Monday, 4 January 2016

ஆலீஸின் அற்புத உலகம்- ஒரு விவாதம் Ravichandran

ஆலீஸின் அற்புத உலகம்- ஒரு
விவாதம்

உலகப் புகழ் பெற்ற நாவல் “ ஆலீஸின் அற்புத
உலகம் “ தமிழில்
மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. அதன்
ஆசிரியர் லூயிஸ் கரோல் குறித்த கட்டுரை
ஒன்றையும் திரு.எஸ் .ராமகிருஷ்னன்
வழங்கியுள்ளார். ஆஸ்திரேலிய
ஹோமியோபதியர் லிஸ் லேலர் ஆலீஸின்
பாத்திரத்தை ஹோமியோ-உளவியல் பகுப்பாய்வு
செய்து, அகேரிகஸ் மஸ்கேரியஸின்
ஆளுமையாக விளக்குகிறார். ஆலிஸ், ஒரு
கம்பளிப்புழுவின் தூண்டுதலில், ஒரு
காளானின் ஒரு பக்கத்தைக்
கடித்ததும்,
விண்ணுயரம் பெறுகிறாள். பிறிதொரு
பக்கத்தைக் கடித்ததும், ஒரெ ஒரு அடி
உயரத்திற்கு குறுகுகிறாள். ஆபத்துக்கள்
குறித்த கவனம் ஏதுமின்றி, சாகஸத்தில்
ஈடுபாடு கொள்கிறாள். தான் மிகுந்த சக்தி
பொருந்தியவள் என நம்புகிறாள். தன் உடலின்
சாத்தியப்பாட்டு எல்லைகளைத்தாண்டி இயங்கு
கிறாள்.. அவளுக்குப் பொருட்கள்/உருவங்கள்
குறித்த உயர அளவுகோள்கள் தவறாகவே
அமைகின்றன. ஆலிஸின் இத்தனை
குணங்களும் அகேரிகஸ் மருந்தில் இயல்பாகப்
பொருந்தி வருகிறது . லிஸ் லேலரின் ஆய்வு
மெத்தச்சரி,. லூயிஸ் க்ரோல் , மைக்ரைன்
தலைவலியால் வெகுகாலம் துன்பப்பட்ட
துயரர்.அக்காலத்தில் புழக்கத்திலிருந்த
காளான் மருந்துகள் உட்கொண்டவர். தலை
வலியின் போது தோன்றிய மைக்ராப்ஸியா,
மேக்ராப்ஸியா பிறழ் காட்சிகளை நீண்ட
கனவில் ஆலிஸுக்குத் தோன்றியதாக இடம்
பெயர்த்திருக்கிறார். இப்பின்னனியில்
பார்த்தால், லூயிஸ் கரோல் தான் அகேரிகஸ்
ஆளுமைக்கு உதாரணம் என்றோ அல்லது அகேரிகஸ் மருந்தினை மெய்ப்பித்தவராவோ
அவதானிக்க முடியும்.
Dr.Ravichandaran.

No comments:

Post a Comment