Tuesday, 14 February 2017

இவரைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் 2 @Pl Vellaichamy

இவரைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் 2


சில மாதங்களுக்கு முன் என்னிடம் ஒரு கல்லூரிப் பேராசிரியர் மருத்துவம் பார்க்க வந்தார்.  அவருக்கு வலதுகால் முன் பாதத்தில் புற்று போன்ற கடினமான தசை வளர்ச்சி வலியுடன் இருந்தது.  அதற்கு அவர் பல மருத்துவர்களிடம் காண்பித்துவிட்டு என்னிடம் வந்தார்.

நான் அவரிடம் புறவயக் குறிகளை விசாரித்து விட்டு அவருடைய மனநிலை பற்றி அறிய முற்பட்டேன்.

""""தங்களுக்கு ஏதாவது கவலை இருக்கிறதா?""

  """"இல்லை"" என்று கவலையோடு சொன்னார்.

""""சார், ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்.  மனிதனுடைய மனநிலையில் ஏற்படும் பிரச்சனைகள் காலப்போக்கில் பல உடல் நோய்களுக்குக் காரணமாகி விடும்.  இது உண்மை.  எனவே, தங்களுடைய கவலை, பயம், ஏமாற்றம் மற்றும் அனைத்துப் பிரச்சனைகளையும் மெதுவாகக் கூறுங்கள்.  நான் இவற்றை எல்லாம் தெரிந்து கொண்டு எதுவும் தங்களைப் பற்றி கதை எழுதப் போவதில்லை.  எல்லாம் உங்கள் நன்மைக்குத்தான்.  உங்களுக்கு உரிய சரியான ஹோமியோபதி மருந்தைத் தேர்வு செய்யத்தான்"" என்று விவரமாகக் கூறிய பின்

""""இப்பச் சொல்லுங்க உங்களைப் பற்றி"" என்றேன்.
    """"ஆமா சார், பிரச்னைதான்""
     """"என்ன?""
      என்னை நிம்மதியாக வாழவிடமாட்டேங்கிறார் என் அப்பா.  கல்யாணமானதிலிருந்து என் மனைவி வீட்டாரிடம் வரதட்சணை, அந்தப் பணம், இந்தப் பணம் என்று கேட்டுக் கொண்டே இருப்பார்.  கடிதம் போடுவார், தந்தி அடிப்பார்.  அவருடைய தொல்லை தாங்க முடியவில்லை.
நீங்க ஏன் மறுக்கக் கூடாது?  முடியாது என்று சொல்ல வேண்டியது தானே?
""""அது என்னால் முடியாது"" என்று கூறினார்.
""""ஏன்?""
சிறு வயதிலிருந்தே என் அப்பா என்னை அடக்கி, ஒடுக்கி வைத்திருப்பார்.  நான் எந்த முடிவும் எடுக்க முடியாது.  ஏதாவது சொன்னால் என்னைக் கொன்றேவிடுவார்.  நான் எதிர்த்துப் பேச முடியாது.  கொடுமைப்படுத்துவார் என்று கூறினார்.
""""அப்படி என்றால் தங்கள் அப்பா மீது கோபம் உள்ளதா?""
    """"கோபமா? கடுங்கோபம் உண்டு""
""""கோபத்தைக் காட்ட வேண்டியதுதானே?""
""""கோபத்iதை மட்டுமில்லை.  நான் எந்த உணச்சியையும் காட்ட முடியாது.  நான் அவரை எதிர்த்து எதுவும் சொல்ல இயலாது.  மனதில் போட்டு அனைத்தையும் அடக்கி வைத்துக் கொண்டு இன்று வரை வாழ்கிறன்"" என்றார்.
""""தங்களுக்கு வேறு என்ன பிடிக்கும்? ""
""""எனக்கு இனிய சோகமான பாட்டுக்கள் கேட்டால் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும்""

நான் இப்போது அவர் யாராக இருக்கிறார் என்று அனுமானித்துக் கொண்டேன்.
நான் அனுமானித்தது சரிதானா என்று மேலும் பல விபரங்களை அறிந்து கொண்டேன்.  நான் அறிந்தவரை நீங்களும் தெரிந்து கொள்ளுங்களேன்.

அவருடைய சிறந்த பண்பு என்பது பிறருக்கு உதவிகரமாக இருப்பதுதான்.  இவர் பிறருக்கு உதவி செய்ய விரும்புவார்.  உதவுவது மூலம் பிறரை மகிழ்விக்க விரும்புவார்.  இவர் மற்றவர்களுடன் எளிதாக இணக்கமாகி விடுவார்.   இவர் பிறருக்கு உதவி செய்ய விரும்புவார் என்று சொல்வதை விட பிறருக்கு உதவுவது என்பது இவருக்குத் தேவையாகி விடுகிறது.  ஏனெனில் அவர் அவ்வாறு செய்யவில்லையெனில் அமைதியற்றுப் போவார்.

இவர் கூருணர்வு மிக்கவர்.  இசையிலும், கலையிலும் மிகுந்த நாட்டம் மிக்கவர்.  இவர் கேட்கும் இசைக்குத் தக்கவாறு இவருடைய துயர் மிகுவதும், குறைவதும் ஏற்படும்.  சோகமான இசையைக் கேட்கும் போது இவருடைய துயர் தணிந்து ஆறுதலாகக் காணப்படுவார்.  இவர் படுத்துக் கொண்டு சோகமான இசையைக் கேட்பதால் இவருடைய துயர் தணிவதை உணர்வார்.

இவர் பிறருக்கு உதவிகரமாக இருக்கும் அதே வேளையில் தாம் செய்யும் பணியை பிறர் அங்கீகரிக்க வேண்டும் என்றும் எதிர்பார்ப்பார்.  அதற்காக இவரைப் பாராட்ட வேண்டும் என்றும் எண்ணுவார்.  பிறருக்காக ஓடி, ஆடி ஓய்வின்றி உழைப்பார்.  இதற்காக அவர் மற்றவர்களிடம் எதிர்பார்ப்பது """"இவர் நன்கு செய்தார்"" என்று சொல்ல வேண்டும் என்பதுதான்.  இவரை யாரும் குறை சொன்னால் தாங்கிக் கொள்ள முடியாது.  கடுங்கோபம் கொள்வார்.  ஆனால், அதை வெளியே காட்ட மாட்டார்.  அவர் மீது வெறுப்பு ஏற்படும்.  வெறுப்பு தோன்றினாலும் அவருடன் விரைவில் இணக்கமாகிவிட வேண்டும் என்று நினைப்பார்.

இவர் விமர்சனம் செய்வதை வரவேற்பார்.  ஆனால் அது ஆக்கத்துக்கு வழிவகுக்க வேண்டுமேயொழிய அழிவுக்கு அல்ல.  """"பலவீனப்படுத்தவதாக இருக்கக் கூடாது"" என்று கூறுவார்.  இவரும் விமர்சனம் செய்வார்.  ஆனால் அது ஆக்கப்பூர்வமானதாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார்.

இவருக்கு, இவருடைய தகுதி என்ன? திறமை என்ன? என்பது பற்றி தெரியும்.  ஒன்றை தயக்கத்தோடு தொடங்குவார்.  தன்னுடைய அறிவையும், ஆற்றலையும் வளர்த்துக் கொள்ள விரும்புவார்.  அதற்காக அதிகமான பயிற்சிகள் பெற வேண்டும் என்று எண்ணுவார்.  தனக்கு ஒரு குரு (அல்லது) ஆசிரியர் வேண்டும்.   அப்போதுதான் இவர் செய்வது தவறா? சரியா? என்று சொல்வார்கள்.  யாராவது இவர் செய்வது சரிதான் என்று கூறவதை விரும்புவார்.  இவ்வாறு சொல்வது, ஏதோ இவர் புதிதாகக் கற்றுக் கொள்வது போல் திருப்தி அளிக்கும்.

இவர் மேலாதிக்கம் செய்யும் பெற்றோரின் குழந்தை.  இவரை இவர் பெற்றோர்கள் அடக்கி ஒடுக்கி வைத்திருப்பார்கள்.  இவருக்கு எதுவும் தெரியாது.  எதற்கும் லாயக்கற்றவன் என்று திட்டுவார்கள்.  இவ்வாறு அடக்கப்பட்டு வாழ்வதால் தான் யார்? என்று கூட உணர முடியாதவராய், துணிச்சல் அற்றவராய் இருப்பார்.  தன்னை அவமாமனப்படுத்துபவர்களை, அடக்குபவர்களை பழிவாங்க நினைப்பார்.  ஆனால், அதற்கான பலமில்லாதவராய்  இருப்பதாக நினைத்து அவர்கள் மீது உள்ள கோபத்தை, கசப்பு உணர்வை அடக்கி வைத்துக் கொள்வார்.

கோபத்iதை எப்போதும் காட்ட மாட்டார்.  இவர், மேலாண்மை செய்கின்ற பெற்றோhன் பிள்ளையாக இருப்பதால், கூச்சமிக்கவராகவும், கவலை, பயம், நடுக்கமுள்ளவராகவும் இருப்பார்.  தன் மீதும், தன் நிலை மீதும் திருப்தியற்று இருப்பார்.

அவர் சோகத்தோடு யாருடனும் பேசாமல் தன் நிலையை நினைத்துப் புலம்பிக் கொண்டே இருப்பார்.  தாம் புண்படுத்தப்பட்டதாகவும், ஒடுக்கப்பட்டதாகவும் நினைத்தாலும், பதில் நடவடிக்கை எதுவும் எடுக்காமல், உணர்வுகளை உள்ளடக்கி மௌனமாக இருப்பார்.  இவருடைய முகம் எப்போதும் ஆழ்ந்த சிந்தனையோடும், கசப்பு உணர்வோடும் இருப்பதை வெளிப்படுத்தும்.  இது சிலருடைய உள்ளமுக்கப்பட்ட உணர்வுகளின் வெளிப்பாடு என்பது தெரிய வருகிறது.

நான் அவரை அறிந்து கொண்டு அவருக்கான    மருந்தை  10m வீரியத்தில் இரண்டு வேளைக்கு கொடுத்த பின்பு அவர் நோயிலிருந்து விடுபட்டது மட்டுமின்றி அவர் மனநிலையிலும் மாற்றம் ஏற்பட்டது.

யார் அவர்????

.................????!!!!!⏯
மங்கானம்
   manganum 

 Essence: Sensitive people who do their best for others and hope to get appreciated for their efforts. 

 Mind: The first characteristic trait is that Manganum people tend to want to please everybody; they are always busy taking care of others. 
They are also very sensitive and artistic. 
Their moods can change depending on the kind of music they are listening to. 
They are highly sensitive to the needs of those around them, to decide what they can do to help (DD Carc). 
As a child they tend to take responsibility at an early age. Their sensitivity may come out as clairvoyance. 
 They tend to be busy and restless (DD Zinc). This may be expressed in trembling or restlessly walking up and down. 
 However, they want to be appreciated for all the things they do for others.
 If somebody happens to hurt them or insult them they get very angry (DD Staph, Coloc). 
But they will keep dreaming of a reconciliation. 
They may get a constant frown on their face or a bitter expression, as a sign of what is going on inside them.
 Then they will withdraw and avoid company.
 This shows that they are easily hurt and tend to sulk. 
 When they feel gloomy and bad tempered the only thing that helps is lying down and resting. 

 Vrijlandt (1990, page 185) gives us a typical example of a Manganum woman who has organised a party and who is only content when she hears the next day that her guests thought it a great success. 
Here again we find the theme of doing your best and wanting to be complimented on it. 

 At a later stage they develop difficulty in thinking. Also fears that something will happen, haunting fears about trivial matters. 

@jan scholten                        

 Manganum situation

The Manganum situation is that of a shy child of dominating parents.
 The child has a lack of confidence as a result of this domination, and becomes anxious, nervous, tense, jittery and frightened.
 He develops a feeling of bitterness towards his parents and is discontent with himself and with his situation.
 He becomes sad, reserved, taciturn, brooding. Towards his parents he feels hatred, wants to take revenge, but he cannot. 

This situation is not an extreme one, as in Aurum or Mercurius but a situation that is tolerable and so you do not find here the themes of suicide or revolution, but rather a suppression - he becomes reserved and all his feelings are pent up.
 He feels offended, feels harassed and has to defend himself. 
He has to be strong enough to put up with things.

 So we find that the main theme of Manganum is suppression. 

@Rajan Sankaran                        

Concepts of manganum 

peridic table
 Stage 7 :
 Fine tuning 
 Training Practice 
 Doubts 
 Learning Teaching 
 Feedback 
 Compliments 
 Cooperation 
 Helping 

 Ferrum series :
 Task Work Duty 
 Craft Use 
 Ability Perfection 
 Routine Order Rules 
 Control Exam 
 Observed Criticised 
 Failure Guilt Crime 
 Pursued 
 Adult 
 Village 

 Group analysis 

 Fine tuning your abilities. 
 Feedback on your abilities. 
 Taught by professionals: help. 
 Likes compliments to know they haven't done it wrong. 
 Help in checking things over. 
 Practising for the exam. 
 Criticism gives a feeling of failure. 
 Feeling pursued by criticism. 

 Essence of Manganum  

  training for the task. 

@jan scholten

# ஹோமியோபதி
HOMOEOPATHY

No comments:

Post a Comment