Monday, 4 January 2016

ஆர்கனான் மணிமொழி-16

ஆர்கனான்
தினம் ஒரு மணிமொழி-16

             § 16
Our vital force, as a spirit-like dynamis, cannot be
attacked and affected by injurious influences on the
healthy organism caused by the external inimical forces
that disturb the harmonious play of life, otherwise than
in a spirit-like (dynamic) way, and in like manner, all
such morbid derangements (diseases) cannot be
removed from it by the physician in any other way than
by the spirit-like (dynamic1 , virtual) alterative powers of
the serviceable medicines acting upon our spirit-like
vital force, which perceives them through the medium of
the sentient faculty of the nerves everywhere present in
the organism, so that it is only by their dynamic action
on the vital force that remedies are able to re-establish
and do actually re-establish health and vital harmony,
after the changes in the health of the patient cognizable
by our senses (the totality of the symptoms) have
revealed the disease to the carefully observing and
investigating physician as fully as was requisite in order
to enable him to cure it.

Foot Note-1 : Most severe disease may be produced by
sufficient disturbance of the vital force through the
imagination and also cured by the same means.

நமது உயிர்ப்புச்சக்தி ஆவிவடிவிலான
இயக்கநிலை கொண்டது, ஆதலால்
உயிருக்கு தீங்கிழைக்கும் வெளிப்புற
எதிரியான நோய்ப்பொருள்கள்
ஆவிவடிவிலான வழியில் தான் அதை
தாக்கவோ, பாதிப்பை ஏற்படுத்தவோ
முடியும். இதைப் போலவே நோய்க்கு
ஏற்றதான மருந்துகளிலுள்ள ஆவிவடிவ
சக்தியினால் (மெய்ம்மையான இயக்க
ஆற்றல் ) தான் ஒரு மருத்துவரால் அந்த
நோயாற்றலை நீக்க முடியுமோ அன்றி
வேறு எந்த வழியிலும் அதை நீக்க
முடியாது. அத்தகைய மருந்துப்
பொருளையே நமது உடல் , அதன் எல்லா
இடங்களிலும் உள்ள நரம்புகளின்
உணர்ச்சித் தன்மையால் அறிகிறது.
அவ்வாறு உயிராற்றலின் மீது மருந்துப்
பொருள் மூலம் செலுத்தப்பட்ட சக்தியே
தான் உயிரின் ஒத்திசைவையும்
ஆரோக்கிய நிலைமையையும் மீட்கக்
கூடியதாகவும் - உள்ளபடியே மீட்டுத்
தருபவையாகவும் இருக்கின்றன.
புலன்களால் அறியதக்கவாறு உடல்
நலத்தில் ஏற்பட்ட மாறுதல்களே
(ஒட்டுமொத்தக்குறிகளே), கவனமாக
ஆராய்ந்து விசாரணை செய்யும்
மருத்துவருக்கு நோயை முழுமையாக
உணர்த்தி அவர் அந்த நோயை
குணப்படுத்துவதற்கு இயலுமாறு
செய்கின்றன.

அடிக்குறிப்பு-1: கற்பனையான
எண்ணங்களின் மூலம் உயிராற்றலில்
போதுமான அளவு இடையூறு
ஏற்படுத்தி அதனால் மிகக் கடுமையான
நோய்களை உருவாக்க முடியும். அதே
முறையில் அவற்றை நலப்படுத்தவும்
முடியும்.
Dr.Karuppaiah.
Fri, 7 Aug 2015

No comments:

Post a Comment