவில்லை. .
எப்போதோ பள்ளி நாட்களில்,படித்த,
பொழுதுபோக்கு பௌதீகம்(ஒய்.பெரல்மான்)
புத்தகத்திலிருந்து, ஒரு புதிய சரடை
ஆரம்பித்தேன்; பெர்ப்பெச்சுவல் மோஷன்
குறித்து, நண்பரின் மகன் கருத்தைக் கேட்டேன்;
அவன் கொஞ்சமும் சளைக்கவில்லை. அதிலும்
அவனிடம் தகவல் சேகரம் அதிகம். நான், ஜகா
வாங்கிக் கொண்டேன். இப்போ இன்னும்
பேஷண்டுகள் வர இருக்காங்க; இன்னொரு நாள்
சாகவாசமா நான் உன்னோட விவாதிப்பேன்னு-
ஒரு பந்தாவா சொல்லிட்டு, முட்டி வலி பற்றிக்
கேள்விகள் கேட்டேன். அவன் சொல்ல சொல்லக்
குறித்துக் கொண்டேன். நண்பர் சொன்னார்;
இவன் இப்படித்தான் சார் இருக்கான், ஸ்கூல்ல
ஃப்ரெண்ட்ஸ் கிடையாது, ஒதுங்கியே
இருக்கான், கேட்டா, அவங்க லெவல்
அவ்வளவுதான்; நானாப் போய் பேசமுடியாது,
அவங்க ஏதாவது சந்தேகங்கள் கேட்டா சொல்லித்
தரேன்னு சொல்றான். இங்கே ஃப்ளாட்ஸ்லேயும்
அப்படித்தான். வீட்ல கூட ஒரு ஒதுக்கம் இருக்கு.
இந்த வயசுப் பையங்க மாதிரி சினிமா, ட்ரெஸ்
இண்டரஸ்ட்டெல்லாம் இவங்கிட்ட இல்ல;
எப்பவும் புத்தகமும் கையுமாத்தான்
இருக்கான். அவருடைய புலம்பல் கொஞ்சம்
அதிகந்தான். எனக்கென்னவோ அதற்கு மேல்
வலி பற்றிக் கேள்விகள் கேட்கத் தோணவில்லை.
Theorising, left knee pain, swelling, philosopher,
aloofness என்று குறித்துக் கொண்டேன்.
மனக்குறி theorizing முக்கியமாய்ப் பட்டது.
Sulphur  200  ஒரு dose. பள்ளிக்குப் போகட்டும். வீக்கம்
குறையும், வலி போய்விடும் என்று
உறுதிகொடுத்து அனுப்பி வைத்தேன். இரண்டு
வாரங்களில் முட்டி வீக்கம் சரியாகிவிட்டது.
வலி மாயமாய்ப் போய்விட்டது. அதற்குப் பின்
இந்த ஏழெட்டு வருஷங்களில் நண்பரின் மகனை
சந்திக்கும் போதெல்லாம், இயற்பியல் குறித்துப்
பேசுவதை எப்படியோ தவிர்த்துவிடுகிறேன்,
நண்பரின் மகன் இப்போது கல்லூரியில் படிக்கிறார்.
வளர்ந்திருக்கிறார்.; .

உடல் உறுப்புக்களில் நோய்
தாக்கியிருந்தாலும், ஹோமியோபதியில்,
மனக்குறிகள் பலமாக இருந்தால்,
அதனடிப்படையில் மருந்தைத் தெரிவு
செய்தால் உறுப்பு சார்ந்த நோய் கட்டாயம்
மறையும். சல்ஃபரை மறக்கவே முடியாது. .
Dr.Ravichandaran.



No comments:

Post a Comment