காலி கார்ப் ஏன் இப்படி நடந்து
கொள்கிறது.?
ஒன்றில் ஆர்வம் காட்டி
சில கணங்கள் மட்டுமே அதில்
லயிக்கிறது. உடனே வேறொன்றில்
தாவுகிறது. இரண்டாமதில்
பயணிக்கையில் மூன்றாவது
பணியைத் துவக்கிக் கடைசியில்
எதையும் முடித்தபாடில்லை எல்லாமே
அரையும் குறையுமாய்
நின்றுவிடுகிறது.
இத்தனைக்கும் குடும்பம், கடமை,
பொறுப்பு, தலைமை எல்லாவற்றிற்கும்
முதலிடம் தரும் காலி கார்பே
இப்படியென்றால்?
தன்னால் எதையும் ஒழுங்காக
நிர்வகிக்க முடியாமல் போவதால்தான்
காலி கார்ப் மற்றவர்களிடம் அப்படி தன்
கற்பித பிம்பத்தை நி...லை
நாட்டிக்கொள்ள அப்படி கடுமையாக
நடந்துகொள்கிறதோ?
காலிகார்பால் தனிமையில் இருக்க
முடியாததால், பிறர் வேண்டும் அதற்கு.
அவர்கள், தன் தலைமை, கடமை பிம்பத்தை
ரட்சிப்பவர்களாகவும் இருக்க வேண்டும்.
மீறினால் கட்டாயம்
கடிந்துகொள்ளப்படுவர். அது மட்டும்
உண்மை.!
காலி கார்ப் ஏன் இப்படி?
காலி கார்ப் மட்டுமா இப்படி?
அவர்கள்? அந்த முன் வரிசைக்காரர்கள்?
நீங்கள்?
நான்?
நாம்?
dr.Ravichandaran.
No comments:
Post a Comment