Friday, 17 February 2017

இவரைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் 3 பழ.வெள்ளைச்சாமி



ஹோமியோபதியின் பரிமாணத்தில் 1796-இல் தொடங்கி இன்று வரை பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

நோய்க்கு மருந்து என்று தொடங்கி, இன்று மனிதனுடைய சாரம் என்ன என்பதை அறிந்து அதற்கொத்த சாரத்தை வெளிப்படுத்தும் மருந்தைத் தேர்வு செய்து மருந்து கொடுக்கப்பட வேண்டும் என்ற நிலைக்கு வளர்ந்து கொண்டிருக்கிறது.
ஒட்டு மொத்தக் குறிகளுக்கு அதை ஒத்த ஒட்டு மொத்தக் குறிகளை வெளிப்படுத்தும் மருந்து உரிய மருந்து என்பதிலிருந்து, ஒட்டு மொத்தக் குறிகளின் தொகுப்பு எவ்வாறான மனிதனைச் சித்தரிக்கின்றது?  அவ்வாறான  மனிதன் இவ்வாறான குறிகளின் தொகுப்பை வெளிப்படுத்த வேண்டுமென்றால், எவ்வாறான சூழலில் இருந்திருக்க வேண்டும் ? என்பதை யூகிக்க முடிகிறது.  இவ்வாறு குறிகளின் தொகுப்பிலிருந்து ஒவ்வொரு மருந்தையும் தனிநபர்களாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இரண்டு வருடத்திற்கு முன் என்னுடைய நண்பர் ஒருவர் மூல நோய்க்காக மருத்துவம் பார்க்க வந்தார்.   வந்தவர் வந்தவுடன், """"நான் இரண்டில் ஒன்று பார்க்க வேண்டும், நானா அல்லது அதுவா? நானும் பல வருடங்களாகப் போராடிக் கொண்டிருக்கிறேன்"" என்று தொடங்கினார்.

அவருக்கு இரத்த ஒழுக்கும், வலியும் உள்ள மூல நோய்.  ஆனால் அவர் நோயைப் பற்றிக் கூறாமல் ஒரு போர்க்களத்தைப் பற்றிக் கூறினார்.

""""வாழ்வா, சாவா? "" என்பது மாதிரி இருந்தது அவருடைய தொடக்கம்.  இவருடைய கூற்றிலிருந்து இவருக்கான மருந்தை யூகித்துக் கொண்டு இவரைத் தெரிந்து கொள்ள முயற்சித்தேன்.

இவரைத் தெரிந்து கொண்டு இவருக்கான மருந்தைக் கொடுத்த பின்பு இன்று வரை அவருக்கு வலியுடன், இரத்த ஒழுக்கோடு ஏற்பட்ட மூல நோய் வரவேயில்லை.  அதுமட்டுமல்ல அவருடைய நோய் எதிர்ப்பாற்றலே கூடிவிட்டது.
இவ்வாறு நான் அறிந்த மனிதரை நீங்களும் தெரிந்து கொள்ளலாமே?.

இவரைப் பற்றி ஒரு வார்த்தையில் கூறுவதென்றால் """"உறுதியானவர் "" என்று அழைக்கலாம்.  உறுதி என்பதன் பொருள் கெட்டியான, நிலையான நேர்த்தியான, தீர்மானகரமாக என்று கூறலாம்.  இவை அனைத்தும் பெற்றுள்ளவர்தான் இவர்.

அவர் சிறந்த முறையில் செயல்படவில்லை என்றால் அவர் அவருடைய இடத்தை இழக்க நேரிடும் என்ற பயம் இருந்து கொண்டேயிருக்கும்.  அவருடைய இடத்தில இருப்பதற்கு சட்டப்படியான (இயற்கையான) உரிமை இருந்தாலும்,  உண்மையிலேயே அந்த இடத்திற்கான தகுதியிருக்கிறதா என்ற எண்ணம் ஏற்படும்.

அவர் அவருடைய எல்லையைக் கடக்கக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார்.  அதேபோல் இவரும் மற்றவருடைய எல்லையைக் கடக்க நினைக்க மாட்டார்.  தாம் ஒரு போதும் மற்றவர்களின் பிரச்னையில் தலையிடக்கூடாது என்பதில் சரியாக இருப்பார்.  மற்றவர்களும் இவருடைய பிரச்னையில் தலையிடுவதை விரும்புவதில்லை.  அதனாலேயே அவரிடம் உறுதியோடு இருப்பது, தீர்க்கமாகச் செயல்படுதல் போன்ற சிறப்பான குணங்களைக் காணலாம்.  இவருடைய கடுமையையும், பலத்தையும் கணக்கில் கொண்டுதான் கீழ்காணும் வாய்மொழிகள் பழக்கத்தில் உள்ளன போலும்.

   எவ்வகையான கடுமையான பணியாக இருந்தாலும், முடித்துவிடும் ஆற்றலுள்ளவர்.  கடும் உழைப்பு என்பது கூட ஒரு வகையில் ஒரு நிர்ப்பந்தத்தின் விளைவுதான்.  ஏனெனில், இவரால் எந்தவித மறுதலிப்பையும், குறுக்கீடுகளையும் தாங்க முடியாது.

இவர், இவருடைய சொந்த விருப்பத்திற்கு மாறாகச் செயல்பட அவர்தம் பெற்றோர்களால் நிர்ப்பந்திக்கப்படுபவர்.
இதற்கு எதிராகப் போராடிக் கொண்டிருப்பவர்,  ஆனால் அதே சமயம் பெற்றோரை எதிர்க்கிறோம் என்ற மன உறுத்தலுக்கு ஆளாவார்.

பெற்றோர்கள் """"உனக்கு ஒன்றும் தெரியாது.  எதையும் தவறாகச் செய்வாய், உனக்கு எது சரியானது என்று நாங்கள் தீர்மானிக்கிறோம்"" என்று கூறுவார்கள்.
ஆனால் இவரோ, """"எனக்குத் தெரியும் எது சரியானது என்று.   நீங்கள் யார் எனக்கு சொல்வதற்கு? "" என்று கேள்விகளை எழுப்புவார்.   இவ்வாறான போராட்டத்திலிருப்பார்.  இவர் தாம் எப்போதும் சரியாகச் செய்வதாக நினைப்பார்.  இவருடைய பெற்றோர்கள் இவருடைய எல்லைக்குள் ஊடுருவுவதாக எண்ணுவார்.    இதற்கு எதிராக தற்காப்பு செய்தல் என்பதுதான் இவருடைய பிரதான செயல்பாடு.     இவர் தற்காப்பு அரணாக செயல்படுவார்.  இவரையும், இவரது குடும்பதையும், பாதுகாப்பது, எல்லைக்கதவாக, வேலியாக, தலைக்கவசமாக, யுத்தக் கருவியாக, கேடயமாக தற்காப்பு செய்வது   தான் இவரது முக்கியமான பணி.  இவர் எப்போதும் போர்க்களத்தில் இருப்பது போன்றேயிருப்பார்.  இவர் பொதுவாக

""""இரண்டிலொன்று விட்டேனா பார் / நானா /  நீயா /  போராடிக் கொண்டிருக்கிறேன்"" போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைப் பார்க்கலாம்.

இவரை யாரும் விமர்சனம் செய்வதை அல்லது இவரது கருத்தை மறுத்துப் பேசுவதை இவரால் தாங்கிக் கொள்ள முடியாது.  விமர்சனம் செய்பவரை எதிரியாக நினைப்பவர்.  இவருக்கு எதிரான விமர்சனத்தை சரியான குத்து வாங்கியதாக எடுத்துக் கொள்வார்.

இவரைப் பற்றி ஒரு வரியில் சொல்வதென்றால் இவர் தாமாகவே தேர்ந்தெடுத்த எந்த விசயத்திலும் உறுதியாக நிற்பார்.


இப்போது இவர் யார் என்று அறிந்து கொண்டீர்களா?

  பெர்ரம் மெட்டாலிகம்(FERRUM METTALICUM)
 
  எடுத்துக்கொண்ட பணியில் உறுதியாக விடாமுயற்சியுடன் கடுமையாக உழைக்கக்கூடியவர்.
  இவர்கள் அவர்கள் எடுத்துக்கொண்ட பணியில் உறுதியாக இருப்பவர்,கடுமையாக உழைக்க வேண்டும் என்று விரும்புபவர்கள். எடுத்துக்கொண்ட பணியை விட்டுவிடாமல் இவர்கள் தைரியத்தோடும் உறுதியோடும் நேர்மையாகவும் கட்டுறுதியோடு செய்பவர்கள்.

  எந்த வேலை என்று பேதமில்லாமல், கஷ்டமான பணிகளைக்கூட செய்ய நினைப்பவர்கள். ஒரு காரியத்தை செய்ய வேண்டுமென்று நினைத்துவிட்டால் அதனோடு தன்னைப் பிணைத்துக்கொண்டு விட்டுவிடாமல் திட்டமிட்டபடி செய்யக்கூடியவர்கள். எடுத்தமுடிவில் தீர்மானகரமாகவும் எந்தவிதத் தயக்கமுமில்லாமல் இருப்பார்கள். அவர்கள் சக்தி வாய்ந்தவர்களாக இருந்த போதிலும் தங்களுடைய சக்தியை அந்த வேலையை முறையாக முடிக்க வேண்டும் என்ற உறுதியில் தீர்மானகரமாக இருப்பதில் காட்டுவார்கள். இந்த உறுதியான நிலையை இவ்வாறான முறையில் சொல்வதைக்காணலாம். அதாவது, ‘இரும்பு மனிதன், இரும்பு ஒழுக்கம், இரும்புப்பெண்மனி(iron lady mrs thatcher)

  இவர்கள் உழைப்பினால் உருவாக்கப்பட்ட பொருட்கள் நீண்டகாலத்துக்கு இருக்கவேண்டுமென்று விரும்புவார்கள். அந்தப்பொருட்களில் அடிபட்டால் தாங்க்க்கூடியவையாக இருக்கும் அவர்கள் தாங்க்க்கூடியவர்களாக இருப்பது போல.அவர்கள் தயாரிக்கும் பொருட்கள் நாட்பட்டு உழைக்கக்கூடியதாகவும் மற்றும் பயன் உள்ளதாகவும் இருக்கவேண்டும் என விரும்புவார்கள்.
அவர்களுடைய பணி எப்போதும் கடினமானதாக இருக்கும். அது எப்போதுமே அவர்களுடைய முழு சக்தியையும் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும்.அவர்கள் வேலை உடல் உழைப்பைப் பயன்படுத்தக்கூடிய தொழிலாக இருக்கும்.அவர்கள் கொல்லர்களாகவோ, தொழிலாளியாகவோ இருப்பார்கள். மூளை உழைப்பாக இருந்தால் அதிகப்படியான வேலையாக இருக்கும். அவர்கள் பட்டாளத்தில் சிப்பாய் தொழிலைச் செய்பவர்களாக இருப்பார்கள். அவர்களுடைய வேலையைச் சிறப்பாகச் செய்வதற்கு அந்த வேலையை முறையான வழியில் செய்வார்கள். அவர்கள் பணி பிரமாண்டமானதாக இருப்பதால் அதை செய்து முடிப்பதற்கு ஒரேவழி மிகவும் ஒழுங்கு அவசியம் என்பதை உணர்வார்கள்.
அவர்கள் சிறந்த ஒருங்கிணைப்பாளர்கள் ஆதலால் எந்த குழப்பமும் ஒழுங்கற்ற தன்மையும் அமைப்பில் இருப்பதை வெறுப்பார்கள்.

  அவர்கள் எப்போதும் தங்களைப்பற்றி வரும் விமர்சன்ங்களைத் தாங்கிக்கொள்ள மாட்டார்கள். அதை இவர்கள் நேரடியான எதிர்ப்பாக கருதுவார்கள். அதனால்அது அவர்களை கோப்ப்படுத்தும். அவர்கள் பணியை எடுத்து முடிப்பதிலேயே கவனமாக இருப்பதால் இதுபோன்றவை வேலையில் கவனம் செலுத்தாமல் திசைதிருப்புவதை விரும்பமாட்டார்கள். அவர்கள் வழியில் குறுக்கீடோ கட்டுப்பாடோ வருவது அவர்களை எரிச்சல் அடையச்செய்யும். அவர்கள் வழியில் மக்களோ அல்லது பொருட்களோ சப்தம் செய்வதையோ அல்லது குழப்பம் ஏற்படுத்துவதையோ விரும்பமாட்டார்கள். அதாவது சின்ன பேப்பர் கசங்கும் சப்தம்கூட பிடிக்காது.

  சின்ன விமர்சனம் கூட இவர்களுக்கு பெரிய அடி விழுந்தது போலத் தெரியும். ஆனால் அவர்களுக்கு உடம்பில் அடிவிழுவதையோ அல்லது விபத்து ஏற்படுவதையோ கண்டு பயம். அவர்களுக்கு சின்ன வயதில் அப்பா ஒழுங்குக்கட்டுப்பாட்டுக்காக போட்டு அடித்ததை மறக்க மாட்டார்கள். அவர்களை யாராவது விமர்சிக்கவேண்டும் என்று நினைத்தால் அவர்கள் முழுப்பல்த்தையும் பயன்படுத்தித் தாக்கிவிடுவார்கள். எதிரிகள் இவர்களுடைய அடியிலிருந்து தாங்களை காத்துக்கொள்ள முடியுமென்ற நம்பிக்கையை இழந்துவிடுவார்கள்.

  இவர்கள் பரீட்சைக்காக கடினமாக உழைக்க வேண்டுமென்று எண்ணுவார்கள். ஆகையால் இவர்களிடம் எப்போதும் பரீட்சைக்குப் போகும் முன் கடினமாக உழைக்கவேண்டும் என்ற உணர்வு இருந்துகொண்டே இருக்கும். அவர்கள் பாஸ் பண்ணுவதற்கு உச்சகட்டமாக உழைப்பார்கள்.அதை எளிய பணியாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள்.

  பணியில் சிறப்பானதை வெளிப்படுத்தாவிட்டால் அவர்கள் இடத்தை இழந்து ஒதுக்கித் தள்ளப்படுவோம் என்று உணர்வில் இருப்பார்கள். இவர்களுக்கு தற்போதுள்ள இடமானது கஷ்டப்பட்டு உழைத்ததால் வந்ததாக நினைப்பார்கள். அதுதானே வந்ததாக கருதமாட்டார்கள். அவர்கள் எப்போதும் அவர்களுடைய எல்லையை மக்கள் மதிக்க வேண்டுமென்று நினைப்பார்கள். இல்லாவிட்டால் அது அவர்களை கோபம் அடையச்செய்யும்.

 இவர்கள் தங்கள் பணியில் கொஞ்சம் கடுமையாக நடந்துகொள்வதால் பலவிதமான பிரச்சனைகளை எதிர்கொள்ளவேண்டியது இருக்கும்.
இவர்கள் சக்திக்கு மீறிய பணியை எடுத்துப்போட்டுக் கொண்டு செய்வதால் அவர்களுக்கு நரம்பு சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படும்.
மற்றொரு வகையில் இவர்களுடைய சகத்தொழிலாளர்கள் இவர்களுக்கு எதிராக திரும்புவார்கள்.
ஏனெனில் அவர்கள் இவர்களை கடும்பணிச்சுமைக்கு ஆளாக்குவார்கள், கடும் ஒழுங்குக்கட்டுப்பாட்டை ஏற்படுத்துவார்கள்.
 இவர்கள் திட்டத்துக்கு எது தகுதியில்லையோ அதை ஒதுக்கித் தள்ளுவார்கள். இவர்கள்  மிகவும் அத்தியாவசியமானதைக்கூட ஒதுக்கிவிடுவதால் ஒருநாள் ஒட்டுமொத்தப் பணியும் நின்றுபோய்விடும்.கடைசியில் ஒட்டுமொத்தப்பணியையும் விட்டுவிடவேண்டியது இருக்கும்.
முடிவில் அவர்கள் தோல்வியடைந்துவிட்டதாக உணருவார்கள்.  

 Group analysis

 Persevering in your job: firm.
 Persistent in your task: thoroughness.
 Durable products.
 A heavy task.
 Enforcing routines: discipline.
 Meeting opposition in your work.
 Opposition through control.
 Maintaining your position to avoid failure.
 Criticism means opposition.
 Force as a profession: soldier.
 Persevering for the exam.
 Heavy control.
 Failure through using too much force.

Essence of Ferrum Metallicum

persevering in your job: firm.

@JAN SCHOLTEN

ஹோமியோபதி
HOMOEOPATHY

No comments:

Post a Comment