ஆணி வேர்களைத் தேடி: 4
நோயாளியின் பெயர்: Mr.X
வயது: 7
நண்பர் ஒருவருடன் ஊருக்கு
சென்றுகொண்டிருந்த
நேரம், “சார் ஒரு
வித்தியாசமான பையன், இதுவரை
அவனுக்கு பார்க்காத
வைத்தியமே இல்லை. ஹோமியோபதி,
அலோபதி, எல்லா சீட்டு மற்றும்
மந்திரம், ஹிப்னோதெரபி
எல்லாம் பார்த்தும் கூட ஒன்றும்
ஆகவில்லை நாம் ஏதாவது
உதவி செய்ய இயலுமா?”
என்று கேட்டார்.
“வரச்சொல்லுங்கள்
முயற்சிக்கலாம்” என
சொல்லி வந்தேன்.
ஒரு மாதம் சென்றபின்
நோயாளி மற்றும் அவனுடைய குடும்ப
உறுப்பினர்கள் அனைவரையும்
காண நேர்ந்தது.
சார் இவனுக்கு இப்போது வயது 7,
இவன் சின்ன வயது முதல் மிக
கடுமையான வயிற்று வலி, வலி
என்றால் மிக கடுமை. ஏதாவது
வண்டி (அ) பயணம்
செய்தால், சாதாரண
சைக்கிள் பயணம் கூட இவனுக்கு
ஆகாது. வண்டியில் அமர்ந்து
வண்டி நகர்ந்த உடன் வயிற்றைப்
பிடித்துக்கொண்டு
அழுகிறான், ஒரே வாந்தி, மிகக்
கடுமையான மூச்சிரைப்பு, இனம்
புரியாத பயம், உடனே வண்டியை
விட்டு கீழே இறங்கினாலோ (அ)
வண்டியை நிறுத்தி விட்டாலோ, வலி
நின்று போய்விடுகின்றது. இதற்காக
இதுவரை பார்க்காத வைத்தியமே
இல்லை. அவனின் எதிர்காலமே
கேள்விக்குறியாக உள்ளது. ஒரு
நல்ல பள்ளிக்கூடத்தில் அவனை
சேர்த்து படிக்க வைக்க இயலவில்லை.
தினமும் நடந்துதான் பள்ளி
செல்ல வேண்டும்.
இதற்காகவே எங்கள் வீட்டை
பள்ளிக்கூடம் அருகில்
மாற்றிவிட்டோம்.
எங்கெங்க
சொல்றாங்களோ
அங்கெல்லாம் போய்
பார்த்துவிட்டோம். 4,5 முறை
ஹிப்னோதெரபி எல்லாம்
செய்தோம். நோய்க்கான
காரணம் ஏதும் இல்லை.
கொஞ்சம் தைரியமாக
இருப்பதற்காக தெரபி
மட்டும் கொடுத்தார்கள்,
வேறெந்த காரணமும்
பயபடும்படியாக இல்லை என்று
சொல்லிவிட்டார்கள்.
ஏதாவது ஊருக்கு போகவேண்டும்
என்றால் மயக்க மருந்து
கொடுத்து படுக்க வைத்து
விடுவோம். பின் வண்டியில் எடுத்துச்
செல்வோம். இலேசாக
மயக்கம் தெளிந்தால் கூட
உடனே வலி, வாந்தி, பயம்,
மறுபடியும் வண்டியை நிறுத்தி மருந்து
கொடுத்த பின்னர்தான்
மறுபடி பயணம். இவ்வாறே 7
வருடம் ஓட்டி விட்டோம். 17 வருடம்
கழித்து பிறந்த குழந்தை இவ்வாறு
உள்ளது. அவன் நிலையைக்
கொஞ்சம் பாருங்க
சார்.
பெரிய மலைப்பு மேலிட
நோயாளரைப் பார்த்தேன்.
இவன் சிறுவயது முதல் வயிற்று
வலியால் அவதிப்படுகிறான்,
17 வருடம் கழித்து
பிறந்திருக்கிறான், நோய் உருவாக
இவன் கருவியாக இருக்க
இயலாது என கருதி சிறுவனையும்
அவன் உறவினர்களையும்
வெளியில் அமரச்
செய்து அவன் தாயாரை
உள்ளே அழைத்தேன்.
கேள்வி: 17 வருடமாக குழந்தை
இல்லாமல் இருந்திருக்கிறது. 17
வருடம் கழித்து இந்த குழந்தை
பிறந்து இருக்கிறது. ஏன்
இவ்வளவு கால தாமதம்?
என்ன காரணம்?
பதில்: சார் அது ஒரு பெரிய
கதை. எங்க வீட்டுக்காரர் ரிசர்வ்
வங்கியில் பெரிய பதவியில்
இருக்கிறார். என்னை திருமணம்
செய்து சென்னையில்
குடியேறினோம். திருமணமாகி 14
வருடமாக குழந்தை இல்லை.
பார்க்காத வைத்தியம்
எல்லாம் பார்த்து ஒருவாறு
கருத்தரித்தேன். ரொம்ப
கவனமாக இருந்தும் 9-ம்
மாதம் மருத்துவ பரிசோதனைக்காக
கார் டிரைவர் வராததால்
ஆட்டோவில் மருத்துவமனை
சென்றேன். போதாத காலம்
வழியில் ஆட்டோ விபத்துக்குள்ளாகி
நான் நடுரோட்டில் விழுந்து,
ஏகப்பட்ட காயங்களுடன்
மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டேன்.
டெலிவரி வரை அங்கேயே
அனுமதிக்கப்பட்டேன். போதாத
காலம் குழந்தை வயிற்றிலேயே
இறந்து பிறந்தது. நான் அடைந்த
வருத்தத்திற்கு அளவேயில்லை.
ஆட்டோவில்
சென்றதினால்தான் என்
மகனை இழந்துவிட்டேன்.
பின் மூன்று ஆண்டு காலம்
சென்ற பின்னர்தான்
அடுத்த கருத்தரித்தேன். ஆனால்
இந்த முறை மிக கவனமாக வீட்டை
விட்டு எங்கும் வெளியில்
செல்லாமல் படி ஏறி
இறங்காமல், அசையாமல்,
மிக்க கவனத்துடன் எல்லா
மருத்துவ உதவிகளும் வீட்டிற்கே
வரவழைக்கப்பட்டு சுகப்பிரசவம்
வீட்டிலேயே நடைபெற்றது.
இத்தனை ஆண்டு காலம் கழித்து
வரம் வாங்கி பெற்ற
குழந்தையின் நிலையைப் பாருங்க
சார், என பெரிய அழுகையின்
ஊடே சொல்லி
முடித்தார்.
ஆய்வு: வேறெந்த கேள்வியும்,
கேட்காமல் நோய்க்கான
ஆணிவேரை பற்றினேன். முதல் குழந்தை
இறப்பதற்கு அந்த ஆட்டோ விபத்தே
காரணம் என ஆழமாக
எண்ணிய அவர்கள்
இரண்டாவது குழந்தையின்போது
அந்த பயத்தின் காரணமாக
படி ஏறி இறங்குவதையும், பயணம்
செய்வதையும் ஒரு பெரிய
ஆபத்தாக கருதியதால்,
தாயின் வயிற்றிலேயே இந்த பயம்
குழந்தையை பாதித்ததாகக் கருதி,
தாயின் ஆழ் மனநிலை
குழந்தையின் உணர்வுகளை
கடுமையாக பாதித்து இருப்பதை
உணர்ந்தேன்.
குழந்தைக்கு மருந்தாக முழு
தாயின் மனநிலை மட்டுமே
காரணமாகக் கருதி Synthesis
மருந்துகாண் ஏடு
கொண்டு பின்வரும்
தாயின் மன நிலைக்கு ஆணிவேர்
தேர்வு செயப்பட்டது.
Complaints in Children from fright
of the mother during pregnancy,
என்ற மனக்குறி மட்டும் கணக்கில்
கொண்டு Opium 10m ஒரு
வேளையும், 10 நிமிடம் கழித்து ஒரு
வேளையும் கொடுக்கச்
சொல்லி, குழந்தையை எந்த
ஒரு கேள்வியும் கேட்காமல்
அனுப்பினேன். சார் அவனை ஏதும்
கேட்காமல் மருந்து
கொடுக்கிறீர்களே, ஏன்?
என்ற அந்த தாயாரின்
கேள்விக்கு நம்பிக்கையை மட்டும்
பதிலாக சொல்லி
அனுப்பினேன்.
நான்கு நாட்களுக்குப் பின் என்
மருத்துவமனையின் முன் ஏகப்பட்ட
கூட்டம், என்னவோ என்று பதறியபடி
சென்றால், ஏகப்பட்ட பரிசு
பொருட்களுடன்
நோயாளியின் அனைத்து
உறவினர்களும் என் கைகளை பற்றி
சார் என்ன மந்திரம் போட்டீங்க
அன்று முதல் இன்று வரை
அவனுக்கு எந்த ஒரு வயிற்று
வலியும் ஏற்படவே இல்லை, என்ன
காரணம்? எப்படி உங்களால்
முடிந்தது? என்று என்னை
கேள்விகளால் துளைத்தனர்.
ஹோமியோபதி எவ்வாறு
குணப்படுத்தியது என்று விளக்கிச்
சொல்லி அனுப்பினேன்.
இப்படியும் முடியுமா? என்ற
ஆச்சரியம் மீளாமல் அவர்கள்
திகைத்துப் போயினர், அவர்கள்
மட்டுமா?
உண்மைகள் தொடரும்.
Dr.Mohankumar
நோயாளியின் பெயர்: Mr.X
வயது: 7
நண்பர் ஒருவருடன் ஊருக்கு
சென்றுகொண்டிருந்த
நேரம், “சார் ஒரு
வித்தியாசமான பையன், இதுவரை
அவனுக்கு பார்க்காத
வைத்தியமே இல்லை. ஹோமியோபதி,
அலோபதி, எல்லா சீட்டு மற்றும்
மந்திரம், ஹிப்னோதெரபி
எல்லாம் பார்த்தும் கூட ஒன்றும்
ஆகவில்லை நாம் ஏதாவது
உதவி செய்ய இயலுமா?”
என்று கேட்டார்.
“வரச்சொல்லுங்கள்
முயற்சிக்கலாம்” என
சொல்லி வந்தேன்.
ஒரு மாதம் சென்றபின்
நோயாளி மற்றும் அவனுடைய குடும்ப
உறுப்பினர்கள் அனைவரையும்
காண நேர்ந்தது.
சார் இவனுக்கு இப்போது வயது 7,
இவன் சின்ன வயது முதல் மிக
கடுமையான வயிற்று வலி, வலி
என்றால் மிக கடுமை. ஏதாவது
வண்டி (அ) பயணம்
செய்தால், சாதாரண
சைக்கிள் பயணம் கூட இவனுக்கு
ஆகாது. வண்டியில் அமர்ந்து
வண்டி நகர்ந்த உடன் வயிற்றைப்
பிடித்துக்கொண்டு
அழுகிறான், ஒரே வாந்தி, மிகக்
கடுமையான மூச்சிரைப்பு, இனம்
புரியாத பயம், உடனே வண்டியை
விட்டு கீழே இறங்கினாலோ (அ)
வண்டியை நிறுத்தி விட்டாலோ, வலி
நின்று போய்விடுகின்றது. இதற்காக
இதுவரை பார்க்காத வைத்தியமே
இல்லை. அவனின் எதிர்காலமே
கேள்விக்குறியாக உள்ளது. ஒரு
நல்ல பள்ளிக்கூடத்தில் அவனை
சேர்த்து படிக்க வைக்க இயலவில்லை.
தினமும் நடந்துதான் பள்ளி
செல்ல வேண்டும்.
இதற்காகவே எங்கள் வீட்டை
பள்ளிக்கூடம் அருகில்
மாற்றிவிட்டோம்.
எங்கெங்க
சொல்றாங்களோ
அங்கெல்லாம் போய்
பார்த்துவிட்டோம். 4,5 முறை
ஹிப்னோதெரபி எல்லாம்
செய்தோம். நோய்க்கான
காரணம் ஏதும் இல்லை.
கொஞ்சம் தைரியமாக
இருப்பதற்காக தெரபி
மட்டும் கொடுத்தார்கள்,
வேறெந்த காரணமும்
பயபடும்படியாக இல்லை என்று
சொல்லிவிட்டார்கள்.
ஏதாவது ஊருக்கு போகவேண்டும்
என்றால் மயக்க மருந்து
கொடுத்து படுக்க வைத்து
விடுவோம். பின் வண்டியில் எடுத்துச்
செல்வோம். இலேசாக
மயக்கம் தெளிந்தால் கூட
உடனே வலி, வாந்தி, பயம்,
மறுபடியும் வண்டியை நிறுத்தி மருந்து
கொடுத்த பின்னர்தான்
மறுபடி பயணம். இவ்வாறே 7
வருடம் ஓட்டி விட்டோம். 17 வருடம்
கழித்து பிறந்த குழந்தை இவ்வாறு
உள்ளது. அவன் நிலையைக்
கொஞ்சம் பாருங்க
சார்.
பெரிய மலைப்பு மேலிட
நோயாளரைப் பார்த்தேன்.
இவன் சிறுவயது முதல் வயிற்று
வலியால் அவதிப்படுகிறான்,
17 வருடம் கழித்து
பிறந்திருக்கிறான், நோய் உருவாக
இவன் கருவியாக இருக்க
இயலாது என கருதி சிறுவனையும்
அவன் உறவினர்களையும்
வெளியில் அமரச்
செய்து அவன் தாயாரை
உள்ளே அழைத்தேன்.
கேள்வி: 17 வருடமாக குழந்தை
இல்லாமல் இருந்திருக்கிறது. 17
வருடம் கழித்து இந்த குழந்தை
பிறந்து இருக்கிறது. ஏன்
இவ்வளவு கால தாமதம்?
என்ன காரணம்?
பதில்: சார் அது ஒரு பெரிய
கதை. எங்க வீட்டுக்காரர் ரிசர்வ்
வங்கியில் பெரிய பதவியில்
இருக்கிறார். என்னை திருமணம்
செய்து சென்னையில்
குடியேறினோம். திருமணமாகி 14
வருடமாக குழந்தை இல்லை.
பார்க்காத வைத்தியம்
எல்லாம் பார்த்து ஒருவாறு
கருத்தரித்தேன். ரொம்ப
கவனமாக இருந்தும் 9-ம்
மாதம் மருத்துவ பரிசோதனைக்காக
கார் டிரைவர் வராததால்
ஆட்டோவில் மருத்துவமனை
சென்றேன். போதாத காலம்
வழியில் ஆட்டோ விபத்துக்குள்ளாகி
நான் நடுரோட்டில் விழுந்து,
ஏகப்பட்ட காயங்களுடன்
மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டேன்.
டெலிவரி வரை அங்கேயே
அனுமதிக்கப்பட்டேன். போதாத
காலம் குழந்தை வயிற்றிலேயே
இறந்து பிறந்தது. நான் அடைந்த
வருத்தத்திற்கு அளவேயில்லை.
ஆட்டோவில்
சென்றதினால்தான் என்
மகனை இழந்துவிட்டேன்.
பின் மூன்று ஆண்டு காலம்
சென்ற பின்னர்தான்
அடுத்த கருத்தரித்தேன். ஆனால்
இந்த முறை மிக கவனமாக வீட்டை
விட்டு எங்கும் வெளியில்
செல்லாமல் படி ஏறி
இறங்காமல், அசையாமல்,
மிக்க கவனத்துடன் எல்லா
மருத்துவ உதவிகளும் வீட்டிற்கே
வரவழைக்கப்பட்டு சுகப்பிரசவம்
வீட்டிலேயே நடைபெற்றது.
இத்தனை ஆண்டு காலம் கழித்து
வரம் வாங்கி பெற்ற
குழந்தையின் நிலையைப் பாருங்க
சார், என பெரிய அழுகையின்
ஊடே சொல்லி
முடித்தார்.
ஆய்வு: வேறெந்த கேள்வியும்,
கேட்காமல் நோய்க்கான
ஆணிவேரை பற்றினேன். முதல் குழந்தை
இறப்பதற்கு அந்த ஆட்டோ விபத்தே
காரணம் என ஆழமாக
எண்ணிய அவர்கள்
இரண்டாவது குழந்தையின்போது
அந்த பயத்தின் காரணமாக
படி ஏறி இறங்குவதையும், பயணம்
செய்வதையும் ஒரு பெரிய
ஆபத்தாக கருதியதால்,
தாயின் வயிற்றிலேயே இந்த பயம்
குழந்தையை பாதித்ததாகக் கருதி,
தாயின் ஆழ் மனநிலை
குழந்தையின் உணர்வுகளை
கடுமையாக பாதித்து இருப்பதை
உணர்ந்தேன்.
குழந்தைக்கு மருந்தாக முழு
தாயின் மனநிலை மட்டுமே
காரணமாகக் கருதி Synthesis
மருந்துகாண் ஏடு
கொண்டு பின்வரும்
தாயின் மன நிலைக்கு ஆணிவேர்
தேர்வு செயப்பட்டது.
Complaints in Children from fright
of the mother during pregnancy,
என்ற மனக்குறி மட்டும் கணக்கில்
கொண்டு Opium 10m ஒரு
வேளையும், 10 நிமிடம் கழித்து ஒரு
வேளையும் கொடுக்கச்
சொல்லி, குழந்தையை எந்த
ஒரு கேள்வியும் கேட்காமல்
அனுப்பினேன். சார் அவனை ஏதும்
கேட்காமல் மருந்து
கொடுக்கிறீர்களே, ஏன்?
என்ற அந்த தாயாரின்
கேள்விக்கு நம்பிக்கையை மட்டும்
பதிலாக சொல்லி
அனுப்பினேன்.
நான்கு நாட்களுக்குப் பின் என்
மருத்துவமனையின் முன் ஏகப்பட்ட
கூட்டம், என்னவோ என்று பதறியபடி
சென்றால், ஏகப்பட்ட பரிசு
பொருட்களுடன்
நோயாளியின் அனைத்து
உறவினர்களும் என் கைகளை பற்றி
சார் என்ன மந்திரம் போட்டீங்க
அன்று முதல் இன்று வரை
அவனுக்கு எந்த ஒரு வயிற்று
வலியும் ஏற்படவே இல்லை, என்ன
காரணம்? எப்படி உங்களால்
முடிந்தது? என்று என்னை
கேள்விகளால் துளைத்தனர்.
ஹோமியோபதி எவ்வாறு
குணப்படுத்தியது என்று விளக்கிச்
சொல்லி அனுப்பினேன்.
இப்படியும் முடியுமா? என்ற
ஆச்சரியம் மீளாமல் அவர்கள்
திகைத்துப் போயினர், அவர்கள்
மட்டுமா?
உண்மைகள் தொடரும்.
Dr.Mohankumar
No comments:
Post a Comment