Tuesday, 7 March 2017

ஹோமியோபதி முறையில் தடுப்பு மருந்துகள்

மேஜர் தி.சா.இராஜூ

'
எல்லாப் பொருளையுமே உள்ளடக்கிய நமது திருக்குறளில் மருந்து என்ற தலைப்பில் பத்துப்பாக்கள் உள்ளன. இவை மருத்துவ சாத்திரத்திற்கே ஆதாரமாகும்.
நோய்த் தடுப்பு முறைகள் குறித்தும் ஒரு குறள் அதில் உள்ளது. அது,
'
நோய்நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.

என்பதாகும்.
'
முதன்மையாக ஹோமியோபதி மருத்துவத்தின் அடிப்படைக கொள்கையைப் புரிந்து கொள்ள வேண்டும். மனித உடலில் ஜீவசக்தி ( VITAL FORCE) என ஒன்று உள்ளது. அது நலிவுறும்போது பல குறிகளை வெளிப்படையாகக் காட்டுகிறது. அந்தக் குறியையே நோய் என்ற பெயரால் குறிப்பிடுகிறார்கள். இந்த நோய் பாரம்பரியத்தினாலும், தவறான உணவை உட்கொள்ளுதல் மூலமும், சூழ்நிலையினாலும் ஏற்படக்கூடும்.
'
சூழ்நிலை என்பது, கால வேறுபாட்டினாலும், எளிதில் பரவக்கூடிய நோயுள்ளவர்கள் வாழும் இடத்தில் வசிப்பதாலும், பணிபுரிவதாலும், தூய்மை குறைந்த நீரையும், காற்றையும் துய்ப்பதாலும் அமையும். இதைத் தடுப்பதற்கு ஹோமியோபதி மருத்துவத்தில் இணையற்ற, பக்க விளைவுகள் எதையும் ஏற்படுத்தாத மருந்துகள் உள. அந்த நோய்களின் வாய்நாடி வாய்ப்பச் செயல் புரிய வேண்டும்.
'

தடுப்பூசி சரியா?

உயிருள்ள அம்மைக்கிருமியை இவ்வகையில் உடலில் ஏற்றுவதனால் பல நோய்கள் விளையக்கூடும். அதற்கு ஆட்பட்டவனுடைய உடற்கூறே கெடும் என்று பல நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள். ஆனால் இந்த வழக்கம் இன்று வரை மாறவே இல்லை. அம்மை தடுப்பூசி குத்துவதினால் ஏற்படும் பின்விளைவுகள் பல… அதற்குப் பிறகு அவன் குணமடைவதே இல்லை.
இந்த தடுப்பூசியினால் அம்மை நோயை அழித்து விட்டோம் என்று மார்தட்டுகிறார்கள். ஆனால் இந்த நோய் மாற்றுருவம் கொண்டு புற்றுநோயாக வெளிப்படுகிறது என்று என் ஆசான் மருத்துவர் சேஷாச்சாரி பல மருத்துவ ஏடுகளில் ஆதாரபூர்வமாக எழுதினார்.
'
அம்மை
உதாரணமாக, அண்டை வீட்டின் ஒரு குழந்தைக்கு சின்னம்மை கண்டிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த நோய் பிற இல்லங்களுக்கும் பரவாமல் தடுப்பதற்கு ஹோமியோபதி மருந்துகள் உள்ளன. அவை முறையே ஆண்டிமோனியம் க்ரூடம், ( ANTIMONIUM CRUDUM) பல்ஸட்டிலா, ( PULSATILLA) மெர்க்யூரியஸ்,(MERCURIUS ) ரஸ்டாக்ஸ் ( RHUS TOX) ஆகியவையாகும்.
இவற்றினுள் உடனடியாக நிவாரணம் தரக்கூடியது எது என்று ஒரு மருத்துவன் தனது அனுபவத்தின் மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும்.
பெரும்பாலான நேரங்களில் ஆண்டிமோனியம் க்ரூடம் எனக்கு நல்ல பயனை அளித்திருக்கிறது. ஆண்டமனி என்ற கனிமத்தைப் பொடித்து நீர்த்து, வீரியமூட்டி இது தயாரிக்கப்படுகிறது. சாதாரணமாக முப்பதாவது வீரியமே போதும். தேவைப்பட்டால் சைலீஷியா (SILICEA) என்ற தொடர் மருந்தையும் நோய்வாய்ப்பட்டிருக்கும் குழந்தைக்குத் தரலாம். அது வியாதியின் கடுமையைக் குறைக்கும்.
'
வாந்தி பேதி - திருவிழாக் காலங்களில் சுற்றுப் புறத்தின் தூய்மை குறைகிறது. அதன் விளைவாக வாந்திபேதி பரவுவது வழக்கம். இது எளிதில் பிறரையும் தொற்றிக் கொள்ளும். இதற்கு மிகச் சிறந்த மருந் காம்ஃபரா ( CAMPHORA). இது கற்பூரத்திலிருந்து வீரியப்படுத்தப்பட்டது. நமது ஆலயங்களில் கற்பூர ஒளி காட்டுவதும், நீரில் கற்பூரத்தைக் கரைத்துப் பிரசாதமாக வழங்குவதும், வாந்தி, பேதி பரவக்கூடாது என்ற நல்லெண்ணத்தினால்தான். இன்னொரு மருந்து குப்ரம் (CUPRUM MET) செம்பு, செம்பினாலான நாய்க்காசு, தாயத்து, கட்டைக் காப்பு ஆகியவற்றை அணிந்தாலும் போதுமானது. உடலில் செம்புபடுவதனால் காலரா தடுப்பு மட்டுமல்ல, காக்கை வலிப்பு நோயையும் அது குணப்படுத்துகிறது என்பது எனது அனுபவம். மாவாகத் தின்றாலும், பணியாரமாகும் ஒரு விந்தையை மருத்துவத்துறையில் கண்டிருக்கிறேன்.
'
தாளம்மை - சாதாரணமாக நாம் காண்பது பொன்னுக்கு வீங்கி என்ற கண்ட அழற்சி (mumps) தாடையில் ஒரு புறம் வீங்கி விடும். சளி, கடும் காய்ச்சல், தலைவலி, இருமல் ஆகியவை ஏற்படும். வெகு விரைவில் பரவித் தொல்லை கொடுக்கும் நோய்களில் இதுவும் ஒன்று. அப்போதெல்லாம் குழந்தைக்கு ஒரு பொன் சங்கிலியை அணிவிப்பார்கள். தங்கள் விற்கும் விலையில் நாம் எத்தனை குழந்தைகளுக்குப் பொற் சங்கலியைத் தர முடியும்?
தங்கத்தையை உரைத்து வீரியப்படுத்திய ஆரம்மெட்டாலிக்கம் (aurum met) என்ற ஹோமியோபதி மருந்து முப்பதாவது ஆற்றலிலேயே சிறந்த தடுப்பு மருந்தாக விளங்கும். ஆரம் என்ற லத்தீன் மொழிச் சொல்லுக்கு தங்கம் என்பதுதான் பொருள். பிலோகாரபைன் ( pilocarbine), மெர்க்யூரியஸ், (mercurius) பாராடோடினம் (parotidinum) ஆகிய மருந்துகளும் சிறந்த பயன் தருவதைக் கண்டிருக்கிறேன். தடுப்பு மருந்துகளைத் தேர்ந்தெடுக்கும்போது நோயாளிகளின் மன, உடல் இயல்புகளைக் கருத்தில் கொள்வது விரைவில் நிவாரணமளிக்க உதவி செய்யும்.
'
கக்குவான் இருமல் - கக்குவான் இருமல் ( whooping cough) என்பது ஒரு கொடிய நோய். இது குழந்தையை உருமாற்றிக் குலைத்து விடும். அதுபடும் துயரத்தைக் கண்டு பரிதாபப்பட வேண்டிய நிலைமை தோன்றும். குழந்தை இருமி, இருமி உண்டதை எல்லாம் வாந்தி எடுத்துவிடும்.
எந்த இருமலுக்குமே ட்ரொசேரா (drosera) நல்ல மருந்து. ஆறாவது வீரியமே போதும். இது ஒரு செடியின் சாறு, தொடர்ந்து கொரேலியம் ( corollium rubrum) என்ற நற்பவளமும் பெர்ட்டூசின் (pertussin) என்ற நோய்க் கழிவுப் பொருளும் நல்ல ஔடதங்களாக அமையும். இவை அனைத்துமே முப்பதாவது வீரியத்தில் பயன்தரக் கூடியவை. கக்குவான் இருமலை இந்த மூன்று மருந்துகளின் துணை கொண்டே குணப்படுத்திவிடுவது சாத்தியம். வராமலும் தடுக்கலாம்.
'
முறைக்காய்ச்சல் - மலேரியாவைப் போன்ற முறைக்காய்ச்சல்களுக்கு சில நல்ல தடுப்பு மருந்துகள் ஹோமியோபதி முறையில் உள்ளன. காய்ச்சலின்போது குளிர் இருக்குமானால் நக்ஸ்வாமிகா ( nux vomica) காலை ஒன்பது மணிக்கு ஜுரம் வருவதானால் நாட்ரம் ம்யூர் ( natrum mur) நடுப்பகல் அல்லது நள்ளிரவானால் ஆர்சனிக்கம் ஆல்பம்,[arsenicum album] பதினோரு மணிக்கென்றால் கந்தகம் (sulphur) ஒரு கவனமுள்ள மருத்துவன் நோய் தோன்றும், மிகுதியாகும் அல்லது தணியும் நேரத்தையும் முறைக்காய்ச்சல் விஷயத்தில் கவனத்தில் கொள்ள வேண்டும்.
'
சொறி, சிரங்கு - ஒரு குழந்தையின் பெற்றோர்களுக்குத் தோல் சம்பந்தமான நோய் அல்லது குழந்தையை உண்டாகியிருக்கும் தாய் பல வகை மருந்துகளை உட்கொண்டுடிருந்தாலோ, அதற்குக் கந்தகம் (sulphur) என்ற நிவாரணியின் ஒரு சிற்றுருண்டையே போதுமானது என்பது மேதைகளின் அனுபவக் கணிப்பு. குழந்தை பிறந்த ஓரிரண்டு வாரங்களுக்குள் அந்தக் கந்தகக் கரைசலின் ஒரு சொட்டு குழந்தைக்குக் கொடுக்கப்படுமானால், அது எந்தத் தோல் வியாதியிலிருந்தும் பாதுகாக்கப்படும் என்று மருத்துவ மேதை லிப்பே குறிப்பிடுகிறார்.
 '
வெப்பத் தாக்குதல் (sunstroke)- நமது நாடு வெப்பம் மிகுந்தது. சூரிய உஷ்ணத்தில் அலைந்து பணிபுரிய வேண்டிய கட்டாயம் பலருக்கு இருக்கிறது. சூரிய ஒளி உடலுக்கு நன்மை தருவதானாலும், அதன் வெப்பம் பலருக்கு நோயை விளைவிக்கக்கூடும். முகம் சிவந்து, தலைசுற்றி, நாவரண்ட நிலை பெரும்பாலோருக்கு ஏற்படும் அப்போதெல்லாம் க்ளோனைன் அல்லது பெல்லடோனா உடனடியாக பலனைத் தரும். சிறப்பாக, நெருப்பினடியில் பணிபுரியும் நிர்ப்பந்தமுடைய கருமான் போன்ற கைவினைஞர்களுக்கு இந்த மருந்து தடுப்பாகவும், நிவாரணியாகவும் பயனளிப்பதை என் அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.
அடுப்படியில் நெடுநேரம் பணிபுரியும் சமையர்காரர் ஒருவருக்கு நீர்க்கடுப்பு வந்தது. சிறு நீரிலும் உதிரம் கலந்திருந்தது. அவர் ஓடோடி வந்தார். தொழில் முறையில் அவருக்கிருந்த நிர்ப்பந்தத்தை உணர்ந்து அவரை ஓய்வெடுத்துக் கொள்ளும்படி செய்தேன். ஒரே வேளை மருந்து க்ளோனைன் அவரைக் குணப்படுத்தி விட்டது. இதை நைட்ரோ கிளிசரின் என்றும் சொல்வார்கள். க்ளிசரின், ஆக்ஸிஜன், நைட்ரஜன் ஆகியவைகளின் கலப்பு இது. வெய்யிலில் அலைந்து பணிபுரிய வேண்டிய நிர்ப்பந்தமுடையவர்களுக்கு க்ளோனைன் ஒரு சிறந்த தடுப்பு மருந்து என்பது எனது அனுபவம்.
'
ஹோமியோபதித் தத்துவத்தின் தந்தை எனப்படும் டாக்டர் ஹானிமன் ஆர்கனான் என்ற தமது நூலின் முதல் பக்கத்திலேயே குறிப்பிடுகிறார்.
 மருத்துவரின் தலையாய ஒரே கடமை நோயாளியைக் குணப்படுத்துவதாகும். இதை விரைவாக, பக்க விளைவுகள் ஏற்படுத்தாமல், நிரந்தரமான பலன் தரும் வகையில் செய்தல் வேண்டும்.
இந்தப் பணியைச் செம்மையாகப் புரிவதற்கு அவன் நோயாளியின் குறிகள், அதற்கேற்ற மருந்து, அதைத் தர வேண்டிய நேரம் அனைத்தையும் சீர்தூக்கி செயல்படுதல் வேண்டும். இதோ நமது தமிழ்மறை பேசுகிறது.
'
உற்றான் அளவும், பிணியளவும், காலமும்
கற்றான் கருதிச் செயல்

தெய்வ வள்ளுவன் சமுதாயப் பிணிகளுக்கு மட்டுமல்ல, உடலைத் துன்புறுத்தும் நோய்களுக்கும் உற்ற மருத்துவராக விளங்குகிறார் என்ற பேருண்மையை வலியுறுத்த வாய்ப்பளித்த நல்லோர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
*****
ஹோமியோபதி அற்புதங்கள் நூலில் இருந்து
***************************************************************
அற்புதங்கள் தொடரும்
********************************************************

Monday, 6 March 2017

ஹோமியோபதி மருத்துவம் ஓர் அறிமுகம் மற்றும் அதன் அறிவியல் பின்புலம், தயாரிப்புமுறை,என்னென்ன மருந்துகள் மற்றும் இந்தியாவில் அதன் நிலை மற்றும் சிறப்பு

மேஜர் தி.சா.இராஜூ



ஹோமியோபதி என்றால் என்ன?
இப்படி ஒரு கேள்வி கேட்பவரின் உதட்டோரத்தில் தோன்றும் ஏளனப் புன்னகையைச் சக மருத்துவர்கள் பொருட்படுத்தக் கூடாது. குறைபாடு நமது மருத்துவர்களிடமே உள்ளது. மருத்துவர்களுக்கு மூல நூலைப் பற்றிய அறிவு குறைவு. அவர்களுடைய இன்றைய அணுகுமுறையும் பெருமை சேர்ப்பதாக இல்லை.
'

பலமுறைகள்

ஆயுர்வேதம், சித்த மருத்துவம், யுனானி முறை, அக்யூபஞ்சர் என்ற சீன வைத்தியம், அல்லோபதி என்ற ஆங்கில மருத்துவம் அனைத்துமே உயிர்க்குலத்தின் துயர்துடைக்கவே ஏற்பட்டவை. எதிலுமே ஏமாற்று இல்லை.
.

தனிமுறை

ஆனால் ஹோமியோபதி மருத்துவம் மற்றவைகளிலிருந்து மாறுபட்டது. அதை உணர்ந்து கொண்டால் மட்டுமே, மற்ற துறைகளை இத்துடன் குழப்புவது தவறு என்பது புரியும். இதை அறிமுகப்படுத்தியவர் ஃப்ரெடரிக் கிறிஸ்டியன் ஸாமுவேல் ஹானிமான். இவர் ஜெர்மனி நாட்டில் உள்ள மீஸன் நகரத்தில் பிறந்தவர். அல்லோபதி மருத்துவத்தில முதுகலைப் பட்டம் பெற்றவர். ஒரு பன்மொழிப் புலவர். பிற மேதைகளின் நூற்களைத் தமது மொழியில் பெயர்ப்பதையே வாழ்முறையாகக் கொண்டிருந்தவர்.
இரண்டு கருத்துக்களை இவர் ஆராய்ச்சி மூலம் தெளிந்தவர். முதலாவது, ஒரு பொருளை அதிக அளவில் உட்கொள்வதனால், ஏற்படும் துயரங்களை வீரியப்படுத்தப்பட்ட அதே பொருள் நீக்கிவிடும். அடுத்தது ஒரு பொருளை நீர்ப்பதனாலும், கடைவதனாலும், அதன் மருத்துவ வீரியம் அதிகமாகிறது. இந்த இரண்டு அடிப்படைக் கருத்துகளுமே ஆயுர்வேதத்தில் உள்ளவை. (நஞ்சேதான் நஞ்சுக்கு மருந்து). மர்த்தனம் குண வர்த்தனம்). ஆயுர்வேத மருத்துவர்கள் தொடர்ந்து இத்துறையில் ஆராய்ச்சி செய்யவில்லை என்பதே உண்மை.

.
நஞ்சும் மருந்தும்

ஹானிமன் வசித்த இல்லத்தைச் சுற்றி ஏராளமான சிங்கோனா மரங்கள் இருந்தன. அவரும் அவருடைய குடும்பத்தாரும் நோய்வாய்ப்பட்டனர். அந்த மரப்பட்டையைப் பொடித்துக் கிழாயமாக்கி நீர்த்துக் கொடுத்ததில அவர்களுடைய சுகவீனம் மறைந்து போயிற்று.
.
வீரியப்படுத்துதல் என்பது அதை நீர்ப்பதும், கடைவதுமாகும். இதை அவருடைய சமகாலத்து மருத்துவர்களே ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள். இந்தக் கொள்கைகளை மெய்ப்பிக்க அவர் பெரும் முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது.
.

ஏற்பு

இந்தக் கொள்கைகளை ஏற்காத சகமருத்துவர்கள் அவரை மீஸன் நகரை விட்டே விரட்டிவிட்டனர். ஹானிமன் ஃப்ரான்ஸ் நாட்டில் குடியேறி அதன் தலைநகரிலேயே இந்தப் பணியைத் துவங்கினார். அந்த நாட்டின் மருத்துவ நிபுணர்கள் அவரது பெருமையை உணர்ந்தனர். அவர் பெரும் புகழும், செல்வமும் ஈட்டினர். இன்ற அந்த நாட்டில் முப்பத்தேழு விழுக்காடு மக்கள் இந்த முறை மருத்துவத்தின் மூலம் பயனடைகிறார்கள்.
.

ஆதிவேதம்

தமது முறையை விளக்க அவர் ஆர்கனான் என்ற நூலை எழுதினார். இந்த நூலுக்கு இவர் ஆறு பதிப்புகள் கொண்டு வந்தார். முன் கூறிய கருத்துகளில் குறைபாடு இருந்தால் அதை வெளிப்படையாக ஏற்றுக் கொண்டார். இந்த நூல்தான் ஹோமியோபதி மருத்துவத்தின் ஆதிவேதம். இதைத் தவிரவும் அவர் பல நூல்கள் எழுதி வழங்கினார். எண்பத்து எட்டாம் வயதில் இயற்கை எய்தினார்.
.

உடலே ஆய்வுக்களம்

இவருடைய முறையின் சிறப்பு ஒவ்வொரு மருந்தைiயும் அவர் தாமே உட்கொண்டு மெய்ப்பித்து எழுதியதுதான். இருநூறு மருந்துகளை அவர் இந்த வகையில் மெய்ப்பித்து வரைந்திருக்கிறார்.
.
இவரைப் பின்தொடர்ந்து பல மருத்துவ மேதைகள் இந்த முறையைப் பின்பற்றினார்கள். தங்களது அனுபவங்களை எழுதி வைத்தனர். இவர்களின் முக்கியமானவர்கள் லிப்பே, ஜேம்ஸ்டெய்லர் கெண்ட், ஆலன், ஹெரிங், நாஷ், போய்னிங் ஹாஸன், ஃபாரிங்டன் ஆகியோர். எல்லாப் பெயர்களையும் இங்கு குறிப்பிடவில்லை. விரிவஞ்சி விடுகிறேன். இவர்கள் அனைவருமே அலோபதி மருத்துவ நிபுணர்கள்.அந்த மருத்துவ முறையை விட இது மேலானது என்பதைத் கண்டுணர்ந்தார்கள். தமது அனுபவங்களை உலகிற்கு எடுத்துரைத்துப் பெருந்தொண்டு புரிந்தவர்கள்.
.

சிறப்பு

இந்த முறையின் இரண்டு சிறப்புகளை எடுத்துக் கூறுவது பொறுத்தமாக இருக்கும். ஒன்று, இந்த மருந்துகள் பக்க விளைவுகளை உண்டாக்காது. அடுத்து இதை விட மலிவான மருத்துவம் உலகிலேயே கிடையாது. ஆயுர்வேதமும், சித்த மருத்துவமும், சிறந்த முறைகள் ஐயமில்லை. ஆனால், இந்த மருந்துகளின் விலை எளிய மக்கள் அணுக முடியாமல் உள்ளது.
ஒரு காலத்தில் அற்புதம் விளைவிப்பவை என்று கருதப்பட்ட பல அலோபதி மருந்துகளை அந்த மருத்துவர்களே இன்று பயன்படுத்த அஞ்சுகின்றனர்.
.

மருந்து மூலம்

இந்த மருந்துகளின் மூலப் பொருட்கள் யாவை? அது ஒரு முக்கியமான தகவல்.
.

தாவரம்

முசுமுசுக்கை, வல்லாரை, நாகதாளி, கீழாநெல்லி, எட்டிக்காய், வேம்பு, காற்றுமலர், வெள்ளரிக்காய், கற்றாழை, எருக்கு ஆகியவை சில.
.

கனிமம்

பொன், வெள்ளி, செம்பு, இரும்பு, பாதரசம், பாஸ்வரம், கோந்துகள், கந்தகம், சமையல் உப்பு, சுண்ணாம்பு முதலியவை.
.

விலங்கு

பலவகைப் பாம்பு, சுள்ளெறும்பு, சிலந்தி, நாய்ப்பால், கரப்பான்பூச்சி ஆகியன.
.

நோய்க் கழிவுப் பொருள்

சீழ், சிறங்குப் பொறுக்கு, வெட்டை ஒழுக்கு. நெஞ்சுச் சளி, நோயுள்ள நுரையீரல் இவை சில எடுத்துக்காட்டுகள்.
.

தயாரிப்பு முறை

இந்த மூலப் பெருள்களைக் கடைந்து, பொடித்து, உறைத்து இவற்றின் ஆதித்திரவத்தை (இதைத் தாய்த் திரவம் என்று அழைப்பார்கள்) பிறகு சுத்தமான உண்சாராயத்துடன் கலந்து வைப்பார்கள். இவற்றை ஏற்ற முறையில் வீரியப்படுத்துவார்கள். இவை முறையே மூன்று, ஆறு, பன்னிரண்டு, முப்பது, இருநூறு ஆகிய வீரியங்களில் தயாரிக்கப் பெறும். இந்தத் திரவத்தில் பால்சீனி உருண்டைகளை முக்கி எடுத்துப் பின் பாட்டிலில் அடைத்து வைப்பர். சீராகப் பாதுகாக்கப்பட்டால் இவை பல ஆண்டுகளுக்குக் கெடாமல் இருக்கும். இந்த முறையில் எல்லா மருந்துகளும், ஒரே மாதிரி இருக்கும், மாத்திரைகளில் பல அளவுகள் உள்ளன. முப்பதாவது அளவில் உள்ள இரு மாத்திரைகள் மட்டுமே ஒருவேளை மருந்தாக அமையும்.
.

இடம்-வலம்

இந்த முறையின் மற்றொரு தன்மை, இவை சிறப்பாக உடலின் வலது, இடது புறங்களில் தீவிரமாகவேலை செய்யும். எடுத்துக்காட்டாக எட்டிக்காய் வலதுபக்க மருந்து. கந்தகமும், பாதரசமும் வலது பக்க நிவாரணிகள். மெக்னீஷியம், தூஜா லாக்கஸிஸ் ஆகியவை இடது பக்கத்தில் சிறப்பாகப் பணிபுரியும். மற்றப் பகுதிகளில் பலன் இராது என்பதன்று. அன்றியும் எந்தப் பக்கம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று தெரிந்தால் மருந்தைத் தேர்ந்தெடுப்பது எளிது.
.
ஆயுர்வேதம், சித்த மருத்துவம் ஆகியவற்றிலும், அலோபதி முறையிலும் இல்லாத சிறப்புத் தன்மை, இந்த இடம் வலம் என்பதாகும். இது குறித்துப் பல நிபுணர்களிடம் விவரம் கேட்டேன்.அவர்கள் கூறிய விளக்கம் நினைவில் வைக்கத்தக்கது.
.
எலி, தவளை, குரங்கு ஆகிய விலங்குகளுக்கு, மருந்துகளைக் கொடுத்து அதன் விளைவைக் கண்டறிவது மற்ற மருத்துவ முறைகள். ஆனால் ஹோமியோபதி முறையில் மட்டும்தான் ஆரோக்கிய நிலையிலுள்ள ஆண், பெண் ஆகியோருக்கு இந்த மருந்துப் பொருட்களைக் கொடுத்து, அதன் விளைவுகளைக் கேட்டறிந்திருக்கிறார்கள். விலங்குகளால் இதைத் தெரிவிக்க இயலாதே.
.
இந்த மருத்துவத்தின் மிகப் பெரும் சிறப்பு இது.
இன்னும் பலருக்கு முதியோருக்கு, பூப்படையும் நிலையிலுள்ள பெண்களுக்கு என்று பல மருந்துகள் உள. பேறுகாலத்திற்குப் பின்பு உதிர விரையத்தின் விளைவு, உடலின் நீர்ச்சத்தின் செயல்பாடு, ஆகியவைகளுக்குமான அற்புதமான நிவாரணம் இந்த முறையில உள்ளன.
.
இதன் இன்னொரு சிறப்புப் பணிபுரியும் கால அளவு, சில மூன்று நாட்கள், ஏழு நாட்கள், முப்பது, அறுபது நாட்கள் வரை செயல்படும்.
.

நேரம்

ஒரு நோயாளியின் துயரம் எந்த நேரத்தில் அதிகமாகிறது. அல்லது தணிகிறது. என்பதும் ஒரு சிறப்பான குறி. காலை ஒன்பது மணிக்கு நோய் மிகுந்தால் அதற்கு மருந்து சமையல் உப்பு, நன்பகல் நள்ளிரவு ஆகியவற்றிற்கு தெள்ளுபாஷாணம் (ஆர்ஸனிக்கம்) மாலை நான்கு மணிக்கு என்றால் லைக்கோபோடியம், இதற்கான தனி அட்டவணை ஒன்றே தயாரிக்கப்பட்டுள்ளது. நோய் இரவு நேரத்தில் மிகுமானால், அப்போது கந்தகத்தையும், பாதரசத்தையும் குறித்து எண்ண வேண்டும்.
.
ஒவ்வொரு மருந்திற்கும் தொடர் மருந்தும், எதிரி மருந்தும் உள. மருத்துவர் ஜே.ஹெச்.கிளார்க், கிப்ஸன், மில்லர் ஆகியோர் இதன் பொருட்டுத் தனி நூல்களே எழுதியிருக்கிறார்கள். அதைப் படித்து அறிந்து கொள்வது மருத்துவரின் கடமை.
.

தவிர்க்க வேண்டியவை

ஹோமியோபதி மருந்துகள் உண்ணும்போது காபி, தேயிலை, புகையிலை ஆகியவற்றை விலக்க வேண்டும். இந்த மூன்றிலும் ஹோமியோபதி மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. எனது ஆசான் இவைகளைத் தவிர்ப்பவர்களுக்கு மட்டுமே மருந்து தருவார். நானும் அவர் வழியையே பின்பற்றுகிறேன்.
.

யார்-எவர்? 

இந்திய நாட்டில் கொடி கட்டிப் பறந்த ஹோமியோபதி மருத்துவர்கள் அனைவருமே அல்லோபதி மருத்துவர்கள். அவர்களில் சரோஜினி தேவியின் மகன் ஜெயசூர்யா மேற்படிப்பிற்காக, ஜெர்மனி சென்றார். அங்கு ஹோமியோபதி பட்டம் பெற்று வந்தார். ஹைதராபாத்தில் அவர் மிகச் சிறப்பாகப் பணிபுரிந்தார். இன்று அவருடைய பெயரில் ஒரு மருத்துவக் கல்லூரியே இயங்குகிறது.
திருச்சி மைய மருத்துவமனையின் தலைவராக இருந்த உமாபதி முதலியார் ஹோமியோபதி மருத்துவம் பார்த்ததற்காக. பதவி நீக்கம் செய்யப்பட்டார். பின்னால் அவரை அழைத்துக் கௌரவித்தார்கள்.
மும்பையிலிருந்து செயல்பட்ட பாபுராவ் படேலை மக்கள் இன்னும் மறந்திருக்கமாட்டார்கள். இவர் சிறந்த இலக்கியவாதியும்கூட. ஹோமியோபதித் துறையில் பெரும் புகழும் செல்வமும் ஈட்டினார்.
திருவிடைமருதூர் ராமமூர்த்தி இந்தத் துறையில் சிறப்பாகப் பணியாற்றினார். மருந்துகள் தயாரித்ததுடன், பல மருத்துவர்களையும் உருவாக்கினார். கடினமான உழைப்பாளி, நல்ல நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார்.
.

கோள்நிலை

சூரிய, சந்திரர்களின் போக்கு மனிதர்களைப் பாதிக்கும் என்ற தத்துவத்தையும், இந்த மருத்துவமுறை ஏற்றுக் கொள்கிறது. உடலின் எந்தப் பகுதியில் கட்டிகள் தோன்றினாலும் அவற்றை நீக்க தேய்பிறையைத் தேர்ந்தெடுப்பார்கள். ஆயுர்வேதம், சித்த மருத்துவம் ஆகியவையும் இந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளன.
.
எங்கள் ஆசானைப் பற்றிக் குறிப்பிடாமல் இது முழுமை பெறாது. அவர் ஹைதராபாத் அரசாங்கத்தில் உயர் பதவி வகித்தவர். அந்த மன்னரிடம் பொற் பட்டயம் பெற்றவர். ஆழ்ந்த புலமையும், நினைவாற்ற்லும் மிக்கவர். மருத்துவப் புத்தகத்தின் பக்கம் வரி ஆகியவைகளைக்கூட அவர் நினைவில் பதிய வைத்திருந்தார். பெயர் திரு. சேஷாச்சாரி.
நோயாளியின் குறிப்பைத் தயாரித்து முடித்ததும் எதற்கும் ஐயர் என்ன சொல்லுகிறார் என்று பார்த்துவிடு என்று பரிவுரை செய்வார். மாயூரத்தைச் சேர்ந்த திரு. டி .சுப்ரமணிய ஐயர் மைய அரசின் கணக்காய்வுப் பிரிவின் உயர் பதவி வகித்தவர். புகழ் பெற்ற விஞ்ஞானி ஸர்.சி.வி.இராமன் இவரிடம் மருத்துவ உதவி வேண்டி வருவார். இவர் எழுதியது ஒரே நூல்தான். ஆனால் அது ஹோமியோபதி மருத்துவத்தின் சாரம் முழுவதையும் உள்ளடக்கியிருக்கிறது. இந்த நூலுக்குக் கர்னல் ரமணராவ் என்ற மருத்துவப் படைவீரர் முன்னுரை அளித்துக் புகழாரம் சூட்டியுள்ளார்.
.

சிறப்பு அதிகாரம்

இறுதியாகச் சில சொற்கள். நமது வள்ளுவம் எல்லாப் பொருளையும் தன்னுள் அடக்கியது. இதில் இல்லாத எப்பொருளும் இல்லை. நாயனார், மருந்து என்ற அதிகாரத்தில் பத்துக் குறட்பாக்கள் வரைந்துள்ளார். அடிப்படை ஆயுர்வேதம்தான் என்றாலும் இவற்றை எல்லா மருத்துவர்களும் படித்துக் கடைப்பிடித்து ஒழுகவேண்டும். இந்தப் பாக்களை நமது மருத்துவமனையின் சுவர்களில் எல்லாம் பெரிய எழுத்தில் வரைந்து வைக்க வேண்டும் இவற்றைப் படிகிகும்போது, ஒரு தமிழன் இப்படி எல்லாத் துறைகளிலும் ஒப்புயர்வற்றுப் பணிபுரிந்தானே என்று நாமெல்லாம் பெருமைப்படலாம்.
ஒரே ஒரு எடுத்துக்காட்டு
.
‘நோய் நாடி, அதன் முதல் நாடி, அது தணிக்கும்`
வாய் வாடி வாய்ப்பச் செயல்’
.
இதுதான் ஹோமியோபதி.அதனால் தான் மற்ற முறை மருத்துவர்களைப் போல் சகட்டுமேனிக்கு மருந்தை அளிக்காமல், நோயாளிகளை ஆராய்ந்து ஹோமியோபதி மருத்துவர்கள் பணிபுரிகிறார்கள். சரகர், ஸுஸ்ருதர், ஜீவகன் ஆகிய பெரியோர்களும் இந்தக் கருத்தைத்தான் வலியுறுத்துகிறார்கள்.
தற்போது இந்த அறிமுகம்போதுமே
ஒரு மருந்தை அதிக அளவில் உட்கொண்டு, அதன் விளைவால், மனித உடலில் என்ன மாறுதல் நிகழ்கிறது என்று ஆராய்வது ‘மெய்ப்பித்தல்’ ( PROVING) எனப்படும்.
இதை முதன் முதலில் சாதித்தவர் சாமுவேல் ஹானிமன் (1755-1803) இரு நூற்றுக்கும் அதிகமான பொருள்களைத் தாமே உட்கொண்டு, அதன் விளைவு குறித்து எழுதி வைத்தவர் இந்த மேதை. அந்த விளைவுகளை அதே மருந்தின் மிகக் குறைந்த அளவு போக்கிவிடும் என்ற தத்துவம் தான் ஹோமியோபதி.
.
‘எயிட்ஸ்’ என்பதே ஒரு மாயை. அப்படி ஒரு சுகவீனம் இருப்பதாகப் பறையறிவிப்பது மனித குலத்திற்குச் செய்யும் மிகப் பெரிய தீங்கு என்பதே ஹோமியோபதி நிபுணர்களின் முடிவு.
திருவண்ணாமலைக்கு அருகில் உள்ள ளத்யேந்தல் என்ற சிற்றூரில் டாக்டர் ஆண்டிரியாஸ் ஒவ்வொரு நாளும் 264 நோயாளிகளுக்கு மருந்தளிக்கிறார். அங்கு கூட்டம் அலை புரளுகிறது. அவர் ஜெர்மனியிலிருந்து இந்தியாவிற்கு வந்து தொண்டு புரியும் அருமனிதர். எயிட்ஸ் நோயாளிகள் எவராவது உங்களிடம் வந்தால் அவரை என்னிடம் அனுப்பி வைக்கலாம். அவர் சீராகி விடுவார் என்று அறைகூவல் விடுத்தேன். (காண்க ‘ஹெல்த்’ பிப்ரவரி 1996 இதழ்) அவரும் ஏற்றுக் கொண்டார்.
இப்போது வரத்தொடங்கியுள்ளார்கள்.
'
'
***
ஹோமியோபதி அற்புதங்கள்
புத்தகத்திலிருந்து
***********
மேஜர் தி.சா.இராஜூவின் அற்புதங்கள் தொடரும்............

ஹோமியோபதி அற்புதங்கள் மேஜர் தி.சா.இராஜூ



"ஹோமியோபதி என்றால் என்ன? "
இப்படி ஒரு கேள்வி கூடவே ஒரு ஏளனமான புன்சிரிப்பு. இப்படிக் கேட்பவர் கல்வி பெற்றவர் சமுதாய நடைமுறைகளை அறிந்தவர்.
'
எவரும் யுனானி, சித்த வைத்தியம், ஆயுர்வேதம், அலோபதி ஆகிய முறைகளைப் பற்றி இவ்வாறு கேட்பதில்லை. ஏனென்றால், அந்த முறையாளர்கள் சீறுவார்கள். ஊருக்கு இளைத்தவர் பிள்ளையார் கோயில் ஆண்டி என்று ஒரு பழமொழி உண்டு. இன்று ஏளனத்துக்கு இலக்காகிறவர் ஹோமியோபதி மருத்துவர் மட்டுமே.
'
"உங்களுடைய படி வருமானம் என்ன?"
ஹோமியோபதி மருத்துவர் தம்மிடம் சிகிச்சை பெற வந்துள்ளவரிடம் இவ்வாறு கேட்கிறார். இது நோய்க்கு தொடர்பில்லாத கேள்வி என்ற பொருளில் கேலி செய்றது கல்கியில் வெளிவந்தள்ள கட்டுரை.
'
நோயாளியின் பொருளாதார நிலை என்ன? அவருக்கு அந்தத் துறையில் சிக்கல்கள் உள்ளனவா? அதனால் அவரது மனநிலை பாதிக்கப்பட்டிருக்கிறதா? அதன் விளைவாக நோய் தோன்றி இருக்கிறதா என்று மருத்துவர் அறிய விரும்புகிறார். பொருளிழப்பினால் மனநிலை பாதிக்கப்பட்டு அதன் காரணமாக நோய் தோன்றக்கூடும். அதற்கு மருந்து ஹோமியோபதித் துறையில் உண்டு என்ற உண்மை மரமண்டைகளுக்குத் தெரியாதுதான். (நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?)
'
இதுவரை ஹோமியோபதி மருத்துவமுறை பற்றி ஐந்து புத்தகங்கள் எழுதிவிட்டேன். அவற்றில் சில மறுமுறையும் பதிக்கப்படுகின்றன. இவற்றை எழுதுவதற்காகத்தான் பல துறை மருத்துவ நூல்களையும் படிக்க வேண்டியிருக்கிறது. ஆனால இவ்வளவையும் படித்த பிறகு வள்ளுவரை ஒத்த ஒரு மருத்துவ மேதையை என்னால் காண முடியவில்லை. பொருட்பாலில் மருந்து என்ற அடிகளில் உள்ள பத்து குறட்பாக்களுள் அற்புதமான பொருட்பாடல்கள்.
'
நோய் நாடி அதன் முதல் நாடி - அது தணிக்கும்
வாய்நாடி வாய்ப்ப செயல்.
என்றொரு அமுதவாக்கு. 
'
உண்மையாய் தொழில் புரியும் ஹோமியோபதி மருத்துவர் ஒரு நாளைக்கு இருபது நோயாளிகளுக்கு அதிகமாகச் சிகிச்சை அளிக்க இயலாது. 
அதற்குக் காரணம் ஒவ்வொரு நோயாளியும் ஒரு தனி குணச்சித்திரம். ஒரே வீட்டில் மூன்று குழந்தைகள். அவற்றின் நோய்க்குறிகள் ஒரே வகையானவை. ஆனால் மூவருக்கும் வெவ்வேறு மருந்துகள் தர வேண்டியிருந்தது என்று எழுதுகிறார் மருத்துவமேதை நாஷ். சகட்டுமேனிக்கு மருந்து என்ற செய்தியே இந்த மருத்துவ முறையில் கிடையாது.
'
ஆர்னிகா மாண்டென்னா என்ற ஒர் அற்புதமான மருந்து மேதை ஹானிமனால் மெய்ப்பிக்கப்பட்டது. அது பல முறை நிவாரணி. அந்த மருந்து முடிவளர்வதற்கு உதவும் என்று அவர் எங்கேயும் குறிப்பிடவில்லை. அவர் மட்டுமன்று அவருக்குப் பின் வந்த நிபுணர்கள் எவரும் இவ்வாறு கூறவில்லை. ஆனால் நடைமுறை வாழ்வில் என்ன நிகழ்கிறது? பல மருத்துவ நிறுவனங்கள் ஆர்னிகேட்டட் கூந்தல் தைலத்தைக் குறித்து விளம்பரம் செய்கினிறன. விற்பனையும் செய்கிறார்கள்.
எனது இரண்டாவது நூலை குடந்தையிலுள்ள ஒரு மருத்துவ நிறுவனம் வெளியிட்டது. அதில் ஆர்னிகாவைப் பற்றி விளக்கும்போது எல்லாத் துறையிலும் நடக்கும் மோசடிகள் ஹோமியோபதியிலும் புகுந்துவிட்டன. அதற்கு இந்த ஆர்னிகா தைலம் எடுத்துக்காட்டு என்று எழுதியுள்ளேன்.
புத்தகம் வெளியான பிறகு நிறுவன மேலாளர் என்னைக் கேட்டார். ‘நாங்களே இந்த முறையில் விற்பனை செய்கிறோம்.. நீங்கள் இப்படி எழுதிவிட்டீர்களே..’
'
என்னுடைய மறுமொழி
‘நான் உண்மையைக் கூற என்றும் தயங்குவதில்லை’ ஆனால் உண்மை யாருக்கு வேண்டும்?
பல கனிமங்களைக் குறிப்பிட்ட அளவில் கலந்து மேதைகள் மெய்ப்பித்திருக்கிறார்கள். அவைகளைக் குறியினுக்கேற்பத் தருவது நேர்மையான மருத்துவம். 
ஆனால் இன்று நடப்பது என்ன?
ஒவ்வொரு வகை நோய்க்கும் ஒரு கூட்டு மருந்து. இது மெய்ப்பிக்கப்பட்டதா? சத்தியமாக ஆதாரம் இல்லை. 
அந்த நாளில் ஒரு திரைப்பட பாடல் உண்டு.
'
தலைவலிக்கொரு மாத்திரை தடுமனுக்கொரு மாத்திரை, சாப்பாட்டுக்கு முன்னாலே, சாப்பாட்டுக்கு பின்னாலே..
'
இது அலோபதி மருந்துகளை ஏளனம் செய்த புகழ்பெற்ற பாடல். அந்த நிலைக்குத் நாமும் தள்ளப்பட்டுவிட்டோமே? இது நியாயமா? தருமந்தானா?
'
என்னிடம் ஒர் இஸ்லாமிய அன்பர் வந்தார்.
‘என் மனைவிக்கு நெடுநாளாக இருமல், சளி, இழுப்பு அதற்கு மருந்து வேண்டும்’
'
நோயாளியை ஒரு முறை நேரில் பார்த்து விவரங்களைப் பதிவு செய்தபிறகே என்னால் உதவ முடியும் - எனது மறுமொழி.
'
மறுநாள் தமது மனைவியுடன் வருகிறார். அந்த மங்கையை உடல்நிலை குறித்துக் கேள்வி கேட்டேன். அவளால் பதில் சொல்லவே இயலவில்லை. துண்டு துண்டாக வார்த்தைகள். அதுவும் விளங்காத உளறல்.
'
‘இப்படி எவ்வளவு நாளாக இருக்கிறது?’
'
‘சிறுபிள்ளையிலிருந்தே.’
'
‘என்ன காரணம்?’
'
‘வாய் பேச முடியாத தோழி இவளுக்கு உண்டு. அவளுடன் பழகியதால் இந்த நிலை’.
'
என்னால் இதை ஏற்க முடியவில்லை. வாய் பேசாதவர்கள் என்று எவரும் கிடையாது. செவி கேளாததனால்தான் நாவு இயங்க்hமல் போனது. இவரை காது, மூக்கு, தொண்டை நிபுணரிடம் காட்டி மருந்து கொடுத்தோம். பலன் இல்லை. கணவர் தெரிவித்தார்.
'
ஹோமியோபதியில் சிறுவயதிலிருந்தே பேச்சில் குறைபாடுடன் உள்ளவர்களுக்கென்று ஒரு மருந்து உண்டு. அதை மூன்றாவது வீரியத்துடன் நான்கு பொட்டலங்கள் கொடுத்தேன். (மருந்தின் பெயரை மருத்து வாசகர்களின் அனுமானத்திற்கு விட்டு விடுகிறேன்).
'
ஒரு வாரம் பொறுத்து அந்த அன்பர் மீண்டும் வந்தார்.
'
‘அதிசயம் அய்யா’
'
‘சொல்லுங்கள்’
'
‘இது புனிதமான ரமலான் மாதம். எங்கள் ஊரில் விடியற்காலை மூன்று மணிக்கு தெருவில் நகாடா வாசித்து யாவரையும் துயில் எழுப்பும் வழக்கம் உண்டு. நீங்கள் மருந்து கொடுத்த இரண்டாம் நாள் என் மனைவி என்னை உறக்கத்திலிருந்து எழுப்பினாள். நகாடா அறைகிறதே கேட்கவில்லையா? தொழுகைக்கு தயார் ஆக வேண்டுமே. எனக்கு உடல் புல்லரித்துப் போயிற்று. இத்தனை ஆண்டுகளாக இதுநாள் வரையில் தம்பட்டம் ஒலித்துள்ளது. அதை அவள் செவியுற்றதேஇல்லை. இன்று தெளிவாகக் கேட்டிருக்கிறாள். மேலும் தற்போது குழறாமல் பல சொற்களை உச்சரிக்கிறாள், உங்களுக்கு எப்படி நன்றி செலுத்துவதென்றே புரியவில்லை?
'
‘எனக்கு நன்றி சொல்ல வேண்டாம். அது மேதை ஹானிமனுக்கு உரித்தாகும்’ அடக்கமாய்ப் பதிலிறுத்தேன்.
'
‘மூங்கையான் பேசலுற்றான்’ என்ற சொற்றொடரைக் கம்ப நாடன் உரைக்கின்றான். ‘மூகம் கரோதி வாசாலம்’ என்று தியான சுலோகம் பேசும். இத்தகைய பேரதிசயங்கள் ஹோமியோபதி மருத்துவத் துறையில் மட்டுமே நிகழக்கூடும். சுரப்பிகளே இயங்காத நிலையில் உள்ள மந்தமான சிறுவனுக்கு வியர்வைச் சுரப்பிகளை ஊக்கி வைத்து எல்லோரையும் வியக்கச் செய்தவர் மருத்துவ மேதை த.சா.ராசாமணி அவர்கள்.
இந்த வாய்ப்புகளை வெளியிடத்தான் எந்த நாளேட்டிலும் இடமில்லை. 
‘பூவிலே உயர்ந்த பூ? என்று கவிதை பாடத்தான் அவர்களுக்குத் தெரியும்.
'
இந்த நிலைக்கு நமது முந்தைய மருத்துவர்களையும்தான் குறை கூறுவேன். அவர்கள் ஆழ்ந்து படிப்பதில்லை. சிந்திப்பதில்லை, விவாதிப்பதும் இல்லை. தெளிவான, பயனுள்ள எண்ணங்களைப் பரப்ப நம்மிடையே நல்ல ஏடுகளும் இல்லை.
'
மிகினும், குறையினும் துயர் செய்யும் என்றும் 
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு 
என்று துணிவுடன் வரைந்த வள்ளுவப் பெருந்தகைக்கு நன்றி கூறுகிறேன்.
'
'
***
ஹோமியோபதி அற்புதங்கள் 
புத்தகத்திலிருந்து
***********
மேஜர் தி.சா.இராஜூவின் அற்புதங்கள் தொடரும்............

Friday, 17 February 2017

இவரை கண்டுபிடியுங்கள் 4 பழ.வெள்ளைச்சாமி



சில மாதங்களுக்கு முன் ஒரு பெண்மணி என்னுடைய மருத்துவமனைக்கு வந்தார்.  அவருக்கு வயது 26.  அவருக்கு சைனஸ் என்றும் பல வருடங்களாக இந்த நோய் இருப்பதாகவும் சொன்னார்.

""""சார்,  இந்த நோயினால் என் மகிழ்ச்சியே போய்விட்டது.  நீங்கள் தான் குணப்படுத்த          வேண்டும் "".

""""எவ்வளவு காலமாக இருக்கிறது?  என்ன வைத்தியம் பார்த்தீர்கள்? "".

ஏழு, எட்டு வருடங்களாக இருக்கிறது.  எல்லா மருத்துவமும் பார்த்துவிட்டோம்.   ஏன் ஹோமியோ மருத்துவம் கூட பார்த்து விட்டோம்.  அல்லோபதியில் ENT எல்லாம் பார்த்தோம்.  அவர் மூக்கு தண்டு வளைந்து விட்டதாகவும், அறுவை சிகிச்சை செய்தால் சரியாகி விடும் என்றும் கூறினார்.

""""தற்போது உங்களுக்கு என்ன செய்கிறது? "" .
காலையில் எழுந்ததும் தும்மல், மூக்கில் நீர் ஒழுகுதல், மூக்கடைப்பு, தலை பாரமாகிவிடுகிறது.  என்னால் காலையில் ஒரு வேலையும் செய்ய முடியவில்லை.  என்னுடைய மகிழ்ச்சியே போய்விட்டது.

""""இது எப்போது வந்திருக்கலாம் என்று நினைக்கிறீர்கள்? "" .
இது நான் +2 படிக்கும்போது வந்திருக்கலாம்.

""""+2 படிக்கும்போது என்ன நடந்தது? ""

""""+2 படிக்கும்போது எப்பப்பார்த்தாலும் படி, படி நல்ல மார்க் வாங்கணும்னு எங்க அப்பா என்னை டிவி கூட பார்க்க விடமாட்டார்.  யாரோடும் பேச விடமாட்டார்.  தூக்கம் கூட சரியாக இல்லை.  எந்த பொழுதுபோக்கும் இல்லாமல் எப்போது பார்த்தாலும் படிப்பு.  எனக்கும் கொஞ்சம் கூட பிடிக்கவில்லை "".

""""நல்லா படித்தால்தானே நல்ல மார்க் வாங்கி நல்ல கோர்ஸ் போகலாம்? "" .

 """"நல்லா படித்தேன் போங்க! அதுக்கு இப்படியா ஒரு Recreation,  ஓய்வு கூட இல்லாமல்? "" எனக்கு எப்பத்தான் +2 படிப்பு முடியுமோ என்று இருந்தேன்.  சார், எனக்கு அந்த டென்சனில்தான் சைனஸ் வந்திருக்கும் சார்.

"""" இப்ப என்ன செய்கிறீர்கள்? ""
இப்ப டீச்சர் வேலை பார்க்கிறேன்.

எவ்வளவு நாளா?
கடந்த ஒரு வருடமாக.

வேலை பிடித்திருக்கா?
சுத்தமா பிடிக்கவில்லை சார்.

நல்ல வேலைதானே.  நல்ல சம்பளம் தர்ராங்களே.

வேலை நல்ல வேலைதான்.  அதுக்கு காலையில் 5 மணிக்கு எழுந்து, சமைச்சு வீட்டுக்காரருக்கு சாப்பாடு கட்டி பிள்ளைக்குச் செய்ய வேண்டியதைச் செஞ்சு, 8 மணிக்குப் புறப்பட்டு டவுன் பஸ்ஸில் ஏறி 1 மணி நேரம் பயணம் செய்து வேலை பார்க்கிற ஊருக்குப் போயி, அங்கே சாயந்தரம் வரை பிள்ளைகளோடு கத்திவிட்டு, சாயங்காலம் வீடு வந்து சேர மணி 8 ஆகி விடுது சார்,  இது என்ன சார் வேலை, வேலை பார்த்தமா, வந்தமா, ஜாலியா இருந்தமா என்று இல்லாமல்,  ஒரு நாளைக்கு 12 மணி நேரத்திற்கு மேல் வேலை வேலை என்று வேலையே பார்த்துக்கிட்டு இருந்தால், அது என்ன சார் வாழ்க்கை.  எனக்கு கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை.

"""" வேலை பிடிக்கவில்லையா? ""
வேலை பிடிக்குது.  அதுக்காக எந்த மகிழ்ச்சியும் இல்லாமல் வேலைக்கும் போவதுதான் வாழ்க்கை என்று ஆகிவிடக்கூடாது சார்.  என் கணவரும் அப்படித்தான்.  அவர் பஞ்சாயத்து யூனியனில் கிளார்க் வேலை பார்க்கிறார்.  அவருக்கு என்னைவிட ஆபீஸ்தான் முக்கியம்.  காலையில் போறவர் இரவு 10.00 மணிக்குத்தான் வருவார்.  வந்தும் ஆபீஸ் நினைப்புதான்.  எதுக்கு சார் கல்யாணம் பண்ணனும்.  நான் எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறார் சார்.  எல்லோரும்போல 10 மணிக்கு ஆபீஸ் போனோம், வேலை பார்த்தோம், 6 மணிக்கு வீட்டுக்கு வந்தோம், வீட்டில் மனைவி மக்களோடு மகிழ்ச்சியாக இருந்தோம்னு இருக்க வேண்டாமா சார்? என்று அந்தப் பெண்மணி மனக் குமுறலை கொட்டிவிட்டார்கள்.

"""" வீட்டில் நீங்க எத்தனை பேர்? ""
நான், என் கணவர், குழந்தை, என் மாமனார், மாமியார், சின்ன வீடு சார்.  ஒரு பிரைவசி இல்லை.  அதனால் வேறு வீட்டுக்குப் போகலாம்னு இவருகிட்ட சொல்றேன்.  இவரு புரிஞ்சிக்க மாட்டேங்கிறார்.

அந்தப் பெண்மணி சொன்ன விசயத்திலிருந்து அவரைப் புரிந்து கொண்டேன்.
அவருக்கு குறிப்பிட்ட நேரம் வேலை பார்க்க வேண்டும்.  பின்பு வாழ்க்கையை மகிழ்ச்சியாகக் கழிக்க வேண்டும்.  ஓய்வு வேண்டும்,  கொஞ்சம் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்ற மனோபாவம் கொஞ்சம் உள்ளவர்.
இப்போது அவரை யார் என்று தீர்மானித்து விட்டேன்.  மேலும் அவரைப்பற்றி அறிய முயற்சித்தேன்.

அவர்மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக தன் பணியைச் செய்பவர்.
நாம் நம் பணியைச் செய்யாதபோது நாம் மகிழ்ச்சியாக இருக்க அனுமதிக்க மாட்டார்கள் என்ற எண்ணம் உள்ளவர்.
ஆகையால் அவர் அவருடைய பணியைச் செய்வார்.  அதுவும் மகிழ்ச்சியோடு செய்வார்.
அவர் ஒரேயடியாய 18 மணி நேரம் விடாமல் வேலை பார்க்க வேண்டும் என்ற எண்ணக் கூடியவரல்ல.  மகிழ்ச்சியாக இருக்க கொஞ்ச நேரம் ஒதுக்க வேண்டும் என்று எண்ணுபவர்.  வேலை காலையில் பார்க்க வேண்டும்.  மாலையில் சினிமா, டிராமா என்று சந்தோஷமாக பொழுதைக் கழிக்க வேண்டும் என்று எண்ணக் கூடியவர்.  இப்படி இருக்கும்வரை,  அவரைப் பொருத்தவரை  எந்தத் தொல்லையும் இருக்காது.  இதைத் தவிர்த்து எப்பப் பார்த்தாலும் வேலை, வேலை என்று இருந்தால், அவருக்குப் பிரச்சினை தொடங்கி விடும்.  அவருக்கு என்று நேரம் ஒதுக்காத போது வாழ்க்கையே நழுவிப் போன உணர்வு ஏற்படும்.
அவருடைய சாரம் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதுதான்.
அவருக்கு நல்ல வாழ்க்கை என்பது பூமியில் உள்ள நல்லவற்றை எல்லாம் அனுபவிக்க வேண்டும் என்பதுதான்.  கடமையைச் செய்ய வேண்டும் என்ற உணர்வு கொஞ்சம் அதற்குத் தடையாக இருந்தபோதும், வாழ்க்கையின் பெரும் பகுதி மகிழ்ச்சியாக இருக்கத்தான் என்று  நினைக்கக் கூடியவர்.

அவர் கடமையுணர்வோடு பணியாற்றக் கூடியவர்.  அவர் கடினமாக உழைக்கக் கூடியவர்.  அவருடைய வேலையை முறையாகச் செய்யக் கூடியவர்.  அதே சமயம் வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு இடம் வேண்டும் என்று எண்ணக் கூடியவர்.
அவர் தன்னைப் போன்று கடினமாக உழைப்பவர்களோடு மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வார்.  அவருக்கு உழைக்காமல் மகிழ்பவர்களைப் பிடிக்காது.  பணியைச் செய்யாமல் பலனை எதிர்பார்ப்பவர்களையும் பிடிக்காது.

அவரைப்போன்று சில அம்மாக்கள் தம் பிள்ளைகளிடம் வீட்டுப் பாடத்தை எழுதிவிட்டு விளையாடப்போ,  பணியைச் செய்துவிட்டு பலகாரத்தைத் தின்னு என்று கூறுவதைக் காணலாம்.

இப்போது அந்தத் துயரர் யார் என்று புரிந்திருக்குமே!

   சில வேலைகள் அந்த மருந்தை 1 எம் வீரியத்தில் கொடுத்த பின்பு, அவருடைய சைனஸ் பிரச்சினை தீர்ந்து விட்டது.  கடந்த 4 மாதங்களாக எந்தத் தொந்தரவும் இல்லாமல் இருக்கிறார்.

யார் அவர்.........................????

 Kali nitricum 



Concepts of kali nit

Kali
 Principles, duty
 Closed
 Optimism
 Work, task
 Family

Nitricum
 Enjoyment
 Needing space, expansion
 Going out
 Congestion, explosive
 Tension
 Relaxation

 Group analysis
 The theme we get from the group analysis is: do your duty in order to be able to enjoy yourself.
They have the feeling that you are not allowed to enjoy yourself until you have done your duty.
So they do their work and they work with pleasure.
But they aren't the sort of people who work 18 hours a day.
They have to keep some space for enjoyment, for an evening out, for a trip to the cinema etc.
Everything is fine as long as they can do their duty and keep some space for themselves at the same time.
 But the problems may start if their task becomes too much for them, or starts to take up too much of their time.
Then they will get the feeling that there isn't enough space for themselves, that life is slipping by.
 A variation on this theme is the feeling that they have to enjoy life.

This may be a sort of basic theme for them.

A good life to them means a life in which they have fully enjoyed the good things on this earth. Although they do restrain themselves and do fulfil their duties, the basic thought is that enjoyment plays a major part in life.                      
  jan scholten👆

இவரைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் 3 பழ.வெள்ளைச்சாமி



ஹோமியோபதியின் பரிமாணத்தில் 1796-இல் தொடங்கி இன்று வரை பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

நோய்க்கு மருந்து என்று தொடங்கி, இன்று மனிதனுடைய சாரம் என்ன என்பதை அறிந்து அதற்கொத்த சாரத்தை வெளிப்படுத்தும் மருந்தைத் தேர்வு செய்து மருந்து கொடுக்கப்பட வேண்டும் என்ற நிலைக்கு வளர்ந்து கொண்டிருக்கிறது.
ஒட்டு மொத்தக் குறிகளுக்கு அதை ஒத்த ஒட்டு மொத்தக் குறிகளை வெளிப்படுத்தும் மருந்து உரிய மருந்து என்பதிலிருந்து, ஒட்டு மொத்தக் குறிகளின் தொகுப்பு எவ்வாறான மனிதனைச் சித்தரிக்கின்றது?  அவ்வாறான  மனிதன் இவ்வாறான குறிகளின் தொகுப்பை வெளிப்படுத்த வேண்டுமென்றால், எவ்வாறான சூழலில் இருந்திருக்க வேண்டும் ? என்பதை யூகிக்க முடிகிறது.  இவ்வாறு குறிகளின் தொகுப்பிலிருந்து ஒவ்வொரு மருந்தையும் தனிநபர்களாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இரண்டு வருடத்திற்கு முன் என்னுடைய நண்பர் ஒருவர் மூல நோய்க்காக மருத்துவம் பார்க்க வந்தார்.   வந்தவர் வந்தவுடன், """"நான் இரண்டில் ஒன்று பார்க்க வேண்டும், நானா அல்லது அதுவா? நானும் பல வருடங்களாகப் போராடிக் கொண்டிருக்கிறேன்"" என்று தொடங்கினார்.

அவருக்கு இரத்த ஒழுக்கும், வலியும் உள்ள மூல நோய்.  ஆனால் அவர் நோயைப் பற்றிக் கூறாமல் ஒரு போர்க்களத்தைப் பற்றிக் கூறினார்.

""""வாழ்வா, சாவா? "" என்பது மாதிரி இருந்தது அவருடைய தொடக்கம்.  இவருடைய கூற்றிலிருந்து இவருக்கான மருந்தை யூகித்துக் கொண்டு இவரைத் தெரிந்து கொள்ள முயற்சித்தேன்.

இவரைத் தெரிந்து கொண்டு இவருக்கான மருந்தைக் கொடுத்த பின்பு இன்று வரை அவருக்கு வலியுடன், இரத்த ஒழுக்கோடு ஏற்பட்ட மூல நோய் வரவேயில்லை.  அதுமட்டுமல்ல அவருடைய நோய் எதிர்ப்பாற்றலே கூடிவிட்டது.
இவ்வாறு நான் அறிந்த மனிதரை நீங்களும் தெரிந்து கொள்ளலாமே?.

இவரைப் பற்றி ஒரு வார்த்தையில் கூறுவதென்றால் """"உறுதியானவர் "" என்று அழைக்கலாம்.  உறுதி என்பதன் பொருள் கெட்டியான, நிலையான நேர்த்தியான, தீர்மானகரமாக என்று கூறலாம்.  இவை அனைத்தும் பெற்றுள்ளவர்தான் இவர்.

அவர் சிறந்த முறையில் செயல்படவில்லை என்றால் அவர் அவருடைய இடத்தை இழக்க நேரிடும் என்ற பயம் இருந்து கொண்டேயிருக்கும்.  அவருடைய இடத்தில இருப்பதற்கு சட்டப்படியான (இயற்கையான) உரிமை இருந்தாலும்,  உண்மையிலேயே அந்த இடத்திற்கான தகுதியிருக்கிறதா என்ற எண்ணம் ஏற்படும்.

அவர் அவருடைய எல்லையைக் கடக்கக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார்.  அதேபோல் இவரும் மற்றவருடைய எல்லையைக் கடக்க நினைக்க மாட்டார்.  தாம் ஒரு போதும் மற்றவர்களின் பிரச்னையில் தலையிடக்கூடாது என்பதில் சரியாக இருப்பார்.  மற்றவர்களும் இவருடைய பிரச்னையில் தலையிடுவதை விரும்புவதில்லை.  அதனாலேயே அவரிடம் உறுதியோடு இருப்பது, தீர்க்கமாகச் செயல்படுதல் போன்ற சிறப்பான குணங்களைக் காணலாம்.  இவருடைய கடுமையையும், பலத்தையும் கணக்கில் கொண்டுதான் கீழ்காணும் வாய்மொழிகள் பழக்கத்தில் உள்ளன போலும்.

   எவ்வகையான கடுமையான பணியாக இருந்தாலும், முடித்துவிடும் ஆற்றலுள்ளவர்.  கடும் உழைப்பு என்பது கூட ஒரு வகையில் ஒரு நிர்ப்பந்தத்தின் விளைவுதான்.  ஏனெனில், இவரால் எந்தவித மறுதலிப்பையும், குறுக்கீடுகளையும் தாங்க முடியாது.

இவர், இவருடைய சொந்த விருப்பத்திற்கு மாறாகச் செயல்பட அவர்தம் பெற்றோர்களால் நிர்ப்பந்திக்கப்படுபவர்.
இதற்கு எதிராகப் போராடிக் கொண்டிருப்பவர்,  ஆனால் அதே சமயம் பெற்றோரை எதிர்க்கிறோம் என்ற மன உறுத்தலுக்கு ஆளாவார்.

பெற்றோர்கள் """"உனக்கு ஒன்றும் தெரியாது.  எதையும் தவறாகச் செய்வாய், உனக்கு எது சரியானது என்று நாங்கள் தீர்மானிக்கிறோம்"" என்று கூறுவார்கள்.
ஆனால் இவரோ, """"எனக்குத் தெரியும் எது சரியானது என்று.   நீங்கள் யார் எனக்கு சொல்வதற்கு? "" என்று கேள்விகளை எழுப்புவார்.   இவ்வாறான போராட்டத்திலிருப்பார்.  இவர் தாம் எப்போதும் சரியாகச் செய்வதாக நினைப்பார்.  இவருடைய பெற்றோர்கள் இவருடைய எல்லைக்குள் ஊடுருவுவதாக எண்ணுவார்.    இதற்கு எதிராக தற்காப்பு செய்தல் என்பதுதான் இவருடைய பிரதான செயல்பாடு.     இவர் தற்காப்பு அரணாக செயல்படுவார்.  இவரையும், இவரது குடும்பதையும், பாதுகாப்பது, எல்லைக்கதவாக, வேலியாக, தலைக்கவசமாக, யுத்தக் கருவியாக, கேடயமாக தற்காப்பு செய்வது   தான் இவரது முக்கியமான பணி.  இவர் எப்போதும் போர்க்களத்தில் இருப்பது போன்றேயிருப்பார்.  இவர் பொதுவாக

""""இரண்டிலொன்று விட்டேனா பார் / நானா /  நீயா /  போராடிக் கொண்டிருக்கிறேன்"" போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைப் பார்க்கலாம்.

இவரை யாரும் விமர்சனம் செய்வதை அல்லது இவரது கருத்தை மறுத்துப் பேசுவதை இவரால் தாங்கிக் கொள்ள முடியாது.  விமர்சனம் செய்பவரை எதிரியாக நினைப்பவர்.  இவருக்கு எதிரான விமர்சனத்தை சரியான குத்து வாங்கியதாக எடுத்துக் கொள்வார்.

இவரைப் பற்றி ஒரு வரியில் சொல்வதென்றால் இவர் தாமாகவே தேர்ந்தெடுத்த எந்த விசயத்திலும் உறுதியாக நிற்பார்.


இப்போது இவர் யார் என்று அறிந்து கொண்டீர்களா?

  பெர்ரம் மெட்டாலிகம்(FERRUM METTALICUM)
 
  எடுத்துக்கொண்ட பணியில் உறுதியாக விடாமுயற்சியுடன் கடுமையாக உழைக்கக்கூடியவர்.
  இவர்கள் அவர்கள் எடுத்துக்கொண்ட பணியில் உறுதியாக இருப்பவர்,கடுமையாக உழைக்க வேண்டும் என்று விரும்புபவர்கள். எடுத்துக்கொண்ட பணியை விட்டுவிடாமல் இவர்கள் தைரியத்தோடும் உறுதியோடும் நேர்மையாகவும் கட்டுறுதியோடு செய்பவர்கள்.

  எந்த வேலை என்று பேதமில்லாமல், கஷ்டமான பணிகளைக்கூட செய்ய நினைப்பவர்கள். ஒரு காரியத்தை செய்ய வேண்டுமென்று நினைத்துவிட்டால் அதனோடு தன்னைப் பிணைத்துக்கொண்டு விட்டுவிடாமல் திட்டமிட்டபடி செய்யக்கூடியவர்கள். எடுத்தமுடிவில் தீர்மானகரமாகவும் எந்தவிதத் தயக்கமுமில்லாமல் இருப்பார்கள். அவர்கள் சக்தி வாய்ந்தவர்களாக இருந்த போதிலும் தங்களுடைய சக்தியை அந்த வேலையை முறையாக முடிக்க வேண்டும் என்ற உறுதியில் தீர்மானகரமாக இருப்பதில் காட்டுவார்கள். இந்த உறுதியான நிலையை இவ்வாறான முறையில் சொல்வதைக்காணலாம். அதாவது, ‘இரும்பு மனிதன், இரும்பு ஒழுக்கம், இரும்புப்பெண்மனி(iron lady mrs thatcher)

  இவர்கள் உழைப்பினால் உருவாக்கப்பட்ட பொருட்கள் நீண்டகாலத்துக்கு இருக்கவேண்டுமென்று விரும்புவார்கள். அந்தப்பொருட்களில் அடிபட்டால் தாங்க்க்கூடியவையாக இருக்கும் அவர்கள் தாங்க்க்கூடியவர்களாக இருப்பது போல.அவர்கள் தயாரிக்கும் பொருட்கள் நாட்பட்டு உழைக்கக்கூடியதாகவும் மற்றும் பயன் உள்ளதாகவும் இருக்கவேண்டும் என விரும்புவார்கள்.
அவர்களுடைய பணி எப்போதும் கடினமானதாக இருக்கும். அது எப்போதுமே அவர்களுடைய முழு சக்தியையும் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும்.அவர்கள் வேலை உடல் உழைப்பைப் பயன்படுத்தக்கூடிய தொழிலாக இருக்கும்.அவர்கள் கொல்லர்களாகவோ, தொழிலாளியாகவோ இருப்பார்கள். மூளை உழைப்பாக இருந்தால் அதிகப்படியான வேலையாக இருக்கும். அவர்கள் பட்டாளத்தில் சிப்பாய் தொழிலைச் செய்பவர்களாக இருப்பார்கள். அவர்களுடைய வேலையைச் சிறப்பாகச் செய்வதற்கு அந்த வேலையை முறையான வழியில் செய்வார்கள். அவர்கள் பணி பிரமாண்டமானதாக இருப்பதால் அதை செய்து முடிப்பதற்கு ஒரேவழி மிகவும் ஒழுங்கு அவசியம் என்பதை உணர்வார்கள்.
அவர்கள் சிறந்த ஒருங்கிணைப்பாளர்கள் ஆதலால் எந்த குழப்பமும் ஒழுங்கற்ற தன்மையும் அமைப்பில் இருப்பதை வெறுப்பார்கள்.

  அவர்கள் எப்போதும் தங்களைப்பற்றி வரும் விமர்சன்ங்களைத் தாங்கிக்கொள்ள மாட்டார்கள். அதை இவர்கள் நேரடியான எதிர்ப்பாக கருதுவார்கள். அதனால்அது அவர்களை கோப்ப்படுத்தும். அவர்கள் பணியை எடுத்து முடிப்பதிலேயே கவனமாக இருப்பதால் இதுபோன்றவை வேலையில் கவனம் செலுத்தாமல் திசைதிருப்புவதை விரும்பமாட்டார்கள். அவர்கள் வழியில் குறுக்கீடோ கட்டுப்பாடோ வருவது அவர்களை எரிச்சல் அடையச்செய்யும். அவர்கள் வழியில் மக்களோ அல்லது பொருட்களோ சப்தம் செய்வதையோ அல்லது குழப்பம் ஏற்படுத்துவதையோ விரும்பமாட்டார்கள். அதாவது சின்ன பேப்பர் கசங்கும் சப்தம்கூட பிடிக்காது.

  சின்ன விமர்சனம் கூட இவர்களுக்கு பெரிய அடி விழுந்தது போலத் தெரியும். ஆனால் அவர்களுக்கு உடம்பில் அடிவிழுவதையோ அல்லது விபத்து ஏற்படுவதையோ கண்டு பயம். அவர்களுக்கு சின்ன வயதில் அப்பா ஒழுங்குக்கட்டுப்பாட்டுக்காக போட்டு அடித்ததை மறக்க மாட்டார்கள். அவர்களை யாராவது விமர்சிக்கவேண்டும் என்று நினைத்தால் அவர்கள் முழுப்பல்த்தையும் பயன்படுத்தித் தாக்கிவிடுவார்கள். எதிரிகள் இவர்களுடைய அடியிலிருந்து தாங்களை காத்துக்கொள்ள முடியுமென்ற நம்பிக்கையை இழந்துவிடுவார்கள்.

  இவர்கள் பரீட்சைக்காக கடினமாக உழைக்க வேண்டுமென்று எண்ணுவார்கள். ஆகையால் இவர்களிடம் எப்போதும் பரீட்சைக்குப் போகும் முன் கடினமாக உழைக்கவேண்டும் என்ற உணர்வு இருந்துகொண்டே இருக்கும். அவர்கள் பாஸ் பண்ணுவதற்கு உச்சகட்டமாக உழைப்பார்கள்.அதை எளிய பணியாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள்.

  பணியில் சிறப்பானதை வெளிப்படுத்தாவிட்டால் அவர்கள் இடத்தை இழந்து ஒதுக்கித் தள்ளப்படுவோம் என்று உணர்வில் இருப்பார்கள். இவர்களுக்கு தற்போதுள்ள இடமானது கஷ்டப்பட்டு உழைத்ததால் வந்ததாக நினைப்பார்கள். அதுதானே வந்ததாக கருதமாட்டார்கள். அவர்கள் எப்போதும் அவர்களுடைய எல்லையை மக்கள் மதிக்க வேண்டுமென்று நினைப்பார்கள். இல்லாவிட்டால் அது அவர்களை கோபம் அடையச்செய்யும்.

 இவர்கள் தங்கள் பணியில் கொஞ்சம் கடுமையாக நடந்துகொள்வதால் பலவிதமான பிரச்சனைகளை எதிர்கொள்ளவேண்டியது இருக்கும்.
இவர்கள் சக்திக்கு மீறிய பணியை எடுத்துப்போட்டுக் கொண்டு செய்வதால் அவர்களுக்கு நரம்பு சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படும்.
மற்றொரு வகையில் இவர்களுடைய சகத்தொழிலாளர்கள் இவர்களுக்கு எதிராக திரும்புவார்கள்.
ஏனெனில் அவர்கள் இவர்களை கடும்பணிச்சுமைக்கு ஆளாக்குவார்கள், கடும் ஒழுங்குக்கட்டுப்பாட்டை ஏற்படுத்துவார்கள்.
 இவர்கள் திட்டத்துக்கு எது தகுதியில்லையோ அதை ஒதுக்கித் தள்ளுவார்கள். இவர்கள்  மிகவும் அத்தியாவசியமானதைக்கூட ஒதுக்கிவிடுவதால் ஒருநாள் ஒட்டுமொத்தப் பணியும் நின்றுபோய்விடும்.கடைசியில் ஒட்டுமொத்தப்பணியையும் விட்டுவிடவேண்டியது இருக்கும்.
முடிவில் அவர்கள் தோல்வியடைந்துவிட்டதாக உணருவார்கள்.  

 Group analysis

 Persevering in your job: firm.
 Persistent in your task: thoroughness.
 Durable products.
 A heavy task.
 Enforcing routines: discipline.
 Meeting opposition in your work.
 Opposition through control.
 Maintaining your position to avoid failure.
 Criticism means opposition.
 Force as a profession: soldier.
 Persevering for the exam.
 Heavy control.
 Failure through using too much force.

Essence of Ferrum Metallicum

persevering in your job: firm.

@JAN SCHOLTEN

ஹோமியோபதி
HOMOEOPATHY

Tuesday, 14 February 2017

இவரைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் 2 @Pl Vellaichamy

இவரைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் 2


சில மாதங்களுக்கு முன் என்னிடம் ஒரு கல்லூரிப் பேராசிரியர் மருத்துவம் பார்க்க வந்தார்.  அவருக்கு வலதுகால் முன் பாதத்தில் புற்று போன்ற கடினமான தசை வளர்ச்சி வலியுடன் இருந்தது.  அதற்கு அவர் பல மருத்துவர்களிடம் காண்பித்துவிட்டு என்னிடம் வந்தார்.

நான் அவரிடம் புறவயக் குறிகளை விசாரித்து விட்டு அவருடைய மனநிலை பற்றி அறிய முற்பட்டேன்.

""""தங்களுக்கு ஏதாவது கவலை இருக்கிறதா?""

  """"இல்லை"" என்று கவலையோடு சொன்னார்.

""""சார், ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்.  மனிதனுடைய மனநிலையில் ஏற்படும் பிரச்சனைகள் காலப்போக்கில் பல உடல் நோய்களுக்குக் காரணமாகி விடும்.  இது உண்மை.  எனவே, தங்களுடைய கவலை, பயம், ஏமாற்றம் மற்றும் அனைத்துப் பிரச்சனைகளையும் மெதுவாகக் கூறுங்கள்.  நான் இவற்றை எல்லாம் தெரிந்து கொண்டு எதுவும் தங்களைப் பற்றி கதை எழுதப் போவதில்லை.  எல்லாம் உங்கள் நன்மைக்குத்தான்.  உங்களுக்கு உரிய சரியான ஹோமியோபதி மருந்தைத் தேர்வு செய்யத்தான்"" என்று விவரமாகக் கூறிய பின்

""""இப்பச் சொல்லுங்க உங்களைப் பற்றி"" என்றேன்.
    """"ஆமா சார், பிரச்னைதான்""
     """"என்ன?""
      என்னை நிம்மதியாக வாழவிடமாட்டேங்கிறார் என் அப்பா.  கல்யாணமானதிலிருந்து என் மனைவி வீட்டாரிடம் வரதட்சணை, அந்தப் பணம், இந்தப் பணம் என்று கேட்டுக் கொண்டே இருப்பார்.  கடிதம் போடுவார், தந்தி அடிப்பார்.  அவருடைய தொல்லை தாங்க முடியவில்லை.
நீங்க ஏன் மறுக்கக் கூடாது?  முடியாது என்று சொல்ல வேண்டியது தானே?
""""அது என்னால் முடியாது"" என்று கூறினார்.
""""ஏன்?""
சிறு வயதிலிருந்தே என் அப்பா என்னை அடக்கி, ஒடுக்கி வைத்திருப்பார்.  நான் எந்த முடிவும் எடுக்க முடியாது.  ஏதாவது சொன்னால் என்னைக் கொன்றேவிடுவார்.  நான் எதிர்த்துப் பேச முடியாது.  கொடுமைப்படுத்துவார் என்று கூறினார்.
""""அப்படி என்றால் தங்கள் அப்பா மீது கோபம் உள்ளதா?""
    """"கோபமா? கடுங்கோபம் உண்டு""
""""கோபத்தைக் காட்ட வேண்டியதுதானே?""
""""கோபத்iதை மட்டுமில்லை.  நான் எந்த உணச்சியையும் காட்ட முடியாது.  நான் அவரை எதிர்த்து எதுவும் சொல்ல இயலாது.  மனதில் போட்டு அனைத்தையும் அடக்கி வைத்துக் கொண்டு இன்று வரை வாழ்கிறன்"" என்றார்.
""""தங்களுக்கு வேறு என்ன பிடிக்கும்? ""
""""எனக்கு இனிய சோகமான பாட்டுக்கள் கேட்டால் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும்""

நான் இப்போது அவர் யாராக இருக்கிறார் என்று அனுமானித்துக் கொண்டேன்.
நான் அனுமானித்தது சரிதானா என்று மேலும் பல விபரங்களை அறிந்து கொண்டேன்.  நான் அறிந்தவரை நீங்களும் தெரிந்து கொள்ளுங்களேன்.

அவருடைய சிறந்த பண்பு என்பது பிறருக்கு உதவிகரமாக இருப்பதுதான்.  இவர் பிறருக்கு உதவி செய்ய விரும்புவார்.  உதவுவது மூலம் பிறரை மகிழ்விக்க விரும்புவார்.  இவர் மற்றவர்களுடன் எளிதாக இணக்கமாகி விடுவார்.   இவர் பிறருக்கு உதவி செய்ய விரும்புவார் என்று சொல்வதை விட பிறருக்கு உதவுவது என்பது இவருக்குத் தேவையாகி விடுகிறது.  ஏனெனில் அவர் அவ்வாறு செய்யவில்லையெனில் அமைதியற்றுப் போவார்.

இவர் கூருணர்வு மிக்கவர்.  இசையிலும், கலையிலும் மிகுந்த நாட்டம் மிக்கவர்.  இவர் கேட்கும் இசைக்குத் தக்கவாறு இவருடைய துயர் மிகுவதும், குறைவதும் ஏற்படும்.  சோகமான இசையைக் கேட்கும் போது இவருடைய துயர் தணிந்து ஆறுதலாகக் காணப்படுவார்.  இவர் படுத்துக் கொண்டு சோகமான இசையைக் கேட்பதால் இவருடைய துயர் தணிவதை உணர்வார்.

இவர் பிறருக்கு உதவிகரமாக இருக்கும் அதே வேளையில் தாம் செய்யும் பணியை பிறர் அங்கீகரிக்க வேண்டும் என்றும் எதிர்பார்ப்பார்.  அதற்காக இவரைப் பாராட்ட வேண்டும் என்றும் எண்ணுவார்.  பிறருக்காக ஓடி, ஆடி ஓய்வின்றி உழைப்பார்.  இதற்காக அவர் மற்றவர்களிடம் எதிர்பார்ப்பது """"இவர் நன்கு செய்தார்"" என்று சொல்ல வேண்டும் என்பதுதான்.  இவரை யாரும் குறை சொன்னால் தாங்கிக் கொள்ள முடியாது.  கடுங்கோபம் கொள்வார்.  ஆனால், அதை வெளியே காட்ட மாட்டார்.  அவர் மீது வெறுப்பு ஏற்படும்.  வெறுப்பு தோன்றினாலும் அவருடன் விரைவில் இணக்கமாகிவிட வேண்டும் என்று நினைப்பார்.

இவர் விமர்சனம் செய்வதை வரவேற்பார்.  ஆனால் அது ஆக்கத்துக்கு வழிவகுக்க வேண்டுமேயொழிய அழிவுக்கு அல்ல.  """"பலவீனப்படுத்தவதாக இருக்கக் கூடாது"" என்று கூறுவார்.  இவரும் விமர்சனம் செய்வார்.  ஆனால் அது ஆக்கப்பூர்வமானதாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார்.

இவருக்கு, இவருடைய தகுதி என்ன? திறமை என்ன? என்பது பற்றி தெரியும்.  ஒன்றை தயக்கத்தோடு தொடங்குவார்.  தன்னுடைய அறிவையும், ஆற்றலையும் வளர்த்துக் கொள்ள விரும்புவார்.  அதற்காக அதிகமான பயிற்சிகள் பெற வேண்டும் என்று எண்ணுவார்.  தனக்கு ஒரு குரு (அல்லது) ஆசிரியர் வேண்டும்.   அப்போதுதான் இவர் செய்வது தவறா? சரியா? என்று சொல்வார்கள்.  யாராவது இவர் செய்வது சரிதான் என்று கூறவதை விரும்புவார்.  இவ்வாறு சொல்வது, ஏதோ இவர் புதிதாகக் கற்றுக் கொள்வது போல் திருப்தி அளிக்கும்.

இவர் மேலாதிக்கம் செய்யும் பெற்றோரின் குழந்தை.  இவரை இவர் பெற்றோர்கள் அடக்கி ஒடுக்கி வைத்திருப்பார்கள்.  இவருக்கு எதுவும் தெரியாது.  எதற்கும் லாயக்கற்றவன் என்று திட்டுவார்கள்.  இவ்வாறு அடக்கப்பட்டு வாழ்வதால் தான் யார்? என்று கூட உணர முடியாதவராய், துணிச்சல் அற்றவராய் இருப்பார்.  தன்னை அவமாமனப்படுத்துபவர்களை, அடக்குபவர்களை பழிவாங்க நினைப்பார்.  ஆனால், அதற்கான பலமில்லாதவராய்  இருப்பதாக நினைத்து அவர்கள் மீது உள்ள கோபத்தை, கசப்பு உணர்வை அடக்கி வைத்துக் கொள்வார்.

கோபத்iதை எப்போதும் காட்ட மாட்டார்.  இவர், மேலாண்மை செய்கின்ற பெற்றோhன் பிள்ளையாக இருப்பதால், கூச்சமிக்கவராகவும், கவலை, பயம், நடுக்கமுள்ளவராகவும் இருப்பார்.  தன் மீதும், தன் நிலை மீதும் திருப்தியற்று இருப்பார்.

அவர் சோகத்தோடு யாருடனும் பேசாமல் தன் நிலையை நினைத்துப் புலம்பிக் கொண்டே இருப்பார்.  தாம் புண்படுத்தப்பட்டதாகவும், ஒடுக்கப்பட்டதாகவும் நினைத்தாலும், பதில் நடவடிக்கை எதுவும் எடுக்காமல், உணர்வுகளை உள்ளடக்கி மௌனமாக இருப்பார்.  இவருடைய முகம் எப்போதும் ஆழ்ந்த சிந்தனையோடும், கசப்பு உணர்வோடும் இருப்பதை வெளிப்படுத்தும்.  இது சிலருடைய உள்ளமுக்கப்பட்ட உணர்வுகளின் வெளிப்பாடு என்பது தெரிய வருகிறது.

நான் அவரை அறிந்து கொண்டு அவருக்கான    மருந்தை  10m வீரியத்தில் இரண்டு வேளைக்கு கொடுத்த பின்பு அவர் நோயிலிருந்து விடுபட்டது மட்டுமின்றி அவர் மனநிலையிலும் மாற்றம் ஏற்பட்டது.

யார் அவர்????

.................????!!!!!⏯
மங்கானம்
   manganum 

 Essence: Sensitive people who do their best for others and hope to get appreciated for their efforts. 

 Mind: The first characteristic trait is that Manganum people tend to want to please everybody; they are always busy taking care of others. 
They are also very sensitive and artistic. 
Their moods can change depending on the kind of music they are listening to. 
They are highly sensitive to the needs of those around them, to decide what they can do to help (DD Carc). 
As a child they tend to take responsibility at an early age. Their sensitivity may come out as clairvoyance. 
 They tend to be busy and restless (DD Zinc). This may be expressed in trembling or restlessly walking up and down. 
 However, they want to be appreciated for all the things they do for others.
 If somebody happens to hurt them or insult them they get very angry (DD Staph, Coloc). 
But they will keep dreaming of a reconciliation. 
They may get a constant frown on their face or a bitter expression, as a sign of what is going on inside them.
 Then they will withdraw and avoid company.
 This shows that they are easily hurt and tend to sulk. 
 When they feel gloomy and bad tempered the only thing that helps is lying down and resting. 

 Vrijlandt (1990, page 185) gives us a typical example of a Manganum woman who has organised a party and who is only content when she hears the next day that her guests thought it a great success. 
Here again we find the theme of doing your best and wanting to be complimented on it. 

 At a later stage they develop difficulty in thinking. Also fears that something will happen, haunting fears about trivial matters. 

@jan scholten                        

 Manganum situation

The Manganum situation is that of a shy child of dominating parents.
 The child has a lack of confidence as a result of this domination, and becomes anxious, nervous, tense, jittery and frightened.
 He develops a feeling of bitterness towards his parents and is discontent with himself and with his situation.
 He becomes sad, reserved, taciturn, brooding. Towards his parents he feels hatred, wants to take revenge, but he cannot. 

This situation is not an extreme one, as in Aurum or Mercurius but a situation that is tolerable and so you do not find here the themes of suicide or revolution, but rather a suppression - he becomes reserved and all his feelings are pent up.
 He feels offended, feels harassed and has to defend himself. 
He has to be strong enough to put up with things.

 So we find that the main theme of Manganum is suppression. 

@Rajan Sankaran                        

Concepts of manganum 

peridic table
 Stage 7 :
 Fine tuning 
 Training Practice 
 Doubts 
 Learning Teaching 
 Feedback 
 Compliments 
 Cooperation 
 Helping 

 Ferrum series :
 Task Work Duty 
 Craft Use 
 Ability Perfection 
 Routine Order Rules 
 Control Exam 
 Observed Criticised 
 Failure Guilt Crime 
 Pursued 
 Adult 
 Village 

 Group analysis 

 Fine tuning your abilities. 
 Feedback on your abilities. 
 Taught by professionals: help. 
 Likes compliments to know they haven't done it wrong. 
 Help in checking things over. 
 Practising for the exam. 
 Criticism gives a feeling of failure. 
 Feeling pursued by criticism. 

 Essence of Manganum  

  training for the task. 

@jan scholten

# ஹோமியோபதி
HOMOEOPATHY

Monday, 13 February 2017

ஹோமியோபதி - ஒரு புதிய பார்வை பழ.வெள்ளைச்சாமி

ஹோமியோபதி - ஒரு புதிய பார்வை

PAZHA.VELLAICHAMY

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த டாக்டர் ஜான்ஸ்கால்ட்டன் ஹோமியோபதிக்குச் செய்து வரும் பணி மிகச் சிறப்பானது.
அவர் தாம் எழுதிய இரண்டு  புத்தகங்களிலும்  (1 .HOMOEOPATHY AND MINERALS. 2.HOMOEOPATHY AND ELEMENTS).  தனிமங்களின் அணு எண்படியான பட்டியலை அடிப்படையாகக் கொண்டு, மனிதனுடைய பல்வேறு நிலைகளை, கருவுற்றதிலிருந்து அவன் அந்திமக் காலம் வரை விவரித்துள்ளார்.  ஒவ்வொரு நிலையும் தனியானது போல் தோன்றினாலும் அது தனியானது அல்ல.  அது அடுத்து வரும் நிலையால் மறுக்கப்பட்டு அது அறாத் தொடர்ச்சியாக ஏழு நிலைகளை மனித வாழ்வு எய்துவதைச் சிறப்பாகக் கூறியுள்ளார்.
.
.
தனிமங்களுக்கும், மனித வாழ்வுக்கும் உள்ள உறவை அவர் தனிமங்களின் அணு எண். அடிப்படையில் ஆய்வு செய்து கூறியிருப்பது மிகவும் சிறப்பாக உள்ளது.  அதன் சிறப்பை மேலும் அறிந்து கொள்ள இன்னும் ஆழமாக தனிமங்களின் வேதியியலைப் படிக்க வேண்டிய அவசியத்தை அவர் வலியுறுத்தாமல் வலியுறுத்துகிறார்.
.
     இவ்விரு புத்தக்கங்களையும் எழுதுவதற்கு தனிமங்களைப் பற்றியும், மனித வாழ்வைப் பற்றியும் மிகவும் ஆழமாகப் பரிசீலித்துள்ளார்.  ஆனால், அந்த ஆய்வு போதியளவு விளக்கப்படவில்லை.  அதனால், அவர் ஆய்வு முறை பலருக்குக் குழப்பத்தையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  இருப்பினும், இவ்விரு புத்தகங்களின் பயன் மிகச் சிறப்பாக உள்ளது.
ஹோமியோபதியில் நோய்க்கு மருந்தல்ல.  மனிதனுக்குத்தான் மருந்து என்று கூறுகிறோம்.  அதனால், ஒவ்வொரு மனிதனிடத்திலும் குணப்படுத்த வேண்டியது எது என்பதையும், அதே போல், ஒவ்வொரு மருந்திலும் குணப்படுத்துவது எது என்பதையும் அறிய விழைகிறோம்.
மேற்கூறியபடிதான் டாக்டர் ஹானிமன் முதல் இன்று வரை  தூய  ஹோமியோபதியைச் செய்பவர்கள்    செய்து வருகிறார்கள்.  அவர்கள் அனைவரும் ஒவ்வொரு மருந்தையும் ஒரு செயற்கை நோயாளராகப் பார்த்தார்கள்.  ஒவ்வொன்றின் தனித்துவத்தின் அடிப்படையில் அவைகள் வேறுபடுத்தி பார்க்கப்பட்டன.
.
ஆனால், ஸ்கால்ட்டன் அவர்கள் யாரும் இதுகாறும் பார்க்காத புதிய கோணத்தில் மருந்துகளைப் பார்க்கிறார்.  ஒவ்வொரு மருந்தையும் ஒவ்வொரு மனிதனாகப் பார்க்கிறார்.  ஒவ்வொரு மனிதனும் தனித் தன்மையானவன்தான் என்றாலும், அந்தத் தனித் தன்மை கூட திடீரென்று தோன்றிது இல்லை.  அது மனித உறவுகளைச் சார்ந்தது என்பதையும் மனித உறவுகளில் ஏற்பட்ட முரண்பாடுகளின் விளை பொருள்கள்தான் என்பதையும் மிகவும் சரியாக உள்வாங்கி எழுதியுள்ளார்.
அவர், அதனால் ஒவ்வொரு மனிதனையும் தனி மனிதனாக மட்டும் பார்க்காமல் குடும்பம், சமூகம் சார்ந்தவனாகப் பார்க்கிறார்.  எந்த ஒரு மனிதனும் தனியாக வாழ முடியாது என்பதையும், அவனுடைய வாழ்நிலை அவனால் மட்டும் தீர்மானிக்கப்படவில்லை என்பதையும், அது சமூக உறவுகளில் தீர்மானிக்கப்படுகிறது என்பதையும் மிகச் சரியாகப் பரிசீலித்து இருக்கிறார்.
.
ஒரு மனிதனுடைய மனமானது ஒவ்வொரு மனிதனுக்கும் திடீரென்று வந்ததாகவோ அல்லது பிரபஞ்ச மனத்திலிருந்து வந்ததாகவோ கருதப்படுவதைப் புறக்கணிக்கும் வண்ணம், ஒவ்வொருவருடைய மனமும் அவனுக்குள் உள்ள அக முரண்பாடுகளின் விளைவாகவும், அவனுக்கும், பொருளியல், அரசியல்  சார்ந்து குடும்ப, சமூக உறவுகளுக்குள் ஏற்பட்ட முரண்பாடுகளின் விளைவாகவும் தோன்றியது தான்  என்பதை மிகச் சரியாகப் புரிந்துள்ளார்.
.
எனவே, ஒரு தனிமனிதனைப் புரிந்து கொள்ள அவனை மட்டும் புரிந்து கொண்டால் போதாது.  அவன் குடும்பத்தை, அவன் வாழும் சமூகத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.  அவனுக்கும், அவன் குடும்பத்திற்கும் உள்ள முரண்பாட்டையும் அவனுக்கும் அவன் வாழும் சமூகத்திற்கும் உள்ள முரண்பாட்டையும் புரிந்து கொண்டு, அந்த முரண்பாடுகளின் விளைவாக அவன் மன நிலையில் ஏற்பட்ட மாற்றங்களின் அடிப்படையில் அவனைத் தனித்துவப்படுத்திப் பார்க்க வேண்டிய அவசியத்தை மிகச் சிறப்பாகக் கூறியுள்ளார்.
.
அவர்மருந்துகளை
அன்னையாக,
தந்தையாக,
பிள்ளைகளாக,
சகோதர - சகோதரிகளாக,
நன்பர்களாக,
தொழிலாளியாக,
கலைஞனாக,
அறிஞனாக,
தலைவனாக
மற்றும் சமூகத்தின் அனைத்துத் தரப்பினராகவும் பார்க்கிறார்.
ஏனெனில் மனிதன் சமூக விலங்கு என்பதை உணர்ந்துள்ளார்.
ஒரு மனிதனைப் புரிந்து கொள்ள அவனைத் தனியாகப் பார்க்க முடியாது.  அவனுக்கும்- குடும்பத்திற்கும்,
அவனுக்கும்-சமுகத்திற்கும்,
அவனுக்கும்-தொழிலுக்கும்,
அவனுக்கும்-கலைப் படைப்புகளுக்கும்,
அவனுக்கும்-ஆளுமைக்கும்
உள்ள தொடர்பை அறிந்து கொள்ளாமல் அவனைப் புரிந்து கொள்ள முடியாது என்பதைத் தெளிவாக உணர்ந்துள்ளார்.
.
அவர் ஓர் உண்மையைச் சொல்லுகிறார்.  ஒரு அலோபதி மருத்துவருக்கு நோய்க் கூறு இயலையும், நுண்ணுயிரி இயலையு எவ்வளவு ஆழமாகப் படிக்க வேண்டுமோ அதைவிட ஒரு ஹோமியோ மருத்துவர் மனிதனையும், சமூகத்ததையும் மிக ஆழமாகப் படிக்க வேண்டும்.  சிறந்த சமூக அறிவு இல்லாமல் ஒரு நல்ல ஹோமியோ மருத்துவராக இருக்க முடியாது என்பதை இவர் நூல்கள் சிறப்பாகக் கூறுகின்றன.
.
இவர் இவ்வாறு மருந்துகளைப் பார்ப்பதற்கு ஆதாரங்களை எவ்வாறு திரட்டினார் என்பதற்கு போதிய விளக்கங்கள் இல்லை.  பல சமயம் புதிராக இருக்கிறது.  இருந்தாலும், அவர் கூறியபடி மருந்துகள் பயன்படுத்தப்டும்போது அவைகள் மிகவும் சிறப்பாக குணமளிக்கின்றன.
ஒரு மனிதனுக்கு நோய் தோன்றிய காலத்தில் அவனுக்கும், குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் உள்ள முரண்பாடு என்ன என்பதை அறிந்து, அந்த முரண்பாட்டின் விளைவாகத் தோன்றிய நிலைப்பாட்டுக்கு (state) தகுந்த மருந்தைத் தேர்வு செய்தால், அந்த மருந்து அவனுக்கு உரிய மருந்தாகிறது.  அவனை நலப்படுத்துகிறது.
.
ஜான் ஸ்கால்ட்டனைப் பின்பற்றும்போது குறிகளுக்குக் (symptoms) கொடுக்கும் முக்கியத்துவம் குறைந்து விடுகிறது.
மருந்துகாண் ஏட்டைப் பயன்படுத்தத் தேவையில்லை.  
ஒட்டு மொத்தக் குறிகளைக் காண வேண்டிய அவசியமில்லை.
மியாசம் பற்றிச் சிந்திக்க வேண்டியதில்லை.  துயரரை அறிவது எளிமையாக்கப்படுகிறது.
.
     ஆக,  ஜான் ஸ்கால்ட்டன் ஹோமியோபதித் துறையின் புதிய சகாப்தம்.  அவருடைய ஆய்வு முறையை மேலும் செழுமைப்படுத்தும்போது ஹோமியோபதி மேலும் சிறப்படையும் என்பதில் யாதொரு ஐயமுமில்லை.