Friday, 24 March 2017

ஸ்கால்டனின் வழி முறையில் ஹோமியோ விதிகள்

பழ.வெள்ளைச்சாமி

1. ஒத்தவை விதி பின்பற்றப்படுகிறது.
2. ஒரு துயரருக்கு ஒரு மருந்து.
3. குறைந்த அளவு மருந்து.
4. வீரியப்படுத்தப்பட்ட மருந்துகள்.
5. ஹெர்ரிங்ஸ் விதிமுறைகள் என்று அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்படுகின்றன.

ஆனால்  பல மருந்துகள் நிரூபணம் செய்யப்படாதவை என்பது உண்மைதான்.  ஆனால் அது பெரிய குறையில்லை.  ஏனெனில் ஏற்கனவே நிரூபணம் செய்யப்பட்ட மருந்துகளின் குறிகளும் அவற்றின் இயற்கைப் பண்புகளும் ஒத்து இருக்கின்றன.  இந்த உண்மையை அனைத்து மருந்துகளிலும் காணலாம்.
இதிலிருந்து ஒரு பொருளின் இயற்கைப் பண்பு தெளிவாகத் தெரியும்பட்சத்தில் அந்த மருந்தை அத்தகைய பண்பை ஒத்தத் துயரருக்கு கொடுக்கப்படும்போது அவரை நலமாக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.  எனவே நிரூபணம் செய்யப்படாதவை என்ற காரணத்தினால் மட்டும் ஸ்கால்டனின் தனிம மருந்துகளைப் பயன்படுத்தாமல் விடுவது ஹோமியோபதிக்கு நல்லதல்ல.  ஒரு எளிய முறையை இழந்தவர்களாகி விடுவோம்.

ஸ்கால்டன் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகிறார்.

ஹோமியோபதியில் நோய்க்கு மருந்து என்பதற்குப் பதிலாக, நோயாளருக்குத்தான் மருந்து என்று வலியுறுத்துகிறோம்.

நோயாளிக்கு மருந்து கொடுக்க, நோயாளியைப் புரிந்து கொண்டு தனித்துவப்படுத்திப் பார்க்க வேண்டும்.

நோயாளியைத் தனித்துவப்படுத்திப் பார்க்க மற்ற எதையும் விட அவருடைய மனநிலையை அறிவது என்பது மிகவும் எளிதானதாகவும், மிகவும் சிறப்பானதாகவும் இருக்கும்.

 ஏனெனில் ஆர்கனான் 6-ஆம் பதிப்பின் 211-வது மணிமொழியில் கூறியுள்ளபடி ஒரு துயரருடைய மனநிலை அல்லது சுபாவம் என்பது தீர்மானகரமான சிறப்பியல்புக் குறியாக இருப்பதால் அது மருந்து தேர்வு செய்வதைத் தீர்மானிப்பதில் முதன்மையானதாக இருக்கிறது.

இதனடிப்படையில் ஸ்கால்டன் அவர்கள் துயரரின் மனநிலையை விவரிப்பதையே பிரதானமாகக் கொண்டுள்ளார்.

இங்கே ஸ்கால்டன் அவர்கள் மற்றவர்களிடமிருந்து முற்றிலும் மாறுபடுகிறார்.
ஒரு மனிதனுடைய மனநிலை என்பது அந்தரத்திலிருந்து வந்ததல்ல.  அது அவனுக்குப் புறச்சூழலால் ஏற்பட்டது.

மனிதன் என்பவன் ஒரு சமூக ஜீவி என்று மனிதனைப் பார்க்கிறார்.
மனிதன் தோன்றியது முதல் இறக்கும் வரை அவன் தனித்து வாழாதவன்.  அவன்,  நான் என்ற தன்னிலையிலிருந்து உலகத்தைப் பார்க்கிறான்.  அவனுக்கு உறவு ஏற்படுகிறது.  அவனுக்கென்று தொழில் ஏற்படுகிறது.  அவனுக்கென்று பொழுதுபோக்கு மற்றும் படைப்பாற்றல தோன்றுகிறது.  அவன் ஆளுமையுடையவனாக ஆகிறான்.  முடிவில் பிரபஞ்ச மனிதனாக அதீத ஆற்றல் உள்ளவனாக மாறுகிறான்.  ஆகையால் மனிதன் தனித்தவன் இல்லை.  அவனுடைய மாற்றங்கள் அவனை மட்டும் சார்ந்தது இல்லை.   எனவே அவனுடைய மனநிலையைத் தீர்மானிப்பதில் புற உலகத்தின் பங்கை டாக்டர் ஸ்கால்டன் உணர்ந்திருக்கிறார்.

மனிதனின்
உறவில்,
தொழிலில்,
படைப்பில் மற்றும்
ஆளுமையில்
முரண்பாடு ஏற்படும்போது அந்த முரண்பாடு, ஆக்கத்திற்குப் பயன்படாதபோது அவன் மனநிலை மாறுகிறது அல்லது அதற்கொத்த மனலை அவனிடத்தில் தோன்றுகிறது.

எனவே, ஸ்கால்டன் அவர்கள் ஒரு மனிதனுடைய மனநிலையைப் புரிந்து கொள்ள 
அவனுடைய உறவைப் பார்க்க வேண்டும்.  
தொழிலைப் பார்க்க வேண்டும்.  
அவனுடைய பொழுதுபோக்கைப் பார்க்க வேண்டும்.  
அவன் ஆளுமையைப் பார்க்க வேண்டும் என்று கருதுகிறார்.

எங்கே அவனிடத்தில் உள்ள முரண்பாடு, பகை முரண்பாடாக மாறியது என்பதை அறிந்தால் அப்போது அவனுடைய மனநிலையையும் அதைத் தீர்மானித்த காரணத்தையும் அறிய முடியும்.

அது அவன், தனிமங்களின் அணு எண்படியான பட்டியல்படி எந்தத் தொகுதியில் இருக்கிறான், எந்தப் படிநிலையில் இருக்கிறான் என்று எளிதில் அறிந்து கொள்ள உதவும்.

 இந்த உண்மையை ஒரு சமூக உணர்வோடு மனிதனைப் பார்த்தால்தான் அவனுடைய மனநிலையைப் புரிய முடியும் என்று கூறுகிறார்.

ஸ்கால்டன் முறையில் மருந்து தேர்வு செய்யத் தெரிந்திருக்க வேண்டியவை.

ஸ்கால்டன் அவர்கள் அவருடைய நூல்களை ஆரம்பம் முதல் இறுதி வரை தொடர்ச்சியாகப் படித்தால்தான் பயன்படுத்த முடியும் என்று கூறவில்லை.

எங்கே படிக்க வேண்டிய தேவை இருக்கிறதோ, அங்கே படித்தால் மட்டும் போதும் என்கிறார்.

அவர் ஒவ்வொரு தொகுதிக்கும், ஒவ்வொரு படிநிலைக்கும் கருப்பொருள்களை  (theme) வகுத்துள்ளார்.  அந்தப் பண்பை மையப்படுத்துகிற அடிப்படைச் சொற்களை ஒவ்வொரு தொகுதிக்கும் ஒவ்வொரு படிநிலைக்கும் உருவாக்கித் தந்திருப்பதன் மூலம் மருந்து தேர்வு செய்வதை எளிமைப்படுத்தியுள்ளார்.

நாம் தொகுதி, படிநிலைகள் பற்றிய அறிவே இல்லாமல் கூட அவர் ஒவ்வொரு தனிமங்களைப் பற்றியும் தனிமங்களின் கூட்டு வேதிப் பொருட்கள் பற்றியும் விவரித்துள்ள வரை படத்தை ஒரு மருந்துகாண் ஏட்டைப் படிப்பது போல் படித்தாலே ஸ்கால்டன் முறையில் மருந்து தேர்வு செய்வதற்குப் போதுமானதாக உள்ளது.  ஏனெனில், அதில் மனிதனுடைய சூழல் சிறப்பாக விவரிக்கப்பட்டுள்ளது.

ஸ்கால்டன் வழிமுறையில் மருந்து கொடுக்க குறிகளைப் பார்க்க வேண்டியது பெரும்பாலும் தேவை இருப்பதில்லை.  குறிகளை வகைப்படுத்தாதபோது மருந்துகாண் ஏடும் தேவைப்படாது.

மருந்துகாண் ஏடும் இல்லாமல் குறிகளை வகைப்படுத்தாமல் துல்லியமாக துயரரின் மனநிலையை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

மேலும் தனிமங்களை மனித உறவுகளோடு ஒப்பிட்டிருப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

அதாவது
மூரியாடிகம் - அம்மா
கார்பானிகம் - அப்பா
பாஸ்பரஸ் - உடன் பிறந்தவர்கள்
சல்பர் - கணவன் மனைவி உறவு

என்று தனிமங்களைப் பார்ப்பது.  மனிதர்களை எளிதில் வகைப்படுத்தி மனநிலையைப் புரிந்து கொண்டு மருந்து கொடுக்க முடிகிறது.

ஸ்கால்டனைப் புரிந்து கொள்ள.
1. ஸ்கால்டனைப் புரிந்து கொள்வதற்கு ஒருவன் சமூக சிந்தனையுள்ளவனாக இருக்க வேண்டும்.
2. மனிதனை சமூக ஜீவியாகப் பார்க்கத் தெரிந்திருக்க வேண்டும்.
3. சமூகத்தில் உறவு முறைகளில், தொழில் மற்றும் ஆளுமையில் என எங்கெல்லாம் முரண்பாடு  ஏற்படும்,  எப்படி ஏற்படும் என்ற சமூக அறிவியலை நன்கு கற்றறிந்து, மக்கள் வாழ்வோடு ஒன்றியவர்களாக இருக்க வேண்டும்.
4. இயற்கை விதியை அறிந்தவராக இருக்க வேண்டும்.

ஹோமியோ மருத்துவர் எப்படி இருக்க வேண்டும்.


டாக்டர். சாமுவேல் ஹானிமன் ஆர்கனான் 6-ஆம் பதிப்பில் மணிமொழி 4-இல் கூறியது போல, ஹோமியோ மருத்துவர் நோயை ஏற்படுத்தும் காரணிகள் என்ன என்பதை அறிந்து,  அவற்றை ஆரோக்கியமான மனிதர்களிடத்திலிருந்து அகற்றத் தெரிந்திருக்க வேண்டும்.  ஸ்கால்டன் நோய்க்கான காரணி, சமூகத்தில் உள்ள முரண்பாடுகள்தான் என்பதைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.  அதனால் ஒவ்வொரு ஹோமியோ மருத்துவரும் நோயை நலமாக்குகிற மருத்துவராக மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த சமூகத்தையே மாற்ற வேண்டும் என்ற மன உறுதியுள்ளவராக மாறினால்தான் மனிதனை முழுமையாக நலமாக்க முடியும்.  புதிய மனிதனை உருவாக்கி, புதிய சமூகத்தைப் படைக்க முடியும்.


 ஸ்கால்டனின் பார்வையில் தனிமங்களின் அணு எண்படியான பட்டியல் ஆய்வு 

பழ.வெள்ளைச்சாமி

PERIODIC TABLE 
  ஒத்த வேதிப் பண்புகள் ஒரே ஒழுங்காகத் திட்டவட்டமாக வரையறுக்கப்பட்ட தொகுதிகளில் சேருகின்ற தனிமங்களின் அணு எண்படியான பட்டியல்.

முன்னுரை:
உலகத்துப் பொருட்கள் எல்லாம் தனிமங்களால் (elements) உண்டானவை.  தனிமங்களின் கூட்டு தான் பல பொருள்களின் வரலாறு என்பதால், தனிமங்கள் அனைத்தையும் பற்றி அறிவது என்பது அனைத்துப் பொருட்களையும் பற்றி அறிவதற்குச் சமமாகும்.

மேலும், ஹோமியோபதியில் நோய்க்கு மருந்து கிடையாது.  நோயுற்ற மனிதனுக்கே மருந்து என்று கூறப்படுகிறது.  நோயுற்ற மனிதனுக்கு மருந்து கொடுக்க வேண்டுமென்றால், அவனை முதலில் தனித்துவப்படுத்த வேண்டும்.  பின்பு அவனுக்கு ஒத்த தனித்துவமுள்ள மருந்தைத் தேர்வு செய்ய வேண்டும்.  இவ்வாறு ஒவ்வொரு துயரரையும் தனித்துவப்படுத்தி, அவருக்கு உரிய ஒரு மருந்தைத் தேர்வு செய்து கொடுக்க வேண்டும்.

இதிலிருந்து ஒவ்வொரு தனி மனிதனையும் தனித்துவப்படுத்த வேண்டுமென்றால்,  ஒவ்வொருவருக்கும் ஒரு தனி மருந்தல்லவா தேர்வு செய்ய வேண்டும்.   கோடான கோடி மக்கள் வாழ்கின்ற பூமியில் தனித்துவப்படுத்துதல் என்று வந்தால் கோடான கோடி மருந்து அல்லவா தேவைப்படும்.  இது புதிர்தான்.  இது சாத்தியப்படுமா? ஏன்ற கேள்வி எழுகிறது.

ஆம்.  சாத்தியப்படும்.  ஏனெனில் கோடான கோடி மக்களும் கோடான கோடி பொருட்களும் 109(NOW 118 elements) தனிமங்களால் மட்டுமே உருவாக்கப்பட்டவை.  எனவே இந்த 109 தனிமங்களைப் பற்றிய பண்புகள் அறியப்படும்போது நிச்சயமாக அனைத்து மனிதர்களுடைய தனித்தன்மைகளுக்கும் மருந்து தேர்வு செய்ய முடியும்.

ஹோமியோபதியில் இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துப் பொருட்களும் மருந்துகளாகக் கருதப்படுகின்றன.  அவை அனைத்தையும் நாம் நிரூபணம் செய்ய முடியுமா?  அல்லது வீரியப்படுத்தத்தான் முடியுமா?  ஆனால் இதை விட எளிமையானது அனைத்துப் பொருட்களுக்கும் ஆதாரமாக விளங்குகின்ற தனிமங்களை நிரூபணம் செய்வதும்,  அவைகளை மருந்துகளாகப் பயன்படுத்துவதும்தான்.

ஹோமியோபதியும், தனிமங்களின் அணு எண்படியான பட்டியலும்:

ஹோமியோபதியில் ஹானிமன் காலந்தொட்டு பல தனிமங்கள் தனியாகவும், கூட்டுக் பொருட்களாகவும் நிரூபணம் செய்யப்பட்டு மருந்துகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.  ஆனால் தனிமங்களின் அணு எண்படியான பட்டியலின்படி அனைத்துத் தனிமங்களும் பயன்படுத்தப்படவில்லை.

முதன்முதலில் தனிமங்களின் அணுஎண்படியான பட்டியலின்படி மருந்துகளை ஆய்வு செய்யும் பணியை ஜெர்மி செர் மேற்கொண்டார்.   அவரைத் தொடந்து இராஜன் சங்கரன் அவர்களும் மற்றும் ஹாலந்து நாட்டுக்காரரான ஜான் ஸ்கால்டன் அவர்களும் தனிமங்களை ஆய்வு செய்து ஹோமியோ மருந்துகளாகப் பயன்படுத்தி அவைகளின் மருத்துவப் பண்புகளைப் படம் பிடித்துக் காட்டியுள்ளார்கள்.

ஸ்கால்டனின் பார்வையில் தனிமங்களின் அணு எண்படியான பட்டியல்:
மொத்தத் தனிமங்களின் எண்ணிக்கை 109.   இந்தத் தனிமங்கள் ஒத்த வேதிப்பண்புகளுள்ள ஒரே ஒழுங்காகத் திட்டவட்டமாக வரையறுக்கப்பட்ட தொகுதிகளில் சேருகின்ற தனிமங்களின் அணு எண்படியான பட்டியலாக உருவாக்கப்பட்டுள்ளது.   இந்தத் தனிமங்களின் அணு எண்படியான பட்டியல் படுக்கை (Horizontal) வரிசையில் ஏழு தொகுதிகளாகவும் (Series) செங்குத்து (Vertical) வரிசையில் 18 படிநிலைகளாகவும் (Stages) வடிவமைக்கப்பட்டுள்ளன.

டாக்டர். ஜான் ஸ்கால்டன் அவர்கள் இந்த ஏழு தொகுதிகளையும் மனித வாழ்க்கையின் தோற்றம் முதல் அந்திமம் வரையிலான ஏழு பருவங்களாகப் பார்க்கிறார்.  இந்த ஏழு தொகுதிகளுக்கும் தனித்தனியே ஒரு கருப்பொருள், பருவம், இடம், புலன் உணர்வு மற்றும் திசுக்கள் என்று வழங்கப்பட்டுள்ளன.

இது மிகச் சிறந்த உற்றறிதலின் வெளிப்பாடாகும்.

மனிதனின் எந்தக் கட்டத்திற்கும் ஒரு கருப்பொருள் இருக்கும்.  அந்தக் கருப்பொருளை நடைமுறைப்படுத்த ஒரு குறிப்பிட்ட வயது வேண்டும்.  ஒன்றை நடைமுறைப்படுத்த அதற்கான தகுந்த இடம் வேண்டும்.  அவ்வாறு நடைமுறைப்படுத்தும்போது ஒரு குறிப்பிட்ட புலன் உறுப்பு முக்கிய பங்கு வகிக்கும்.    அதேபோல அந்த மனிதனில் குறிப்பிட்ட திசுக்கள் பாதிக்கப்படும்.

இவ்வாறு டாக்டர் ஸ்கால்டன் அவர்கள் ஒவ்வொரு தொகுதிக்குமான  தனித்தனி கருப் பொருள், பருவம், இடம், புலன் உணர்வு மற்றும் திசுக்கள் என்று பிரித்திருப்பது அவருடைய சமூகப் பார்வையும் உற்றறிதலையும் வெளிப்படுத்துகிறது.

இந்த ஏழு தொகுதிகள் ஒவ்வொன்றும் தோற்றம், வளர்ச்சி, உச்சகட்டம், வீழ்ச்சி, ஓய்வு என்ற வகையில் பதினெட்டு படிநிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

ஓவ்வொரு தொகுதிக்கும் (Series) ஒரு கருப்பொருள் (Theme) இருக்கிறது.  அந்த ஒவ்வொரு தொகுதிக்குமான தனித்தனி கருப்பொருள்களுக்கும் பொதுவான பதினெட்டு படிநிலைகள் (Eighteen stages  ) இருக்கின்றன.  மேலும் ஒவ்வொரு படிநிலைக்கும் ஒரு தனி கருப்பொருள் இருக்கிறது.

.........................................................
 முதல் தொகுதி ஹைட்ரஜன் தொகுதி.  இது மனிதனின் தோற்றத்தைக் குறிக்கின்றது.  இதில் ஹைட்ரஜன் முதல் ஹீலியம் வரையிலான தனிமங்கள் இருக்கின்றன.

இரண்டாவது தொகுதி கார்பன் தொகுதி.  இதன் கருப்பொருள் நான் என்பதன் வளர்ச்சியைக் குறிக்கின்றது.  இதில் லித்தியம் முதல் நியான் வரையிலான தனிமங்கள் இருக்கின்றன.      

மூன்றாவது தொகுதி சிலிகம் தொகுதி.  இது உறவு முறைகளைக் கருப்பொருளாகக் கொண்டுள்ளது.  இதில் நேட்ரம் முதல் ஆர்கான் வரையிலான தனிமங்கள் இருக்கின்றன.

நான்காவது தொகுதி பெர்ரம் தொகுதி.  இது பணியை, வேலையைக் கருப்பொருளாகக் கொண்டுள்ளது.  இதில் காலியம் முதல் கிரிப்டான் வரையிலான தனிமங்கள் இருக்கின்றன.

ஐந்தாவது தொகுதி அர்ஜென்டம் தொகுதி.  இது படைப்பைக் கருப்பொருளாகக் கொண்டுள்ளது.  இதில் ரூபியம் முதல் ஜெனான் வரையிலான தனிமங்கள் இருக்கின்றன.

ஆறாவது தொகுதி ஆரம் தொகுதி.  இது அரசன் அல்லது தலைவர் என்பதைக் கருப்பொருளாகக் கொண்டுள்ளது.  இதில் காசியம் முதல் ரேடான் வரையிலான தனிமங்கள் இருக்கின்றன.

ஏழாவது தொகுதி யுரேனியம் தொகுதி.  இது ஞானி அல்லது அறிஞர் என்பதைக் கருப்பொருளாகக் கொண்டுள்ளது.  இதில் ப்ரான்சியம் முதல் புளுட்டோனியம் வரையிலான தனிமங்கள் இருக்கின்றன.

இவ்வாறு ஒவ்வொரு தொகுதியும், அந்தந்தத் தொகுதிக்கான பிரத்யோகப் பண்பை பெருவாரியாகக் கொண்டுள்ள தனிமங்களின் பெயரால் அழைக்கப்படுகின்றன.

மேலும் ஒவ்வொரு தொகுதியிலும் வருகின்ற தனிமங்களின் பண்புகள் பொதுப்படையாக ஒத்தத் தன்மையுள்ளவையாக இருக்கின்றன.  அதனாலே ஒவ்வொரு தொகுதியிலும் ஏற்கனவே நிரூபணம் செய்யப்பட்ட அந்தத் தொகுதியிலுள்ள தனிமத்தின் பண்புகளிலிருந்து நிரூபணம் செய்யப்படாத  தனிமங்களின் பண்புகளை டாக்டர் ஸ்கால்டன் அவர்களால் யூகிக்க முடிந்தது.

ஓவ்வொரு தொகுதிக்கும் தனித்தனி கருப்பொருள் இருந்தாலும், அனைத்துக்கும் பொதுவான தோற்றம், வளர்ச்சி, உச்சகட்டம், வீழ்ச்சி, ஓய்வு என 18 படிநிலைகள் கொண்டுள்ளது.  ஓவ்வொரு தொகுதிக்கும் தனித்தனி கருப்பொருள் இருந்தாலும், அனைத்துக்கும் பொதுவாகவே தோற்றம், வளர்ச்சி, உச்சக்கட்டம், வீழ்ச்சி, ஓய்வு என்பது இருக்கின்றபடியால், இந்த ஏழு தொகுதிகளுக்கும், தோற்றம், வளர்ச்சி, உச்சக்கட்டம், வீழ்ச்சி மற்றும் ஓய்வைக் குறிப்பதற்கு அனைத்துக்கும் பொதுவான 18 படிநிலைகள் இருக்கின்றன.

18 படிநிலைகளுக்கும் தனித்தனி கருப்பொருள்கள் இருக்கின்றன.  ஒவ்வொரு படிநிலைக்கும் தனித்தனி கருப்பொருள் இருக்கின்றது.   ஓவ்வொரு படிநிலையிலும் உள்ள கருப்பொருள் அனைத்துத் தொகுதிகளுக்கும் பொதுவானதாகக் கருதப்படுகிறது.

முதல் படிநிலையின் கருபொருள் தோற்றம் : Begining
இரண்டாவது படிநிலையின் கருபொருள் இடத்தைக் காணுதல்:Finding a space
மூன்றாவது படிநிலையின் கருபொருள் ஒப்பிடுதல் : Comparing
நான்காவது படிநிலையின் கருபொருள் நிறுவுதல் : Establishing
ஐந்தாவது படிநிலையின் கருபொருள் தயாரித்தல் : Preparing
ஆறாவது படிநிலையின் கருபொருள் நிரூபித்தல் : Proving
ஏழாவது படிநிலையின் கருபொருள் பயிற்சி செய்தல் : Practising
எட்டாவது படிநிலையின் கருபொருள் விடா முயற்சி : Perseverance
ஓன்பதாவது படிநிலையின் கருபொருள் வெற்றி கிட்டும் தொலைவில் : Success in sight
பத்தாவது படிநிலையின் கருபொருள் மேதை : Lord and Master
பதினொன்றாவது படிநிலையின் கருபொருள் பேணுதல் : Preserving
பன்னிரெண்டாவது படிநிலையின் கருபொருள் பகுப்பு : Division
பதிமூன்றாவது படிநிலையின் கருபொருள் பின்வாங்குதல் : Withdrawal
பதிநான்காவது படிநிலையின் கருபொருள் சம்பிரதாயமானது : Formal
பதினைந்தாவது படிநிலையின் கருபொருள் இழப்பு : Loss
பதினாறாவது படிநிலையின் கருபொருள் ஞாபகப்படுத்துதல் : Remembering
பதினேழாவது படிநிலையின் கருபொருள் முடிவுக்கு விட்டுவிடுதல் : The end letting go
பதினெட்டாவது படிநிலையின் கருபொருள் ஓய்வு : Rest

இவ்வாறு பதினெட்டு படிநிலைகளுக்கும் தனித்தனி கருப்பொருள்கள் இருக்கின்றன.  (அட்டவணையைப் பார்க்கவும்).  ஓவ்வொரு படிநிலையிலுமுள்ள கருப்பொருள்களும் அதன் உட்பொருள்களும் அனைத்துத் தொகுதிகளுக்கும் பொதுவானது.


.......
எந்த ஒரு தனிமத்தின் பண்பையும் அதன் தொகுதியின் கருப்பொருளையும் அதன் படியிலைக்கான கருப்பொருளையும் சேர்த்துப் பகுப்பாய்வு செய்யும்போது அறியலாம்.  மேலும் ஒவ்வொரு தொகுதிக்கும் ஒவ்வொரு படிநிலைக்கும் தனித்தனியே கருப்பொருள் இருந்தாலும்,

  இந்தக் கருப்பொருள் ஒவ்வொன்றும் பிரதான சொற்களால் வரையறுக்கப்படுகின்றன. (அட்டவணை இணைப்பு).


அந்தச் சொல்லையொட்டி துயரரின் கூற்று இருக்கும்பட்சத்தில் அவர் இன்ன தொகுதியில் இன்ன படிநிலையில் இருக்கிறார் என்பதை யூகிக்க முடியும்.

உதாரணமாக ஒருவர் தன்படைப்பாற்றல் தொடர்பாக அறைகூவல் விடும் மனப்பான்மையுடன், தன் திறமையை நிரூபிக்கும் கட்டத்தில் இருப்பாரானால், அவர் ஆறாவது படிநிலையில் இருக்கிறார்.  படைப்பாற்றல் என்பது ஐந்தாவது தொகுதியான அர்ஜெண்டம் தொகுதியில் ஆறாவது படிநிலையில் உள்ள மாலிப்டினம் என்ற தனிமத்தில் இருக்கிறார் என்று அறிய முடியும்.
இவ்வாறு நாம் எளிதில் ஒரு தனிமத்தைப் பற்றிய கருப்பொருளை

அறியாமலேயே பிரதானச் சொற்களைக் கொண்டு நாம் எளிதில் துயரருக்கான மருந்தை அறிய முடியும்.   பெரும்பாலான துயரர்களிடம்இது சாத்தியமாகும்.  இருப்பினும் தனிமங்கள் ஒவ்வொன்றையும் பற்றி ஸ்கால்டன் விவரித்திருப்பது பிரதானச் சொற்களுக்கு அப்பாற்பட்டும் இருக்கின்றது என்கிறபடியால் தனிமங்களின் பண்பு விளக்க வரைபடத்தை சரியாகப் புரிந்து கொள்வதன் மூலம் மட்டுமே நாம் துயரருக்கான சரியான மருந்தைத் தேர்வு செய்ய முடியும்.
இங்கே டாக்டர் ஸ்கால்டன் அவர்கள் எவ்வாறு ஒவ்வொரு தொகுதிக்குமான மற்றும் ஒவ்வொரு படிநிலைகளுக்குமான கருப்பொருளை நிர்ணயம் செய்தார்.  எதன் அடிப்படையில் தனிமங்களின் அட்டவணையை மனித வாழ்வோது ஒப்பீடு செய்தார்? என்பதற்கான விபரங்கள் கெடுக்கப்படவேயில்லை என்று கூட சொல்லலாம்.


ஸ்கால்டனின் ஆய்வு பற்றி:

ஓவ்வொரு தொகுதியிலும் ஒத்த வேதிப் பண்புகள் கொண்ட தனிமங்களை ஒழுங்காகத் திட்டவட்டமாக வரிசைப்படுத்தப்பட்டதிலிருந்து கருப்பொருளை ஊகித்திருக்கலாம்.

அணு எண் மற்றும் தனிமங்களின் வேதியல் மற்றும் பௌதீகப் பண்புகளை ஆய்வு செய்ததன் மூலம் ஒவ்வொரு தொகுதிக்குமான கருப்bhருளை நிர்ணயித்திருக்கலாம்.

ஓவ்வொரு தொகுதியிலும் ஏற்கனவே நிரூபணம் செய்யப்பட்டு, பெறப்பட்ட சில தனிமங்களின் பணிபுகளைக் கொண்டு நிரூபணம் செய்யப்படாத தனிமங்களின் பண்புகளை அறிந்திருக்கலாம்.  இது சாத்தியமானதுதான்.  ஏனெனில் தனிமங்களைத் தொகுதிப்படுத்தும் போது ஒரு தொகுதியில் இடையில் விடுபட்ட தனிமத்தப் பற்றிய விபரத்தை, ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டு அந்தத் தனிமத்திற்கு முன்னும், பின்னும் இருக்கின்ற தனிமங்களின் பண்புகளைக் கொண்டு அவ்விடுபட்டத் தனிமத்தின் பண்பை அறிய முடியும் என்பதை வேதியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இருந்தபோதிலும் டாக்டர்ஜான் ஸ்கால்டன்அவர்கள்தனிமங்களைப் பற்றிய விரிவுரை போதிய சான்றுகளின்றி இருக்கின்றன.

அவருடைய தனிமங்களைப் பற்றிய வரைபடம் ஊகங்களையே பிரதானமாகக் கொண்டுள்ளதாகக் கருதலாம்.  ஏனெனில் அவை நிரூபணம் செய்யப்படவில்லை.

பல தனிமங்களின் பண்புகள் நிரூபணம் செய்யப்படாமலேயே வரையப்பட்டிருந்தாலும், நிரூபணம் செய்யப்படவில்லை என்ற காரணத்தினால் மட்டுமே அவற்றை நிராகரிக்க முடியாது.  ஏனெனில் அவர் விவரித்தபடி துயரர் வரும்போது, அவருக்கு அந்தத் தனிமத்தைக் கொடுக்கும் போது, அது அவரை நலமாக்குவதை நான் பல துயரர்களிடம் பார்ததிருக்கிறேன்.

பெரும்பாலும் நிரூபணம் செய்ய்பபட்ட ஹோமியோ மருந்துகள் நிரூபணம் செய்யும்போது அவை வெளிப்படுத்தும் குறிகள் அவைகளின் இயற்கைத் தனிக் குறியீட்டுப் பண்பை (Signature) ஒத்திருப்பதைக் காண்கிறோம்.  அதனால் இயற்கையில் உள்ள ஒரு பொருளின் தனிக் குறியீட்டுப் பண்புகளை உணரும்பட்சத்தில் அதனை வீரியப்படுத்தி அந்தப் பண்பையொத்த துயரருக்குக் கொடுக்கும்போது நிச்சயம் அது ஒத்தவை விதிப்படி குணப்படுத்தும் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி வரலாற்றில் நிரூபிக்கப்பட்ட உண்மை.
அதனால் ஸ்கால்டன் தனிமங்களைப் பற்றி எழுதியது நிரூபணம் செய்து தொகுப்பட்டவையில்லை என்ற காரணத்தினால் நிராகரிக்கப்பட வேண்டியவையல்ல.  பெரும்பாலான தனிமங்களும் அவற்றின் தொகுப்புப் பொருட்களும் சிறப்பாகவே வேலை செய்கின்றன.

டாக்டர் ஸ்கால்டன் அவர்கள் தனிமங்களின் அட்டவணைப்படி, மனித வாழ்க்கையை ஏழு தொகுதிகளாகப் பிரித்திருப்பது அர்த்தம் நிறைந்ததாக உள்ளது.  சூதாற்றம், நான் என்ற வளர்ச்சி, உறவு தொழில், படைப்பு, தலைமை மற்றும் ஞானி என்று ஏழு பிரிவுககளாக மனிதனின் தோற்றம் முதல் இறுதி வரையிலான வாழ்க்கை முறையைப் பிரித்திருப்பது மிகவும் சரியாகப் பிரித்திருப்பதாகவே தெரிகிறது.  இதை எவ்வாறு செய்தார் என்பதற்கான போதிய விளக்கம் கொடுக்கப்படவில்லை என்றாலும் மனித வாழ்க்கையை உற்றறியும் ஒருவருக்கு மனித வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களை யூகித்து அறிவது சிரமமான காரியமன்று.

ஆனால் ஒவ்வொரு தொகுதியும் பதினெட்டு படிநிலைகளைக் கொண்டதாகவும், அவை முறையே தோற்றம், வளர்ச்சி, உச்சக்கட்டம், வீழ்ச்சி, ஓய்வு என்று   கணிக்கப்பட்டிருக்கும் போது எப்படி ஒரு தொகுதி முடியும்போது அடுத்தத் தொகுதி தொடங்கும் என்பது புதிராக உள்ளது.  இவ்வாறு ஸ்பிரிங் சுருள் போன்று ஒவ்வொரு தொகுதியும் அறாத் தொடர்ச்சியாக இருப்பதாக எண்ணுவது நகைப்புக்கு இடமாக உள்ளது.  உதாரணமாக பணிக்கான தொகுதியான நான்காவது தொகுதியில் உள்ள ஒரு மனிதன் தொழில் செய்து படிப்படியாக உயர்ந்து, தாழ்ந்து பிறகு தரித்திரனாகி ஓய்ந்து போனவன் எப்படி (ஆர்சனிக்கம், செலினியம், புரோமியம்)  படைப்பாற்றலோடு இருப்பான்?  (ஒருவேளை பிச்சைஎடுப்பதற்காகப் பாடலாம்).  அதேபோல படைப்புத் தொகுதியில் தாழ்ந்து, ஓய்ந்து போனவன் எப்படி தலைமைத் தொகுதிக்கு தொடக்கமாக இருக்க முடியும்.  இது ஒருபோதும் சாத்தியம் இல்லை.  எனவே ஒவ்வொரு தொகுதிகளையும் ஸ்பைரலாக ஒன்றின் தொடர்ச்சியாக மற்றொன்று இருப்பதாக குறிப்பிடுவது பொருத்தமற்றது.  ஆனால பரிணாம வளர்ச்சியில் ஒரு மனிதனின் வாழ்வில் அனைத்துத் தொகுதிகளும் கூட நடந்தேறி விடும் என்று கருதலாம்.  ஆனால ஒரு மனிதனில் ஒரு தொகுதி முழுமையாக முடிந்தபின்பு தான் அடுத்தத் தொகுதி தொடங்கும் என்று கருதுவதுதான் சாத்தியமற்றது.  பரிணாம வளர்ச்சியின் அறாத் தொடாச்சியை இந்த ஸ்பைரல் மூலம் ஸ்கால்டன் அவர்கள் விளக்க முற்படுகிறார் என்று கருதுவோமெனில் ஏற்புடையதாக இருக்கும்.  ஒரு மனிதன் ஒரு தொகுதியின் உச்சத்தில் இருக்கும்போதுதான் அடுத்த தொகுதிக்கு வரமுடியும் என்பது சரியாக இருக்கலாம்.

தொகுத்துப் பகுப்பாய்வு (Group Analysis) : 
டாக்டர் ஸ்கால்டன் செய்ததில் மிகவும் சிறப்பானதும் மிகவும் பயனுள்ளதும் என்று கருதப்படுவது அவர் தனிமங்களைத் தொகுத்து பகுப்பாய்வு செய்வதும் அதன் மூலம் அந்தப் பொருளின் பண்பை வரையறுப்பதுமாகும்.

இந்தத் தனிமங்களைத் தொகுத்துப் பகுப்பாய்வு செய்யும் பணியை டாக்டர் க்ளார்க் அவர்கள் மோரிகன் மற்றும் வித்தௌல்காஸ் போன்றவர்கள் செய்துள்ளார்கள்.  இதை டாக்டர் ஸ்கால்டன் அவர்கள் மிகவும் சிறப்பாகச் செய்துள்ளார்.

இவருடைய முதல் புத்தகமான ஹோமியோபதி மற்றும் மினரல்ஸ் (HOMOEOPATHY AND MINERALS)என்ற புத்தகத்தின் பெர்ரம் தொகுதிக்கு மட்டும் செய்துள்ளார்.  அவருடைய ஹோமியோபதி மற்றும் தனிமங்கள் (HOMOEOPATHY AND ELEMENTS) என்ற நூலில்  மற்ற தொகுதிகளுக்கு இன்னும் விரிவாகச் செய்துள்ளார்.



பகுப்பாய்வு முறையில் ஸ்கால்டனை அறிந்து கொள்ள:

1. தனிமங்களைத் தொகுத்துப் பகுப்பாய்வு செய்வது மட்டுமின்றி, ஒரு தொகுதியின் கருப்பொருளையும், ஒரு படிநிலையின் கருப்பொருளையும் எடுத்து, இரண்டுக்குமான  ஆதார வார்த்தைகளைத் தொகுத்து, ஒரு புதிய தனிமத்தின் பண்பையும் கருப்பொருளையும், கருப்பொருளுக்கான ஆதார வார்த்தைகளையும் உருவாக்கியுள்ளார்.

2. ஒருவருக்கு நேட்ரம் தனிமத்தின் பண்பும், பாஸ்பரஸ் தனிமத்தின் பண்பும் இருக்கும்பட்சத்தில் அவருக்கு நேட்ரம் மற்றும் பாஸ்பரஸ் என்ற இரு தனிமங்களைக் கொடுப்பதற்குப் பதிலோக நேட்ரம் பாஸ் என்ற தாது உப்பைக் கொடுக்க முடியும்.
இங்கே நேட்ரத்தின் அடிப்படைக் கருப்பொருளும், பாஸ்பரஸின் அடிப்படைக் கருப்பொருளும் இணைந்து ஒரு புதிய கருப்பொருள் உருவாக்ப்படுகிறது.  இதில் நேட்ரத்தின் சாயல் தனியாகவும், பாஸ்பரஸின் சாயல் தனியாகவும் இருப்பதற்குப் பதிலாக இரண்டும், இரண்டறக் கலந்த ஒரு புதிய சாயலாக அதற்கேயுண்டான கருப்பொருளாக வெளிப்படுகிறது.

3. நேட்ரத்தின் சாரம் தனித்து  (Alone) கார்பானிக்கத்தின் சாரம் மதிப்பு  (Dignity).  ஒரு மனிதர் தன்னைச் சார்ந்தவர்களுக்காக உழைத்து பாடுபட்டு எல்லோரையும் ஆளாக்கிய பின்பு இவர் யார் யாருக்காகப் பாடுபட்டாரோ அவர்களாலேயே அவருடைய மதிப்பு பாதிக்கப்படும் பட்சத்தில், தன் மதிப்பைக் காப்பாற்றிக் கொள்ளத் தனித்துப் போக வேண்டியதாயிற்று.  இந்த நிலையில் தனித்து இருப்பதே மதிப்பானது என்ற மனநிலைக்கு நேட்ரம் கார்பானிக்கம்தான் மருந்தாக இருக்க முடியும்.

4. தொகுப்பாய்வில் கார்பானிக்கம், நைட்ரஜன், புளோரின், சிலிகம், பாஸ்பரஸ், சல்பர், மூரியாடிகம், ஆர்சனிகம், புரோமியம், அயோடம், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், லாக்டிகம் மற்றும் அசிடிகம் ஆகிய தனிமங்கள் ஒவ்வொன்றுக்கும் உரித்தான கருப்பொருளும் பிரதான வார்த்தைகளையும் கொண்டுள்ளது.  இந்தத் தனிமங்கள் அனைத்துத் தொகுதிகளிலும் உள்ள தனிமங்களோடு இணைந்து புதிய வேதிப் பொருட்களை உண்டாக்குகின்றன.  அந்த வேதிப்பொருள் இரண்டு தனிமங்களின் சாரங்களையும் உள்ளடக்கி ஒரு புதிய சாரத்தோடு இருக்கின்றது.
இவ்வாறு இரு தனிமங்களைத் தொகுத்துப் பகுப்பாய்வு செய்வதன் மூலம் பல புதிய வேதிப் பொருள்கள் அதற்கே உண்டான தனித்தன்மையுடன் கூடிய சாரத்தோடு இருக்கின்றன.

5. இரண்டு தனிமங்களின் அடிப்படை வார்த்தைகளை இணைப்பதன் மூலம் அந்த வேதிப் பொருளின் பண்பை அறிய முடியும் என்று பார்த்தோம்.  இது பல புதிய மருந்துகளைப் பகுப்பாய்வு செய்து அறிய உதவுகிறது.
அம்மோனியத்தின் அடிப்படை வார்த்தை வெறுப்பு.  கார்பானிக்கத்தின் அடிப்படை வார்த்தை அப்பா.  இப்போது அப்பா மீது வெறுப்புள்ள மனிதருக்கு அம்மோனியம் கார்பானிகம் மருந்தாகிறது.  இதேபோல் அம்மா மீது வெறுப்பு என்பவருக்கு அம்மோனியம் மூரியாடிகம்.  சகோதரர்கள் மீது மற்றும் படிப்பு மீது வெறுப்புள்ளவருக்கு அம்மோனியம் பாஸ்பாரிகமும், உணவு மீது வெறுப்பு உள்ளவருக்கு அமோனியம் அயோடைடும், மகிழ்ச்சியாக இருப்பதில் வெறுப்பு உள்ளவருக்கு அம்மோனியம் நைட்ரிகமும், கணவர் மீது வெறுப்புள்ளவருக்கு அம்மோனியம் சல்ப்யூரிகமும் என்று நாம் எளிதில் மருந்து தேர்வு செய்து விடலாம்.

6. ஒரு தனிமத்தின் அடிப்படை வார்த்தைகள் இன்னொரு தனிமத்தின் அடிப்படை வார்த்தைகளோடு இணையும்போது ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல இரு வேறுபட்ட பண்புகளும் வெளிப்படலாம்.  அப்பா மீது வெறுப்பு என்ற கருவில் அப்பா என்ற கார்பானிகமும், வெறுப்பு என்ற அம்மோனியமும் இரண்டும் சேரும்போது மகனுக்கு அப்பா மீது உள்ள வெறுப்புக்கும், மகன் மீது அப்பாவுக்கு உள்ள வெறுப்புக்கும் என்ற இரு கருக்களுக்கும் அம்மோனியம் கார்பானிகம்தான் மருந்து என்பதை இந்தப் பகுப்பாய்வில் புரிந்து கொள்ள வேண்டும்.

இதே போல் மெக்னீசியம்-கோபம் அடைதல்.  பாஸ்பாரிகம்-படிப்பு.  இங்கே படிக்கச் சொல்வதால் கோபம் அடைதல் மற்றும் படிக்க விடாததால் கோபம் அடைதல் என்ற எதிர் எதிரான உணர்வு நிலைக்கும் மெக் பாஸ்தான் மருந்து.
இவ்வாறு பகுப்பாய்வில் தனிமங்களின் அடிப்படை வார்த்தைகளை எடுத்துக் கொண்டு உடன்பாடான மற்றும் எதிர்மறையான நிலைகளுக்கு மருந்து கொடுக்கலாம்.

 பகுப்பாய்வு முறையும் மனித உறவுகளும் :
பகுப்பாய்வு முறையில் தனிமங்களை உறவு முறையோடு ஒப்பிட்டது மிகவும் சிறப்பானது.  அது பல துயரர்களுக்கு எளிதாக மருந்து தேர்வு செய்ய உதவுகிறது.

அப்பா - கார்பானிக்கம், சிலிகா
அம்மா - மூரியாடிகம்
சகோதர சகோதரிகள், நன்பர்களுடன்  தொடர்பு, படிப்பு, பயணம் - பாஸ்பரஸ்
மகிழ்ச்சி, பொழுதுபோக்கு - நைட்டிரிகம்
இமேஜ் - சிலிகா

கடமையை உணர்த்தும் அம்மா - காலி மூர்
அடித்து வளர்க்கும் அம்மா - பெர்ரம் மூர்
அம்மா மீது கோபம் - அம்மோனியம் மூர்

கோபப்பட்டால் அம்மாவைப் பிரிவோம் என்ற பயம் - மெக் மூர்
அதிகாரியாகவும், தாயாகவும் கடமை தவறாத அம்மா - ஆரம் மூர்
குழந்தைக்காக கலையை விட்டுக் கொடுத்த அம்மா - ஆண்டிமோனியம் மூர்
ஆச்சாரங்களையும், விதிமுறைகளையும் பின்பற்ற வலியுறுத்தும் அம்மா - குப்ரம் மூர்
பிள்ளைக்கு உதவுகிற அம்மா அல்லது அம்மாவுக்கு உதவுகிற பிள்ளை - மங்கானம் மூர்
கண்டிப்பான அம்மா அல்லது பாசம் கிடைக்காத மகன் - நேட்ரம் மூர்
உறுதியற்ற அம்மா - லித்தியம் மூர்
திறமையற்ற அம்மமா - பெர்லியம் மூர்
குறையை மறைக்கும் பகட்டான அம்மா - குரோமியம் மூர்
தான் படிக்காததை தன் குழந்தைகள் படித்து வாழ்க்கையில் சிறக்க வேண்டும் என்று நினைக்கிற அம்மா - ஜிங்கம் மூர்

வேலையையும், குழந்தைi வளர்ப்பையும் ஒரு சேரச் செய்ய முடியாத அம்மா அல்லது குழந்தைகள் பரீட்சையில் பெயிலானால் தான் பெயிலானதாக நினைக்கும் அம்மா - கோபால்டம் மூர்

குழந்தைகளின் வாழ்க்கைக்கு வழிகாட்டும் அம்மா - ஸ்ட்ரோண்டியம் மூர்

தன்னுடைய படைப்பாற்றால் தன் குழந்தை வளர்ப்பால் பாதிக்கப்படும்.  குழந்தைகள் தன்னுடைய படைப்பாற்றலை உறிஞ்சியதாகவும், எனக்கு எதிரிகள் என் குழந்தைகள் தான் என்று எண்ணும் அம்மா.  -  காட்மியம் மூர்

அரசைத் துறந்த அம்மா - பிளம்பம் மூர்

அறிவு வளர்ச்சி குன்றி பரிகாசத்திற்குள்ளான அம்மா - பாரிடா மூர்

இவ்வாறு அம்மா-பிள்ளை, கணவன்-மனைவி, சகோரர்கள், நன்பர்கள் என்ற உறவு முறைகளில் ஏற்படும் முரண்பாடுகளுக்கு தனிமங்களின் பகுப்பாய்வின் மூலம் எளிதில் மருந்து தேர்வு செய்யலாம்.

இவ்வாறு ஸ்கால்டன் பார்த்திருப்பது, உறவு முறைகளால் மனநிலை பாதித்து அதன் விளைவாக நோயுறும் பல துயரர்களுக்கு எளிதில் மருந்து தேர்வு செய்ய உதவுகிறது.

 இதற்காக நாம் குறுகிய வட்டத்திற்குள் சென்று விடக்கூடாது.
மூரியாடிகம் என்றால் அம்மா.
அம்மா என்றால் பேணுதலும், பராமரித்தலும் என்று கொள்ளலாம்.  இங்கே வயதான ஒருவரின் மனைவி இறந்த பின்பு அவருக்கு அவருடைய மனைவி தாய் போல் பராமரித்தார் என்ற பட்சத்தில் அவருக்கு நேட்ரம் மூரியாடிகம் கொடுக்கலாம்.
இதேபோல் தந்தையின் ஸ்தானத்தில் இருந்த அண்ணனை இழந்தவருக்கு நேட்ரம் கார்ப் கொடுக்கலாம்.  இங்கே உறவுகள் என்பதை விட உறவுகளைப் பிரதிபலிக்கிற உணர்வுகள்தான் முக்கியம்.

தனிமங்களைத் தொகுத்து பகுப்பாய்வு செய்யும் முறை பல வேதிப் பொருட்களின் பண்புகளை வரையறுக்கப் பயன்படுகிறது.

ஆனால், அவைகள் நிரூபணம் செய்யப்பட்டவைதானா? நிரூபணம் செய்யப்படாமல் இவ்வாறு பகுப்பாய்வு செய்து மருந்து கொடுப்பது எவ்வாறு சரியாகும் என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன.  இது ஹோமியோ தத்துவத்திற்கு எதிரானதாகக் கருதப்படுகிறது.  இவ்வாறு கூறுவதில் உண்மை இல்லாமல் இல்லை.  ஆனால் அதையும் மீறி அந்த மருந்துகள் ஒத்தவை  தத்துவத்தின் அடிப்படையில் கொடுக்கப்படும் போது சிறப்பாக வேலை செய்கின்றன.

.....
 ஸ்கால்டன் முறையில் துயரர் ஆய்வு.

மற்றவர்களை விட டாக்டர் ஸ்கால்டன் அவர்கள் துயரரை ஆய்வு செய்வதை வித்தியாசமாக செய்கிறார்.

துயரரை ஆய்வு செய்வதன் நோக்கம் துயரருடைய பிரச்சனையைச் சிறப்பாக படம் பிடித்துப் பார்ப்பதுதான்.
அதாவது அவரைச் சரியாக ஆய்வு செய்து சரியான மருந்தைத் தேர்வு செய்வதுதான்.    நாம் இதை எவ்வாறு செய்கிறோம் என்பது முக்கியமல்ல.  நாம் துயரரிடம் பல கேள்விகள் கேட்டு ஆய்வு செய்யலாம்.   துயரரை நுகர்ந்து பார்த்து ஆய்வு செய்யலாம்.  அவருடைய குரலைக் கேட்பதன் மூலம் ஆய்வு செய்யலாம்.  அவரைத் தொட்டுப்பார்த்து ஆய்வு செய்யலாம் அல்லது தூர திருஷ்டிப் பார்வையில் அறிந்து கொள்ளலாம்.  ஆக நாம் எப்படித் துயரரை ஆய்வு செய்தோம் என்பதை நாம் துயரருடைய வார்த்தைகளை அன்போடும், பரிவோடும் கேட்டோம் என்ற உணர்வு துயரருக்கு ஏற்பட்டதா என்பதை நிச்சயித்துக் கொள்வதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

நல்ல துயரர் ஆய்வு என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற நியதி எதுவும் இல்லை.  அந்தக் கணத்தில் உங்களுக்கு எப்படி ஆய்வு மேற்கொண்டால் துயரரை புரிந்து கொள்ள முடியுமோ அப்படி துயரர் ஆய்வைத் தொடங்கலாம்.

பொதுவாக ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் ஓர் இழப்பு, ஓர் ஏமாற்றம் அல்லது ஓர் ஆசை இருக்கும்.  இவர் எந்தத் தன்மையில் இருக்கிறார் என்பதை அறிந்து அதனடிப்படையில் துயரர் ஆய்வை மேற்கொள்ளலாம்.

எல்லாவற்றையும் விட அவருக்கு துயர் ஏற்பட்ட காலம் எப்போது என்பதை அறிந்து அந்தக் காலக்கட்டத்தில் அந்தத் துயரர் எந்தச் சூழலில் இருந்தார் என்பதை அறிதல் என்பது மிகவும் அவசியமாகும்.  அந்தச் சூழலில் அந்தத் துயரரின் மனநிலை எவ்வாறு இருந்திருக்கும் என்பதை அறிந்து அந்த மனநிலைக்குப் பொருத்தமான மருந்தைத் தேர்வு செய்யலாம்.

துயரர் ஆய்வின்போது அவருடைய பேச்சு எதை மையமாகக் கொண்டிருக்கிறது.  அவர் அடிக்கடி உபயோகப்படுத்தும் சொல் எது என்பதை சரியாகக் கவனிக்க வேண்டும்.  அந்தச் சொல்லைக் கொண்டு அவர் எந்தத் தொகுதியில்,  எந்தப் படிநிலையில் இருக்கிறார் என்பதை யூகிக்க முடியும்.


எனவே, துயரர் ஆய்வில் கடந்த கால வரலாற்றை அறிவது என்பது முக்கியப் பங்களிக்கிறது.  துயர் தொடங்கிய காலத்தில் துயரர் எந்தத் தொகுதியில்,  எந்தப் படிநிலையில் இருந்தார் என்பதை அறிய வேண்டும்.  மேலும், அப்போது அந்தச் சூழலுக்கேற்றாற்போல் அவருடைய மனநிலை எப்படி இருந்தது என்பதையும் அறிய வேண்டும் என்று டாக்டர் ஸ்கால்டன் வலியுறுத்துகிறார்.


Sunday, 12 March 2017

அம்மோனியா என்ற அருமருந்து

[ஹோமியோபதி அற்புதங்கள்
மேஜர் தி.சா.இராஜூ]
'
பல ஆண்டுகளுக்குப் பின் நான் மீண்டும் அனிருத்தனைச் சந்தித்தேன். பங்களாதேஷ் விடுதலைப் போரில் அவன் என் படைப்பகுதியில் பணிபுரிந்தான். பாகிஸ்தானியக்குண்டு ஒன்று வெடித்து அதன் விளைவாக அவன் ஒரு காலை இழந்தான். செயற்கைக் காலுடன் அவன் தொடர்ந்து பணியாற்றினான். ஊனமடைந்த நிலையிலும் அந்தப் போரில் பங்கு பெற்றவர்கள் பணிபுரியலாம் என்று அப்போதைய பாரதப் பிரதமர் உத்தரவு பிறப்பித்திருந்தார். அனிருத்தன் ஊனமுற்ற நிலையில் வீடு திரும்பவில்லை. அவன் போரில் மரணமடைந்து விட்டதாகக் குடும்பத்திற்குச் செய்தி அனுப்பச் செய்தான்.

அதற்குக் காரணமிருந்தது. அவனுக்கும் ஓமனக்குட்டிக்கும் திருமணம் நடக்க இருந்தது. ஊனமுற்ற நிலையில் அவள் அவளை மணக்க விரும்பவில்லை. ஓமனக்குட்டியோ திலகவதியைப் போல் அருஞ்செயல் புரிந்தாள். வாழ்க்கையைத் துறந்து கன்னிமாடத்தில் சேர்ந்து சமயத்தொண்டாற்றினாள். இந்த விவரங்கள் எல்லாம் அனிருத்தனே என்னிடம் கூறி தன் மனச்சுமையைக் குறைத்துக் கொண்டான்.

கோப்புகளில் என் கையொப்பம் பெறுவதற்காக சிலர் வரிசையில் நின்றனர். அவர்களில் அனிருத்தனும் இருந்தான். காத்திருந்த பத்து நிமிடங்களில் அவன் பலமுறை கழிப்பிடத்திற்குச் சென்று திரும்பினான். தும்மலும், இருமலும் ஒரே மூக்கடைப்பு அருகில் வந்ததபோது அவருடைய கைக்குட்டையில் பல கருப்புத் திட்டுகள் இருந்ததைக் கண்டேன்.
'
‘வழி நேரம் ஸாரினைக் காணான் ஒக்குமோ?’ (மாலையில் தங்களைச் சந்திக்கலாமா?) இது அவனுடைய கேள்வி.
'
‘ஆறு மணிக்கு வா. இந்த நேரத்தில்தான் நான் அன்பர்களை சந்திக்கிறேன்’ நான் பதிலளித்தேன். அற்பசங்கையை முடித்துக்கொண்டு அவன் தன்னறைக்குத் திரும்பினான். \
மாலை அனிருத்தன் என்னைச் சந்தித்து தன் உபாதைகளை விவரித்தான்.
அவற்றைப் பதிவு செய்து கொண்டேன்.
இரண்டு சிறப்புக் குறிகள் தலை தூக்கி நின்றன.
1. காலையிலேயே மூக்கடைப்பு
2. அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய கட்டாயம்.
'
அனிருத்தனுக்கு நான் கொடுத்த மருந்து அம்மோனியம் ம்யூரியாடிகம். ஆறாவது வீரியம் மூன்று பொட்டலங்கள்.
ஒரு வாரம் பொறுத்து அவனைக் கால்பந்து மைதானத்தில் சந்தித்தேன். ஒரு காலத்தில் அவன் சிறந்த கால்பந்தாட்டக்காரனாக இருந்தான். இப்போதம் அவனைப் பழைய ஆசை விடவில்லை. அடிக்கடி விளையாட்டு மைதானத்திற்குச் சென்று நண்பர்களுக்கு ஆலோசனை வழங்கினான். அவர்களை ஊக்குவித்தான். விளையாட்டுத் திடலில் அவனைக் காணும்போதெல்லாம் என் நெஞ்சு துணுக்குறும்.
எது கிட்டாதோ அதைத் தேடி அலைகிறேன். எதை நான் விரும்பவில்லையோ அது எனக்கு வசப்படுகிறது என்று குருதேவர் தாகூரே கூறி வருந்துகிறார். அனிருத்தனின் வாழ்க்கையில் அந்தச் செய்தி உண்மையானது கண்டு நான் உளம் வெதும்பி நின்றேன்.
'
"இந்நிலை நான் ஸாரினைக் காணான் வன்னு அத்யேகம் புறத்துப்போயி"
‘நேற்று தங்களைக் காண வந்தேன் நீங்கள் வெளியே போயிருந்தீர்கள்?’ அனிருத்தன் கூறினான்.
அகம், புறம் தூய தமிழ்ச் சொற்கசள் மலையாளத்தில் உள்ளதைக் கண்டு நான் பூரித்துப் போவேன்.
'
தூய தமிழ் சொற்கள் மற்ற திராவிட மொழிகளில் இருப்பiதை அறிவது இனிய அனுபவம். அவை வடமொழியிலும் உள்ளன.
அனிருத்தன் த்ன் உடல்நிலைப் பற்றிக் கூறினான். சளித் தொந்தரவு, மூக்கடைப்பு அனைத்தும் முற்றிலுமாக நீங்கி விட்டன. இன்னொரு விவரம் தங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். என் கால் வெட்டப்பட்ட இடத்தில் எப்போதும் ஒரு வேதனை இருந்த வண்ணம் இருந்தது. எவ்வளவோ வலிக் குறைப்பு மருந்துகள், ஊசிகள். ஆனால் வேதனை குறையவே இல்லை. ஆனால் கடந்த மூன்று நாட்களாக எந்தத் தொந்தரவும் தற்போது இல்லை. அவன் மகிழ்ச்சியுடன் கூறினான்.
'
எனக்கும் இது புதிய தகவல். நான்மருத்துவ மேதை கெண்டின் நூலைப் புரட்டினேன். அவர் இந்த வகையில் ஏதும் குறிப்பிடவில்லை. என் ஆசான் தந்துள்ள விவரங்களைப் புரட்டிப் பார்த்தேன். துண்டிக்கப்பட்டட நரம்புப் பகுதியில் ஏற்படும் வேதனையை இந்த மருந்து போக்கிவிடும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
என் ஆசான் ஒரு மாகடல். லிப்பே, ஃபாரிங்டன், ஃபௌபிஸ்டர் ஆகிய நூலாசிரியர் தெரிவித்துள்ள விவரங்கள் எல்லாம் அவர் விரல் நுனியில் இருக்கும். அம்மோனியம் ம்யூரியாடிக்கம் குறித்த இந்தத் தகவலை அவர் என்னிடம் தெரி.த்திருந்தார். இதை போயரிக்கும் குறிப்பிட்டிருப்பதை நான் பின்னாளில அறிந்து கொண்டேன். இந்த விவரத்தை மறக்காமல் நான் என்னுடைய இரண்டாவது புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தேன்.
.
.........ஆண்டுகள் பல உருண்டு விட்டன. கடந்த மாதம் எனக்கு ஒரு கடிதம் வந்தது. அந்த அன்பர் அதைச் சென்னையிலிருந்து எழுதியிருந்தார். பெயர் ஜகன்னாதன். ஒரு விபத்தில் சிக்கி அவர் தமது கையை இழந்து விட்டார். காயம் குணமடைந்து விட்டது. ஆனால் வேதனை எப்போதும் தொடர்ந்து இருந்தது.
அவர் எழுதுகிறார். ‘இந்தத் துயரத்தைத் தணிக்க ஹோமியோபதி உட்பட பல மருத்துவ முறைகளை மேற்கொண்டேன். நிவாரணம் கிடைக்கவில்லை. நண்பர் ஒருவர் பரிவுரை செய்ததன் பேரில் உங்கள் புத்தகத்தைப் புரட்டினேன். ‘விபத்து’ என்ற தலைப்பில் நவச்சாரம் குறித்து எழுதியிருந்தீர்கள். ஆறாவது வீரியத்தில் அதைப் பயன்படுத்தினேன். எனக்குக் குணம் கிடைத்தது என்று எழுதியிருந்ததோடு தனது புகைப்படத்தையும் அனுப்பியிருந்தார்.

நான் உண்மையிலேயே நெகிழ்ந்து போனேன். தொலைதூரத்தில் சுலபமாக உட்ட முடியாத இடங்களில் மருத்துவத் தொண்டு புரியும் அன்பர்களுக்காக நான்இந்த மருத்துவ இலக்கியத்துறையில் ஈடுபட்டிருக்கிறேன். அது பலன் தருவதைக் கண்டு இறைவனின் அருளை எண்ணி வியக்கிறேன். ‘ஹோமியோபதி ஒரு வாழ்கலை, விஞ்ஞானம் என்ற அனது நூலில் (பக்கம் 360-61) எழுதியுள்ள விவரத்தை இங்கு குறிக்க விரும்புகிறேன்.


நவச்சாரம்

இதினின்று தயாரிக்கப்படுவது அம்மோனியம் ம்யூரியாடிக்கம்.  விரல் நுனிகளில் எல்லாம் புண்பட்டதைப் போன்ற நோவு.  குதிகாலில் இரண வலி.  தசை நார்கள் குறுகிப் போவதால் ஏற்படும் சியாட்டிகா என்ற நரம்பு வலி.  இவற்றிற்கு இந்த மருந்து மிகச் சிறந்த பயனை அளிக்கும்.  வெட்டி எடுக்கப்பட்ட பகுதி மிகுதியில் நரம்பு தொடர்பான வலி ஏற்பட்டாலும், இம்மருந்து செயற்கை உறுப்புகளுடன் நடமாடும் பல படை வீரர்களின் சிரமங்களை இது போக்கிற்று என்பது நான் அறிந்த உண்மை.
இறைவன் பரம கருணை உடையவன்.
அம்மோனியம் உப்பு இனத்தைச் சேர்ந்தது.  காரப் பொருள் (ஆல்கஹால்) நாம் அன்றாடம் பயன்படுத்தும் சமையல் உப்பு (சோடியம் குளோரைடு) இரு வகைகளில் கிடைக்கிறது.  ஒன்று கடலுப்பு மற்றது கல்லுப்பு.  தென்னாட்டில் கல்லுப்பை இந்துப்பு என்று அழைப்பார்கள்.  இது மருந்துக் கடைகளில் மட்டும் கிடைக்கும்.  தென்னாடு கடலினால் சூழப்பட்டுள்ளது.  அந்த நீரைக் கரைக்குப் பாய்ச்சி சூரிய வெப்பத்தினால் உலர வைத்து கடலுப்பு தயாராகிறது.  இந்த இடத்தை உப்பளம் என்று அழைப்பார்கள்.  வடஇந்தியாவில் மளிகைக் கடைகளில் கல்லுப்பே கிடைக்கும்.  பெரும் துண்டுகளாக இருக்கும்அவற்றை உடைத்து உபயோகிப்பார்கள்.  பஞ்சாபில் இதற்குப் பெயர் ‘லூன்’ என்பதாகும்.  வங்கத்தில் ‘லொபன்’.  இரண்டுமே லவணம் என்ற வடமொழிச் சொல்லின் திரிபு.  இமயமலை முழுவதும் ஒரு காலத்தில் கடலடியில் மூழ்கிக் கிடந்தது.  அதன் காரணமாகவே மலைப்பிளவுகளில் உப்புப் பாளங்கள் கிடைக்கும் நிலை ஏற்பட்டது.
உலகத்தின் தொன்மையான நாகரிகம் உள்ள நாடுகளில் எகிப்தும் ஒன்று.  யூத, கிறிஸ்துவ சமயங்கள் தோன்றும் முன்னரே அங்கு ஒரு பழமையான சமுதாயம் வாழ்ந்து வந்தது.  அர்கள் கட்டடக் கலையில் கைதேர்ந்தவர்கள்.  அங்குள்ள பெரிய கற்சிலைகளும் பிரமிடுகளும் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன.  முக்கோண வடிவில் அமைக்கப்பட்ட கட்டடங்கள் தம்முள், பாதுகாக்கப்படும் பொருட்கள் நீண்ட காலம் கெடாமல் இருக்கும் என்று அவர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.  இந்த உண்மை அந்தப் பழங்கால எகிப்திய மக்களுக்குத் தெரிந்திருந்தது.  அவர்கள் கல்லினால அமைத்திருக்கும் பிரமிடுகளில் பாதுகாக்கப்படும் மனித உடல்கள் கூடப் பல ஆண்டுகள் கெடாமல் இருந்திருக்கின்றன.  ‘ஆமூன்’ என்ற எகிப்திய தேவதையின் பெயரிலிருந்து பிறந்ததே அம்மோனியா என்று மொழி வல்லுநர்கள் கூறுகிறார்கள்.  ஒட்டகங்களின் சாணக் குவியல்கள் இறுகிப் போய் அம்மோனியப் பாறைகள் ஆயின என்று ஸ்டெட்மான்ஸ் மருத்துவ அகராதி (பக். 84) குறிப்பிடுகிறது. 
எகிப்து ஒரு பாலைவனப் பிரதேசம்.  அங்கு ஒட்டகங்களின் மந்தை மிகுதி.  ஆகவே இது உண்மையாக இருக்கக்கூடும்.  இந்த அம்மோனியா காரத் தன்மை வாய்ந்தது.  சிறந்த களிம்பு நீக்கி, இன்றும் செம்பு, பித்தளை  ஆகிய  உலோகங்களை இணைப்பதற்கு இந்தக் காரப் பொடியைப் பயன்படுத்துகிறார்கள்.  கடுமையான சளித் தொந்தரவுக்கு ஆளாகியிருப்பவர்கள்இதை மோர்ந்து பார்கும் உப்பாகப் பயன்படுத்துவார்கள்.  இது மூக்கடைப்பை நீக்கிவிடும்.  மூக்கின் வழியாகக் காற்றுப் பாதைக்குள் இறுகியிருக்கும் அடைப்புகளை இது விரைவில் இளக்கிவிடும்.  சிலர் உறிஞ்சிகளைப் [inhalers]  பயன்படுத்துவார்கள்.  இதனுள் அடைக்கப்பட்டிருப்பதும் அம்மோனியாவே.
தூய்மையான அம்மோனியா கிடைப்பது அரியதாகும்.  இது மற்ற உப்புகளுடன் கலந்தே கிடைக்கும்.  கார்பனேட், குளோரைடு, பாஸ்பரஸ் ஆகியவற்றுடன் இது சேர்க்கப்படும்.  ஒவ்வொன்றுக்கும் தனித்தனி மருத்துவ இயல்பு உண்டு.  பொதுவாகப் பூந்தசைப் பகுதிகளில் அடைந்திருக்கும் சளியை நீக்குவதில் இது நிகரற்ற ஆற்றல் உடையது.
இந்த மருந்து மேதை ஹானிமன் காலத்து.  அவருடைய நாட்பட்ட நோய்கள் என்ற நூலில் இது குறித்து குறிப்புகள் உள.  இதை மெய்ப்பிக்கும்போது அவர் எத்தனை துயரங்களை மேற்கொண்டிருப்பார் என்று எண்ணி வியக்காமல் இருக்க முடியாது.  உடல் உபாதைகள் மட்டுமின்றி, உளவியல் துறையிலும் இது சிறப்பாகப் பணிபுரிகிறது என்று மேதை கெண்ட் எழுதுகிறார். (பக். 99) அடிக்கடி மன உளைச்சலுக்கு ஆட்படும் மங்கையர், சிறப்பாக மாதவிலக்குக் காலத்தில் சிரமப்படும் தன்மையுடையவர்களுக்கு இது ஒரு நல்ல மருந்து என்று அவர் கருதுகிறார்.
இதை என் அனுபவமும் உறுதிப்படுத்துகிறது.  நடுவயதைத் தாண்டிய ஒரு தாயார் எப்போதுமே புலம்பிக் கொண்டேயிருப்பார்.  பிறர் தன்னைப் பற்றிப் பேசுவதைக் கேட்டாலே பொங்கி எழுவார்.  எவ்வளவோ நய உரைகளைக் கூறினாலும் ஏற்க மறுப்பார்.  இத்தகைய இயல்புள்ளவர்களுக்கு அம்மோனியம் கார்பனேட் சிறந்த மருந்தாக அமைவதை நான் கண்டிருகிறேன்.  மாதவிடாய் ஏற்படும் முன்பும், அந்த நிலையில் இருக்கும் பெண்களும் பல உள.  உடலியல் மாற்றங்கள் நிகழும்.  இது இயற்கை நியதி.  அதுகாரணம் பற்ய அவர்கள் அமைதியாக ஒதுங்கி இருக்க வேண்டும் என்று வகுத்தார்கள்.  அவர்களுக்கு குளியல் கூடாது என்தற்குக் காரணம் குளிர்ந்த நீர் போக்கைத் தடை செய்யும் என்பதே.
பல குடும்பங்களில் மாதர்கள் பணிபுரிந்தே ஆக வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது.  இது தவிர்க்க முடியாததென்றாலும், அவர்கள் அந்த நாட்களில் கடினமான உடலுழைப்பில் ஈடுபடாமல் இருத்தல் நலம்.
அம்மோனியா மிகுந்த காரத்தன்மை உள்ளது என்பதை முன்னரே பார்த்தோம்.  பூந்தசைப் பகுதியிலிருந்து வெளிப்படு எந்த ஒழுக்கும் மூக்கு, கண், வாய், பெண்ணுறுப்பு, சிறுநீர்ப்பாதை ஆகிய எவற்றிலிருந்தும் வெளிப்படும் புண்ணை உண்டாக்கும் அளவிற்கு எரிச்சலுடன் கூடியதாக இருந்தால் நமக்கு உடனடியாக நினைவுக்கு வர வேண்டியது அம்மோனியா.  கண்களிலிருந்து வெளிப்படும் ஒழுக்கின் காரத்தன்மைனால் இமை முடிகள் உதிர்ந்து போகும்.  இதையும் கெண்ட் குறிப்பிடுகிறார்.
இன்னொரு சிறப்புக்குறி வெளிப்பாட்டின் நிறம்.  அது கருநிறமாக இருக்கும்.  மூக்கிலிருந்து வெளிப்பம் சளி கூட அதே நிறத்தில் இருகும்.  விலக்கின்போ வெளிப்படமூ உதிரமும் அதே நிறமாகவே இருக்கும்.  சிறுநீரும், மலமும் கூட அதே நிறத்தில் அமையு  ஏனைய பல மருந்துகளுக்கும் இத்தகைய தன்மை உண்டு என்றாலும், வெளிப்பாடு காரத்தன்மையுள்ளதாக இருந்தால் அப்போது உறுதியான பயன்தருவது அம்மோனியா.
இதயத்துடிப்பு மிகுதல், படபடப்பு, கிறுகிறுப்பு ஆகிய இடர்களுக்கும் இது சிறந்த நிவாரணி.  பழங்காலத்திலிருந்தே மருத்துவர்கள் இதைப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.  சித்த, ஆயுர்வேத முறைகளிலும்இதன் பெருமை பேசப்படுகிறது.
உடலும், முகமும் வீங்கி வெப்பம் அதிகரித்து உடலின் மேற்பகுதியில் புள்ளிகள் ஏற்பட்டு மயக்க நிலையில் உள்ள நோயாளிகளுக்கு இது உடனடி நிவாரணம் அளிக்கவல்லது.  இதை  எல்லா முறை மருத்துவர்களுமே ஏற்றுக் கொள்கின்றனர்.

Saturday, 11 March 2017

எயிட்ஸ் பற்றி................ அலோபதி மருத்துவருடன் ஒரு விவாதம்

எயிட்ஸ் பற்றி................
அலோபதி மருத்துவருடன் ஒரு விவாதம்

மேஜர் தி.சா.இராஜூ

திருவண்ணாமலையிலிருந்து செங்கம் செல்லும் பாதையில் அத்யேந்தல் என்ற சிற்றூர் உள்ளது. விக்டர் ஹ்யூகோ என்ற ஜெர்மானிய அன்பர் அதைத் தத்தெடுத்துக் கொண்டிருக்கிறார். அங்கு பல சிறந்த நலப்பணிகள் நடைபெறுகின்றன. அதில் ஒரு பிரிவு மருத்துவம்.
 அதன் தலைவர் டாக்டர்.ஆண்ட்ரியாஸ் எம்.டி.
ரமண மகரிஷிக்குப் பிறகு அவருடைய வழிமுறைகளைத் தெரிந்து கொள்வதற்காகவே டாக்டர்.விக்டர் ஹ்யூகோ சில நன்பர்களுடன் இங்கு வருகை புரிந்தார். தொடர்ந்து இங்கேயே தங்கி தொண்டு புரிந்தார்.
.
எத்தகைய பிரதிபலனையும் எதிர்பாராமல் தொண்டு புரியும் பலர் ஐரோப்பிய நாட்டில் உள்ளனர். ஏழை எளியவர்களுக்கு உதவ வேண்டும் என்பது கிறிஸ்துவ சமயத்தின் அடிப்படைக் கோட்பாடு. அது போற்றப்பட வேண்டியது.
.
டாக்டர். ஆண்ட்ரியாஸை எப்படியும் சந்தித்துவிட வேண்டுமென்று அவருடைய மருத்துவ முகாமுக்குச் சென்றேன். வெளியே பலதரப்பட்ட மக்கள் வரிசையில் நின்றனர். பல வயதினர், பல இனத்தவர் எல்லோரிடத்திலும் ஒரு நம்பிக்கை. அந்த வெள்ளைக்காரர் கைபட்டால் எல்லா நோய்களும் குணமாகிவிடுகின்றன என்று ஒரு மூதாட்டி தெரிவித்தார்.
ஒரு நாளைக்கு 264 நோயாளிகளை மட்டுமே அவரால் கவனிக்க முடிகிறது. எஞ்சியவர்கள் அந்த ஊரிலேயே தங்கி மறுநாள் சிகிச்சை பெற்றுக் கொள்கிறார்கள்.
எந்தத் துறையை மேற்கொண்டாலும் அதில் மக்களின் நம்பிக்கை என்பது வலுவான அடிப்படை. இதை இந்த மருத்துவர் பெற்றிருக்கிறார்.
என்னை அறிமுகப்படுத்திக் கொண்டதும் அவர் கூறினார்.
‘ஹோமியோபதி மருத்துவம் குறித்து பல நூல்கள் எழுதியிருக்கிறீர்கள். எனக்கு இருக்கும் நேரம் மிகவும் குறைவு’ அவர் மன்னிப்பை வேண்டும் குரலில் பேசினார்.
.
‘என்னுடைய நிலையும் அதுவேதான். நாம் நடந்து கொண்டே பேசுவோம்.’
.
அவர் பல இடங்களைச் சுற்றிக் காட்டினார். மருத்துவச் செடிகளின் பராமரிப்பு குறித்து பேசினார். ஆயுர்வேதம், அலோபதி, அக்யூபங்சர், ஹோமியோபதி பிரிவுகளுக்கு அழைத்துச் சென்றார். அவற்றின் தலைமைப் பொறுப்பேற்றிருப்பவர்களை அறிமுகப்படுத்தினார்.
.
டாக்டரிடம் ஒரு கேள்வியை எழுப்பினேன். ‘எய்ட்ஸ் என்று ஒரு நோய் இருப்பதாக விளம்பரம் செய்கிறார்களே, அதை நீங்கள் நம்புகிறீர்களா?’
‘ஆய்வுக் களத்தின் மூலம் ஒரு செய்தி நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அதை எப்படி மறுக்க முடியும்?
 .
எய்ட்ஸ் என்பது என்ன?’ இது என் வினா.
.
‘வெளியிலிருந்து பெறப்பட்ட நோய் எதிர்ப்புத் திறனை அழிக்கும் தொகுப்பு என்பதே பொருள். அது ஒருவகை நோய்க் கிருமியினால் உண்டாகிறது. அதற்கு மருந்தே கிடையாது.
'
"நீங்கள் ஜேம்ஸ் டெய்லர் கெண்ட் எழுதிய நூலைப் படித்ததுண்டா?’ நான் வினவினேன்.
'
‘நான் தேர்வு பெற்றிருப்பது அலோபதித் துறையில்தான் என்றாலும் நான் ஹோமியோபதி முறையை நம்புகிறேன்.'
" உங்களிடம் கெண்ட் எழுதிய நூல் உள்ளதா?" (ஹோமியோபதி தத்துவ விளக்கப் பேருரைகள்) டாக்டர் அதை எடுத்து வந்தார்.
‘அதில் 51-ஆம் பக்கத்தை படியுங்கள்’-தணிந்த குரலில் அவர் அதைப் படித்தார்.
'
அதன் சாரம் இதுதான்- ‘கிருமிகளினால் நோய் ஏற்படுவதாக ஒரு நம்பிக்கை உள்ளது. ஆனால கிருமிகள் துப்புரவுப் பணியைச் செய்வதற்கே அங்கு வருகின்றன. ஆகவே கிருமிகளினால் நோய் ஏற்படுகிறது என்ற கொள்கை தவறானது. உலகத்தில் மனித இனத்தை அழிக்க எந்தப் படைப்பும் சிருஷ்டிக்கப்படுவதில்லை’.
.
உடனடியாக ஆண்ட்ரியாஸால் பதில கூற முடியவில்லை. மென்று விழுங்கினார். கிருமிகளினால் நோய் வருவதாக வைத்துக் கொண்டாலும் அதே கிருமிகளை உடலில் செலுத்தி நோயைத் தவிர்க்கலாமே? ஜென்னிங்ஸ் அதைத்தானே செய்தார். அதை ஹோமியோபதி மருத்துவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை என்பது வேறு விஷயம். எம் ஆசான் அம்மைப்பாலை உடலில் ஏற்றாதீர்கள் என்று படையினர் மருத்துவமனைகளுக்கே சென்று பிரசாரம் செய்வார்.
.
‘நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?’
'
‘எயிட்ஸ் என்பது வெறும் புரட்டு. அப்படி ஒரு நோய் இல்லை என்பதே என் அடிப்படைக் கருத்து. இதுவரை எத்தனை எய்ட்ஸ்"""" நோயாளிகள் உங்களிடம் வந்திருக்கிறார்கள்?’
'
எவருமில்லை. இனி வருவார்களானால் அவர்களை உங்களிடம் அனுப்பி விடுகிறேன். அத்தகையவர்களை நீங்கள் குணப்படுத்தி விடுவீர்கள் என்பதையும் நான் உணர்கிறேன். ஏனெனில் மருத்துவர் கெண்ட் ஒரு மாமேதை. அவர் சொல்வது தவறாக இராது என்பது உறுதி.
இந்த விவரத்தை அன்பர் ராபி அவர்களிடம் தெரிவித்தேன். அவர் ஹோமியோபதி தத்துவத்தின் மெய்த் தொண்டர். அதன் தத்துவங்களை எளியமுறையில் விளக்குவார். பெரும் செயல்வீரரும் கூட.
.
‘வெள்ளை, வெட்டை, குட்டம் என்று நீங்கள் அடிக்கடி வலியுறுத்துவீர்களே, அது ஆயுர்வேத முறையானாலும் நான் அதை ஏற்றுக் கொள்கிறேன். ‘அவர் என்னைப் பாராட்டி மகிழ்ந்தார்’.
‘மருத்துவ அறிஞர்கள் ஏன் இது பற்றிச் சிந்திப்பதில்லை? எழுதுவதில்லை?’
.
‘சுவடு விழுந்த பாதையிலேயே நாம் சென்று கொண்டிருக்கிறோம். நீங்கள் நிறையக் கட்டுரை எழுதுகிறீர்கள். பலர் படிக்கும் ஏடுகளுக்கு நீங்கள் ஏன் இந்தச் செய்தியைத் தெரிவிக்கக்கூடாது?’ அவர் கேட்டார்.
.
‘என்னுடைய முயற்சியை அவர்கள் ஆதரிப்பதில்லை’
.
‘ஏன்?’
;
‘அவர்களுக்கு விளம்பரத்தின் மூலம் வரும் வருமானம் நின்றுவிடுமே’
.
நன்பர் நகைத்தார். நாம் சிந்திப்பதில்லை என்பது மட்டுமன்று. நமக்கு மக்கள் நலன் முக்கியமானதன்று. பொருள் வேண்டும். அதை எந்த வகையிலும் பெறலாம். பொது நலன் குப்பையில் போகட்டும்.
.
எய்ட்ஸ் என்று விளம்பர செய்யப்படுவது ஒரு பால்வினை நோய். இது ஓரினச் சேர்க்கையால் ஏற்படாது. பாலவினை நோய்களுக்கு நமது அம்புறாத்தூயியில் பல அருமருந்துகள் உள. அவற்றைப் பட்டியலிட இங்கு இடமில்லை.
நாம் சிந்திப்போம், செயல்படுவோம், உண்மையை மட்டும் உரக்கக் கூறுவோம்.
*****
மேஜர் தி.சா.இராஜூ வின் ஹோமியோபதி அற்புதங்கள் நூலில் இருந்து...
***************************************
அற்புதங்கள் தொடரும்........................
***************************************************

Friday, 10 March 2017

இனி நாம் செய்ய வேண்டுவது யாது?

[ஹோமியோபதி அற்புதங்கள்
மேஜர் தி.சா.இராஜூ]

'
மிகவும் சிறப்பு மிக்க தலைப்பு வாசகம். இதை லியோ டால்ஸ்டாயிடமிருந்து கடன் வாங்கிக் கொள்ளுகிறேன். லியோ டால்ஸ்டாயின் பெயரை எழுதும்போது அவருடைய கருத்துகள் பொது உடைமைத் தத்துவத்திற்கு மலர்ச்சி தர எவ்வளவு தொலைவு பயன்பட்டன என்றும் எண்ணிப் பார்க்கிறேன்.
'
‘பிறந்த வீட்டின் பெருமையை உடன் பிறந்தவனிடம் பீற்றிக் கொள்வது போல’ என்று ஒரு பழமொழியுண்டு ‘மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை’.
'
ஹோமியோபதி மருத்துவம் விஞ்ஞானபூர்வமானது, உறுதியாக நிவாரணம் அளிக்கக் கூடியது என்று நமக்குள்ளே புகழ்ந்து பேசிக் கொள்வதில் சிறப்பு ஏதும் இல்லை. மாற்றுக் கருத்து உடையவர்களையும் இத்துறைக்கு ஈர்க்க வேண்டும். அந்தத் துறையில் ‘அப்ரோச்’[ASSOCIATION FOR PROPAGATION OF CLASSICAL HOMOEOPATHY] Aproch Classical Homoeopathy தூய ஹோமியோபதி பிரச்சார சங்கம் -இன் பணி மகத்தானது.
‘மர்த்தனம் குண வர்த்தனம்’ ‘விஷம் விஷஸ்ய சமனம்’ (நீர்ப்பதனாலும், கடைவதனாலும் ஒரு பொருளின் ஆற்றல் அதிகமாகிறது. நஞ்சே நஞ்சுக்கு முறிவு) என்ற பரிவுரைகள் ஆயுர்வேதக் கோட்பாடுகள்.
அண்மையில் ஒரு சித்த மருத்துவ நிபுணரைச் சந்தித்து உரையாடினேன். அவர் கூறுகையில் போகர் என்ற சித்த மருத்துவர் சீன நாட்டிற்கும் சென்று திரும்பியவர், அவருடைய சமாதி பழனி மலையில் உள்ளது.
பழனியில் உள்ள பாலமுருகனின் திருவுருவம் நவபாஷாணத்தில ஆனது. சிலையில் உள்ளவை கந்தகம், பாதரஸம், ஆர்ஸனிகம், சயனேடு, சோடியம் ஆகியவற்றின் கூட்டு. இந்தச் சிலையின் மேல் தேன், நெய், வெல்லம், பழங்கள் ஆகியவற்றின் கலவையைச் சார்த்தி பிறகு அதை எடுத்து அன்பர்களுக்கு வழங்குகிறார்கள். பஞ்சாமிதத்தைத் தொடர்ந்து ஒரு மண்டலம் உண்டவர்களின் உடல் தொல்லைகள் பல நீங்கி விடுகின்றன என்பது கண்கூடு என்று அவர் கூறினார்.
இது ஹோமியோபதி அல்லாமல் வேறு என்ன? என்று நான் வினவினேன். சிறிது நேரம் விவாதித்த பிறகு அவர் அதை ஏற்றுக் கொண்டார். மருத்துவ அறிவின் எல்லைப் புள்ளியைத் தொட்ட சித்தர்களுக்கு அந்த ஹோமியோபதி முறையும் புரிந்திருக்கிறது என்பது தெளிவு என்று அவர் ஒத்துக் கொண்டார்.
.
ஆனால் மனக்குறிகளுக்கு வேறு எந்த மருத்துவ முறையாவது இவ்வளவு சிறப்பிடம் தருகிறதா என்பது ஒரு பெரிய கேள்வி.
.

ஒரு துயரர் சரிதை:

.
பல ஆண்டுகளாக, சுவாசக் குழல் கோளாறுகளினால் தொல்லையுற்று வந்த பேராசிரியர் என்னிடம் வந்தார். ஸைனஸைடிஸ், டான்ஸிலைடிஸ், ஃபாரஞ்சைடிஸ், லாரஞ்சைடிஸ், ப்ராங்கைடிஸ் என்று பெயரிட்டு பல காது, மூக்குத் தொண்டை மருத்துவ நிபுணர்கள் அவருக்கு மருந்து கொடுத்துப் பரிசோதித்திருக்கிறார்கள். மூக்கிற்கு மேல் துளையிட்டு சிகிச்சை அளித்திருக்கிறார்கள். இவருக்கு எந்த சிகிச்சை முறையும் பலன் தரவில்லை. தும்மல், இருமல், மூக்கடைப்பு என்று வாழ்நாள் முழுவதும் தொல்லை. அவர் தமது துயரங்களை விவரித்துக் கொண்டே போனார். நான் வென்னீரிலே குளிக்கிறேன். குடிப்பதும் அதுவே தான்.
.
நான் வழக்கமாக நோயாளிகளைப் பார்க்கும் நேரத்திற்குப் பின்னால் அவர் வந்திருந்தார். ஏன் இவ்வளவு தாமதம் என்று அவரைக் கேட்டேன். இந்த நேரம் வரை எமகண்டம் என்று விடையறுத்தார். அவருடைய பெயர் மதிஒளி, ஒரு கல்லூரியில் இயற்பியல் போதிக்கிறார்.
நான் அதிகம் யோசிக்கவில்லை. கோனியம் மாக்குலேட்டம்-இரு மாத்திரைகள்-முப்பதாவது வீரியத்தில் தொடர் மருந்தாக இரு சீனி உருண்டைப் பொட்டலங்கள்.
‘காலையில் வெறும் வயிற்றில் வாயை நன்றாகக் கொப்பளித்த பிறகு’
அவர் மூன்று நாள் பொறுத்து வந்தார். முதல் பொட்டலம் உண்ட அன்ற ஒரே தும்மல், மூக்கொழுதல், இரவு மூக்கடைப்பு. இரண்டாவது மூன்றாவது மருந்துகள் (?) அவற்றைக் குணப்படுத்தி விட்டன. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று காலை குளிர்ந்த நீரில் குளித்தேன்.
தொடர்பாக நான் கொடுத்தது அதே மருந்தின் இரண்டு மாத்திரைகள்-வீரியம் இருநூறு.
.
பல மாதங்களுக்குப் பிறகு ஓர் இலக்கியப் பேரவையில் அவரைச் சந்தித்தேன். அவர் என் கைகளைப் பற்றிக் கொண்டார். அய்யா, தற்போது எனக்கு எந்தத் தொல்லையுமில்லை. எல்லாமே குளிர்ந்த நீர்தான். முன்பெல்லாம் அதைத் தொட்டாலே தும்மல் ஏற்படும். நான் மீண்டும் வந்து உங்களைச் சந்திக்காதது என்னுடைய குற்றம் தான்.
கவலை வேண்டாம். இயேசுபிரான் எழுவரைக் குணப்படுத்தினார். அவர்களில் ஒருவர் மட்டுமே தேவகுமாரனுக்கு நன்றி கூறினார் என்று கார்னிஜி எழுதுகிறார்.
 .
ஹோமியோபதி மருத்துவர்கள் இத்தகைய நிகழ்ச்சிகளைப் பொருட்படுத்துவதே கிடையாது.
அந்த அன்பருக்கு நான் அந்த மருந்தைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் ஜே.டி. கெண்டின் ரெப்பர்ட்டரி, பக்கம் 85 (மூட நம்பிக்கை) SUPERSITIOUS -இக்கு கோனியம் மாக்குலேட்டம்தான் மருந்து என்பது அவருடைய கருத்து.
.
‘பொய்யுரையேன், சத்தியமே புகல்வேன்’ என்று வள்ளலாரைப் போல அடித்துப் பேசுகிறேன் இந்த மருத்துவமுறை மட்டுமே முழு நிவாரணம் தர முடியும். ஆகவே விரிவஞ்சி விடுகிறேன்.
.
"இனி நாம் செய்ய வேண்டுவது யாது?"
நோய்க் குறிகளைத் தேர்வு செய்யும்போது தவறாமல் மனக்குறிகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். மனிதன் என்பவன் மட்டுமே ஆறாவது அறிவு படைத்தவன்.
*****
ஹோமியோபதி அற்புதங்கள் நூலில் இருந்து
மேஜர் தி.சா.இராஜூ
***********************************************************************
அற்புதங்கள் தொடரும்.......

Thursday, 9 March 2017

சோரியாஸிஸ்[PSORIASIS] என்றால் என்ன?
ஹோமியோபதியில் தீர்வு உண்டா??

Major T S Raju


என் முன்னால் அமர்ந்திருக்கும் மங்கையின் முகத்தைப் பார்க்கிறேன். மாநிறம் என்றாலும் வாளிப்பாதன உடல்வாகு. கண்களில் இனம் புரியாத சோகம். அவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவரை வினவுகிறேன்.
'
‘நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?’
'
‘சென்னை’ அவர் ஒரு முகவரியைக் கூறினார்.
'
‘நெடுந்தொலைவிலிருந்து வந்திருக்கிறீர்கள்’ என்றேன்.
'
‘என் மனைவியின் சிற்றப்பா எங்களைக் காண வந்திருந்தார். அவருக்குச் சொந்த ஊர் தஞ்சாவூர். அவர்தான் எங்களுக்கு உங்கள் முகவரியைக் கொடுதூதார். அவருக்கு நெடுநாளாக முட்டி வலியும், சரும நோயும் இருந்தன. இரண்டையுமே நீங்கள் ஒருசேரக் குணப்படுத்திவிட்டதாகக் கூறினார். மிகவும் மகிழ்ச்சியோடு பேசினார். என் மனைவியின் நிலையைக் கண்டு உங்களிடம் சிகிச்சை பெறும்படி பரிவுரை செய்தார்’.

'உங்கள் மனைவிக்கு உள்ள சுகவீனம் என்ன?’
'
'எங்கள் குடும்ப மருத்துவர் இதை சோரியாஸிஸ் என்று குறிப்பிடுகிறார். மூன்றாண்டுகளாக அவர் மருந்து கொடுத்தார். ஊசி போட்டார். நிரந்தரமான பலன் ஏதும் காணோம்.
நோயுள்ள பகுதி, சிகிச்சை முறை, அதன் விளைவு ஆகியவை பற்றிக் கூறினால் எனக்குப் பயனுடையதாக இருக்கும்
என் மனைவிக்கு உடலின் பல பாகங்களில் புடைப்பு ஏற்படுகிறது அது மற்ற இடங்களுக்கும் பரவுகிறது. ஊசி போட்டால் தடிப்பு மாறுகிறது. அரிப்பும் இல்லை. ஆனால ஓரிரு மாதம் பொறுத்து அரிப்பு தொடர்கிறது. வேறு இடங்களிலும் கிளைக்கிறது’.
'
‘இதனால் நீங்கள் என்ன புரிந்து கொள்கிறீர்கள்?’
'
‘நாங்கள் அதிகம் மருத்துவ அறிவு இல்லாதவர்கள் நோய் வந்தால் மருத்துவரை அணுகுகிறோம். குணமளிக்கிறார்’.
'
‘நோயின் வேர் மருந்துகளினால அறுபடவில்லை. அதனால்தான் அது மற்ற இடங்களில் புடைத்துத் தன்னை வெளிக்காட்டுகிறது’.
'
‘சோரியாஸிஸுக்கு உங்கள் மருத்துவ முறையில் நிவாரணம் உண்டா?’
'புரியவில்லை அய்யா,
‘ஹோமியோபதி மருத்துவ முறையில் நோய்க்குறித் தொகுப்புக்குப் பெயர் ஏதும் கிடையாது. தோலின் மேல் ஏதாவது சுகவீனம் ஏற்பட்டால் நாம் மகிழ்ச்சி அடை யவேண்டும்’
'
'உங்கள் கூற்று வியப்பைத் தருகிறது.'
'
'உடலில் ஏற்படும் கழிவுப் பொருள்களான சிறுநீர், வியர்வை, மலக்கழிவு ஆகியவை உரிய முறையில், அளவில் வெளிப்பட வேண்டும். அந்தப் பாதைகளில் தடையோ, தயக்கமோ இருந்தால, அது தோல் வழியாக வெளிக்காட்டும். சர்மம் நமது உடலின் சாளரம். இதன் வழியே அழுக்குகள் வெளிப்படும்போது களிம்புகளின் உதவி கொண்ட அதை உள்ளே அமுக்க முயற்சி செய்தல் கூடாது. அவ்வாறு செய்தால் அது உடலின் உள்ளுறுப்புகளைத் தாக்கும்.'
'
நான் என் பரிசோதனைகளைத் துவக்குகிறேன். அது ஒரு நீண்ட பட்டியல். அந்த மங்கைக்குக் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக மூக்கு, தொண்டை அழற்சி உள்ளது. எப்போதும் சளி, சில சமயம் மஞ்சள் அல்லது பச்சை அதனுடன் கூடி, தோலின் மேல் புடைப்புகள், தலையிலும் புடைப்பு சுற்றிலும் சிறு சிறு புண்கள். வெள்ளைத் துகள், அரிப்பு எப்போதுமே உள்ளது. நாவு இலேசான மஞ்சள் கலந்த வெள்ளை. இவை சில குறிகள் மட்டுமே.
'
பழைய நிகழ்ச்சி ஒன்று என் நினைவுக்கு வந்தது. எங்கள் மருத்துவமனைக்கு முப்பது வயது மதிக்கத்தக்க மங்கையைக் கைத்தாங்கலாக அழைத்து வந்தார்கள். அவளுடைய பார்வை, உடலசைவு, பேச்சு அனைத்துமே பிபறருடைய கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருந்தன. அவருடைய கணவர் அவரைப் படிமானத்தில் வைத்திருந்தார். அவள் முரண்டினாள். கணவன் வன்முறையை பிரயோகிக்க முயன்றார். என் ஆசான் அவரை வெளியே அனுப்பி வைத்தார்.
பரிவுடன் நோயாளியைக் கவனித்தார். பேசினார் ஆசான். விவரங்களைப் பதிவு செய்யும்படி என்னைப் பணித்தார்.
'
‘உங்கள் கணவரைத் தவிர வேறு யாராவது உடன் வந்திருக்கிறார்களா?’
'
‘நாயனகாரு உள்ளாரு அவறே விடையிறுத்தாள்’
'
அவரை உள்ளே அழைத்தார் ஆசான். ‘உங்கள் மகளுக்கு எப்போதாவது தோல் வியாதி வந்திருக்கிறதா?’
'
‘இப்புடு காதண்டீ, இரு சகஸ்ரம் முந்துக.. அந்த பாகாயி போயிந்தி, இது இப்புடே இலாக கேசிந்தி’
'
ஆசான் என்னைப் பார்த்துக் கூறினார். மெர்க் சொல்.12, ஆறு நாட்கள், ஒரு நாளைக்கு ஒரே முறை, இறுதியில் லூட்டிகம் 200 ஒரே தடவை.
மருந்தை மடித்து அவரிடம் கொடுத்தேன். மருந்து உண்ணும் முறையை ஆசான் முதியவருக்கு விளக்கினார்.
'
நான்காம் நாள் அந்தப் பெரியவர் மருத்துவமனைக்குப் பரபரப்புடன் ஓடி வந்தார். அவரைத் தடுத்து நிறுத்துவதே பெரும்பாடாக இருந்தது. ‘உடம்பு முழுவதும் தடித்து வீங்கி என் மகள் கதறுகிறாள்’
'
‘என்ன சொல்லுகிறார்?’
'
‘அரிப்புப் பொறுக்க முடியவில்லையாம்’
'
‘மற்றபடி ஏதாவது கோளாறு?’
'
‘சாந்தமாகவே இருக்கிறாள். கூச்சல், திட்டல், பேயாட்டம் எல்லாம் ஓய்ந்து விட்டது.’
‘ஏன், போயே போயிந்தி’
'
என் ஆசான் முறுவலித்துவிட்டு என்னை நோக்கிப் பணிந்தார். ‘ஸாக்லாக்’ நான் அவற்றை மடித்துக் கொடுத்தேன்.
'
அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ஒரே ஒரு முறை அந்த மங்கையும், அவளது தந்தையும் வந்தனர். ஒரு கூடை நிறையப் பழங்கள்.
'
என் ஆசான் காலைத் தொட்டு வணங்கினார்கள். அவர் ஒரே ஒரு பழத்தை மட்டும் எடுத்துக் கொண்டு அவர்களை வாழ்த்தி அனுப்பினார்.
'
உள்ளுக்கு அமுக்கப்பட்ட மியாசம் (தோஷம்) மனநிலையையும் எப்படிப் பாதிக்கக்கூடும் என்ற விபரம் எனக்கு அன்றுதான் விளங்கிற்று.
சென்னையிலிருந்து வந்த அந்த மங்கைக்கு நான் கொடுத்தது மெர்க்யூரியஸ் 6 ஒரு வாரத்திற்கு இறுதியில் லூட்டிகம் 200 ஒரே தடவை.
'
அந்த மங்கையின் கணவர் என்னைக் கேட்டார். ஹோமியோபதி முறையில் நோய்கள் அதிகரிக்கும் என்று எங்கள் குடும்ப மருத்துவர் கூறினார். அப்படி ஏதாவது நேருமா?
'
‘அப்படி நிகழ்ந்தாலும் அது குறித்துக் கவலைப்பட வேண்டாம். விரைவில் குணமாகிவிடும்’
'
ஸோரியாஸிஸ் என்பது கிரேக்க மொழிச் சொல். ஃப்ரான்ஸ் நாட்டினர் இதை ஸோரா என்று அழைக்கின்றனர். அரிப்புடன் கூடிய சொறி, சிரங்கு என்று அதற்குப் பொருள்.
'
மேதை ஹானிமன் ஸோராவுக்குக் கூறும் விளக்கம் பல பக்கங்களில் உள. மனித குலத்தின் மிகத் தொன்மையான தோஷம் (மியாஸம்) இது. உடல் இயக்கமே குலைந்து போன ஒரு நிலையைத்தான் ஸோரா என்று கூற வேண்டும் அவர் அருள்கிறார்.
சென்னையிலிருந்து எனக்குக் கடிதம் வந்து விட்டது. கடந்த மூன்று மாதங்களாக அந்த மங்கைக்கு எந்தத் தொந்தரவும் இல்லை.
'
ஹோமியோபதி மருத்துவத்தின் அடிப்படைக்கொள்கையைப் புரிந்து கொள்ள வேண்டும். மனித உடலில் ஜீவசக்தி ( VITAL FORCE) என ஒன்று உள்ளது. அது நலிவுறும்போது பல குறிகளை வெளிப்படையாகக் காட்டுகிறது. அந்தக் குறியையே நோய் என்ற பெயரால் குறிப்பிடுகிறார்கள். அதனால் நோயின் பெயருக்கு மருந்தென்பது கிடையாது.. ஒவ்வொரு நோயாளியின் நோய்க்குறிகளும் தனித்தன்மை கொண்டதே.அதனால் ஒவ்வொருவருக்கும் மருந்தும் தனித்தனி தான்.. இது தான் ஹோமியோபதி
'
நோயாளியின் நலனைக் கருத்தில் கொண்டு ஆழ்ந்த கவனத்துடன் உழைத்தால், அதற்கு உறுதியான பயன் உண்டு என்பது ஒரு பரமசத்தியம்.
*****
ஹோமியோபதி அற்புதங்கள் நூலில் இருந்து
*******************************************************************
மேஜர் தி.சா.இராஜூவின்
அற்புதங்கள் தொடரும்
*******************************************