சில மாதங்களுக்கு முன் ஒரு பெண்மணி என்னுடைய மருத்துவமனைக்கு வந்தார். அவருக்கு வயது 26. அவருக்கு சைனஸ் என்றும் பல வருடங்களாக இந்த நோய் இருப்பதாகவும் சொன்னார்.
""""சார், இந்த நோயினால் என் மகிழ்ச்சியே போய்விட்டது. நீங்கள் தான் குணப்படுத்த வேண்டும் "".
""""எவ்வளவு காலமாக இருக்கிறது? என்ன வைத்தியம் பார்த்தீர்கள்? "".
ஏழு, எட்டு வருடங்களாக இருக்கிறது. எல்லா மருத்துவமும் பார்த்துவிட்டோம். ஏன் ஹோமியோ மருத்துவம் கூட பார்த்து விட்டோம். அல்லோபதியில் ENT எல்லாம் பார்த்தோம். அவர் மூக்கு தண்டு வளைந்து விட்டதாகவும், அறுவை சிகிச்சை செய்தால் சரியாகி விடும் என்றும் கூறினார்.
""""தற்போது உங்களுக்கு என்ன செய்கிறது? "" .
காலையில் எழுந்ததும் தும்மல், மூக்கில் நீர் ஒழுகுதல், மூக்கடைப்பு, தலை பாரமாகிவிடுகிறது. என்னால் காலையில் ஒரு வேலையும் செய்ய முடியவில்லை. என்னுடைய மகிழ்ச்சியே போய்விட்டது.
""""இது எப்போது வந்திருக்கலாம் என்று நினைக்கிறீர்கள்? "" .
இது நான் +2 படிக்கும்போது வந்திருக்கலாம்.
""""+2 படிக்கும்போது என்ன நடந்தது? ""
""""+2 படிக்கும்போது எப்பப்பார்த்தாலும் படி, படி நல்ல மார்க் வாங்கணும்னு எங்க அப்பா என்னை டிவி கூட பார்க்க விடமாட்டார். யாரோடும் பேச விடமாட்டார். தூக்கம் கூட சரியாக இல்லை. எந்த பொழுதுபோக்கும் இல்லாமல் எப்போது பார்த்தாலும் படிப்பு. எனக்கும் கொஞ்சம் கூட பிடிக்கவில்லை "".
""""நல்லா படித்தால்தானே நல்ல மார்க் வாங்கி நல்ல கோர்ஸ் போகலாம்? "" .
""""நல்லா படித்தேன் போங்க! அதுக்கு இப்படியா ஒரு Recreation, ஓய்வு கூட இல்லாமல்? "" எனக்கு எப்பத்தான் +2 படிப்பு முடியுமோ என்று இருந்தேன். சார், எனக்கு அந்த டென்சனில்தான் சைனஸ் வந்திருக்கும் சார்.
"""" இப்ப என்ன செய்கிறீர்கள்? ""
இப்ப டீச்சர் வேலை பார்க்கிறேன்.
எவ்வளவு நாளா?
கடந்த ஒரு வருடமாக.
வேலை பிடித்திருக்கா?
சுத்தமா பிடிக்கவில்லை சார்.
நல்ல வேலைதானே. நல்ல சம்பளம் தர்ராங்களே.
வேலை நல்ல வேலைதான். அதுக்கு காலையில் 5 மணிக்கு எழுந்து, சமைச்சு வீட்டுக்காரருக்கு சாப்பாடு கட்டி பிள்ளைக்குச் செய்ய வேண்டியதைச் செஞ்சு, 8 மணிக்குப் புறப்பட்டு டவுன் பஸ்ஸில் ஏறி 1 மணி நேரம் பயணம் செய்து வேலை பார்க்கிற ஊருக்குப் போயி, அங்கே சாயந்தரம் வரை பிள்ளைகளோடு கத்திவிட்டு, சாயங்காலம் வீடு வந்து சேர மணி 8 ஆகி விடுது சார், இது என்ன சார் வேலை, வேலை பார்த்தமா, வந்தமா, ஜாலியா இருந்தமா என்று இல்லாமல், ஒரு நாளைக்கு 12 மணி நேரத்திற்கு மேல் வேலை வேலை என்று வேலையே பார்த்துக்கிட்டு இருந்தால், அது என்ன சார் வாழ்க்கை. எனக்கு கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை.
"""" வேலை பிடிக்கவில்லையா? ""
வேலை பிடிக்குது. அதுக்காக எந்த மகிழ்ச்சியும் இல்லாமல் வேலைக்கும் போவதுதான் வாழ்க்கை என்று ஆகிவிடக்கூடாது சார். என் கணவரும் அப்படித்தான். அவர் பஞ்சாயத்து யூனியனில் கிளார்க் வேலை பார்க்கிறார். அவருக்கு என்னைவிட ஆபீஸ்தான் முக்கியம். காலையில் போறவர் இரவு 10.00 மணிக்குத்தான் வருவார். வந்தும் ஆபீஸ் நினைப்புதான். எதுக்கு சார் கல்யாணம் பண்ணனும். நான் எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறார் சார். எல்லோரும்போல 10 மணிக்கு ஆபீஸ் போனோம், வேலை பார்த்தோம், 6 மணிக்கு வீட்டுக்கு வந்தோம், வீட்டில் மனைவி மக்களோடு மகிழ்ச்சியாக இருந்தோம்னு இருக்க வேண்டாமா சார்? என்று அந்தப் பெண்மணி மனக் குமுறலை கொட்டிவிட்டார்கள்.
"""" வீட்டில் நீங்க எத்தனை பேர்? ""
நான், என் கணவர், குழந்தை, என் மாமனார், மாமியார், சின்ன வீடு சார். ஒரு பிரைவசி இல்லை. அதனால் வேறு வீட்டுக்குப் போகலாம்னு இவருகிட்ட சொல்றேன். இவரு புரிஞ்சிக்க மாட்டேங்கிறார்.
அந்தப் பெண்மணி சொன்ன விசயத்திலிருந்து அவரைப் புரிந்து கொண்டேன்.
அவருக்கு குறிப்பிட்ட நேரம் வேலை பார்க்க வேண்டும். பின்பு வாழ்க்கையை மகிழ்ச்சியாகக் கழிக்க வேண்டும். ஓய்வு வேண்டும், கொஞ்சம் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்ற மனோபாவம் கொஞ்சம் உள்ளவர்.
இப்போது அவரை யார் என்று தீர்மானித்து விட்டேன். மேலும் அவரைப்பற்றி அறிய முயற்சித்தேன்.
அவர்மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக தன் பணியைச் செய்பவர்.
நாம் நம் பணியைச் செய்யாதபோது நாம் மகிழ்ச்சியாக இருக்க அனுமதிக்க மாட்டார்கள் என்ற எண்ணம் உள்ளவர்.
ஆகையால் அவர் அவருடைய பணியைச் செய்வார். அதுவும் மகிழ்ச்சியோடு செய்வார்.
அவர் ஒரேயடியாய 18 மணி நேரம் விடாமல் வேலை பார்க்க வேண்டும் என்ற எண்ணக் கூடியவரல்ல. மகிழ்ச்சியாக இருக்க கொஞ்ச நேரம் ஒதுக்க வேண்டும் என்று எண்ணுபவர். வேலை காலையில் பார்க்க வேண்டும். மாலையில் சினிமா, டிராமா என்று சந்தோஷமாக பொழுதைக் கழிக்க வேண்டும் என்று எண்ணக் கூடியவர். இப்படி இருக்கும்வரை, அவரைப் பொருத்தவரை எந்தத் தொல்லையும் இருக்காது. இதைத் தவிர்த்து எப்பப் பார்த்தாலும் வேலை, வேலை என்று இருந்தால், அவருக்குப் பிரச்சினை தொடங்கி விடும். அவருக்கு என்று நேரம் ஒதுக்காத போது வாழ்க்கையே நழுவிப் போன உணர்வு ஏற்படும்.
அவருடைய சாரம் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதுதான்.
அவருக்கு நல்ல வாழ்க்கை என்பது பூமியில் உள்ள நல்லவற்றை எல்லாம் அனுபவிக்க வேண்டும் என்பதுதான். கடமையைச் செய்ய வேண்டும் என்ற உணர்வு கொஞ்சம் அதற்குத் தடையாக இருந்தபோதும், வாழ்க்கையின் பெரும் பகுதி மகிழ்ச்சியாக இருக்கத்தான் என்று நினைக்கக் கூடியவர்.
அவர் கடமையுணர்வோடு பணியாற்றக் கூடியவர். அவர் கடினமாக உழைக்கக் கூடியவர். அவருடைய வேலையை முறையாகச் செய்யக் கூடியவர். அதே சமயம் வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு இடம் வேண்டும் என்று எண்ணக் கூடியவர்.
அவர் தன்னைப் போன்று கடினமாக உழைப்பவர்களோடு மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வார். அவருக்கு உழைக்காமல் மகிழ்பவர்களைப் பிடிக்காது. பணியைச் செய்யாமல் பலனை எதிர்பார்ப்பவர்களையும் பிடிக்காது.
அவரைப்போன்று சில அம்மாக்கள் தம் பிள்ளைகளிடம் வீட்டுப் பாடத்தை எழுதிவிட்டு விளையாடப்போ, பணியைச் செய்துவிட்டு பலகாரத்தைத் தின்னு என்று கூறுவதைக் காணலாம்.
இப்போது அந்தத் துயரர் யார் என்று புரிந்திருக்குமே!
சில வேலைகள் அந்த மருந்தை 1 எம் வீரியத்தில் கொடுத்த பின்பு, அவருடைய சைனஸ் பிரச்சினை தீர்ந்து விட்டது. கடந்த 4 மாதங்களாக எந்தத் தொந்தரவும் இல்லாமல் இருக்கிறார்.
யார் அவர்.........................????
Kali nitricum
Concepts of kali nit
Kali
Principles, duty
Closed
Optimism
Work, task
Family
Nitricum
Enjoyment
Needing space, expansion
Going out
Congestion, explosive
Tension
Relaxation
Group analysis
The theme we get from the group analysis is: do your duty in order to be able to enjoy yourself.
They have the feeling that you are not allowed to enjoy yourself until you have done your duty.
So they do their work and they work with pleasure.
But they aren't the sort of people who work 18 hours a day.
They have to keep some space for enjoyment, for an evening out, for a trip to the cinema etc.
Everything is fine as long as they can do their duty and keep some space for themselves at the same time.
But the problems may start if their task becomes too much for them, or starts to take up too much of their time.
Then they will get the feeling that there isn't enough space for themselves, that life is slipping by.
A variation on this theme is the feeling that they have to enjoy life.
This may be a sort of basic theme for them.
A good life to them means a life in which they have fully enjoyed the good things on this earth. Although they do restrain themselves and do fulfil their duties, the basic thought is that enjoyment plays a major part in life.
jan scholten👆
No comments:
Post a Comment