Thursday, 28 January 2016

§ 30 மணிமொழி-30


மணிமொழி-30

                           § 30

                The human body appears to admit of
being much more powerfully affected in its
health by medicines (partly because we
have the regulation of the dose in our own
power) than by natural morbid stimuli -
for natural diseases are cured and
overcome by suitable medicines.


            இயற்கையான
நோயநிலையின்
தூண்டுதலைக்காட்டிலும் ,
மருந்துகளினாலே
( ஏனென்றால் மருந்தளவை
ஒழுங்குபடுத்தும்
கட்டுப்பாடு ஓரளவு நமது
கையில் உள்ளது) மனித உடல்
மிகத் தீவிரமாகப்
பாதிக்கபடுவதற்கு
இடங்கொடுக்கும் வகையில்
இருப்பது
தெரிகிறது. ஏனென்றால்
இயற்கையாக உருவாகும்
நோய்களை நலமாக்கும்
ஆற்றலும் மற்றும்
நோய்நிலையை
வெற்றிகொள்ளும் தன்மையும்
பொருத்தமான
மருந்துகளுக்கு இருக்கிறது.
(அடிக்குறிப்பு நாளை…..)
Dr. Karuppaiah.
Tue, 25 Aug 2015

 Footnote of   § 30

           The short duration of the
action of the artificial morbific forces,
which we term medicines, makes it
possible that, although they are stronger
than the natural diseases, they can yet be
much more easily overcome by the vital
force than can the weaker natural
diseases, which solely in consequence of
the longer, generally lifelong, duration of
their action (psora, syphilis, sycosis), can
never be vanquished and extinguished by
it alone, until the physician affects the
vital force in a stronger manner by an
agent that produces a disease very
similar, but stronger to wit a
homoeopathic medicine. The cures of
diseases of many years' duration (§ 46),
by the occurrence of smallpox and
measles (both of which run a course of
only a few weeks), are processes of a
similar character.

                   நம்மால் மருந்துகள் என்று அழைக்கப்படும் செயற்கையான நோயை உண்டாக்குகிற ஆற்றல், இயற்கையான நோயாற்றலைக் காட்டிலும் வலிமை வாய்ந்தவை. எனினும் உயிராற்றல் இயற்கை நோய்களை வலுகுறையச் செய்வதை விட இச்செயற்கை நோய்களை மிக எளிதாக வெற்றி கொள்வதற்குக் காரணம் அச்செயற்கை நோய் குறைந்தகாலமே செயலாற்றும் தன்மை கொண்டவையாக இருப்பதேயாகும். இயற்கைநோய் வலிமைகுறைந்ததாக இருப்பினும் அவற்றின் நீண்டகால விளைவின் காரணமாக ( சோரா, சைகோசிஸ் , சிபிலிஸ் ) அந்நோய்கள் பொதுவாக நமது வாழ்நாள் முழுவதும் நீடித்திருக்கின்றன. அத்தகைய இயற்கை நோய்களுக்கு மிகவும் ஒத்தவையாகவும் அதே சமயத்தில் வலிமையானதாகவும் உள்ள நோயின் விளைவுகளை உண்டாக்கும் ஒரு பொருளை அதாவது மதிநுட்பம்வாய்ந்த ஹோமியோபதி மருந்தினை  மருத்துவர் கொடுத்து உயிராற்றலின் மீது பாதிப்பை ஏற்படுத்தாதவரை , உயிராற்றல் தானாகவே இயற்கைநோய்களை மறையசெய்யவோ மற்றும் மங்கசெய்யவோ (வெளியேற்றுவதற்கு ) முடிவதில்லை . பல ஆண்டுகளாக நீடித்திருக்கும் நோய்களையும் ( மணிமொழி 46), அத்தகையச் செயல்பாடுகளைக் கொண்ட பெரியம்மை மற்றும் மணல்வாரிஅம்மையையும் ( இரண்டு  நோய்களும் சில வாரங்களுக்கு நீடித்திருக்கும் தன்மையுடையவை) நலமாக்கியதற்கு அத்தகைய சிறப்பியல்பே வழிமுறையாகிறது.
Dr.Karuppaiah.
Wed, 26 Aug 2015,

No comments:

Post a Comment