Monday, 4 January 2016

குட்டி ரேவதி செதுக்கும் ப்ளாட்டினா சிற்பம்



கவிதாயினி குட்டி ரேவதி செதுக்கும்
ப்ளாட்டினா சிற்பம்

ஹோமியோ மருந்துகள் மனித உயிரியில்
மெய்ப்பிக்கப்பட்டவை. எனவே ரத்தமும் சதையுமாக
மனித ஆளுமைகளின் மாதிரிகளை அவற்றில் காண
முடியும்.
ப்ளாட்டினா, பல்சட்டிலா, ஸெபியா,
இக்னேஷியா,லில்லியம் டைக்ரினம், என பல
நோக்கு நிவாரணிகள் சிலவற்றை உதாரணமாகச்
சொல்லலாம். பெண்ணிய சிந்தனைகள் வழிவழியாய்
தலைமுறைகளில் செயல்படும்போது, உருவாகும்
ஆளுமை மாதிரிகள் கவிதைகளில்
புலப்படுகிறது.
ப்ளாட்டினா ஆளுமை, தனது பெருமைக்கும்,
செருக்குக்கும், தனிமைக்கும், உயர்குடி
மேட்டிமைக்கும், பாலியல் உந்தங்கள் ஆன்மீக
செயல்பாடுகளாய் மருவித் தோன்றுதற்கும்,
சாமான்யர்களின் வெளியை அலட்சியத்தோடு
நோக்கும் போக்கிற்கும், உருவத்திலும், உயரத்திலும்
பிறரை சிறியோராய் காண்பதற்கும், ஓரினச் சேர்க்கை
விழைவுக்கும், தான் ஒடுக்கப்பட்டிருக்கிறோம்,--
தனது வெளி மறுக்கப்பட்டு,
அவமதிக்கப்பட்டிருக்கிறோம்-- எனும்
உள்ளுணர்வுக்கும், அதன் எதிர்வினையாய் தன்னை
அமானுஷ்ய சக்தி கொண்டவராய்க் கருதும்
நிலைபாட்டிற்கும் பெயர் போனது.

Rubrical reference EGOTISM
Delusion , humility and lowness of others while she is
great
 Delusion that she is Noble.
Platina feels that she is disgraced ; that is why the
personality compensates ,being egotistic,through her
rare performances. She wants to carry herself as if she
is elevated and treats others contemptuously. She
always feels or having a delusion that she is a queen,
endowed with regal perceptions, with higher libidinal
drives and sexuality. Rooted in a male dominated
society, the Platina needs to uproot all taboos, and
therefore engages a language that liberates feminine
sexuality masquerading religiosity.

“ அந்தச் சிட்டுக்குருவி செம்மாந்து திரிகிறது
நிறைய வானங்களை அது நீந்திவிட்டதாம்!
இறைந்துகிடக்கும் நிலத்தின் பெருமூச்சுக்களைத்
தன் சிறு அலகால் கொத்தித் தின்றிருக்கிறதாம்
வேடனின் அம்புகள் வரைந்த ஆகாய அகழிகளை
லாவகமாய்ப் பாய்ந்து கடந்து
திசை திரும்பியிருக்கிறதாம் சிரிப்பு
கொப்பளிக்க
 கதவுகளற்ற அதன் அரண்மனையில்
சூரியனின் கூச்சம்கூடத் தரை வீழ்வதில்லை
தன் ஒற்றை இறக்கையால் வானின் கூரையைப்
பிடித்துச் சுழற்றி
அதை ஒரு நீர்க் குட்டையில் எறிந்துவிடவும்
முடியும்”

Very high Self Esteem and pride.

”பெண்ணே வலது கண்ணில் கடலைச் சுமக்கிறாய்
இடது கண்ணில் சூன்யத்தை விரிக்கிறாய்
பெண்ணே நீ காகங்கள் கரையும் அதிகாளைகளைச்
செய்கிறாய்
 பெண்ணே நீ வியர்வை நதிகளை ஒன்று சேர்க்கிறாய்
கண்ணீர்த் துளிகளை அதில் கலக்கிறாய்
வானம் முட்டும் நீ மலையேறி
அதிலிருந்து கவனம் தப்பாமல் ஆறென
இறங்குகிறாய்!”
 “யுக யுகங்களாய் ஆழக்கடலில்
பரவச முத்துக்களாய் விளைந்து கிடந்தோம்
குறு அலைகளின் தாலாட்டில்
நம்பிக்கையின் ஆழங்களில் உறங்கினோம்
இப்பொழுதுதான் விடுதலை மீன்களாய்
விளைந்தோம்!”
 ”நானோ பெரு நிலவு
பனிபடர்ந்த வெண்ணிற இறக்கைகளால்
உனைத் தீண்டும் ஈரமான இமைகளைச் சுமை தாழ
விரித்து
 தழுவிக் கொள்கிறேன்”

CAPABLE OF RARE PERFORMANCES

”நிசப்தத்தின் விபத்துகள் நிகழ்ந்து
கொண்டேயிருக்கும் ஆழத்தை
நான் காட்சிக்கு வைப்பதேயில்லை
நீள நீளத் திமிங்கிலஙளை வளர்க்கப் பழகிக்
கொண்டபின்
 என் கையில் கிடைத்தன மில்லியன் ஆண்டுகள்.”
“வெளிச்சப் பெண் கண்ட ரகசியங்கள்
ஊரறிந்த முழக்கங்கள் ஆகின்றன
செய்தித்தாள்களில் கருப்புத் தலைப்புகளாய்
அச்சாகிப் பொறிந்தன
எங்கென்கும் வெளிச்சப் பெண்ணின் பெயரும்
சொல்லுமே விரிகின்றன”

Rubric
 CONTEMPTUOUS OF EVERYTHING

”எவருமே நம்பவில்லை பெண்களே
நீங்கள் தான் காலத்தின் சுழலில்
தொலையாத தேவதைகள் என்பதை
உங்கள் கண்களிலிருந்து உருண்டோடிய
கண்ணீர்த் துளீகளை
காலால் எட்டி உதைத்தவர்களின்
கவனம் குலைத்தீர்கள் பெண்ணே
அவர்களை நோக்கி நீங்கள் உருட்டிவிட்ட
கரும் பாறைகளின் கனம்
எப்படியும் சில பேரரசுகளைக் காவு வாங்கும்”……..
”ஒரு கடலையே குடித்துவிட்டவளிடம்
ஒரு கை நீரள்ளி இதுதான் கடல் எனாதே”
உடலுக்குள் ஒரு கடலை நிரப்பிச் சுமப்பவளிடம்
ஒரு சூரியன் ஒரு குளிர் நிலவு, வந்து சேர்ந்த
பெரு நதிகள்
எல்லாம் இருக்கின்றன
என்னிலே மூழ்கிப்போ காதலனே”………..
“ நாங்கள் நவீன ஆண்களை நம்புவதே இல்லை
அவர்களின் கருத்தியல் தான்
அணு உலை வடிவம் கொண்டது………
“இந்த உலகம் எனக்கு என்ன மீதம் வைத்திருக்கிறது
அம்மா, இந்த உலகம் சாம்பலயே அள்ளித் தருகிறது
என் மூதாதையரின் சாம்பலை, என் எலும்புகளின்
சாம்பலை
 என்போன்ற கிள்ளைகளின் சாம்பலை
உயிர் இருந்ததெல்லாம் எரிந்துபோன
சாம்பலை”………..

Rubric
 Love, own sex, with homosexuality

”அவள் ஆண்களை சுவைப்பதில்லை,
தீண்டுவதில்லை
 அவள் தன் இச்சையை இன்னொரு பெண்ணுடலில்தான்
பதியனிட்டுப் பூத்துக் குலுங்குவாள்
காமத்தில் மோனமுற்ற கருப்பைகளைத் தேடி
துயிலுவாள்”………

Platinas personality is well constructed. Bereft of
physical symptoms, it may be difficult to comprehend
medically; yet this is precisely Platina.
Dr.Ravichandaran.

No comments:

Post a Comment